தலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (26) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது.
ஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார்.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார்.
தொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தமது பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நன்றி - (அத தெரண - தமிழ்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...