மலையக சிவில் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு லிந்துலையில் நடைபெறவுள்ளது.
மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் ஆகியவற்றோடு புதிய உதயம் இளைஞர் கழகமும் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
மலையக தொழிலாளர்களுக்கு சொந்த வீடு சொந்த காணி என்ற தொனிப்பொருளில் 2014 சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
லிந்துலை ஹென்போல்ட் தோட்ட மைதானத்தில் காலை 8.30 மணிக்கு தொழிலாளர் தின நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிருத்தி தொழிலாளர் தின ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் மலையக மக்களின் வீடு, காணிப் பிரச்சினை தொடர்பாக பிரகடனம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் பலவும் முன்வைக்கப்படவுள்ளன.
தொழிலாளர்களின் கலை நிகழ்வும் இங்கு இடம்பெறவுள்ளது.
இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகற்விற்கு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சத்திவேல் தலைமை தாங்கவுள்ளார்.
அடையாளம் அமைப்பின் தலைவர் லெனின் ராஜ் இணைத் தலைவர்களான யோகேஸ், மொஹமட் பவாஸ், செயலாளர் பழனி விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மலையக இளைஞர், யுவதிகள் சமூக ஆர்வலர்களை ஒன்று சேர்த்து ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் தொழிற்சங்க, கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அடையாளம் அமைப்பின் செயலாளர், சமாதான நீதவான், ஊடகவியலாளர் லயன் பழனி விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...