மலையக தமிழரின் தலைவிதியை தீர்மானிந்த முக்கிய ஆவணம் ஒன்று. இந்தியத் தொழிலாள மக்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்ற முறைமை கூறும் வரலாற்று ஆவணத்தில் குறிப்பிட்டவை. 1922 மார்ச் 1 இல் திருச்சிராப்பள்ளி -சிலோன் லேபர் கமிஷனர் எச்.ஏஸ் நிக்கல்ஸன் வெளியிட்ட விளம்பரம்.
நீர் இலங்கைக்குக் போல் வேண்டுமானால் உன்னுடைய கிராமம் அல்லது அதைச் சேர்ந்த ஜில்லாவில் உள்ள ஒரு கங்காணியிடம் போக வேண்டும். யாதெரு கங்காணியையும் உனக்குத் தெரியா விட்டால் உன் கிராமத்துக்கு அருகாமையில் உள்ள மேற்கண்ட டிப்போக்களில் ஒன்றுக்கு நீர் நேரில் ஆஜராகியவது காகிதத்தின் மூலமாவது சகல விபரங்களும் தெரிந்துக் கொள்ளலாம். தங்கள் சுய நலத்தைக் கருதி உன்னைச் சிலோனுக்குப் போக வேண்டாம் என்று தடுக்கிறவர்களின் பேச்சைக் கோட்காதே .உன்னுடைய சொந்தக்காரர்கள் யாராகிலும் சிலோனுக்கு போயிருந்து அவர்களைப் பற்றிய சமாச்சாரங்கள் யாதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்கள் எந்த ஏஜென்ஸியில் ஏப்பொழுது பதிவு செய்யப்பட்டவர்கள் என்றும் ஏந்தத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்து அவர்களிடம் இருந்து வந்திருக்கும் கடிதத்தை லக்கோடாவுடன் திருச்சிராப்பள்ளி சிலோன் லேபர் கமிஷனர் துரை அவர்களுக்கு அனுப்பினால் உனக்கு அவர் வேண்டிய உதவி செய்வார் .
சிலோன் தோட்டங்களின் நிலவரங்களைப் பற்றியும் அங்கே வேலை செய்து வருகிற ஆட்களின் நிலைப்பற்றியும் பலவிதமாக பொய்யான சமாச்சாரங்கள் சொல்லப்பட்டு வருகின்றன . போதுமான ஆட்கள் ஏற்கெனவே இருக்கிற தோட்டங்களுக்கு வேறு ஆட்கள் வேண்டாம் என்பது மெய்தான். ஆனால் சுகம் உள்ளது குளிர்ச்சியும்நுள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு ஏராளமான கூலி ஆட்கள் வேண்டியதாய் இருக்கிறது. இந்தத் தோட்டங்கிளில் ஒவ்வொரு கூலியாட்களும் வாரந்தோறும் பட்டணப்படி ஒன்றுக்கு 5 அணா வீதம் போதுமான அரிசி வாங்கிக் கொள்ளலாம். வேலைக்குத் தகுந்தப்படி கூலி கொடுக்கப்படும் .தேயிலைப் பயிர் செய்யப்பட்டு நல்ல வியாபாரம் நடந்து வருகிறபடியால் அந்தத் தோட்டங்கள் அதிக செழிப்பான ஸ்திதியில் இருக்கின்றன.
நன்றி - மலையக இலக்கியம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...