பொகவந்தலாவை நகரில் பிரதேச பாடசாலை மாணவர்களால் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 13.03.2014 வியாழக்கிழமை இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் சென்மேரிஸ் மத்திய கல்லூரி, ஹோலிறோசரி தமிழ் வித்தியாலயம், கெம்பியன் தமிழ் வித்தியாலயம் மற்றும் டியன்சின் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
கடந்த மாதம் சிவராத்திரி நிகழ்வுகளுக்கு வந்த 17 வயது மாணவியை நால்வர் கொண்ட குழுவினர் கடத்தி கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். அது தொடர்பாக இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
நமது மலையக செய்தியாளர் - பொகவந்தலாவ விஜயகாந்தன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...