Headlines News :
முகப்பு » » அனர்த்தத்தில் இலாபம் தேடும் கட்சிகள் - மலைக்கழுகு

அனர்த்தத்தில் இலாபம் தேடும் கட்சிகள் - மலைக்கழுகு


மக்களின் அவலம் என்பது வேறு அரசியல் என்பது வேறு! அவலமுற்றுள்ள மக்களுக்கு உதவுவதை மனிதாபிமானத்துடன் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து மண்சரிவில் சிக்கி அவலமுற்றுள்ள மக்களை வைத்து அரசியல் இலாபம் தேட முனைவது அநாகரிகமானது.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவ வேண்டுமென்று குரல் கொடுப்பதற்கு வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து பிரதேச தலைவர்களுக்கும்,மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. சிலர் பொறாமையுடன் இதனை நோக்குவது அவர்களின் இயலா மையைக் காட்டுகிறது. இவ்வாறான குணாம்சங்கள் உடனடியாகக் கைவிடப்படவேண்டும்.

அனைத்து மக்களையும் அரவணைத்துப் போகும் கொள்கை வேண்டும். அதுவே ஆரோக்கியமான கமூகத்திற்கு வழிசமைக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சுயமாக அனுதாப ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்திவருகின்றனர். அதுமட்டுமன்றி, பாதுகாப்பான இடத்தில் நிரந்தரமான வீடுகளை அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது மக்களிடம் சுயமாக ஏற்பட்ட எழுச்சியாகும். இதனை யாரா லும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.

மலையகத் தலைமைகளின் ஏமாற்று நாடகம் இனியும் தொடரமுடியாது என்பது இந்த மக்கள் எழுச்சி கட்டியம் கூறுகின்றது. இதனைப் புரிந்துகொண்டு செய ல்படுவதே புத்திசாலித்தனமாகும்.
கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரி வும் உயிர்ச்சேதங்களும் உடைமைகள் இழ ப்பும் சாதாரணமானவையல்ல.இவை மலையக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவராலும் மறுதலிக்கமுடியாது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் கால த்துக்கு காலம் பல்வேறு மண் சரிவுகள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம்விட மீரியபெத்த மண்சரிவு வித்தியாசமானது மட்டுமல்ல, பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய அனர்த்தமாகவும் உள்ளது.
உயிரிழப்புகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற் றோர்கள், துணைகளை இழந்து தவிப்பவர்கள், அநாதரவாக விடப்பட்ட முதியவர்கள் என அனைவரையும் பரிதவிக்கவி ட்டுள்ளது. இந்த மண்சரிவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்க கூடியவை.
ஏனெனில், மலையக மக்கள் அனைவ ருமே மலைப்பாங்கான சரிவுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், நீரோடைகளுக்கு அருகிலும் குடியிருப்புகளை கொண்டிரு ப்பவர்கள். எனவே மீரியபெத்த மண்சரிவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறிப்பாக தொடர்ச்சியான கடும் மழை, மண்சரிவு தொடர்பான அறிவிப்புகள் என்பவற்றால் அச்சத்துடன் இருக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே மலையக மக்களிடையே பயஉணர்வு அதிகரித்தே காணப்படுகிறது.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்த மக்களும் பிள்ளைகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். அவர்களு க்குப் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமான தனித்தனி வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களது தொழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி, சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்க ளின் கல்வி நடவடிக்கையை முன்னெடு க்க ஒரு நிரந்தர திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாகும்.
மண்சரிவு அனர்த்தம் பற்றி அறிந்தவு டன் நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் அங்கு விரைந்தனர். நிவாரணப் பொருட்களை குவித்தனர். அரசி யல் கட்சிகளினதும் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக் கள் என அனைத்துத் தரப்பினரும் அங்கு சென்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சென்று நிலைமைகளை அவதானித்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்க ஆலோசனைகளை வழங்கினர்.

நிவாரணப் பொருட்களும் கொண்டுசெல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன. சகல கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் அங்கு சென்று பார்வையிட்டதுடன், நிவாரணங்களை வழங்க முன்வந்தனர். மீரியபெத்த மக்களுக்கு புதிய இடங்களில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடு க்குமாறு வலியுறுத்தினர்.

மக்களின் மீது அக்கறையுள்ள எந்த வொரு தலைவருக்கும் அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்த உரிமை இருக்கின்றது. அங்கே பிரதேசத்திற்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ தடையில்லை. ஆனால் அவ்வாறு குரல் கொடுப்பவர்களையும் உதவிகளை பெற்றுக்கொடுக்க முன்வருபவர்களையும் தூற்றுவது மனிதாபிமானதல்ல.
தங்களது அரசியல் நலனுக்கு பாதகமாக அமைந்துவிடுமென்று பயந்து அவ ர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் முறையல்ல. இதை மீரியபெத்த யில் தற்பொழுது காணக்கூடிய தாக இருக்கின்றது. இதனை பார் க்கும்போது வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் இருக்கிறது.

சுயநல அரசியலுக்காக எவ்வாறெல்லாம் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பது கவலைக்குரியது. அது மட்டுமின்றி, ஒருசிலர் நாட்டு பொதுமக்க ளிடம் சேகரித்த நிவார ணப்பொருட்களை எடுத்துச்சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகின்ற னர். ஆனால் பொருட்களை பொது மக்களுக்கு விநியோகிக்கும் போது "தங்க ளது சொந்த பணத்தி லிருந்து பொருட் களை வாங்கி வந்து கொடுப்பது போன்று" பிரசாரம் செய்கின் றனர்.

தங்களது சொந்தப்பணத்திலிருந்து நிவா ரணங்களை வழங்கினால் அதற்கு உரிமை கொண்டாட முடியும். ஆனால், பொது மக்களிடம். சேகரித்த பொருட்களை விநியோகிக்கும் போது "பொது மக்கள் வழங்கிய பொருட்கள்" என்று குறிப்பிட வேண்டுமல்லவா?

இதனையே அவர்கள் ஊடகங்களிலும் தெரிவித்து போஸ் கொடுத்து தம்மை பிர பலப்படுத்திக்கொள்கின்றனர்.

இதன்மூலம் தமது எதிர்கால அரசி யல் நலன்களுக்கு வழியமைக்க முயல் வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. மக்களின் அழிவின்போது அரசியல் இலா பம் தேட முனையும் இவர்கள் மனிதாபி மானமுள்ளவர்களா என்று இன்று மக்கள் வினவத் தொடங்கியுள்ளனர்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates