Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 03 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 03 - இரா சடகோபன்

கொலராவால் இறந்து போன இலங்கையின் முதல் தோட்டத்துரை 
ஆரம்ப நாட்களில் கோப்பித் தோட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவும், சொந்தக்காரர்களாகவும், அல்லது அண்டை அயலவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தமக்குள் எழும் பிரச்சினைகளையும் பிணக்குகளையும் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இத்தலைவர் ஜனநாயக முறையிலும், வயது, அனுபவம் எனபவற்றை கருத்திற்கொண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தொழில் தொடர்பில் எழும் பிரச்சினைகளின் போது தோட்டத்துரையுடன் பேச்சுவார்த்தை நடத்துபவரும் இவராக இருந்தார். இவ்விதம் தலைவராக செயற்படுவதற்கு இவருக்கு சிறு கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதனைத் தவிர சிறு தோட்டங்களில் இத்தகைய தலைவர்கள் கங்காணி வேலையும் செய்தனர். 

பெரிய தோட்டங்களில் பெரியாங்காணி (பெரிய கங்காணி) என்பவரும் அவருக்கு கீழ் பல சின்னக் கங்காணிகளும் வேலை பார்த்தனர். 

இலங்கையின் முதலாவது தொகை தொழிலாளரை ஒப்பந்தத்தின் மூலம் முகவர் ஒருவரை தென்னிந்தியாவுக்கு அனுப்பி அழைத்து வந்த காரியம் இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டச் சொந்தக் காரரான ஹென்றி பேர்ட் (ஏஉNஈகீழூ ஆஐகீஈ) (1823) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. இவர் தனது சின்னப்பிட்டிய தோட்டத்தில் வேலை பார்த்த கண்டக்டரிடம் ஒரு தொகை தொழிலாளரைப் பெற பணித்த போது இவர் திருகோணமலைக்குச் சென்று தனது தமிழ் நண்பர் ஒருவரை அணுகி அவரை தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.  அந்த நண்பர் தென்னிந்தியாவிலிருந்து முதற் தடவையாக 14 பேரை கோப்பித் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தார் என இலங்கை துரைமார் சங்கத்தின் (கடூச்ணவழூணூண் அண்ண்ணிஞிடிச்வடிணிண) வரலாற்றுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹென்றி பேர்ட்  பின்னர் 1829 ஆம் ஆண்டு கண்டியில் வைத்து கொலராவால் பீடிக்கப்பட்டு இறந்து போனார். ஹென்றி பேர்ட் பிரிட்டிஷ் அரசாங்க இராணுவத்தில் உதவி ஆணையாளர் நாயகமாகவும் கடமை புரிந்தார். இவர் இறந்ததும் இவரது புதல்வர் ஹென்றி சி.பேர்ட் தனது தந்தையின் தோட்டத்தை பொறுப்பேற்று நடத்தினார். இவரும் இராணுவத்தில் அதிகாரியாக (இணிடூணிணச்டூ) கடமையாற்றியவரே. 

கோப்பித் தோட்டங்களின் தொடர்ச்சியான அதிகரிப்புடன் தொழிலாளர்களின் தேவை மிக அதிகரித்தது. தொழிலாளர்களை பெற்றுக் கொள்ள தோட்டத்துரைமார்கள் கங்காணிகளுடன் போட்டா போட்டி போட வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1 ரூபா, 2 ரூபாவாக இருந்த ஒரு தொழிலாளிக்கான முற்பணம் 9 ரூபா, 10 ரூபா என அதிகரித்தது. 
எழுத்தாளரும் தோட்டத்துரையுமான பி.டி.மில்லி தொழிலாளர் தேடும் படலம் தொடரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

அநேகமாக கம்பளைக்கப்பால் அட்டபாகே கணவாயில் வேட்டைத் தொப்பி தலையிலும், அட்டை கடிக்காத கவச பாதணியை காலிலும் அணிந்த தனித்த பிரமச்சாரி துரைமார்கள் ஒருவராகவோ, சிலருடன் இணைந்தோ கண்டியை நோக்கி நொந்து போன முகத்துடன் போவார்கள். அவர்களின் அந்த பிரயாணத்துக்கு இரண்டு காரணிகள் மட்டுமே இருக்கும். ஒன்று நிதி தேடுவது. மற்றது தொழிலாளரைப் பெற்றுக்கொள்வது. 
ழூழூழூ

தொழிலாளியை தேடிச் சென்ற பயணம்  உல்லாசப்பயணமாகவே முடிந்தது. 
கோப்பி பெருந்தோட்டங்கள் பெருகப் பெருக துரைமார்கள் மேலும் மேலும் தொழிலாளர்களை தேடி அலைந்து துன்பப்பட்டனர். என்னதான் விளைச்சல் அதிகரித்தாலும் அறுவடை செய்ய தொழிலாளர் பற்றாக்குறையால் பெருந்தொகையான கோப்பி மரத்தில் பழுத்து வீணாகிப் போயின. தமக்கு போதுமான தொழிலாளரைப் பெற்றுத்தராமை தொடர்பில் தோட்டத்துரைமார் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தினர்.

1856 ஆம் ஆண்டு தொலஸ்பாகை, கெல்வின்  தோட்ட உரிமையாளரான ஹியூ மெக்லீனை (ஏதஞ்ட ட்ழூஞிடூழூணச்ண)என்பவர் துரைமார் சங்கத்தினர் தொழிலாளரை பெற்றுக் கொடுக்க ஒரு முகவர் நிலையத்தை அமைக்க வேண்டுமென்றும் தான்  அதற்கு உதவுவதாகவும் விதந்துரை செய்தார். அதன் கிளைக் காரியாலயம் இந்தியாவின் மண்டபம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு அங்கு ஒரு பிரதிநிதியை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பிரகாரம் தொழிலாளர் தேவைப்படும் தோட்டத்துரைமார்கள் தமது தேவை குறித்து துரைமார் சங்கத்துக்கு அறிவித்து உரிய செலவுத் தொகையை செலுத்தினால் அவர்கள் மண்டபத்தில் இருக்கும்  தமது பிரதிநிதி வாயிலாக தொழிலாளர்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், இத்திட்டத்தினை துரைமார் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. 
இதே போல் 1864ஆம் ஆண்டு மே மாதம் டிம்புல்ல, சென்கிளேயர் தோட்ட உரிமையாளர் பெட்ரிக் ரயான் (கழூவணூடிஞி ணூதூச்ண)) என்பவர் கூலித் தொழிலாளர் புலம் பெயர்வுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த விவகாரத்தைக் கையாளலாம் என்றும் கூறி இவ்வமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான முழு திட்ட வரைபையும் முன் வைத்தார். இத்திட்டத்தையும் துரைமார் சங்கம் நிராகரித்தது.

தொடர்ந்தும் தோட்டத்துரைமார் தாமாகவே தென்னிந்திய பிரதேசங்களுக்கு சென்று தொழிலாளரைத் திரட்ட முற்பட்ட போதும் அவர்கள் தென்னிந்தியாவில் அந்நியராகக் கருதப்பட்டதால் அவர்களின் பிரயாணம் வெறுமனே உல்லாசப் பிரயாணமாகவே அமைந்ததென "டைம்ஸ் ஓப் சிலோன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 

1864 ஆம் ஆண்டு இது தொடர்பில் விபரங்களைத் திரட்ட சிரேஷ்ட தோட்டத்துரைமார்களில் ஒருவரான டபிள்யூ.ஏ.ஸ்வான் (ஙி.அ.குஙிஅN) தென்னிந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இவரின் விசாரிப்பின் படி இலங்கை கோப்பித் தோட்டங்களில் இருக்கம் வேலை வாய்ப்புத் தொடர்பில் அங்குள்ளவர்களுக்கு போதுமான விபரங்கள் தெரிந்திருக்கவில்லையென்றும் அவர்கள் இங்கு வர அச்சம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலைமை உக்கிரமடைந்த போதும் இடைத்தரகர்களாக இருந்த கங்காணிகள் துரைமாரை நன்கு சுரண்டப் பழகிக்கொண்டனர். இவர்கள் தொழிலாளர்களையும் பெற்றுத் தருவதாகக் கூறி துரைமாரிடம் இருந்து ஒன்றுக்கு மூன்றாக பணம் வசூலித்தனர். இதற்கு துரைமார்கள் மத்தியில் நிலவிய தொழில் போட்டியும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் 1865 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் துரைமார் சங்கம் துரைமார்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வழங்கியது. அதில் அதிக பட்சம் தொழிலாளி ஒருவருக்கு தலைக்கு 10 சில்லிங்குகளுக்கு மேல் கொடுக்க வேண்டாமென்றும் கங்காணிகளிடமிருந்து தகுந்த உத்தரவாதம் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியது. 

இவ்விதம் துரைமாரிடம் இருந்து பெற்ற பணத்தை இந்த நோக்கத்துக்காக இல்லாமல் தமது சொந்தத் தேவைகளுக்கே செலவிடுகின்றனர் என்றும் அல்லது ராமன் செட்டியாரிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க செலவிடுகின்றனர் என்றும் டபிள்யூ.டி.கிபொன் (ஙி.ஈ.எஐஆழுN) என்ற துரை கருத்து தெரிவித்துள்ளார்.

