இரா. சடகோபன் |
அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தப் பேருரை
இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்கள் அனைவரும் இன்று இலங்கைப் பிரஜா உரிமை பெற்று இந்நாட்டின் தேசிய அரசியலில் முற்றாக இணைந்துவிட்ட பின்னரும்கூட சில விசம சக்திகள் அவர்கள் இந்நாட்டுக்குரியவர்கள் அல்லவென்றும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவிட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர். இப்போதும்கூட இணையத்தளத்தில் இது தொடர்பான விவாதத்தை சிலர் முடுக்கிவிட்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் இரா. சிவலிங்கம் பதினோராவது ஞாபகார்த்த பேருரை நிகழ்த்தும் போது கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார். இந்நிகழ்வு எம். வாமதேவன் தலைமையில் இடம்பெற்றதுடன் சிறப்புரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்தினார். மற்றும் தை. தனராஜ், சீ. நவரத்ன ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
கலாநிதி கணேசமூர்த்தியின் உரையில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
19ஆம் நூற்றாண்டின் பெருந்தோட்டச் செய்கை ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கில் இந்தியத் தொழிலாளர்கள் வரவில்லை எனக் கண்டோம். எனினும் தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட பின் நிரந்தரமாகக் குடியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த தொழிலாளர் பலர் தோட்டங்களை தமது நிரந்தர வதிவிடங்களாக மாற்றிக் கொள்ள விரும்பினர்.
1860இல் ஏற்பட்ட ‘கொலரா’ நோய் பெருந்தோட்ட ஊழிய நிரம்பலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவே அக்காலத்தில் Medical Wants and Disease Ordinance என்னும் சட்டம் கொண்டு வரப்பட்டது சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியது. இதன் காரணமாக தொழிலாளர் குடியிருப்புக்களின் பரப்பளவு, இட அமைவு, வீடமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் அடிப்படை கழிவகற்றல் சுகாதார வசதிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு குறித்த ஒரு தரத்தைப் பேண முயற்சிக்கப்பட்டது. எனவே சகல தொழிலாளர் குடியிருப்புகளும் நியம முறையிலமைந்த ‘லைன்’ அறைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன.
பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் Sri Lanka State Plantation Corporation (SLSPC) மற்றும் குணூடி Social Development Division (SDD) என்பன தொழிலாளரின் வீட்டு வசதி மற்றும் சுகாதார விடயங்கள் முதலிய நலன்புரி விடயங்களை கவனிக்க குணிஞிடிச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt ஈடிதிடிண்டிணிண (குஈஈ) என்னும் அமைப்பினை உருவாக்கின. எவ்வாறாயினும் பின்னர் பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து The Plantation Housing and Social Welfare Trust (PHSWT) உருவாக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்தது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொழிலாளரின் நலன் பேணும் நடவடிக்கையில் இவ்வமைப்பு ஈடுபட்டது.
பெருந்தோட்டங்களின் வாழ்க்கை நிலைமையானது ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியதாகும். பொருத்தமான சுகாதாரமான கழிவகற்றல் வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் என்பனவும் குறைவாகவே உள்ளன. ஆரம்ப கால ஒரு அறை கொண்ட இராணுவ பாணியில் (Barrack Type) அமைந்த குடியிருப்புக்கள் இன்னும் பரவலாகக் (சுமார் 70% 80%) காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் 2000ஆம் தசாப்தத்தில் தொழிலாளர்களுக்கு நிரந்தரமான தனிக் குடியிருப்புக்களையும் கூட்டு வீட்டுத் திட்டங்களையும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சில பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் இத்திட்டத்தின் முன்னேற்றம் மிக மந்தமாகவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை பெருந்தோட்டங்களைச் சூழவுள்ள காணிகள் துண்டாடப்பட்டு மரக்கறிச் செய்கைக்காக பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெலிமட, நுவரெலியா, கந்தப்பளை, ராகலை போன்ற பகுதிகளில் இதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. தொழிலாளர் குடியிருப்புகள் அழிவடையும் நிலையில் உள்ளதையும் சூழவுள்ள பகுதிகளிலுள்ள தனியார் குடியிருப்புக்கள் தரமான குடியிருப்புக்களாகவும் உள்ளதையும் அப் பகுதிகளுக்கூடாக பயணம் செய்யும் எவராலும் இலகுவாக அவதானிக்க முடியும்.
