பெருந்தோட்ட லயன்கள் இன்று ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கின்றன மலையக மக்கள் தற்போதுதான் சொந்த வீட்டு உரிமையையும் காணியுரிமையையும் கேட்டு நிற்க, இருந்த லயன் அறைகள் தீயால் கொழுந்து விட்டு எரிகின்றது.
மலையக மக்கள் இந்நாட்டுக்கு வந்து இருநூறு வருடங்கள் ஆகிவிட்டது என்று நாம் கூறுகின்றோம் ஆனால் இதுவரை 20 அடி நிலம் கூட எமக்கு சொந்தம் இல்லை ஒருமனிதன் தான் இந்த ப+மியில் ஜீவிக்க உணவு உடை உறையுள் ஆகிய மூன்றும் முக்கியமான அம்சம் என்றாலும் மலையக மக்களுக்கு உறையுள் என்பது இலங்கை அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட வில்லை போல.
அதாவது சர்வதேச மனித உரிமை சாசனம் ஒருநாட்டின் அடிப்படை மனித உரிமை சாசனம் பெண்கள் உரிமை சிறுவர் உரிமை என்பன மக்களுக்குரிய அடிப்படை விடயங்களை தெளிவுற எடுத்து கூறினாலும் அவை அனைத்தையும் கேவலப்படுத்தும் ஒரு நிகழ்வுதான் இந்த மலையக மக்களுக்கு மறுக்கப்படும் இந்த வீட்டு உரிமையும் காணி உரிமையும் ஆகும். இது மட்டுமல்ல ஏனைய எல்லா உரிமைகளிலும் இவர்களுக்கு பார பட்சம்தான்.
இன்று மலையக மக்களின் வாழ்கைக்கு உத்தரவாதம் அளிக்கின்றோம் எனக் வாய்கிழிய கூறிக்கொள்ளும் எம் மலையக தலைவர்கள் அவர்களுக்கு சொந்தமாக அளித்தது எதனை? பேரம் பேசி மலையக மக்களை விற்று பிழைப்பு நடாத்தும் ஒரு வர்க்கம்தான் தொழிற்சங்கங்கள் தன்னுடைய சுயலாபத்திற்காக அப்பாவி மலையக மக்களை பகடைகாயாக பயன்படுத்தி தான் சுகமான இன்பம் அனுபவிக்கின்றனர் இதுவரைக்கும் மலையக மக்களை ஒன்றுப்படுத்தும் முயற்சியில் எந்த தொழிற்சங்கமாவது முன்வந்துள்ளதா இல்லை காரணம் தனது பிழைப்புக்கு குந்தகம் வந்துவிடுமோ என்ற அச்சம்.
இதற்கு மலையகத்தில் படித்த புத்திஜீவிகள் கூட துணை நிற்பது மன வருத்தத்திற்குறிய விடயமாகும்.
மலையக மக்களுக்கு தற்போது 7 பேர்ஜ் காணி வாங்கி கொடுக்க குரல் எழுப்பும் எம் மலையக தலைவர்கள் மலையக மக்களின் இரத்தத்ததை உறிஞ்சும் விச பூச்சிகள். இருநூறுவருட வாழ்கையில் வெரும் 7 பேரஜ் காணியை பெற்று கொடுத்து என்ன செய்ய போகிறார்கள். போன வரவு செலவு திட்ட வாசிப்பில் மலையக மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடு கட்டி தருவதாக ஜனாதிபதி அவர்கள் கூறினார் ஆனால் அதற்கு இதுவரை ஒரு அடிக்கல்கூட மலையகத்தில் நாட்டப்பட வில்லை ஆனால் தென் மாகாணத்தில் இவ்வீட்டு திட்டத்திற்கான வேலை நடந்துகொண்டிருக்கின்றது. அங்கு இந்திய வம்சாவழி தமிழர்கள் இருந்தனர் ஆனால் தற்போது அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர் இதனை கூட தட்டி கேட்க முடியாத கையாளாகாத எம் தலைவர்களுக்கு மலையக மக்களின் பிரதி நிதி என கூற கூட தகுதி இல்லை தற்போது கொஸ்லாந்த மீரியாபெத்த தோட்ட மக்களுக்கு 75 வீடுகள் தனித்தனியாக கட்டி கொடுக்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார் இது வெறும் வாய் பேச்சாகதான் இருக்கக்கூடும் இவர்களுக்கும் சொந்த வீட்டுத்திட்டமா? அல்லது வழமையான ஏமாற்று முயற்சியா?
மேலும் மலையக மக்களுக்கு இந்திய வீட்டுதவி திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி மலைய தொழிற்சங்கங்களின் எழும்பு துண்டு சண்டையால் கைநழுவி போய்விட்டது.