ஹென்றி வார்ட்டின் மரணம் கோப்பிச் செய்கைக்கு ஒரு பேரிழப்பு 
தோட்டத்துரைமார்கள் தொடர்ந்தும் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பில் புகார் தெரிவித்த போதும் அரசாங்கம் அது தொடர்பில் அக்கறை காட்டாதிருப்பது தொடர்பில் கவலை தெரிவித்தனர். தோட்டத்துரைமாரும் கங்காணிகளும் தாமே தொழிலாளர்களைத் தேடித் தேடி மிகுந்த சிரமங்களுக்குள்ளானார்கள். மறுபுறத்தில் இரண்டு, மூன்று தொழிலாளர்களின் வேலையை ஒரு தொழிலாளர் செய்ய வேண்டியிருந்தது. அறுவடை காலத்தில் தொழிலாளர்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டனர். அவர்கள் உழைப்பை பெற்றுக்கொள்ள ஒரு பணத்துக்குப் பதில் இரண்டு பணம் கூலியாக வழங்கப்பட்டது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் சேர் ஹென்றி வார்ட் (குஐகீ ஏஉNஈகீழூ ஙிஅகீஈ) 18551860 கவர்னர் பதவியேற்று இலங்கைக்கு வந்தார். இவர் கோப்பித் தோட்டங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை உடனேயே புரிந்து கொண்டார். அத்துடன் கோப்பிப் போக்குவரத்தின் பொருட்டு பெருந்தெருக்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். அவர் சிரமமாக தொழிலாளர்களை தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரவும் அவர்களை கோப்பித் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது பெருந்தெருக்கள் அமைக்கவும் ரயில்வே மற்றும் பொது வேலைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டார். அதன் மூலம் இலங்கையின் முதல் புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமையையும் பெறுகின்றார். 

இலங்கையின் முதல் ரயில் பாதையான கொழும்பு  கண்டி பாதையை அமைப்பதற்கென லண்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பெவியல் (ஊஅஙஐஉஃஉ)என்ற நிறுவனத்துடன் வார்ட் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். கோப்பிப் பயிர்ச்செய்கை பிரேஸில் மற்றும் ஜாவா ஆகிய நாடுகளில் இருந்து பாரிய வர்த்தகப் போட்டியை எதிர்நோக்குவதால் இலங்கையை ஒரு கோப்பி ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டுமாயின் ரயில்வே போக்குவரத்து மிக அத்தியாவசியமானது என இவர் வாதிட்டார். 

மறுபுறத்தில் இந்தியாவில் இருந்து வரும் தொழிலாளரை வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்தினால் மேலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுமென்றும் அவர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டி வரும் என்றும் தோட்டத்துரைமார் பயந்தனர். ஆனால், அப்படி நடக்காதென ஹென்றி வார்ட் உறுதியளித்ததுடன் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்றையும் (இணிச்ண்வ அஞ்ழூணஞிதூ) அமைத்து அதன் கிளைகளை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் அமைக்கச் செய்தார்.
இதற்கான செலவை ஈடுகட்டும் பொருட்டு ஒரு தொழிலாளிக்கு தலா 3 சில்லிங் முதலீட்டு வரி விதித்தார். இதன் வாயிலõக 120,000 தொழிலாளரை வரவழைத்து 18,000 பவுண்களை திரட்ட திட்டம் போட்டார். 

தொழிலாளர்கள் மன்னாரில் இருந்து கண்டிக்கு நடந்தே வர நேர்ந்ததால் அவர்களின் மரண வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்க ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு நீராவிப் படகுகளை ஏற்பாடு செய்தார். ஆனால், அவரது பல திட்டங்கள் பலிக்கவில்லை. 1859ஆம் ஆண்டளவில் இந்தியாவின் தென்மானிலங்களில் சாதகமான காலநிலை பொருளாதார அபிவிருத்தி வேலை வாய்ப்பு என்பன ஏற்பட்டதால் இலங்கைக்கு தொழிலாளர் வருவது 1ஃ3 பங்காகக் குறைந்து போய் விட்டது. 
1860 ஆம் ஆண்டு ஹென்றி வார்ட் மெட்ராஸ் மாநிலத்தின் கவர்நராக நியமனம் பெற்றுச் சென்றபோதும் அதற்கு அடுத்த வருடமே கொலரா நோய்க்கு இலக்காகி இறந்து போனார். கோப்பி பயிர்ச் செய்கை ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டது.

தொடரும்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates