Headlines News :
முகப்பு » , » மலையகம்: நிலவுடமைச் சமூகம்!? - துரைசாமி நடராஜா

மலையகம்: நிலவுடமைச் சமூகம்!? - துரைசாமி நடராஜா


மலையக சமூகத்தின் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை என்பன தொடர்பில் நீண்ட காலமாகவே பேசப்பட்டு வரு கின்றது. இவ்வுரிமைகளை பெற்றுக்கொ டுத்து இம்மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் முனைப்பில் பல்வேறு முயற்சிகளும் இடம்பெற்று வரு கின்றன. மலையக மக்கள் நிலவுடமைச் சமூகமாக மாற்றம் பெற வேண்டும் என்கிற எண்ணம் பலரது மனங்களிலும் இருந்து வருகின்றது. எனினும் இதனை மழுங்கடிப்புச் செய்யும் நோக்கில் இனவா திகள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதும் தெரிந்த விடயமாகும்.

உரிமை என்கிற சொல் மிகவும் முக்கி யத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. உரிமைகள் மனித வாழ்வின் நிபந்தனைகள் என்றும் பொதுவாக அவை இன்றி எம் மனிதனும் சிறப்பாக செயற்படமுடியாது என்றும், லஸ்கி (Lasky) குறிப்பிடுகின்றார். ஜனநாயக நாடுகளை பொறுத்தவரையில் உரிமைகள் குறித்து அதிகமாக பேசப்ப டுகின்றது. உரிமைகளுக்கும் ஜனநாயகத் திற்கும் இடையிலான தொடர்பு அதிக முக்கியத்துவம் மிக்கதென்று புத்திஜி விகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயக அரசு முறைகள் உரிமைகள் சிறப்பாக பேணப் படுவதற்கு உந்து சக்தியாக விளங்குகின் றன. சுதந்திரமும் சமத்துவமும் இல்லாத நிலையில் உரிமைகள் சாத்தியமற்றதாகவே காணப்படும் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் உலகில் ஒவ்வொரு சமூத் தினரும் உரிமைக்காக பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஈடு பட்டும் வருகின்றனர். எமது நாட்டைப் பொறுத்தவரையில் வடக்கு மக்களின் உரிமைப் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த முக்கிய ஒரு விடய மாக உள்ளது. பல்வேறு புறக்கணிப்புகள் உரிமை போராட்டத்தின் அடிப்படையாக அமைந்திருந்தமை தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

உரிமைக்கான போராட்டத்தில் பல உயிரி ழப்புக்களும் உடமைச் சேதங்களும் ஏற்பட் டன. நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர் குழாம் முக்கிய பங்காற்றுகின்றது. இந்நி லையில் அப்பாவி இளைஞர்களின் உயி ரிழப்பானது நாட்டின் அபிவிருத்திக்கும் தடைக்கல்லாக அமைந்திருந்தது. உரி மைகளை யாரும் தங்கத்தட்டில் வைத்து வெறுமனே தந்துவிட மாட்டார்கள் என்று கூறுவார்கள்? எனவே உரிமைக்காக பல போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை இயல்பாகவே மேலெழுந்திருக் கின்றது. உரிமைக்கான போராட்டங்கள் வெற்றியடைவதும் தோல்வியில் முடிவுறு வதும் இயல்பானதாகும். உலக நாடுகளை பொறுத்தவரையில் உரிமைப்போராட் டங்கள் வெற்றியிலும் தோல்வியிலும் முடிவடைந்திருக்கின்றன. எது எவ்வாறான போதும் உரிமைக்காக குரல் எழுப்புவது என்பது மிக முக்கிய விடயமாக கொள் ளப்படுகின்றது. நாம் குனிந்து கொண்டு இருப்போமானால் குட்டுகள் விழுந்து கொண்டேதான் இருக்கும். உரிமைகள் கிடைக்காதவிடத்து கேட்டுப் பெற முயற் சிக்க வேண்டும்.

உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட மலையக சமூகம்
மலையக சமூகத்திற்கு இந்த நாட்டில் மிக நீண்டதொரு வரலாறு காணப்படு கின்றது. இந்த வரலாறு சோகம் கலந்த ஒரு வரலாறு ஆகும். கல்லும் முள்ளும் நிறைந்த பாதை இவர்களுடையதாக இருக்கின்றது. இந்த நாட்டின் மிக முக்கிய இனமாக மலையக மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். எனினும் இவர்களது வாழ் வியல் நிலைமைகள் இன்னும் பின்தங் கிய நிலையிலேயே காணப்படுகின்றன. இம்மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இன்னும் பின்னடிப்புகளே இருந்து வருகின்றன. கவர்ச்சியான வாக்கு றுதிகள் இவர்கள் தொடர்பில் வழங்கப்படு கின்றதே தவிர காரியங்கள் இடம் பெறு வதில்லை என்பதே கடந்த கால வரலா றாகும். இலங்கையின் பாராளுமன்றம் 70 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கின்றது. எனினும் இந்த பாராளுமன்றம் மலையக மக்களை நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்குவ தற்கே பல சந்தர்ப்பங்களில் உந்து சக்தியாக இருந்திருக்கின்றது என்பது கசப்பான உண் மையாகும். 1948 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளி மக்களின் ஆதிக்கம் குறித்து அஞ்சிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இம்மக்களின் பிரசாவுரிமையையும் வாக் குரிமையையும் பறித்து இம்மக்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தியது.

1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டம் இந்த நாட்டின் ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்தது. இச்சட்டத்தின் தீய விளைவு களை அரசியல் அவதானிகளும் ஏனைய முக்கியஸ்தர்களும் அரசாங்கத்திடத்தில் எடுத்துக்கூறி இருந்தனர். எனினும் இவை யெல்லாம் ஆட்சியாளர்களின் செவிக ளுக்கு எட்டவில்லை. சிறுபான்மை சமூ கத்தினரை ஒடுக்குவதையே இவர்கள் குறியாக கொண்டிருந்தனர். மேலும் தனது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் முக்கி யமானதாகும் என்றும் அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தனர். எனவே எல்லா கருத் துக்களையும் புறந்தள்ளிய நிலையில் தனிச் சிங்கள சட்டத்திற்கு அழுத்தம் கொடுத் தனர். நிறைவேற்றினர். இதனால் சிறுபான் மையினர் என்ற ரீதியில் மலையக மக் களும் சவால்களையும் சங்கடங்களையும் சந்திக்கவேண்டி இருந்தது. தனிச்சிங்களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற் குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கின்றது. முன்னாள் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் (1964) அ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளமையும் இங்கு நோக்கத்தக்க விடயமாக உள்ளது.

தனிச்சிங்கள சட்டம் அரசசேவையில் தமிழர்களின் வீழ்ச்சிக்கு ஏதுவாக அமைந் தது. 1956 மற்றும் 1970 ஆம் ஆண்டுக ளுக்கு இடையில் கடுமையான வீழ்ச்சி நிலையினை இது வெளிப்படுத்தி இருந்தது. குறிப்பாக 1956 இல் நிர்வாக சேவையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீத மாக இருந்தது. 1970 இல் இது வெறுமனே ஐந்து சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இது போன்றே எழுது வினைஞர் சேவையில் 1956 இல் ஐம்பது சதவீதமாக இருந்த தமிழர்களின் பிரதிநிதித்துவம் 1970 இல் ஐந்து சதவீதமாக வீழ்ச்சி கண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஒப்பந்தங்கள் பலவும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவையெல்லாம் மலையக மக்கள் உள் ளிட்ட தமிழ் மக்களின் இருப்பினை சித றடிக்கவும் உரிமைகளை மழுங்கடிக்கவும் மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடு என்பதனையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

