இலங்கையிலிருந்துது தாயகம் திரும்பியோருக்கு பிற்படுத்த்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குகுவதற்ககு கர்நாடக தலித் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சுல்லியா (Sullia), புத்தூர் (Puttur) பகுதிகளில் வாழ்கின்ற இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான” (Scheduled Caste) சான்றிதழ் வழங்குவதற்கு அம்மாநில அரசு ஆலோசித்து வருவதற்கு அங்குள்ள தலித் அமைப்பு ஒன்று (The DakshinaKannada Zilla Dalita Sanghatanegala Okkuta) எதிர்ப்புத் தொpவித்துள்ளது.
1964இல் இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழும், 1974இல் செய்து கொள்ளப்பட்ட சிறீமாவோ - இந்திராகாந்தி ஒப்பந்தத்தின் கீழும் இந்தியக் குடியுரிமை பெற்று தாயகம் திரும்பிய இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் கர்நாடக மாநிலத்தின் மேற்குறித்த தாலுக்காக்களில் உள்ள இறப்பர் தோட்டங்களில் தொழில் புரிந்து வருகின்றனர்.
அந்த மக்களுக்கே பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக கர்நாடக மாநில அமைச்சரவை ஆராய்ந்திருந்தது. அதையொட்டியே மேற்கூறிய கர்நாடக தலித் அமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. தமது எதிர்ப்பு சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சி.எச். பாஸ்கர் என்பவர், கர்நாடக அரசு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்குமாக இருந்தால், அது பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பது சம்பந்தமாக 1990இல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அமையும் எனக் கூறியுள்ளார்.
1950இல் இந்தியக் குடியரசுத் தலைவர் விடுத்த ஒரு அறிவித்தலின் பிரகாரம், அந்தத் திகதியிலிருந்து இந்தியாவில் குடியிருப்போருக்கே பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க முடியும் என நீதிமன்றம் அத்தீர்ப்பில் தொpவித்திருந்தது. அதன்படி 1964, 1974ஆம் ஆண்டுகளின் பின்னர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க முடியாது என அந்தக் கர்நாடக தலித் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதை மீறி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கினால், அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து வாழ்கின்ற திபெத்தியர்கள், பங்களாதேசிகள், பர்மியர்கள் போன்றோரும் அந்தச் சலுகையைத் தமக்கும் வழங்கும்படி கோருவர் எனத் தெரிவிக்கும் கர்நாடகத் தலித் அமைப்பு, இதனால் பு+ர்வீகமாக அங்கு வாழும் தம்மைப் போன்றவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மலையகத்திலிருந்து மீண்டும் தாயகம் திரும்பிய பலர் வர்க்க ரீதியிலும், சாதி ரீதியிலும் விளிம்பு நிலையை சேர்ந்தவர்கள். சாதி ரீதியில் தலித் பின்னணியை சேர்ந்தவர்களே பெரும்பான்மையானவர்கள் என்பது தெட்டத்தெளிவான உண்மை அப்படியிருந்தும் இவர்களுக்காக குரல்கொடுக்க எந்த தமிழக தலைவர்களும் முன்வராதது வேதனை தரத்தக்கது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...