இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ((SLECO) ) பாடசாலை மாணவர்களிடையே தமிழ், வரலாறு, கணிதம் ஆகிய பாடங்களிலான தேர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மாதிரிப் பரீட்சை ஒன்றை திட்டமிட்டுள்ளது. அதற்கமைய ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் இப்பபரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான வினாத்தாள்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ஏ. செல்வம் அவர்களிடம் சம்மேளனத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு. பி.ஈ.ஜீ. சுரேந்திரன் அவர்கள் ஒப்படைப்பதையும், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். செந்தூர்வேல் அவர்களிடம் சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார் மாதிரி பரீட்சை வினாத் தாள்களை ஒப்படைப்பதையும் மற்றும் அருகில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், பிரச்சாரக் குழுத் தலைவர் எம்.எஸ். இங்கர்சால், ஆசிரிய ஆலோசகர்களுக்கான இணைப்பாளர்கள் திருமதிகள் சி. கலைவாணி, வீ. சிவனேஸ்வரி, திருவாளர்கள். இரவிச்சந்திரன் , சாரங்கன்ஆகியோரையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
» இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ((SLECO) ) பாடசாலை மாணவர்களிடையே தேர்ச்சியை ஏற்படுத்தும் வகையில்....!
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...