மலையக மாவட்டங்களில் செறிந்து வாழ்ந்த இந்தியத் தமிழர்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 410 பேர் இந் தியா திரும்பியவிடத்து (1987இறுதி வரை) 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி 75 ஆயிரம் பேர் வடமா காணம் சென்று குடியேறியுள்ளனர். 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் மலையக மாவட்டங்களில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன இத்தகைய இனக்கலவரத்தின் காரணமாகவும் 1972 ஆம் ஆண்டில் பெருந் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற் றதன் பின்னர் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினை, உணவுப் பற்றாக்குறை என்ப வற்றால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் கணி சமானவர்கள் வடமாகாணத்தில் சென்று குடியேறும் நிலை உருவாகியிருந்தது. இவ் வாறு சென்றவர்கள் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காலப்போக்கில் தமது இந்திய, மலையக அடையாளங் களைக் கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்து விடும் நிலைக்கு பலர் உள்ளா னார்கள். இத்தகைய ஒரு போக்கினை தெளிவாக கண்டுகொள்ள முடிந்தது. இவ் வாறான மக்கள் வெளியேற்றம் குடித் தொகை ரீதியாக மலையக மாவட்டங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை தொகை குறைந்து விட்டது. 1958 தொடக்கம் ஏற் பட்ட இனக்கலவரங்களும் பெருந்தோட்ட தேசிய மயம் ஏற்படுத்திய பாதக விளை வுகளும் இந்தியத் தமிழர்கள் இலங்கைஇந்திய ஒப்பந்தங்களின் கீழ் தமது தாய கத்தை நாடுவதை ஊக்குவித்தன என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இந்தியா திரும்பிய பெருந்தோட்ட இந்திய தொழிலாளர்களுக்கான முழுமையான புனர்வாழ்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய் யப்பட்டிருக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ள சந்திரசேகரன், நம்பிக்கை யுடன் தாயகம் திரும்பியோருக்கான புனர் வாழ்வுத் திட்டங்கள் ஏமாற்றத்தையே தந்தன என்றும் மேலும் குறிப்பிடுகின்றார். இலங்கையில் வறுமையால் பிடிக்கப் பட்ட ஒரு சமூகமாக இந்திய வம்சாவளி சமூகத்தினர் இருந்து வந்தனர். இத்த கையோர் இந்தியா திரும்பியதும் அநா தைகள் என்கிற ஒரு நிலைக்கே இட்டுச் செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும். இன, மொழி, கலாசார ரீதி யான ஒருமைப்பாட்டையும் வரலாற்று ரீதியான வேறுபாட்டையும் இந்தியத் தமி ழர்களும் இலங்கைத் தமிழர்களும் கொண் டிருந்த நிலையில் இனக்கலவர சக்திகள் இலங்கைத் தமிழர் போராட்டங்களுக்கான பதிலடியை மலையக மாவட்டங்களில் வாழ்ந்த இந்திய தமிழர்களுக்கே வழங்கி இருந்தமை தொடர்பிலும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். சுதந்திரத் திற்கு முன்னராயினும் சரி, சுதந்திரத்திற்குப் பின்னராயினும் சரி மலையக மக்களின் உரி மைகளை மழுங்கடிப்பு செய்யும் வரலாறே இருந்து வருகின்றது. இது இப்போது இன்னும் அதிகமாக தீவிரமடைந்திருக் கின்றது.


காணியுரிமையும், வீட்டுரிமையும்
கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, சமூக நிலைமைகள் எனப் பலவற்றிலும் மலையக மக்களை பின்னடைவு காணசெய்யும் நோக்கில் இனவாதிகள் காய்ந கர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமை என்பன குறித்து நீண்டகாலமா கவே பேசப்பட்டு வருகின்றது. தேயிலைக் கென்றே உழைத்து உரமாகிப்போன தொழி லாளர்களுக்கென்று ஒரு அங்குல நில மேனும் சொந்தமாக இல்லாமை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமேயாகும். இதேவேளை, பெருந்தோட்ட காணிகள் முன்னரை காட்டிலும் இப்போது படிப்படி யாக வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப் பட்ட நிலையில் குறைவடைந்து கொண்டு செல்கின்றன. தோட்ட மக்களின் இருப் பினை சிதறடிக்கும் நோக்கில் இனவாத சிந்தனையாளர்கள் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் பெருந்தோட்ட காணிகளை குறிவைத்து சுவீகரித்து வருகின்றமையும் நோக்கத்தக்க விடயமாகவுள்ளது.