மலையக மக்களுக்கு சொந்த வீட்டுரிமை காணியுரிமை பெற்றுக்கொடுக்க அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை காரணம் மலையக்தில் மட்டும் 32000 ஹக்டேயர் தரிசு நிலம் காணப்படுகின்றது மற்றும் தோட்ட துறைமாரின் பங்களாக்களில் பயிர் செய்கை என்ற பெயரில் பல ஹக்டேயர் காணி சூரையாடப்பட்டுள்ளது. மற்றும் கொட்டகலை இ.தொ.கா வின் உ.ட.க அமைந்துள்ள இடங்களில் பல ஹக்டேயர் நிலம் சொந்த பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றை பகிர்ந்தளித்தாலே மக்களுக்கு போதுமானது. அதேநேரம் வுசுருளுவு நிறுவனமும் வீடமைப்பு திட்டத்திற்கு போதிய பணம் இல்லை என்று கூறுவதாக தெரிவிக்கப்பட்டது இதேல்லாம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
மேலும் அண்மைக்காலமாக மலையக பகுதிகளில் லயன் அறைகள் தீ கறையாகி வருவதனை நாம் அவதானிக்க முடிகின்றது. இதற்கான உண்மை நிலையை கண்டறிவது அவசியமாகும் குறிப்பாக மலையகத்தில் இடம் பெறும் தீ பற்றும் சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
குறிப்பாக இத்தகைய மலையக தீயால் எரியும் சம்பவங்கள் வருடத்தின் மே மற்றும் ஜீன் மாதங்களிலும் பிறகு ஓக்டேபர் நவ்வம்பர் மாதங்களிலேயே ஏற்புட்டுள்ளன இதனை மையமாக கொண்டு நோக்கும் போது இவை திட்டமிட்ட வகையில் செய்யப்படுவதாக சந்தேகம் எழுகின்றது. காரணம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மலையக மக்கள் தொழிற்சங்கங்களுக்கு சந்தாதாரராக இணைத்து கொள்ள விண்ணப்பம் செய்கின்றனர் இதனை மையமாக கொண்டு கூட இத்தகைய நிகழ்வு இடம் பெறலாம் இச்சந்தர்ப்பத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தம் வசம் மலையக அரசியல் வாதிகள் ஈர்ப்பதனை நாம் அவதானிக்கின்றோம்.
இத்தகைய நிகழ்வு வெலிஓயா தீ சம்பவம் செஞ்ஜோன்றி பொகவந்தலாவ போன்ற நூற்றுக்கணக்கான இடங்களிலும் தற்போது டயகம பகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் போதேல்லாம் மலையக அரசியல் வாதிகள் முந்தியடித்துக்கொண்டு உதவிகரம் நீட்டுவார்கள் பின் அவர்களுக்கு ஒரு வீட்டுக்கு கூரை தகடு கூட வழங்க மாட்டார்கள் இதேல்லாம் மலையக அரசியல் வாதிகளின் கையாளாகத தனத்தையும் மக்களைவிற்று பிழைப்பு நடாத்தும் தரகர்களாகவுமே இவர்களின் நிலை காணப்படுகின்றது. இத்தகைய தீ சம்பவங்களின் உண்மை நிலை என்ன என்பதற்கான சட்ட ஆவணம் ஒழுங்காக சமர்ப்பிக்கப்படுகின்றதா தீ பிடித்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான மாற்று முயற்சிகள் எந்த வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் கேள்வி கணைகளாகவே உள்ளன.
நம் மக்களின் உடமைகளும் உறவுகளையும் இழப்பதுதான் மிச்சமாகின்றது. எமது மக்களுக்கு வெரும் ஏழு பேர்ஜ் காணி போதாது ஆகக்குறைந்தது 40 பேர்ஜ் காணியாவது வழங்க வேண்டும் காரணம் வீடு மட்டுமல்ல ஏனைய தேவைகளை கருத்திற்கொண்டும் அவை அவர்களின் மேலதிக பொருளாதார வளத்தை மேம்படுத்துவதாக அமையும் குறிப்பாக மந்தை வளர்ப்புக்கு விவசாய நடவடிக்கை வீட்டு தோட்டம் போன்ற சுயதொழி;ல் வாய்ப்புகளை விஸ்தரிக்க ஏதுவாக இருக்கும் வெருமனே ஏழு பேர்ஜ் காணியில் ஒரு கூட்டு குடும்பம் கூட வாழ இயலாது. இவைகளை கருத்திற் கொண்டு மலையக அரசியல் வாதிகள் மட்டுமல்ல புத்திஜீவிகளும் இளைஞர்களும் சமூகத்தவரும் ஒன்று திரள்வது அவசியமாகும்.
நன்றி - Pasumai Thayagam Pasumai முகநூல் வழியாக
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...