அட்டவணை
குடியியல் நிலைமைகள்தொகை சதவீதம்
தொழிலாளரின் மொத்த எண்ணிக்கை 265,000
வதியும் தொழிலாளர்கள்223,000 84%
வதியும் வட்டுத்துறை எண்ணிக்கை 186,000
வதியும் மொத்த குடித்தொகை 777,000
இளைஞர் குடித்தொகை169,000 21.8%
சிறுவர் குடித்தொகை241,000 31.1%
வாழ்க்கைத் தரம்
லயன் அறைகளில் வாழும் வீட்டுத்துறை 139,00075%
தகரக்கூரை வீடுகளில் வாழும் வீட்டுத்துறை130,200 70%
மலசலகூட வசதியுள்ள வீட்டுத்துறை 130,200 70%
மின்சார வசதியுடைய வீட்டுத்துறை 22,320 12%
கல்வி மற்றும் சுகாதாரம்20.2%
நாளாந்த கலோரி உட்கொள்ளல் 2674
இடைநிலை மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி 12.7%
514 வயதுக்கிடையில் பாடசாலை செல்லாதோர்21,216
Source : Project Preparatory Technical Assistance Final Reports, December 2001, ADB
மேற்படி அட்டவணை பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குறித்த மேலதிக தகவல்களைத் தருகிறது. இத் தரவுகளிலிருந்து தொழிலாளர் குடியிருப்புகளின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளதை உணரலாம். அதேவேளை இளைஞர் குடித்தொகையும் சிறுவர் குடித்தொகையும் பெருந்தோட்டக் குடித்தொகையில் கணிசமான தொகையினராக உள்ளதை அவதானிக்கலாம்.
எவ்வாறாயினும் இடைநிலைக் கல்வி மற்றும் அதற்கப்பால் சென்றுள்ள குடித்தொகையின் சதவீதம் 20.2% மட்டுமேயாகும். சிறு வயதிலேயே தொழில் வாய்ப்புகளை நாடிச் செல்கின்றமை இடைநிலைக் கல்வியைப் பெறுவதற்கு குடும்ப சூழல் ஒத்துழைக்காமை மற்றும் அதற்குரிய பாடசாலைகள் வெகு தொலைவில் அமைந்துள்ளமை, வாழும் சூழல் படிப்பதற்கு ஏற்றதாக இல்லாமை, சம வயதுடைய சிறுவர், இளைஞர் வெளியிடத் தொழில்களில் (குறிப்பாக கொழும்பு, கண்டி போன்ற நகர்ப்புறங்களில்) ஈடுபட்டு பணமீட்டுவதனால் ஏற்பட்ட செய்து காட்டல் விளைவு (Demonstration Imapact) என்பன இதற்குரிய காரணங்களாகும்.
மறுபுறம் கல்வி கற்ற இளைஞர்கள் பெருந்தோட்ட வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கின்றனர். அதேபோல அவர்களின் பெற்றோரும் தோட்ட வேலைகளில் தமது பிள்ளைகள் ஈடுபடுவதை விரும்புவதில்லை. பெருந்தோட்ட வேலை தொடர்பான சமூக மனோபாவம் குறிப்பாக ஏனைய சமூகத்தவர்கள் மத்தியில் மிகவும் மோசமானதாக உள்ளது. சமூக அந்தஸ்து தொடர்பில் இது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே எந்த ஒரு கல்வி கற்ற மலையக இளைஞனும் தனது பூர்வீகம் பற்றியோ வாழ்விட நிலைகள் பற்றியோ கூற விரும்புவதில்லை.
இவ்வகையில் சுமார் 169,500 பேர் தோட்டங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களில் சமூக அந்தஸ்து மிக்க தொழில்களில் ஈடுபட விரும்புகின்றனர். இது எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறையில் சுயமாக வேலையற்றிருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் பெருந்தோட்ட ஊழியர் பற்றாக்குறைக்கும் இட்டுச் செல்லலாம்.
ஆனால் பெருந்தோட்டங்களுக்கு வெளியில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது இரண்டாவது சிறந்த தெரிவாக உள்ளது (குஞுஞிணிணஞீ ஆஞுண்t Oணீtடிணிண). ஏனெனில் பெருந்தோட்ட வேலைவாய்ப்பு தொழிற்பாதுகாப்பு, வீட்டு வசதி மற்றும் வேறு வசதிகளையும் அத்தோடு சிநேகபூர்மான, பழக்கமான சூழலையும் வழங்குகிறது. இவை பெருந்தோட்டங்களுக்கு வெளியில் கிடைப்பது அரிது. கல்வி கற்ற இளைஞர் வெளியிடங்களில் தொழில் பெறச் செல்லும் போது அவர்களது பின்னணி காரணமாக சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியாதுள்ளது. அவர்கள் ஹோட்டல் சிப்பந்திகளாகவும் புடைவை வர்த்தக நிலையச் சிப்பந்திகளாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் உடலுழைப்பை வழங்கும் தொழிலாளர்களாகவுமே காணப்படுகின்றனர். இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் சமூக மேல் நோக்கிய அசைவுக்கான வாய்ப்புகளும் தூண்டுதல்களும் மிகக் குறைவாகவே இருக்கும்.
எதிர்காலம் : சில அவதானிப்புகளும் ஆலோசனைகளும்
பெருந்தோட்டத் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினை யாதெனில் அத்தொழில் பற்றிய சமூக அங்கீகாரத்தைப் பெறுவதாகும். பெருந் தோட்டங்களின் வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள் மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்கிற்குக் காரணமாகும். பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரை பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூக பிரிவாகவோ பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் இந்நாட்டுக்குரியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகள் கூட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கினையே காட்டுகின்றனர். சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்துடன் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் நடத்திய கலந்துரையாடலொன்றின்போது அரசாங்கத்தின் அதிகாரமிக்க அமைச்சரொருவர் ‘கச்ணூச் ஈஞுட்ச்டூணி, எஞுt Oதt‘ எனக் கூறியதையும் (Makenthiran 2008 : 14) அதே போல முன்னாள் பிரதி அமைச்சரொருவர் மலையக மக்கள் தொடர்பாக கூறிய கருத்துக்களையும் நினைவிற் கொள்ளுதல் பொருத்தம். இது பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் உள் மனக்கிடக்கையை புலப்படுத்துவதாக உள்ளது.
1980களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக (King Makers) இருந்ததாக உறுத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் King Makersஆக இருந்தது உண்மையே. ஜயவர்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக சிறுபான்மைக் கட்சிகளின் தேவை பின்வந்த காலப்பகுதிகளில் அரசமைக்கும் கட்சிகளுக்கும் தேவையானதாக இருந்தது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை குடியுரிமை, சம்பளம், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் பெற்றுக் கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதை விடக் கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இன்றைய சூழ்நிலையில் ஓடிணஞ் Mச்டுஞுணூண்எவருமில்லை. மாறாக சிறுபான்மைக் கட்சிகள் யாவும் காலைச் சுற்றும் நாய்க்குட்டிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வி, எதிர்க்கட்சிகளின் பலவீனம், அரசியல் குத்துவெட்டுகள், கட்சித் தாவல்கள் போன்றவை காரணமாக அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசியற்பலம் ஆட்சியாளருக்கு உண்டு. எனவே சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுவே1980 2007 வரையில் தென்னிலங்கை அரசாங்கங்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக இருந்தது. சிறுபான்மைக் கட்சிகளின் தயவின்றி ஆட்சியமைப்பதே விரும்பத்தக்க ஒன்றாக இருந்தது. தற்போது இது நிறைவேறியுள்ளது.
மறுபுறம் மலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமையையும் இந் நம்பிக்கையீனத்தின் ஒரு வெளிப்பாடாகவே நோக்கப்படலாம்.
அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் மலையகக் கட்சிகள் அம் மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை. எனவே சிவில் சமூக அமைப்புக்கள் மலையக மக்களின் மேம்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி தொடர்பான தகவல்களைத் திரட்டி திட்டங்களை வகுக்க வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் ஓரளவுக்கு கிடைப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் இல்லை.
குறிப்பாக மலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில் வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத் துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது.
மறுபுறம் மலையக சமூகமானது சமூக அங்கீகாரம் தொடர்பில் ஓரங்கட்டப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இன ரீதியான மோதல்களின் போது ‘அடிவாங்கும்’ சமூகமாகவும் உள்ளது. பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களைக் கொண்டுள்ள பெருந்தோட்டத் துறையைக் கையாளும் அமைச்சு அப் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும். இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர், சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன. சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும்.
கடந்த காலங்களைப் போலவே இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளரினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும் சாத்தியமில்லை என்பதுடன் அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. அதேவேளை மலையக அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காக கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை மலையக மக்களுக்கு நன்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
மலையக புத்திஜீவிகள், அதிகார வர்க்கத்தினர், முயற்சியாளர்களை ஒருங்கிணைத்த நிபுணர்கள் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். பேரம் பேசல்களின்போது இந் நிபுணர் குழுவின் பொருத்தமான அங்கத்தவர்களின் பங்குபற்றல் இருக்க வேண்டும். நிபுணர்குழு மலையக மக்களின் தேவைகள், முன்னேற்றம் என்பவற்றிற்கான சிந்தனை மற்றும் பேரின நிலையிலான சாத்தியமான திட்டங்களை வகுக்க வேண்டும். இத் திட்டங்களிடையே ஒருங்கிணைப்பும் தொடர்பாடலும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் இத் திட்டங்களுக்கு அவசியமான பாராளுமன்ற அங்கீகாரத்தையும் சட்ட வலுவினையும் பெற்றுக் கொடுப்பவர்களாகச் செயற்பட வேண்டும். மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக விருத்தி, அங்கீகாரம், பிரதிநிதித்துவம், குரல் எழுப்பும் தன்மை என்பவற்றை மேம்படுத்துவதே எல்லாரதும் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் காவல்துறையின் அனுசரணை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை முதல் அரசியல் அபிலாஷைகள் வரையிலான முறையான திட்டமிடலொன்றும் தாபன ரீதியான கட்டமைப்பொன்றும் உருவாக்கப்பட்டு அரசியல் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறானதொரு கட்டமைப்பு மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான முன்னோக்கிய அசைவு மந்தமாவதுடன் சமூகத்துடன் தொடர்பற்ற எவரும் தமது அரசியற் பிரவேசத்திற்கான இலவச ஓடு பாதையாக (Launching Pad) மலையக சமூகத்தைப் பயன்படுத்தும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி - http://shadagopan.blogspot.no/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...