அண்மையில் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்தின் முக்கிய சிறுகதை படைப்பாளியுமான தெளிவத்தை ஜோசப் அவர;களின் மூன்று நூலகளின் அறிமுகம் கிழக்கிலங்கையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முதலாவது நிகழ்வு வாழைச்சேனை பொதுநூலகத்தில் நூலகர் உருத்திரன் தலைமையில் இடம்பெற்றது.
அறிமுகவுரையை நிகழ்த்திய மலையக எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலக ர்: ‘சமூக மாற்றத்தை ஏற்படுத்த வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யவேண்டியுள்ளது. அதற்காகவே எமது பாக்யா பதிப்பகம் நாம் நூலகம் தொடர்;பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றோம். நமது அறிவுக்கருவூலங்களை அழிக்க நூலகங்களை எரிப்பதும், உடைப்பதும் நிகழ்ந்;திருக்கிறது. இந்த வாழைச்சேனை நூலகமும் இரண்டுமுறை உடைபட்டு இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதனை மீள ஒழுங்கமைப்பதில் வாழைச்சேனை பிரசேசபை செயலாளர் திரு.சஹாப்தீன் அவர்களின் பணி முக்கியத்துவம் பெற்றிருப்பதனை அறிய முடிகின்றது’ என கூறியதுடன் அவரிடம் வாழைச்சேனை பொதுநூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்பு செய்தார்.
கருத்துரை வழங்கிய காகம் பதிப்பகத்தின் நிறுவுனர் ஏ.பி.எம்.இத்ரீஸ்: ‘நான் சிறுபையனாக இந்த வாழைச்சேனை நூலகத்துக்கு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப்பின்னர் தான் இன்று இதற்குள் நுழைகிறேன். நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் நமது சமூகங்களுக்கு இடையே ஏற்படுத்திய கசப்புணர்வு எனது ஒட்டமாவடி கிராமத்தின் அடுத்த எல்லையில் இருக்கும் வாழைச்சேனை நூலகத்திற்கு வருவதற்கு கூட தடையாக இருந்திருக்கிறது என்பது வேதனைக்குரியது. இன்று மலையகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மலையக எழுத்தாளர் கள் நமது இரண்டு சமூகங்களுக்கு இடையே இலக்கிய உறவை புதுப்பிக்கும் நாளாக இதனை மாற்றியுள்ளார்கள். தெளிவத்தை ஜோசப் போன்ற மூத்த எழுத்தாளர் கிழக்குக்கு வருகை தந்து எம்மோடு உறவாடுவது என்பது நாம் பெற்ற பாக்கியம். விஷ்ணுபுரம் விருதுக்கு தெளிவத்தையை தெரிவு செய்திருப்பது எந்தளவு தூரம் பொருத்தமானது என்பது அவரது படைப்புக்களை வாசிக்கும் போது புரிகிறது. அவரின் ‘காலங்கள் சாவதில்லை’ என்கிற நாவலையும் ‘நாமிருக்கும் நாடே’ என்கிற சிறுகதை தொகுப்பை மாத்திரமே வாசித்திருந்த பலருக்கு இன்று ஒரே நாளில் அவரது மூன்று புதிய நூல்களின் அறிமுகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் தினசரிகளில், வார இதழ்களில், சீரிய இதழ்களில் அவரது படைப்புகளை வாசித்த வாசகர்கள் பலரை நாம் இங்கு காண முடிகின்றது. அவரது படைப்புகளில் தெரியும் யதார்த்தம் அவரைப்பார;த்ததும் வெளிப்படுகிறது. வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் வாழும் எழுதும் எழுத்தாளர்கள் அரிது. ஆனால் தெளிவத்தை அதற்கு உதாரணமானவராவே திகழ்கிறார்;’ என்றார். எழுத்தாளர் தாழை செல்வரத்தினம், முன்னாள் நூலகர் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏற்புரை ஆற்றிய தெளிவத்தை ஜோசப் அவர்கள்: ‘ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஓரு சில தடவைகள் கிழக்குப்பக்கம் வந்திருக்கிறேன். ஆனால் இது புதிய அனுபவம். யுத்தம் இல்லாத காலப்பகுதியில் நான் வரும் முதல் பயணம் இது. யுத்தம் நமக்குள் எத்தனை பின்னடைவைத் தந்துள்ளது என்பது இங்குள்ள நிலைமைகளைப் பார்க்கும் போது புரிகிறது. இங்கே இரண்டு சமூகங்கள் இலக்கிய ரீதியாகக் கூட உறவாட முடியாத ஒரு சூழ்நிலை இருந்திருக்கின்றது என்பது வேதனைக்குரியது. இரண்டரக்கலந்து வாழ்ந்தவர்கள் தமது கிராமங்களின் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு குழுக்களாகிப் போன சோக வரலாற்றினை அறிய முடிகின்றது.
மலையக மக்களாகிய நாங்களும் பல்வேறு இன்னல்களை அனுபவித்திருக்கிறோம். ஆனால் கிழக்கிலே தமிழ்பேசும் இரண்டு சமூகங்கள் கசப்புணர்வு கொள்வது என்பது மனவருத்தத்துக்குரியது. அது நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று என்றே கருதுகின்றேன். என்னுடைய ‘மந்திரக்கோல்’ எனும் சிறுகதையில் அந்த சூட்சமத்தை சொல்லியிருக்கிறேன். எவ்வாறு நம்மை அவர்கள் சீண்டிவிடுகிறார்கள் என. ஆனால் இன்று அந்த கசப்புணர்வை கலைந்து உறவுகளை புதுப்பிக்கும் காலமாக இன்றைய நிகழ்வுகள் அமைகின்றன.
சாதாரணமாக மரத்தினை பார்க்கும் பலருக்கு அந்த மரத்தில் பழங்கள் இருப்பது தெரியாது. சிலருக்கே தெரியும். அதிலும் சிலருக்கு அந்த பழத்திற்குள் விதை ஒன்று இருப்பது தெரியும். இங்கே உரையாற்றிய இத்ரீஸ் போன்ற சிந்தனையாளர;களுக்குத்தான் அந்த விதைக்குள் இன்னுமொரு மரம் இருக்கின்றது என்பது தெரியும். எனவே நம்மிடையேயான உறவுக்குரிய மரம் எங்கோ ஒரு விதைக்குள் மறைந்திருக்கிறது. அது விருட்சமாக வளரவேண்டும். காகம் பதிப்பகம் - வாழைச்சேனை வாசகர் வட்டம் போன்ற நல்லெண்ணக்காரர்கள் அதனை ஆரம்பித்து வைத்திருக்கிறீர;கள். உங்கள் முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்பிக்கையளிக்கிறது’ என்றார்
எழுத்தாளர் முத்துமோகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் திரு.சஹாப்தீன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. காகம் மற்றும் பாக்யா பதிப்பகத்தின் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்வு தவிரந்த பல்வேறு தனிப்பட்ட இலக்கிய சந்திப்புகளும் கலந்தரையடல்களும் இடம்பெற்றன. எழுத்தாளர் ஏபிம்.இத்ரீஸ் அவர் களின் இல்லம், காத்தான்குடி ரவூப் என்ஜினியர் இல்லம் எழுத்தாளர் எஸ்.எல்.எம் ஹனிபா இல்லம் விபுலானந்த இசை நடனக்கல்லூரி என பல்வேறு இடங்களில் சந்திப்புகளும் உரையாடல்களும் இடம்பெற்றன.
எழுத்தாளர்கள் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் எஸ் நளீம், யு.அஹமட், காகம் பதிப்பகத்தின் இம்ரான், இம்தாத், ரபாய்டீன், நவ்பர்;, ஏ.சி.இர;ஸாட், இ.எல்.எம்.இர;ஷாட், எச்.எம்.இஸ்மாயில், நூர;தீன், ஏ.பி.ஷாஜஹான், அயூப் மௌலவி, ஆதம்லெப்பை, சஹாப்தீன், மகுடம் ஆசிரியர் மைக்கெல் கொலின், மறுகா ஆசிரியர் மலர;ச்செல்வன், எழுத்தாளர் உமா வரதராஜன், பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர;.சி.மௌனகுரு, திருமதி.சித்ரலேகா மௌனகுரு, எழுத்தாளர் ஜுனைதா சித்தீக், கவிஞர் சாந்தி முகைதீன், சிறுகதையாளர் கௌரிபாலன் முதலான இலக்கிய ஆளுமைகளை சந்தித்து உரையாடும் நிகழ்வாகவும் இந்த இலக்கிய பயணம் அமைந்திருந்தமை சிறப்புக்குரியது. இந்த இலக்கிய பயணம் மலையகத்துக்கும் கிழக்குக்குமான இலக்கிய தொடர்புகளை புதுப்பித்துள்ளது எனலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...