Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

20 பேர்ச்சஸ் காணி; மலையக மக்களின் எதிர்காலம் கலாநிதி - ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வீடமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி மொழிகள் இப்போது வலுப்பெற்றுள்ளன. இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஏன் 20 பேர்ச் காணி தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இதனால் மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய பலாபலன்கள் என்ன என்பதையும், இவ்வாறு காணிகள் வழங்கி தனி வீடுகள் அமைக்கப்படுமாயின் அது எந்தளவு பெருந்தோட்ட தொழில்களுக்கு அனுசரணையாக காணப்படும் என்பதையும் மேலெழுந்தவாரியாக எடுத்துக் கூறுவது இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.

நாம் ஏற்கனவே அறிந்தது போல ஒரு ஹெக்டேயர் என்பது 395 பேர்ச் ஆகும். இங்கு ஒரு பேர்ச் என்பது 272 சதுர அடி என்பதும் அறிந்த விடயமாகும். ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச் வழங்கப்பட வேண்டுமாயின் ஒரு ஹெக்டேயர் காணியில் சுமார் 15 முதல் 20 வீடுகளை அமைக்கலாம். இவ்வீடுகளுக்கு பாதைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், சேவை நிலையங்கள் என்றும் ஒரு பகுதி நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளர்கள் என்று சுமார் 1,25,000 குடும்பங்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு தலா ஒருவருக்கு 20 பேர்ச் என்றவாறு 1,25,000 பேருக்கு வீடுகள் தேவைப்படும் காணியின் அளவு அண்ணளவாக சுமார் 6,500 ஹெக்டேயர் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்த விடயமாகும்.

இப்போது பெருந்தோட்ட கம்பனிகளின் பராமரிப்பில் சுமார் 1,18,000 ஹெக்டேயர் காணிகள் உள்ளன. இவற்றில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே தேயிலை போன்ற பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் (1,18,000 – 85,000 = 33,000) சுமார் 33,000 ஹெக்டெயர் காணிகள் பயன்பாட்டில் இல்லாத காணிகளாக இருப்பது சராசரியாக ஒரு கம்பனிக்கு, 1400 ஹெக்டேயர் பரப்பளவில் காணிகள் எவ்வகையில் தேயிலை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தாமல் இருப்பதாக காணப்படலாம்.

கம்பனிகள் பயிர்செய்கைக்கு பயன்படுத்தாத காணிகளை தொழிலாளர்களின் வீடமைப்பிற்கு வழங்கலாம். இதன்போது மற்றுமொரு விடயத்தையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மேற்குறிப்பிட்டதுபோல பயன்படுத்தாத காணிகள் யாவற்றையும் வீடமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறமுடியாது. மலையகப் பகுதிகளில் காணப்படும் மலைப்பாங்கானதும் சரிவானதுமான இடங்கள் வீடமைப்பதற்கு பொருத்தமானதல்ல . இலங்கையில் கட்டிடங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள NBRO (National Burlding Reserch organisation) தேசிய கட்டிட ஆய்வு மையம் மலையகப் பகுதிகளில் வீடுகள் மற்றும் பயிர் செய்யக் கூடிய இடங்களை தற்போது அடையாளப்படுத்தியுள்ளது. அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலேயே வீடுகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்படும். அவ்வாறான இடங்களை தெரிவு செய்து அவற்றில் பொருத்தமாக மேற்குறிப்பிட்டது போன்று சுமார் 6,500 ஹெக்டேயர் காணிகளை வீடமைப்பதற்கு பெற்றுக்கொள்வது சிலவேளை மிகப் பெரிய பணியாகவும் இருக்கலாம்.

