Headlines News :
முகப்பு » » மலையகத்தமிழரின் பொருளாதார நிலையும், அதிகார நிலைமாற்றத்திற்கான தேவையும்

மலையகத்தமிழரின் பொருளாதார நிலையும், அதிகார நிலைமாற்றத்திற்கான தேவையும்

-இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்- மலையகம்


இலங்கை வரலாற்று முக்கியத்துவமிக்க சனாதிபதி தேர்தலை சந்திதி;துள்ளவேளையில் தனி நபர் சர்வாதிகாரம்,; தனி ஒரு குடும்பத்தின் மேலாதிக்கம், சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை, பாரதூரமான மனித உரிமை மீறல்கள், நிறுவனமைப்பட்டு வரும் ஊழல் மோசடிகள், சட்டவாட்சியின் சீரழிவு, நீதி-நிர்வாகத்துறைகள் மீதான அரசியல் தலையீடுகள், இளைய தலைமுறையை இலக்குவைத்து நடாத்தப்படுகின்ற போதை பொருள் வர்த்தகம், பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தல், நிதி நிறுவனங்களினதும், நிறுவன அதிகார வர்க்கத்தினதும் ஏகபோக காவலனாக அரச இயந்திரம் மாற்றமடைந்துள்ளமை, தொழிலாளர்கள், விவசாயிகள,; மாணவர்கள், ஊடகவியலாளர்கள், மாற்றுசிந்தனையாளர்கள் கலைஞர்கள், கல்விசார் சமூகத்தினர், புத்திஜீவிகள், மதநிறுவனங்கள் மீதான ஒடுக்கு முறைகள், அடாதகைதுகள், சட்டத்திற்குபுறம்பான படுகொலைகள், அதிகரித்துவரும் சமூக பொருளாதார சமத்துவமின்மை, பொது வாழ்வல் சகிப்பு தன்மையின்மை,; அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிராக தேசம் கிளர்ந்தெழுந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை அம்பலபடுத்துவது எமது வரலாற்று கடமையாகின்றது.

இன்றைய சமூக பொருளாதார நிலையானது மலைய மக்களின் வாழ்வியல் புலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் நாட் கூலியை குறைந்த பட்சம் 490 ரூபாவாக நிர்ணயித்துள்ளதாக தொழிற்சங்கங்களும், தோட்டகம்பனிகளும் மார்தட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட போது ஆறு லட்சமாக இருந்த தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் 5 ஊழியர்களின் வேலைச்சுமையை ஒரு தொழிலாளியின் மீது சுமத்தி 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை உழைத்துள்ள தோட்ட கம்பனிகள் உண்மையில் 6 தொழிலாளர்களுக்;கு வழங்கிய சம்பளத்தை இன்று ஒரு ஊழியருக்கு வழங்குகின்றனர்.

ஆனால் வாழ்க்கை செலவானது கடுமையாக அதிகரித்துள்ள அதே வேளை பண வீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, பருவகால வேலையின்மை என்பன தோட்டப்புறங்களில் கடுமையாக அதிகரித்துள்ளன. பெருமளவான பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கி மோசடியான முறையில் தள்ளப்படுகின்ற அதேவேளை பல இலட்சக்கணக்கான சிறுவர்களும், இளைஞர்களும் பாதுகாப்பற்ற முறைசாரா துறைகளில் அன்றாட கூழித்தொழிலாளிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த லட்சக்கனக்கான தொழிலாளர்களின் குடியிருப்பு, வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு, அரசியல் சமூக கலாசார உரிமைகள் என்றுமில்லாதவாறு பாதுகாப்பற்றதாகவும் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளன.

சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் தோட்டத்துறையில் நூற்றாண்டுகளுக்கு பழைமைவாய்ந்த லயன் குடியிருப்புகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமான குடி நீர், போசாக்குணவு, ஜனநாயக உரிமைகள் என்பன மறுக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் அரையடிமைக் குடிகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் சனத்தொகை பரம்பல் திட்டமிட்டவகையில் சுருக்கப்பட்டு வருகின்ற அதே வேளை இவர்களின் வாழ்வாதார பிராந்தியமானது பல்வேறு ஆக்கிரமிப்பு அபிவிருத்தி திட்டங்களாலும், உள்நோக்குடைய குடியேற்ற திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

தோட்டங்கள், பெருந்தோட்ட கம்பனிகளதும், தனியார் முதலாளிகளினதும் தோட்ட தொழிற்சங்க பிரபுக்களதும் ஏகபோக சம்ராஜியங்களாக திகழ்கின்றன. மக்களின் பிறப்பு முதல் இறப்புவரை ஆதிக்கம் செலுத்தும் ஏகபோக சக்திகளாக இவர்கள் திகழ்கின்றனர்.

இந்நிலையில் மலையக மத்தியதர வர்க்கமானது பெருந்திரளான கல்விசார் சமூகத்தையும், தோட்ட சேவையாளர்கள் 0.02 வீதத்திற்கு குறைவான அரச ஊழியர்களாலும், தனியார் துறை ஊழியர்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது

. இவ்வர்க்கமானது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தையும், அதை அண்டிப்பிழைக்கின்ற அதிகார வர்க்கங்களையும் சார்ந்தியங்குவது மூலம் தமது அற்ப நலன்களை நிறைவேற்றிக்கொள்கின்றது. இவ்வர்க்கத்தினால் இலட்சக்கனக்கான தொழிலாளர்களும், பெண்களும், சிறுவர்களும் ஒடுக்கப்பட்டோரும் மேல்நிலையாக்கம் பெருவதற்கான சாத்தியப்பாட்டை இணங்கான முடியாதுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய விதிவிளக்குகளை மட்டுமே காணமுடிகின்றது.

இவர்கள் பெரும்பாலும் சிதறடிக்கப்பட்ட சிறுகுழுவாக, சிந்தனையாளர்களாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மேல்தட்டு வர்க்கங்களும், நகர்புற சிறு முதலாளி வர்க்கமும் மலையக தழிழ் தேசக்கட்டமைப்பில் அடிநாதமாக திகழும் பாட்டாளிவர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதிலும், எல்லையற்ற சுரண்டல் மூலம் பொருளாதார அடிமைகளாக மலையக மக்களை நடத்துகின்ற போக்கொன்றினை இணங்கான முடிகின்றது.

இந்நிகழ்வு போக்குகளை நியாயப்படுத்துகின்ற சமூக பார்வைகளும் இதனை தகவமைக்கின்ற தொழிற்சங்க அரசியல் கலாசாரமும் நிலவி வருகின்றது.
மக்களின் ஜனநாயக உரிமைகள், மற்றும் சிவில் செயற்பாடுகள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றன. இதற்கு அரச இயந்திரம் மட்டுமன்றி ஒரு மக்கள் விரோத அரச இயந்திரத்தை தாங்கி பிடிக்கின்ற மலையக அரசியல் தொழிற்சங்க இயக்கங்கள் மலையக மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு துனைப்போகின்றன.

மலையக முழுவதும் முன்னெடுக்கப்படும் போலி அபிவிருத்தி திட்டங்கள் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் அடியாட்களுக்கும் கப்பம் வழங்கும் திட்டங்களாகவே காணப்படுகின்றன. தோட்டப்பகுதியில் போடப்படுகின்ற கொங்கிறிPட் வீதிகளில் 80 வீதமானவை முதல் மூன்றாண்டுகளுக்குள்ளாகவே சிதைவடைகின்றன. ஒரே வீதி மீண்டும் மீண்டும் செப்பனிடப்படுவதாக காட்டப்படுகின்றது. பயனற்ற முறையில் அமைக்கப்படுகின்ற பாடசாலை கட்டிடங்கள் மாணவர்களின் உடல் உள தேவைகளை பூர்த்தி செய்வனவாக காணப்படுவதில்லை
.
மின் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பாரதூரமான தொழிநுட்ப குறைபாடுகளின் காரணமாக 5000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிராதரவாக்கப்பட்டுள்ளனர். தோட்டப்பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் தராதரமற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. மருத்துவ சுகாதார வசதிகளில் காட்டப்படும் பாரபட்சம் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள், சிசு மரணங்கள், தாய் மரணங்கள் என்பன தோட்டப்பகுதிகளிலேயே மிக அதிகமாக காணப்படுகின்றன. அதே வேளை ஒரு திட்டமிட்ட இன அழிப்பு வழிமுறையாக கருத்தடை செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையின் இரண்டாவது தேசிய இனமாக இருந்த மலையக தழிழர்கள் இன்று நான்காவது தேசிய இனப்பிரிவாக மாற்றமடைந்துள்ளமை இந்த சதிநாச திட்டத்தை அம்பலப்படுத்துகின்றது.

இக்கருத்தடையினால் எத்தகைய சமூக பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் மாறாக வலு குறைந்த, உழைப்பாளிகள் இல்லாத, பொருளாதார செயலாற்றல் குன்றிய குடுப்பங்களே தோற்றம் பெற்றுள்ளது என்பதுமே கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய உடனடிப்பார்வையில் 4 பேர் கொண்ட குடும்பம் உயிர்வாழ்வதற்கு 59000 ரூபாய் தேவையென இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ள நிலையில் மாதாந்த சராசரி தோட்ட தொழிலாளியின் சம்பளம் 10000 ரூபாயை கூட அண்மிக்கவில்லை. எனினும் பெருந்தோட்டங்களை சார்ந்த நகரங்களில் இன்றைய சந்தையில் அரிசி ஒரு கிலோ 96ரூபா, தேங்காய் 60 ரூபாய், சீனி ஒரு கிலோ 110-120 ரூபாய், மைசூர் பருப்பு 160 ரூபாய், கோதுமை மா 110 ரூபாய், முட்டை கோவா கிலோ 170 ரூபாய், இலை கோவா 140 ரூபாய், கரட் கிலோ 400 ரூபாய், போஞ்சி கிலோ 300 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 300 ரூபாய், பலாக்காய் சிறியது 100 ரூபாய், ஈரப்பலாக்காய் 120 ரூபாய் என விலைவாசி காணப்படுகின்றது.

இத்தகைய சமூக பொருளாதார நிலையில் வாழும் மலையக தமிழர்கள், தோட்ட தொழிலாளர்கள் தெசிய அரசியலில் ஏற்படும் அதிகார கைமாற்றத்தின் ஊடாக நிவாரணங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமாயின் அம்மாற்றத்திற்கு ஆதரவாக அணித்திரள்வது காலத்தின் தேவையாகும்.

எழுச்சிபெற்றுள்ளதும் மாற்றமொன்றை நோக்கி நகர்வதுமான புதிய அரசியல் சூழலானது சர்வாதிகாரத்தை ஒழித்தல், சமூகநீதியை நிலைநாட்டல்;,சனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல், பொருளாதார மீள்எழுச்சிக்கு உதவுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுயாதீனமான நீதி,நிர்வாககட்டமைப்புகளை உருவாக்குதல், இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்தல்,மலைக மக்களின் காணி வீட்டுரிமையை உத்தரவாதப்படுத்தல், தொழிலாளர் உரிமைகள், கல்வி சுகாதார வாய்ப்புகளை விரிவாக்கல், போன்ற குறைந்த பட்ச வேலைத்திட்டங்களை முன்வைத்து நாட்டின் பெரும் திரளான சனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ள இவ்வேளை மலையக தமிழர்கள தமது அரசியல் நகர்;வை மாற்றங்களை நோக்கி மாறுகின்ற அரசியல் சமூக சூழ்நிலைகளை நோக்கி மேற்கொள்வதன் மூலம்; புதிய அதிகார மையங்களில் தனது ஆளுகைளை, இருப்பை, சுயாதீனத்தை உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்ககூடும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates