திரு. லெனின் மதிவானம் எழுதிய ‘சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும் என்ற நூலின் விமர்சன நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில், பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட இலங்கை இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியார் வள்ளியம்மை சுப்பிரமணியம் பேராசிரியர். தை. தனராஜ், சமூக செயற்பாட்டாளர்கள் திரு. எம். வாமதேவன், கலாநிதி ந. இரவீந்திரன், இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் ஆகியோர் அமர்ந்திருப்பதனையும் நூலறிமுக உரையை மல்லியப்புச்சந்தி திலகர் வழங்குவதனையும் காணலாம். திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியத்திற்கு நூலாசிரியர் முதல் பிரதியை வழங்குவதையும் மூத்த இடதுசாரி தோழர் எஸ். சுப்பையா அவர்களுக்கு பேராசிரயர் தை. தனராஜ் சிறப்பு பிரதி வழங்குவதையும் மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
நூல்
» லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கியத்தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘ நூல் விமர்சன நிகழ்வு
லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கியத்தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘ நூல் விமர்சன நிகழ்வு
Labels:
நூல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...