மலையகத்தில் அடுத்தடுத்து சோகமான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொஸ் லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தம், அதனையடுத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு அபாயத்தை தொடர்ந்து தமது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் என தொடர்கின்றன.
இந்நிலையில், அக்கரபத்தனை டயகம இரண்டாம் பிரிவு தோட்டத்தில் பாரிய தீ விபத்து ஒன்று எற்பட்டு தொழிலாளர்க ளின் சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 22 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. இந்த சம்பவ த்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்படி தோட்டத்தில் உள்ள ஆலயத்திலும் கலாசார மண்டபத்திலும் தங்கவைக்கப்பட்டுள் ளனர். இந்த மக்களுக்கான நிவாரணங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 26 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்தைத் தொடர்ந்து அய லவர்கள் தீயை அணைப்பதற்கு முற்பட்ட போதும் முடியாமல் போனதாகக் கூறு கின்றனர். எனினும் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தக வல் அனுப்பப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரும் முன்னரே வீடு கள் எரிந்து சாம்பரானதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எது வும் இடம்பெறவில்லை என்பது ஆறுதல் தரும் விடயமாகும். ஆனால், அங்கு குடியிருந்த மக்களின் ஆவணங்கள் மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொரு ட்கள், உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகின என்பது கவலைக்குரிய விடயமாகும்.
தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை யான சம்பவங்கள் அடிக்கடி இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே அக்கரப்பத்தன, பத் தனை, டிக்கோயா பகுதி தோட்டங்களி லும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் மாற்றுக் குடியிருப்புக்கள் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இன்னும் கூட தற்காலிக கொட்டில்களிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தீவிபத்து ஏற்பட்டவுடன் அங்கு சென்று பார்வையிடும் தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் அவர்களுக்கு சில நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு உடனடியாக மாற்றுக்குடியிருப்புக்களை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து விட்டுத் திரும்புவர் அவ் வளவுதான். அதன் பின்னர் அப்பிரதேசத்திற்கு அவர்கள் செல்வதே இல்லை. இது தான் இன்றும் தொடர்கின்றது.
லயன் குடியிருப்புக்களில் சுமார் பன்னி ரண்டு தொடக்கம் இருபத்து நான்கு வரையிலான வீடுகள் அமைந்திருக்கும். ஒரு வீட்டில் தீ ஏற்பட்டால் அடுத்தடுத்து அனைத்து வீடுகளும் சடுதியாகத் தீ பரவத் தொடங்கிவிடும். ஒரு வீட்டில் பரவிய தீயை அடுத்த வீட்டிற்குப் பரவாமல் தடுப்பது கடினம். கூரைகள், மரச்சட்டங்கள் அனைத்தும் தொடராகப் போடப்பட்டிரு ப்பதால் அதனை அணைப்பது சுலபமாக இருக்காது.
200 வருடங்கள் பழைமையான வீடுகளில் மரச்சட்டங்கள், கூரைகள் அனை த்தும் எளிதில் தீப்பற்றக் கூடியதாக இருக்கின்றன.
இதேவேளை, இந்த வீடுகள் தனித்தனி வீடுகளாக அமைந்திருக்குமானால் ஒரு வீட்டில் தீ ஏற்படும்போது அடுத்த வீட்டி ற்கு தீ பரவாமல் மிக இலகுவாகக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். லயன் வீடு கள் இருக்கும்வரை இவ்வாறான அனர்த்தங்களை கட்டுப்படுத்த முடியாது என்பது தான் வரலாற்று உண்மை.
இதன் மூலம் தனித்தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியதன் அவசியம் இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்ந்து இடம்பெற கூடாது என்பது மலையக மக் களின் வேண்டுகோளாகும்.
பாதுகாப்பான இடங்களில் தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கை வலுப்பெற இது போன்ற தீவிபத்துக்கள் தொடர்ந்து அழு த்தம் கொடுக்கும் பட்சத்தில், இச்சம் பவங் கள் தொடர்பில் தீர்வுகள் கிடைக்குமா என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இரு க்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(என்னென்ஸி)
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...