Headlines News :
முகப்பு » » அரசு கொடுத்த அரகசிய வாக்குறுகளை காற்றில் பறக்கவிட்டது: அம்பலப்படுத்துகின்றது மலையக மக்கள் முன்னணி!

அரசு கொடுத்த அரகசிய வாக்குறுகளை காற்றில் பறக்கவிட்டது: அம்பலப்படுத்துகின்றது மலையக மக்கள் முன்னணி!


ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ம.லையக மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அந்த மக்கள் நடு வீதியில் தள்ளப்பட்டனர்.எனவே இதற்காக அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே நாம் அரசாங்கத் திலிருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.நான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால், இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.மலையக மக்கள் முன்னணியும் தொழி லாளர் தேசிய சங்கமும் நேற்று பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை அறி விப்பதற்காக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்மண்வெட்டியில் வெற்றிவெற்றிலையில் தோல்விநான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் தேவைக்காக இணைந்து போட்டியிட்டோம்.நடுவீதியில் தள்ளப்பட்டோம்நான் 12000 விருப்பு வாக்குகளை பெற்றால் போனஸ் ஆசனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அமைச்சர்களான பஷில் ராஜபக் ஷ, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சஷீந்திர ராஜபக் ஷ ஆகி யோர் இந்த உறுதிமொழியை வழங்கினர். நான் அந்தத் தேர்தலில் 12750 விருப்பு வாக்குகளை பெற்றேன்.ஊவா மாகாண சபையில் எமது மலையக மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளினால் தான் அரசாங்கம் வெற்றிபெற்றது. இல்லாவிடின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். எமது வாக்குகளே அவற்றை தீர்மானித்தன. ஆனால் எமக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. மலையக மக்கள் அலட்சியப் படுத்தப்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட் டனர். நடு வீதியில் தள்ளப்பட்டனர்.அந்த நிமிடமே நாங்கள் அரசாங்கத்தி லிருந்து வெளியேறுவது உறுதியாகியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் நான் தனித்து போட்டியிட்டு 6449 வாக்குகளை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்.அமைச்சு எங்கே உள்ளது?கடந்த கால அரசாங்கங்களில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியும் பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒன்றுமில்லை. நான்கு வருடங்களின் பின்னர் பிரதியமைச்சுப் பதவி கிடைத்தது. ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த அமைச்சுப் பதவி எங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. அதனை நாங்கள் தேடினோம். எமது மக்களுக்கு பூங்காக்களுக்கு செல்லவோ பொழுது போக்குக்கு செல்லவோ நேர மில்லை. அவர்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தேயிலை மரத்துக்கு கீழ் நிற்கின்றனர்.தூக்கியெறிந்தோம்இந்நிலையில் இந்த அமைச்சுப் பதவி கிடைத்தும் எமது மக்கள் இன்னும் குழப்பம் அடைந்தனர். இதன்மூலம் எமது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதனால்தான் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது பிரதியமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு வந்தார். அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே இந்த தீர்மானத்தை எடுத் தோம். எனது வெளியேற்றத்தால் பதுளை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்வியடை வது நிச்சயமாகிவிட்டது என்றார்.லோரன்ஸ் கருத்துஇந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் குறிப்பிடுகையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர ணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எமது மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எமது கட்சி வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாகவே ஆட்சியமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கினோம். இந்நிலையில் 200 வருடங்கள் வீடுகள் இல்லாமல் லயன்களில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.எனவே இவர்களுக்கு 6 வருடங்களில் இரண்டரை இலட்சம் வீடுகளை அமைத்துக்கொடுக்க பொது எதிரணி இணங்கியுள் ளது.எமக்கு தனித்துவ பிரச்சினைநாட்டில் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என பொதுப் பிரச்சி னைகள் இருக்கலாம்.ஆனால் மலையக மக்களுக்கு தனித் துவமான பிரச்சினைகள் உள்ளன. எம்மி டம் பலம்பொருந்திய தொழிற்சங்கம் உள்ளது. மலையகம் முழுவதும் எமது தொழிற்சங்கத்துக்கு அலுவலகங்கள் உள் ளன. எனவே மலையகத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மலையக மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அந்த மக்கள் நடு வீதியில் தள்ளப்பட்டனர். எனவே இதற்காக அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே நாம் அரசாங்கத் திலிருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

நான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால், இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் முன்னணியும் தொழி லாளர் தேசிய சங்கமும் நேற்று பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை அறி விப்பதற்காக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 

மண்வெட்டியில் வெற்றி வெற்றிலையில் தோல்வி

நான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் தேவைக்காக இணைந்து போட்டியிட்டோம்.

நடுவீதியில் தள்ளப்பட்டோம்
நான் 12000 விருப்பு வாக்குகளை பெற்றால் போனஸ் ஆசனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அமைச்சர்களான பஷில் ராஜபக்ச, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் இந்த உறுதிமொழியை வழங்கினர். நான் அந்தத் தேர்தலில் 12750 விருப்பு வாக்குகளை பெற்றேன்.

ஊவா மாகாண சபையில் எமது மலையக மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளினால் தான் அரசாங்கம் வெற்றிபெற்றது. இல்லாவிடின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். எமது வாக்குகளே அவற்றை தீர்மானித்தன. ஆனால் எமக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மலையக மக்கள் அலட்சியப் படுத்தப்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட்டனர். நடு வீதியில் தள்ளப்பட்டனர்.

அந்த நிமிடமே நாங்கள் அரசாங்கத்தி லிருந்து வெளியேறுவது உறுதியாகியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் நான் தனித்து போட்டியிட்டு 6449 வாக்குகளை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்.

அமைச்சு எங்கே உள்ளது?

கடந்த கால அரசாங்கங்களில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியும் பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒன்றுமில்லை. நான்கு வருடங்களின் பின்னர் பிரதியமைச்சுப் பதவி கிடைத்தது. ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த அமைச்சுப் பதவி எங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. அதனை நாங்கள் தேடினோம். எமது மக்களுக்கு பூங்காக்களுக்கு செல்லவோ பொழுது போக்குக்கு செல்லவோ நேரமில்லை. அவர்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தேயிலை மரத்துக்கு கீழ் நிற்கின்றனர்.

இந்நிலையில் இந்த அமைச்சுப் பதவி கிடைத்தும் எமது மக்கள் இன்னும் குழப்பம் அடைந்தனர். இதன்மூலம் எமது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதனால்தான் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது பிரதியமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு வந்தார். அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே இந்த தீர்மானத்தை எடுத்தோம். எனது வெளியேற்றத்தால் பதுளை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்வியடை வது நிச்சயமாகிவிட்டது என்றார்.

லோரன்ஸ் கருத்து

இந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர ணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எமது மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எமது கட்சி வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாகவே ஆட்சியமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கினோம். இந்நிலையில் 200 வருடங்கள் வீடுகள் இல்லாமல் லயன்களில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

எனவே இவர்களுக்கு 6 வருடங்களில் இரண்டரை இலட்சம் வீடுகளை அமைத்துக்கொடுக்க பொதுஎதிரணி இணங்கியுள்ளது. 

 எமக்கு தனித்துவ பிரச்சினை

நாட்டில் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என பொதுப் பிரச்சி னைகள் இருக்கலாம்.

ஆனால் மலையக மக்களுக்கு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன. எம்மி டம் பலம்பொருந்திய தொழிற்சங்கம் உள்ளது. மலையகம் முழுவதும் எமது தொழிற்சங்கத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. எனவே மலையகத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.

நன்றி - http://deepamnews.com/
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates