மலையக பெருந்தோட்ட மக்க ளின் மேம்பாட்டுக்கும் சமூக பொருளாதார தொழில் வளர்ச்சிக்கும் கல்விதான் மூலாதாரம் என்பதனை பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி தோற்றம் பெற்றதன் பின்னரே அனைவரும் உணர்ந்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
மலையகப் பெற்றோரின் பிள்ளைகள் தமது எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க முடியாமலிருந்த காலக்கட்டத் தில் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி அவர்களுக்கு புதியதொரு பாதையைக் காட்டியது. அப்போது ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பிரவேசம் பெறுவதே தமது இலட்சியம் என பலர் தீர்மானம் எடுத்தனர். அவ்வாறு தீர்மானம் எடுத்தவர் இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
பல எதிர்பார்ப்புகள், அதன் அடைவுகள், ஏமாற்றங்கள், இதற் கும் அப்பால் கல்லூரி அனுமதி கிடைக்காதவர்களின் மாற்று கற்றல் அல்லது தொழில் தெரிவு நடவடிக்கைகள் என காலங்கள் இரு தசாப்தங்களைக் கடந்து சென்று விட்டன.
கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள், உள்வரும் மாணவர்க ளின் மனோநிலை, வெளியேறும் மாணவர்களின் பாடசாலைகளிலான செயற்பாடுகள், கல்லூரி வரு கையின் பின்னரான சமூக மாற்றங்கள், வாழ்வியல் அபிவிருத்திகள், கல்வி, தொழில், சமூகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பண்பாடு, சமயம், போக்குவரத்து என்ப வற்றில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் என்பன பற்றிய ஆய்வுகளைச் செய்யும் போது ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் வெளியீடுகள் தொடர்பான ஒரு தீர்மானத்துக்கு வரக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல்தொகுதி மாணவர்கள் தாம் கற்ற கல்லூரிக்கும் தாம் வாழும் சமூகத்தின் சேவைகளுக் கும் ஏதாவதொரு வகையில் உதவ முடியுமாவென சிந்தித்ததன் விளைவாக அண்மையில் ஹட்டனில் முதல் தொகுதி மாணவர்கள் ஒன்று கூடி தம்மை ஒரு அமைப்பு ரீதியாக உருவாக்கி செயற்பட தீர்மானமெடுத்துள்ளனர்.
இந்த ஒன்று கூடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- கல்லூரியின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல்
- கல்வி மற்றும் தொழில் ரீதியிலான உதவிகள்
- பெருந்தோட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்.
- ஏனைய தொகுதி மாணவர்களையும் இணைத்து செயற்படுதல்.
- உயர்தர மாணவர்களுக்கு தலைமைத்துவ தொழில் ரீதியான வழிகாட்டல்கள் வழங்குதல்
- சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்தல்
- உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுத்தல்
- மருத்துவ உதவிகள் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- வெளியேறும் ஆசிரிய மாணவர்களின் உயர்கல்வி தகைமையை அதிகரித்துக் கொள்ள உதவி செய்தல்.
இத்தீர்மானங்கள் எதிர்காலத்தில் ஏனைய அங்கத்தவர்களின் கலந்துரையாடல்கள் மூலம் மெருகூட்டப் பட்டு செயற்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றை முன்னெடுத்துச்செல்ல செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாகாண மாவட்ட பிரதேச ரீதியான கலந்துரையாடல்கள் மூலம் ஏனைய ஆசிரிய மாணவர்களுடன் தொடர்புக்கொண்டு சிறப்பாக செயற்பட உறுதியெடுத்துள்ளனர்.
செயற்குழு விபரம் வருமாறு, ஆலோசகர்கள்: எஸ். ஸ்ரீதரன், எஸ். பன்னீர்செல்வம், எஸ்.கணேஷ்ராஜ், எம்.உனைஷ்ஆரீப், எஸ்.செந்தில்வதனி, எஸ்.சண்முகராஜ்.
தலைவர் : பரசுராமன் சங்கர், பொதுசெயலாளர் எஸ்.இராஜன், நிதி செயலாளர் எஸ். வாசுதேவன், நிர்வாக செயலாளர் எம்.மோகன் ராஜ், உப தலைவர் ஆர்.இராமநாதன், உப செயலாளர் ஏ.மேரி ஏஞ்சல், கணக்காய்வாளர்கள், என்.பரமேஸ்வரன், எம்.இரவிச்சந்திரன், எல்.யேசு, பி.நிர்மலாதேவி, மாத் தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, நாவலப்பிட்டி, இராகலை, பூண்டு லோயா ஆகிய பிரதேசங்களுக்கு இணைச் செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி - வீரகேசரி 29.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...