1972ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் காணி அமைச்சராக ஹெக்டர் கொப்பேகடுவ இருந்துள்ளார். இவர் தலைமையிலான காணி சீர்திருத் தமும் அதன் தொடர்ச்சியாக நடந்த 1975ஆம் ஆண்டு ரூபி ஸ்டெலிங் கம்பெ னிகளுக்கு சொந்தமாக இருந்த தோட் டங்கள் அரசுடமையாக்கப்பட்டமையும் அதன் பின்விளைவாக ஏற்பட்ட பல சம்ப வங்களும் மலையக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து திட்டமிட்ட அடிப்ப டையில் அவர்களை வெளியேற்றும் நடவ டிக்கைகளாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் துணைபோயுள்ளதாக மலையகம்' எனும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே உசவசம, ஜனவசம போன்ற தோட்டங்களில் மாற்றுப் பயிர்ச் செய்கை பன்முகப்படுத்தல் என்ற போர் வையில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஆயி ரக்கணக்கான குடும்பங்கள் கண்டி, மாத் தளை, எட்டியாந்தோட்டை அவிசாவளை போன்ற பகுதிகளில் தோட்டக் காணிகளில் இருந்தும் லயன்களில் இருந்தும் வெளி யேற்றப்பட்டனர். அதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நட்சா திட்டம், மகாவலி குடியேற்றம் மற்றும் தோட்ட கொத்தணி முறை என்பனவும் தோட்டப் பகுதிகளில் மலையக தமிழ் மக் களின் பலத்தைக் குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட குடியேற்ற நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டன. 1972, 1975, 1977ஆம் ஆண்டுகளில் இந்நடவடிக்கைகள் முனைப்பாக இடம்பெற்றதாகவும் நூலில் மேலும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ள மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக மக்கள் 'இலங்கையர் என்று நோக்கப்படாத நிலையில் அவர்களை ஒரங் கட்டும் செயற்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வந்துள்ளன. அபிவிருத்தி என்கிற போர்வையில் மலையக மக்களின் காணி உரிமையை மழுங்கடிக்கும் செயற்பாடு களும் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன.


தரிசு நிலங்கள்
மலையக பெருந்தோட்டப் பகுதி களில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டெயர் தரிசு நிலங்கள் காணப்படுவதாகவும் இந் நிலங்களை பல்வேறு நடவடிக்கைகள் கருதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படு வது பொருத்தமாகுமென்றும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் வலியுறுத்தி இருக்கின்றார். மேலும் காணி உரிமை குறித்தும் அவர் தனது நிலைபாட்டினை தெளிவுபடுத்தி இருக்கின்றார். வடக்கு, கிழக்கு மக்களாக இருப்பினும் சரி அல்லது பெரும்பான்மை மக்களாக இருப்பினும் சரி அவர்களில் சுமார் எண்பது சதவீதமானவர்களுக்கு காணி உரிமை இருக்கின்றது. இரண்டு வகையான இடங்களை அவர்கள் வைத் திருக்கின்றார்கள். ஒன்று வயற்காணி, மற்றது உயர்நிலம் பயிர்ச்செய்கை மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த உயர்நிலம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மையும் குறிப்பிடத்தக்கதாகும். பூர்வீகமான ரீதியில் சிலர் காணிகளை வைத்திருக்கின் றார்கள். இன்னும் சிலர் அரசாங்கத்தினால் பிரித்துக் கொடுக்கப்பட்ட காணிகளில் நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

நிலச்சீர்திருத்தத்தை மேற்கொண்டு பெருந்தோட்டங்களில் இருந்த வளமான காணிகளை பெரும்பான்மையினருக்கு பகிந்தளிக்கின்ற நடவடிக்கைகளும் ஒரு காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. பல பெரும்பான்மை குடும்பங்கள் உயர் நிலத் திலும் தாழ் நிலத்திலும் காணிகளைக் கொண்டிருக்கின்றன. எனினும், மலையக மக்களின் நிலைமை அவ்வாறாகவே இல்லை. உழைத்துக் களைத்த அம்மக்கள் ஒரு அங்குல நிலமேனும் சொந்தமாக இல்லாத நிலையில் அல்லல்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெருந்தோட்டப் பொருளாதார மேம்பாட்டுக்காக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். தேயிலை, இறப்பர் தொழிற்றுறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். மலையக மக்கள் இந்த நாட்டில் மூன்று நான்கு தலைமு றைகளாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற காணி உரிமையானது மலையக மக்களுக்கும் இருக்க வேண்டும். வந்தேறு குடிகள் என்று அவர்களை புறந்தள்ளி எவரும் செயற்பட முடியாது. வீடமைப் பிற்காக இப்போது ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மையில் இந்த ஏழு பேர்ச்சஸ் காணி போதாததாகவே காணப்படுகின்றது.

நடைமுறையில் காணிகளை பெற்றுக் கொள்வதில் பல இடர்பாடுகள் எதிர் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஏழு பேர்ச்சஸ் காணி கிடைப்பதே பெரிய விடயமாக இருக்கின்றது. இதனையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது. ஆனால், இலங்கையை பொறுத்த வரையில் இருபது பேர்ச்சஸ் காணி வழங் கப்படுவதே பொருத்தமாகவே இருக்கும்.

பெரும்பான்மையினருக்கு இருபது பேர்ச்சஸ் என்றவாறே வழங்கப்பட்டு வரு கின்றது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வீடமைப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, தோட்டத்தில் தொழில் புரியாதவர்களுக்கும் காணியும், வீடும் வழங்கப்பட வேண்டும் என்பதனை கொள் கையளவில் நல்லாட்சி அரசாங்கம் ஏற் றுக்கொண்டிருக்கின்றது. காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கும் மிக முக்கிய நடவடிக்கையும் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

மலையக சமூகம் காணியுரிமை இல்லா ததாக இருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகும். இந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்திற்கமைய நல்லாட்சி அரசாங்கம் இம்மக்களின் காணிப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேயிலைச் செடியினைக்கூட பிடுங்கப் போவதில்லை என்று கூறி நடவடிக்கைகளை முன்னெ டுத்தார். எனினும், அவரைக் காட்டிலும் நல்லாட்சி அரசாங்கம் இன்று தேயிலை உற்பத்தி மற்றும் காணி விடயத்தில் முன் மாதிரியாக செயற்படுவதனையும் கூறியாக வேண்டும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டெ யருக்கு அதிகமாக காணிகள் கைவிடப் பட்ட நிலையில் காணப்படுகின்றன. இந்தக் காணிகளில் இருந்து பொருத்த மான பயன்தரு காணிகளை தொழிலாளர் களுக்கு பகிர்ந்தளிக்க முடியும். இத்தகைய கைவிடப்பட்ட காணிகள் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் குறைவாக உள்ளன. ஏனைய மலையக மாவட்டங்களிலேயே இது அதிகமாக காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு மட் டுமல்லாது மலையகத்தில் உள்ள புத் திஜீவிகள், தோட்ட உத்தியோகத்தர்கள் எனப் பல துறைசார்ந்தவர்களும் காணியு ரிமை இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இவர்களில் சிலர் தமது சொந்த முயற்சியினால் காணியுமையாளர் களாகி உள்ளனர். ஆசிரியர்கள் சிலரையும் நாம் இதில் சேர்த்துக்கொள்ள முடியும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்குமட்டுமன்றி ஆசிரியர்கள் உள்ளிட்ட புத் திஜீவிகள், தோட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் காணிகள் வழங்கப்பட்டு நிலச் சொந்தக்காரர்களாக அவர்களை மாற் றியமைக்க வேண்டியது அவசியமாக உள் ளதென்றும் லோரன்ஸ் எடுத்துக்கூறி இருக் கின்றார். இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன. மலையக சமூகம் காணி உரிமையை பெற் றுக்கொள்ள மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளும், அமைப்புகளும் உரியவாறு குரல் எழுப்புவது அவசியமாகும்.

லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் கோரிக்கை
தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு கருதி தற்போது ஏழு பேர்ச்சஸ் காணி வழங் கப்பட்டு வருவது தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இக்காணியின் அளவினை பதினைந்து பேர்ச்சஸாக அதிகரிக்க நடவ டிக்கை எடுக்குமாறு லங்கா தோட்ட தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. ல.தோ.தொ. யூனியனின் பொதுச் செயலா ளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க செய லாளர் நாயகமுமான எஸ்.இராமநாதன், பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலி யுறுத்தப்பட்டுள்ளது. மலையக தொழிலா ளர்களின் நலன்கருதி முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா தோட்டத் தொழிலாளர்க ளுக்கான சுய உதவி வீடமைப்புத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தினார் தோட்டத் தொழிலாளரின் வீடமைப்பிற்காக ஐந்து பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டு பின்னர் அது பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பெருந்தோட்ட கைத்தொழிற்றுறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக ரத்னசிறி விக்கிரமநாயக்க இருந்த காலத்தில் ஏழு பேர்ச்சஸ் காணியாக மாற்றப்பட்டது. தோட்டத் தொழிலாளருக்கு வீடமைப்புக் காக ஏழு பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். அன்றைய தொழிலாளர்களின் சமூகச் சூழலும் வாழ்நிலையும் இன்று இருப்பதை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

அது மாத்திரமல்லாமல் இன்றுபோல் இல்லாமல் தோட்டக் காணிகளில் முழுமை யாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டி ருந்ததால் வீடமைப்புக்கான காணி ஒதுக் கீட்டினை மேற்கொள்வதில் சிக்கல் இருந் தது. எனினும், இன்று பெருமளவிலான காணிகள் கைவிடப்பட்டுள்ளன. தொழி லாளர்களின் வாழ்வியல் நிலைமைகளும் பெரிதும் மாற்றமடைந்துள்ளன. எனவே, மாறிவரும் தேவைகளுக்கு 07 பேர்ச்சஸ் காணி எவ்வகையிலுமே போதுமானதல்ல. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்காக ஒவ்வொரு குடும்பத் திற்கும் தலா பதினைந்து பேர்ச்சஸ் காணி யினை ஒதுக்கித்தர வேண்டும் என்று இரா மநாதன் கேட்டுக்கொண்டிருக்கின்றார். உண் மையில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பதினைந்து பேர்ச்சஸ் காணியோ அல்லது லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளதைப்போன்று இருபது பேர்ச்சஸ் காணியோ வழங்கப்படுவது அவசியமாகும்.

காணி உறுதி வழங்கும் நிகழ்வு
தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வீடுகளுக்கான காணி உறுதிகளை வழங்க வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்துள்ளன. இது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது. முதற்கட்டமாக 71 வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி இவ்விடயத்தில் காத்திரமாக பங்காற்றி இருந்தது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக இவ்வருடத்தின் ஆரம்பத்தில் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இரண்டாயிரத்து 864 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்திருக்கின்றார். இதற்கமைய இம்மாதம் 29ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஹட்டனில் இடம்பெறவுள்ளது.

ஒரு அங்குல நிலத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மலையக இந்திய வம்சாவளி மக்கள் இன்று ஏழு பேர்ச்சஸ் காணிக்கு உரித்துடையவர்களாக மாறி வருகின்றனர். எமது தனிவீட்டுத் திட்டம் ஆரம்பமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டு வீடமைப்பு பணி கள் துரிதமாக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் பின்னர் மேலும் வீடுகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கூறும் அமைச்சர் திகாம்பரம், ஒற்றுமையின் முக்கியத்துவத்தினையும் உணர்த்தி இருக்கிறார். எமக்கிடையில் பிளவுகள் இருந்தால் அது மற்றவர்களுக்கும் வாய்ப் பாகிவிடும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

எவ்வாறெனினும் மலையக மக்கள் காணி உரிமையையும் வீட்டுரிமையையும் பெற்று தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates