நூற்றி ஐம்பது வருடங்களுக்கு மேலாக தென் மாகாண பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக தங்களது மொழி கலை கலாசார பண்பாடுகளை இழந்து வருகின்றனர். இந்த மக் கள் கால ஓட்டத்தின் மாற்றத்தினாலன்றி சூழல் மற்றும் பயம் காரணமாகவே தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். இதனை மேலும் அனுமதிக்க முடியாது என்கிறார் தென் மாகாண சபை உறுப்பின ரும் சமசமாஜக்கட்சி முக்கியஸ்தருமான வண.பத்தேகம சமித்த தேரர்.
தென் மாகாண தோட்டங்களிலுள்ள இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்க ளின் சமூக நலன்களில் பெரும் அக்கறைகாட்டி வருபவர் வண.பத்தேகம சமித்த தேரர். இது தொடர்பாக பல்வேறு இடங்களிலும் அவர் பேசியுள்ளார். அண்மையில் அவரை கொழும்பிலுள்ள சமசமாஜக் கட்சி யின் தலைமையகத்தில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தொகுத்து தர ப்படுகின்றன.
நாட்டின் தென் மாகாணத்திலுள்ள தேயி லைத் தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி உரிமைகளற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் நல னில் அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ அல்லது மலையக அரசியல் தலைவர்களோ அக்கறை காட்டுவதில்லை. மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள இந்த மக்களைப் பற்றிய தகவல் சகல மொழிப் பத்திரிகைக ளிலும் வெளியிடப்பட்டு அனைத்து மக்க ளும் அறிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த மக்களும் பற்றிய உண்மைகளை ஏனைய பிரதேச மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் மூலம் தென்பகுதி தோட் டத் தொழிலாளர்களின் தற்போதைய பிரச்சி னைகளுக்கு ஓரளவேணும் தீர்வு காண முடி யும்.
தென் மாகாணத்திலுள்ள சுமார் ஐம்பதுக் கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்க ளில் தொழில்புரியும் இத்தொழிலாளர்கள் ஏனைய மலையக தொழிலாளர்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும் கவனிப்பாரற்ற வர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்கள் தொழிலாளர்களுக்குரிய சட்ட ரீதியான உரிமைகளையும் இழந்தே வாழ்கின்றனர்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்க ளில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் எதுவுமே இவர்களுக்கு கிடைப்பதில்லை. தென் மாகாணத் தின் பெருந்தோட்டங்களில் பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்களாகவும் தனிமை ப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாகவும் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தென் மாகாண பெருந்தோட்ட மக்கள் சமூக அமை ப்புகளினாலும் மலையக அரசியல் தொழி ற்சங்கங்களினாலும் தொடர்ச்சியாக புறக் கணிக்கப்பட்டே வருகின்றனர். ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களும் இங்கு வாழும் பெருந்தோட்ட தொழிலாளர் களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லை. இன்று இவர்கள் இன மத மொழி என்ற சமூக கட்டமைப்பை இழந்து வருகின்றனர். பெருமைமிக்க சிறப்பான தமிழ் பெயர்களைக் கொண்ட இத் தொழிலாளர் பாம்பரையினர் இன்று பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு பெரும்பான்மை இன பெயர்களை சூட்டுவதுடன் மதமும் மொழியும் மாறி பெரும்பான்மை இனத்தவர்களாக மாற்றம் பெற்று வருகின்றனர்.
பெரும்பான்மை இன மொழி பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை கல்வி கற்பதற்கு பெற்றோர் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இச்சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தென் மாகாணத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் இருப்பு அடையாளம் வெகு விரைவில் தொலைந்து போய் விடும். கூடிய விரைவில் பெரும்பான்மை இனமாக இன்றைய இளம் சமூகம் அடையாளம் கொள்ள ப்படலாம்.
இந்த மக்கள் தமது அடையாளத்தையும் மொழியையும் மதத்தையும் இழந்து வருவதை மலையக அரசியல் சிந்தனையாளர்கள் தடுக்க முன் வரவேண்டும். அதற்கான சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். இத்தோட்டத் தொழிலாளர்களின் கடுமையான நேர்மையான உழைப்பை பெற்றுக் கொள்பவர்கள் இந்த மக்களின் நலன்புரி விடயங்களில் அக்கறை கொள்வதில்லை. இவர்கள் கோழைகளாகவே வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டனர். இவர்களின் உழைப்பை பெறுபவர்கள் நேர்மையாக சம்பளம் வழங்குவதில்லை. தொழிலாளர்களும் போஷாக்கான உணவு வகைகளை உண்ணுவதில்லை. மூன்று வேளையும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டியையே உண்ணுகின்றனர். உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் வடி சாராயத்தை நாள் தோறும் குடித்து மதுவுக்கு அடியமையாகி உழைக்கும் பணத்தை குடிக்கே செலவிடுகின்றனர்.
காலி மாவட்டத்தின் தோட்டப் பாடசாலைகளில் தமிழ் அதிபர்கள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பாடசாலை களில் பெரும் குறைபாடுகள் காணப்படுகின்றன. பல பாடசாலைகளின் மாற்று மத அதிபர்கள் பதவி வகிப்பதால் இந்து சமய கல்வியும் முடக்கப்பட்டுள்ளது மலையக சமூகத்தைச் சேர்ந்த கல்வி கற்ற சமூகம் ஆசிரியர் பதவிகளை பெற்றாலும் தோட்டப் பாடசாலைகளில் கடமையாற்ற முன்வருவதில்லை தோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றுவது தரக்குறைவு என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.
மாணவர்கள் வறுமையின் காரணமாக சீருடை சப்பாத்து கற்றல் உபகரணங்கள் இல்லாது உள்ளனர். வறுமையை முன்னிலைப்படுத்தி பலர் இடை நடுவில் கல்வியை கைவிட்டு சிறுவர் தொழிலாளர்க ளாக பல்வேறு கஷ்டமான தொழில்களில் ஈடுபடுகின்றனர். பல பாடசாலைகளில் போதிய கட்டிட வசதியும் இல்லை. இவ்வாறு கல்வித்துறை மிகவும் பின் தங்கிய நிலையில் தென் மாகாணத்தில் உள்ளது.
ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வாழ உரிமையுண்டு. அவ் உரிமைகள் ஒரு மக்கள் கூட்டத்தினருக்கு மறுக்கப்படும் போது நாட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்படு வர். சுகாதாரம், குடியிருப்பு, மருத்துவம், போதிய சம்பளம், பாதுகாப்பு அனைத்து மக்களுக்கு பொதுவானது. இவைகள் அனைத்தும் முழுமையாக தென் மாகாண தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்.தெற்கின் தோட்டத் தொழிலாளர் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும். தாம் உண்டு வேலையுண்டு என்ற மனநிலை மாற வேண்டும். அதேபோன்று பெருந்தோட்ட மக்கள் பிரதிநிதிகளின் பார்வை இவ ர்கள் மீது விழ வேண்டும்.
வடிசாராயம் பாவனையால் 50 – 60 வயது களில் அநியாயமாக இம்மக்களில் பலர் மரணத்தை தழுவுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களாகவும் அந்நியர்களாகவும் கருதப்படும் இச்சமூகம் பல துறைகளிலும் உயர்வடைய வேண்டும். பிறமாவட்ட மலையக கல்வி சமூகம் இப்பிரதேச மாணவர்களுடன் சுற்றுலா மூலமாக கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். சிலர் தங்களின் அதிகார ஆசையாலும் வெறியினாலும் இக்கல்விச் சமூகத்தை முன்னேற்றம் பெறவிடாது தடுத்து வருகின்றனர். இதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள இயலாது. மலையக மக்களிலிருந்து உண்மையான சமூக சிந்தனையைக் கொண்ட தலைவர்கள் உருவாக வேண்டும். மலையக கல்வி மான் கள் இச்சமூகத்தை விட்டு விலகி நிற்காது சமூக வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் எனவும் வணக்கத்துக்குரிய பத்தேகம சமித்த தேரர் அதிரடியாக எமக்குத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இடதுசாரி அரசியல் வாதிகள் மலையக மக்களின் நலனில் அக்கறையுடன் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் மலையகத்தில் இடது சாரிகளின் தொழிற்சங்கங்கள் பெரும் அர்ப் பணிப்புடன் பெருந்தோட்ட தொழிலாளர்க ளுக்காக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கதா கும்.
நன்றி - வீரகேசரி 29.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...