ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டமே மனித குல வரலாறு என கார்ல் மார்க்ஸ் கூறினார். இவ்வரலாற்றில் ஒடுக்குதலுக்கு உட்பட்ட வர்க்கம் ஈற்றில் வெற்றிபெறும் என்பதை இயங்கியல் ரீதியாக முன்வைத்ததுடன், ஒடுக்குதலுக்குட்பட்ட வர்க்கம் தொடர்ந்து ஒடுங்கியிராது கிளர்ந்தெழும் எனக் கூறினார்.
அடிமைச் சதாயத்தில் ஸ்பார்டகஸ் முதல் இன்று வரை ஒடுக்குதலுக்கெதிராக அனைத்து சதாயத்திலும் விடுதலைப் போராளிகள் தோன்றி போராடி தூக்குமேடை காண்பது வரலாறாகத் தொடர்கின்றது. முதலாளித்துவ சதாயக் கட்டமைப்பு தோன்றியதுடன் கூடவே தோன்றிய தொழிலாளர் வர்க்கம் ஆரம்பத்தில் தனி மனித ரீதியாகவும் பின்னர் அமைப்பு தியாகவும் போராடியது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொழிற்சங்கம் உருவாக வழி சமைத்தன.
பின்னர் தம்மால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்துக் கொள்வதற்கான போராட்டங்கள் தொடர்ந்தன. இப்போராட்டங்கள் இன்றுவரையும் தொடர்கின்றன. இவ்வாறு நடைபெறும் போராட்டங்களில் இருவகையான தியாகிகள் உருவாகினர். ஒரு பிரிவினர் போராட்டத்தில் தொண்டர்களாக கலந்து கொள்ளும் வேளை எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி தொழிலாளத் தியாகிகளாகினர்.
இன்னுமோர் பிரிவினர் போராட்டத்திற்கு தலைமைதாங்கி எதிரியை அழித்து எதிரியின் தூக்குமேடையை துணிவுடன் எதிர்கொண்டு வீரமரணம் எய்தி தியாகிகளாயினர்.
இவர்களில் முன்னையவர்கள் போராட்டத்தில் உயிர்நீத்த உத்தமர்களாகவும் பின்னையவர்கள் வீரச் செம்மல்களாகவும், வீரத்தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் கருதப்படுகின்றனர். மேலும் இந்தப்பின்னையவர்கள் முன்னோடித் தலைவர்களாகவும் பின்பற்றலுக்குரியவர்களாகவும் வழிகாட்டிகளாகவும், சின்னமாகவும் கருதப்படுகின்றனர்.
இப்பின்புலத்துடன் நம் நாட்டு பாட்டாளி வர்க்கத்தில் பெருந்திரளாகவுள்ள தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றை நோக்கின் 1824ஆம் ஆண்டு தல் இந் நாட்டின் கோப்பி பின்னர் தேயிலை, றப்பர், தென்னை போன்ற தோட்டப் பயிர்ச்செய் கையில் ஈடுபடவென தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தாம் முகம் கொடுத்த கொடுங்கோன்மைகளுக்கு எதிராக 1930களின் பின்னிறுதியிலேயே தொழிற்சங்க ரீதியில் அணிதிரளலாயினர்.
இந்த அணிதிரளலுக்கு மலையக தொழிற்சங்க முன்னோடி கோ. நடேசய்யர் 1935இல் , அடித்தளமிட்ட போதிலும் அவரைப் பின் தொடர்ந்து இந்நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப அணி திரண்ட சமசமாஜக் கட்சியினர் 1939இல் தோட்டத் தொழிலாளர்களை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கீழ் அணி திரட்டலாயினர்.
ஆனால், தோட்ட முதலாளிமார்களான வெள்ளையர் அதனை ஏற்கவில்லை. இதனால் முதன் முறை யாக தோட்டத் தொழி =லாளர் ஸ்தாபனமயப்பட்டு, போராட்டத்தில் இறங்கலாயினர். இதன் முதல் நடவடிக்கையாக தொழிற்சங்க அங்கீகரிப்பு மற்றும் சம்பள உயர்வு போராட்டங்களுக்கான வித் தினை அன்றைய சமசமாஜக்கட்சியினர் ஹேவாஹெட்ட முல்லோயா தோட்டத்தில் விதைத்தனர்.
1940இன் இறுதியில் பதினாறு சதம் சம்பள உயர்வினைக் கோரி முல்லோயா தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தொழிற்சங்கத்தையும் அங்கீகக்ரிகும்படி கோரினர்.
இப்போராட்டத்தினை முறியடிக்க பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி கொல்லப்பட்டார். கோவிந்தன் சமசமாஜக்கட்சியின் தொழிற்சங்க அங்கத்தவராக இல்லாத போதும் துப்பாக்கிச் சூட்டில் பலி யாகிய கோவிந்தனே மலையகத்தின் முதற் தியாகியானார். 1940 இல் முல்லோயா தோட்டத்தில் பலியான கோவிந்தன் முதல், பதுளை கீணாக்களைத் தோட்டத்தில் பலியான அழகர்சாமி மற்றும் இராமையா வரை பல தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் பலியாகியுள்ளனர். இது தவிர 1977இல் மேற்கொள்ளப்பட்ட காணிச் சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் டெவன் தோட்டத் தொழிலாளி சிவனு லட்சுமணன் பலியானதுடன் 1980 களின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட சில அரசியல் போராட்டங்களின் போதும் பல அப்பாவித் தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளனர்.
இதன்படி நோக்கின் மலையகத் தோட்டத் தொழிலாளர் வரலாற்றில் உயிர்நீத்த உத்தமர்களின் வரலாறே காணப்படுகின்றது. அவ்வாறாயின் மலையகத்தில் எதிரியை பலி கொண்ட வீரத்தலைவர்கள், தியாகிகள் இருந்ததில்லையா? வெறுமனே பலிக்கடாக்களாகும் கலாசாரத்தை மட்டுமா மலையகத் தொழிலாளர்கள் கொண்டுள்ளனர்? தம்மை ஒடுக்கும் சர்வாதிகாகளை திட்டமிட்டு அழித்தொழித்த வீரவரலாற்றினை மலையகத் தொழிலாளர் வர்க்கம் கொண்டிருக்கவில் லையா என்று கேள்வி எழுகின்றது. ஒடுக்கப்படும் வர்க்கத்தில் அவ்வப்போது ஸ்பார்டகஸ்கள் தோன்றிக் கொண்டே இருப்பர் என்பது பொய்மையா? இல்லவே இல்லை. இது மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் பொய்மையாகவில்லை. தம்வர்க்கத்தை ஒடுக்கிய தோட்டத்துரையை சதித் திட்டம் தீட்டிப் பழிவாங்கிய வீரத்தலைவர்களது வரலாற்றினை மலையகம் கொண்டுள்ளது. அவ்வீரத்தியாகிகளின் வரலாறு மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்துள்ளது. முல்லோயா கோவிந்தன் பலி கொள்ளப்பட்டதுடன் எதிரியை பலிகொள்ளும் வர்க்க வேட்கை மலையகத்தில் ளைத்துள்ளது.
இவ்வீர வேட்கைக்கு முல்லோயா தோட்டத்திற்கு அருகாமையிலுள்ள ஸ்டேலன் பேர்க் (கந்தலா) தோட்டத்தைச் சேர்ந்த இவ்விளைஞர்கள் வீரசாமியும். வேலாயுதனும் வித்திட்டுள்ளனர். முல்லோயா தோட்டத் தொழிலாளர்கள் சமசமாஜக் கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க , த்தின் கீழ் அணிதிரண்ட காலத்திலேயே ஸ்டேலன்பேர்க் தோட்டத் தொழிலாளர் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் கீழ் அணிதிரண்டிருந்தனர். இந்த அணிதிரளலுக்கு ஸ்டேலன் பேர்க் தோட்டத்தைச் சார்ந்த தொழிலாளி மெய்யப்பன் முன்னணிப் பங்கு வகித்துள்ளார். அவரது தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை சீர் குலைக்க வெள்ளை தோட்டத்துரையான சி.ஏ. ஜி. போப் கடும் யற்சியில் ஈடுபடலானார். அருகில் உள்ள முல்லோயா தோட்டத்தில் நடந்தது போல் தமது தோட்டத்தில் தொழிற்சங்க போராட்டம் நடக்க இடமளிக்கக் கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டார். ஆனால் தொழிலாளர்கள் மெய்யப்பன் மீது கொண்ட நம்பிக்கையின் பலனாக, மாத இறுதியில் சந்தாப்பணத்தை மெய்யப்பனிடம் ஒப்படைப்பதன் மூலம் சங்கம் மீது தமது பற்றினை வெளிப்படுத்தினர்.
இதனால் வெறுப்படைந்த தோட்டத்துரை 1941ஆம் ஆண்டு ஜனவரியில் மெய்யப்பனை வேலையிலிருந்து காரணமின்றி நீக்கினார். அத்துடன் பற்றுச் சீட்டை கையில் கொடுத்து தோட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறினார்.
ஆனால் இதற்கு மெய்யப்பன் இணங்க வில்லை. இதேவேளை இதற்கு எதிராக தோட்டத்துரைக்கு கடிதம் அனுப்பிய அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கண்டி மாநில செயலாளர், மெய்யப்பன் அவர்கள் எவ்வித குற்றம் இழைக்கவில்லை மாறாக அவர் தோட்டக்கமிட்டி செயலாளர் என்ற ரீதியில் உங்களால் அநீதியாக வேலைநீக்கம் செய்யப்பட்ட வீரசாமிக்கு சட்டரீதியாக வாதிட்டே வேலையை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளார் ஆகையால் அதற்கு பழிவாங்கும் விதத்திலேயே அவரை நீங்கள் வேலையிலிருந்து நீக்கியுள்ளீர்கள் என 1941 ஏப்ரல் 26ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெவித்த போப் துரை கம்பளை நீதவான் மன்றுக்குச் சென்று அத்துமீறி தோட்டத்திலிருக்கும் மெய்யப்பனை கைது செய்யும் ஆணையைப் பெற்றார். இதன்படி மெய்யப்பனை கைது செய்ய மே 7ஆம் திகதி பொலிஸார் ஸ்டேலன் பேர்க் தோட்டத்திற்குச் சென்றனர். ஆனால், மெய்யப்பன் தோட்டத் தில் இருக்கவில்லை. பொலிஸாரால் மெய்யப் பனை கைது செய்ய டியவில்லை. மெய்யப்பன் எங்கு இருக்கிறார் என்ற விபரம் வீரசா மிக்கும், வேலாயுதம், குப்புசாமி மற்றும் இராச கவுண்டனுக்கும் மட்டுமே தெந்திருந்தது.
பொலிஸ் தோட்டத்திற்கு வந்து சென்ற வுடன் மேற்கூறப்பட்ட நால்வரும் மெய்யப்பனை சந்திக்க கண்டியிலுள்ள சமசமாஜ பணிமனைக்கு சென்றனர். மெய்யப்பனை சந்தித்து நீண்ட கலந்துரையாடலை நடத்திய பின் நால் வரும் தோட்டம் திரும்பியுள்ளனர். மெய்யப்பன் 9ஆம் திகதி காலை நீதி மன்றத்தில் சரணடைந்ததுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9ஆம் திகதி மாலை தோட்டத்துரை போப் கலஹா லெவலன் தோட்டத்திற்கு இரவு போசனத்திற்கு சென்றார். வௌலன் தோட்டத்துரை ஆர்.டி.பிளேக் மோருடன் உணவு உண்ட பின்னர் இரவு 11.00 மணிக்கு தனது தோட்டத்தை நோக்கி காரில் சென்றார். தோட்டத்துரை போப் ஸ்டேலன் பேர்க் தோட்ட தொழிற்சாலை வழியாக தமது பங்களாவை நோக்கிச் செல்லும் போது வழியில் இரு மரங்கள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு காரை விட்டு இறங்கினார். அவ்வேளை அங்கு மறைந்திருந்த வீராசாமியும், வேலாயுதம் துணைக்கு தம்முடன் அழைத்து வந்த தோட்டத் தொழிலாளர்களான வேலு, ரெங்கசாமி, குப்புசாமி, சின்ன முனியாண்டியையும் இணைத்துக்கொண்டு போப்பை தடியாலும், இரும்புக்கம்பியாலும் தாக்கி கொலை செய்து தப்பிவிட்டனர்.
இரண்டாம் நாள் வீரசாமி, வேலாயுதம் உள்ளிட்டோர் பிடிபட்டதுடன் தன் நண்பர்களுக்கு வாக்குறுதியளித்தபடி, கொலையை தாங்கள் இருவர் மட்டுமே மேற்கொண்டதாக வீரசாமியும், வேலாயுதம் ஒத்துக்கொண்டனர். இவ்வழக்கு ஒரு வருடம் நடந்ததுடன் வீரசாமி, வேலாயுதம் என்ற இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இம்மரண தண்டனைக்கு எதிராக மேன்றையீடு செய்யப்பட்டது. ஆனால், மேன்றையீட்டு நீதி மன்றம் அத்தண்டனையை உறுதி செய்தது.
இதன்படி 1942ஆம் ஆண்டு பெப்ரவ 27 ஆம் திகதி காலை எட்டு மணிக்கு வெலிக் கடை சிறைச்சாலையில் வீரசாமி தூக்கிலிடப்பட்டார். மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலாயுதம் தூக்கிலிடப்பட்டார். வீரசாமிக்கும், வேலாயுதத்திற்கும் எதிராக மரணதண்டனை நிறைவேற்ற முன் முதல் நாள் அவர்களது இறுதி ஆசை என்ன? எனக் கேட்கப்பட்டுள்ளது. அப்போது இருவர் சார்பாக கடிதம் எழுதிய வேலாயுதம், உலக ஏழைச் சகோதரர்கள் வாழ வேண்டும். தங்களுடைய சங்கம் கடவுள் செயலால் முன்னேற்றம் அடைய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இதுவே அவர்களது இறுதி ஆசையாக இருந்துள்ளது. (இணைக்கப்பட்டுள்ள கடிதத்தைப் பார்க்கவும்) அக்கடிதத்தின் பிற்குறிப்பில் தமது புகைப்படத்தை தமது அண்ணனுக்கு அனுப்பி வைக்கும்படி கோரியுள்ளார்.
உலக ஏழை சகோதரர் என அவர்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் கூறிய உலகத் தொழிலாளர் களையே குறிப்பிட்டுள்ளனர். இதைத்தவிர இவ்விரு செந்தோழர்கள் வேறு எதனையும் கோரவில்லை.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாக்க உறுப்பினரான வீரசாமியே சங்கத்திற்கு சந்தாப்பணம் சேர்ப்பவர். இவருக்கு துணையாக நின்றவர் வேலாயுதம். இவர்கள் இருவரும் இளைஞர்கள்.
இராமசாமியின் மகனான வீரசாமிக்கு 22 வயது. ஐயன்பெருமாளின் மகனான வேலாயுதம் இளைஞனே. இவ்விருவரும் தோட்டத் தொழிலாளர்களது விடுதலைக்காகவும் தொழிற்சங்கத்திற்காகவும் தூக்கு மேடையை இன்முகத்துடன் முத்தமிட்ட தோழர்களாவர்.
முதன் முதலாக இடதுசாரிக் கொள்கையில் பற்றுக்கொண்ட தொழிலாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலை வெள்ளையரை பீதியில் ஆழ்த்தியது. இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக கடமையாற்றிய அட்வக்கேட் ஒ.எல்.டி.க்றஸ்டர் இந்த வழக்கின் சாட்சிகளை நூலுருவாக்கி, போப் கொலை வழக்கு, என 1942 மே 21ஆம் திகதியன்று ஆங்கிலத்தில் வெளிக் கொணந்துள்ளார்.இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதுவே வெள்ளையருக்கு எதிராக தோட்டத் தொழிலாளார் மேற்கொண்ட முதல் கெரில்லாத்தாக்குதல். ஆனால் இது தொடரப்படவில்லை. (இது ஆய்விற்குரியது.) இதன் பின்னர் தொழிற்சங்கப் போராட்டத்தில் அப்பாவித் தொழிலாளர்கள் இறந்ததே வரலாறு. எவ்வாறாயினும் இலங் கைத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தோன்றிய முதல் ஸ்பார்டகஸ்கள் வீரசாமியும், வேலாயுதமே. தோட்டத் தொழி லாளர் மத்தியில் தோன்றிய முதல் பகவத் சிங்கும் இவர்களே. இக்கட்டுரையை வாசிக்கும் வேளையில் அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு ன்னர் இன்றைய தினத்திலேயே (பெப்ரவ 28) மலையகத்தின் பகவத் சிங் வேலாயுதம் தூக்குக் கயிற்றினை இன் முகத்துடன் ஏற்றார். அதற்கு தல் நாள் அதாவது பெப்ரவ 27 ஆம் திகதி மலையகத்தின் பகவத் சிங் வீரசாமி தூக்குக் கயிற்றை மாலையாக ஏற்றுக்கொண்டார். ஆகையால் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்காக தூக்கு மேடையேறிய பெப்ரவ 27ஆம், 28ஆம் திகதியே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலை நாள், தியாக நாள். இத்தினங்களையே விடுதலை நாளாக தோட்டத் தொழிலாளர்கள் நினைவு கூர வேண்டும். வீரசாமியினதும், வேலாயுதத்தினதும் புகைப் படங்களே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் வெற்றியின் சின்னமாக, வீரத்தின் சின்னமாக, தலைமையின் சின்னமாக, தோழமையின் சின்னமாக அலங்கரிக்கப்பட வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் செவ்விளைஞனாகப் போற்றப்பட்ட பகவத் சிங் தூக்குக்கயிற்றின் முன் தமது இறுதி ஆசையாக தொழிலாளர் புரட்சி மலர வேண்டு மென்றார். அறுபதுகளில் இந்தோனேசியாவின் செவ்விளைஞனான சுடிஸ்மானும் தொழிலாளர் புரட்சி வாழ்க என்றே தூக்குக் கயிற்றினை முத்தமிட்டார். அவ்வாறே மலையகத்தின் செவ்விளம் தலைவர்களான வீரசாமியும், வேலாயுதம் உலகத் தொழிலாளவர்க்கம் நீடூழி வாழ வேண்டும் என தூக்குக் கயிற்றினை மாலையாக சூட்டிக் கொண்டுள்ளனர். மலையக தோட்டத் தொழிலாளர்களின் புரட்சித் தலைவர்களை இனியும் மறக்கலாமா? நினைவு கூருவோம் எம் உண்மையான புரட்சித்தலைவர்களை, தியாகிகளை இனி வரும் ஆண்டுகளில்.
நன்றி - மரிகுமார்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...