இலங்கையில் பெருந்தோட்டக் காணிகள் வீடமைப்பு மற்றும் மாற்று வேலைத்திட்டங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 1975 இல் காணி சீர்திருத்தத்தின் போது சுமார் 10,000 ஏக்கர் காணிகள் தேசிய மற்றும் பயிர்ச் செய்கைக்காக (NADSA) வழங்கப்பட்டது. நாவலப்பிட்டி, உலப்பனை, கம்பளை, கடுகண்ணாவை பேராதனை போன்ற இடங்களில் உள்ள தேயிலைக் காணிகள் அங்கு வாழ்ந்த கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்காணிகள் பயிர் செய்கைக்காகவும் கிராம்பு, ஏலம், பாக்கு மற்றும் வீட்டுதோட்ட பயிர்ச்செய்கைக்காகவும் வழங்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளினாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்த கிராம மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது போன்ற பல்வேறு வகையில் வழங்கப்பட்ட பெருந்தோட்ட காணிகள், குடியிருப்பு, மாற்று வாவி ஆற்று வடிகால் அபிவிருத்தி திட்டங்கள் , காடு வளர்ப்பிற்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு இன்று வரையும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன. இவற்றினை படிப்பினையாக கொண்டே மலையகப்பகுதிகளில் வீடமைப்புக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றன. தோட்டங்களில் 20 பேர்ச் காணி வழங்கி வீடுகள் நிர்மாணித்தால் தொழில்கள் பாதிக்கப்படுமா? என்றும் வினவலாம். உண்மையில் இன்று தேயிலை கைத்தொழில் என்பது இப்போது பெருந்தோட்டங்களை மையமாக கொண்டதாக காணப்படவில்லை. உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 75 வீதமானவை இன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி , மாத்தறை போன்ற மாவட்டங்களில் உள்ள சிறு தேயிலை உரிமையாளர்களிடம் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. சுமார் 400,000 சிறு தோட்ட உரிமையாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இங்குள்ள தேயிலைச் செடிகளில் சிறு வர்த்தகம் அதிகமானவை உயர் விளைவு தரக் கூடிய தேயிலைப் பயிர் நிலங்களாக காணப்படுகின்றது. அரசாங்கம் தமது வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு பல நிவாரணங்கள் வழங்குகின்றன. இந் நிலையில் இலங்கையின் தேயிலை பொருளாதாரம் என்பது சிறு தோட்டங்களில் மேற் கொள்ளப்படும் உற்பத்தியாக மாற்றமடைந்து விட்டது.

பெருந்தோட்ட கம்பனிகளின் பொறுப்பில் உள்ள காணிகளில் சுமார் 60 விதமான தேயிலைப் பயிர்கள் 150 வருடம் பழைமையானதாகும். பெருந்தோட்ட கம்பனிகள் புதிதாக தேயிலை பயிரிடும் பாணியை ஏற்கனவே நிறுத்திவிட்டன. அடுத்த 20 வருடங்களில் பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செய்கையை பராமரிப்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

அது மட்டுமன்றி மூன்று அல்லது நான்காவது தலைமுறையாக இம் மண்ணில் வாழ்ந்த மக்கள் “மலையக மக்கள்” என்ற அடையாளத்துடன் நிரந்தரமாக வாழ்கின்ற சூழ்நிலை உருவாகும். இவையாவற்றிற்கும் மேலாக இவர்கள் மத்தியில் வளர்ந்துள்ள தனித்துவமான பண்பாட்டு கலாசாரங்களை பேணி பாதுகாப்பதுடன் இம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவு செய்வதற்கான களமாகவும் காணப்படலாம்.

காணிகள் வழங்கப்படவும் இல்லை! அவர்களுக்கு PHDI இன் படியே வீடுகள் அமைக்கலாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை! பெருந்தோட்ட தொழில்கள் நலிவடைந்து செல்வதால் அவர்கள் தொடர்ந்து அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை! என்று எவரேனும் கருதினால் இந்நாட்டில் மலையக மக்கள் என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் போய்விடும் காலம் அண்மித்து விட்டதாகவே கருத வேண்டும்.
நன்றி - வீரகேசரி

மலையகத்தவருக்கும் கிரமமாக அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் - விண்மணி


ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதோருக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு நடமாடும் சேவை நடத்தப்பட்டதாக செய்தியொன்று வெளி வந்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு நகர்களிலும் பரவலாக நடத்தப்பட்ட இந்த சேவை சம்பந்தமான விவரமான விளம்பரங்களும் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

மிகப்பெரிய சேவைதான் இது. இச் சேவையை நடத்தியவர்கள் எவராயிருப்பினும் அவர்கள் இது குறித்து பெருமை கொள்ளலாம். திருப்தியுறலாம்.

ஆனால், இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது.
இவ்வாறு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாமலிருந்தோரின் தொகை சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் மிகப்பெரும்பான்மையானோர் பெருந்தோட்டத்துறையினராகத்தான் இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்பலாம். கிராமப்புற வாசிகளின் தொகை மிகக் குறைவாகத்தான் இருந்திருக்கும்.

இன்று கிராமப்புறவாசிகள் இந்த மாதிரியான விடயங்களில் அதிக அக்கறையுடையோராகவும் கவனமாகவும் இருக்கின்றார்கள். விதி விலக்காக ஏதோ சிலர் தான் அடையாள அட்டை பெறாதிருக்கின்றார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் இந்தளவு பெருந்தொகையானோர் அடையாள அட்டை பெறாதிருந்தமைக்கான காரணம் என்ன என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கிராமப்புற வாசிகளுக்குப் போலல்லாது பெருந்தோட்டத்துறை வாசிகளுக்கு தோட்ட நிர்வாகம் மூலமாகவும் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும் ஏன் இவ்வளவு பேர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாமலிருந்திருக்கின்றார்கள் ?

இதையும் விட இன்று க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் பதினாறு வயது நிறைவடைந்த ஒரு மாணவன் பாடசாலை மூலமாக தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. பதினாறு வயது பூர்த்தியடைந்த மாணவரொருவர் அவர் எந்த வகுப்பில் கற்றாலென்ன, பரீட்சை நெருங்கி வரும்வரை காத்திருக்காது உரிய காலத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும்படி அதிபர்களுக்கு அறிவுறுத்தி ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் இது விடயத்தில் அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

அரச புள்ளி விபரங்களின்படி இன்று பெருந்தோட்டத்துறை சார்ந்த பாடசாலை செல்லாத மாணவர்களின் தொகை மிக மிகக் குறைவேயாகும்.
மாணவர்கள் வருடந்தோறும் கிரமமாக அடையாள அட்டைகளைப் பெற்று வந்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையானோர் அடையாள அட்டை பெறாமலிருக்க வாய்ப்பு இல்லை.

இவைகளனைத்தினதும் அடிப்படையில் பார்த்தோமானால் தோட்டத் தொழிலாளர்களின் இயல்பான அக்கறையின்மையோடு தோட்ட அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் காட்டி வரும் பாரபட்சமும், அக்கறையின்மையும், உதாசீனப்போக்கும் இந்த நிலை தோன்றக் காரணமாகியுள்ளது என்ற முடிவிற்கு வரலாம்.

தோட்டம் என்று எடுத்துப்பார்த்தால் தோட்ட அதிகாரிகளை இவ்விடயத்தில் நேரடியாகக் குறை சொல்ல முடியாதெனினும், தோட்ட தலைமை எழுதுவினைஞர் உட்பட ஏனைய எழுதுவினைஞர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றும் உதாசீனமாகவும், ஏனோதானோவென்றும் செயற்பட்டு வருகிறார்களென்றும் எப்போதும் பரவலாகக் குறை சொல்லப்பட்டு வருகின்றது.

தோட்டத்தில் வேலை செய்தால் மாத்திரமே அடையாள அட்டை பெற்றுத்தர முடியுமென்று சில தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன. இதனை நியாயமான ஒரு சாட்டாகக் கருத முடியாது. ஒரு நிலப்பரப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையான மக்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே கிராம அலுவலர்களுக்கு சமதையான இந்த அதிகாரம் தோட்ட அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தமது பொறுப்புணர்ந்து செயற்பட தோட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

எவ்வாறெனினும், தோட்ட நிர்வாகம் அடையாள அட்டையைப் பெற்றுத்தர மறுக்கும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமாவென்றால், நிச்சயமாக முடியும். முன்னர் தோட்ட நிர்வாகத்துடனான ஒரு கலந்துரையாடல் மூலம் (DISCUSSION) தொழிற்சங்கங்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வந்தன. ஆனால், கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின் தொழிற்சங்கங்கள் படிப்படியாக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் சக்தியை இழந்து வருகின்றன.

சில கிராம அலுவலர்கள் காட்டும் கெடுபிடிகள் நம்மவர்கள் அவர்களை அணுகி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக இருந்து வருகின்றன. இந்த இடத்திலே மலையகத்தின் ஏனைய பல விடயங்களைப் போன்றே அவ்வப்போது எழுந்தடங்கும் 'தமிழ்பேசும் கிராம அலுவலர்கள் நியமன' விடயமும் ஞாபகத்திற்கு வந்து போகின்றது.

சில பாடசாலைகளில் வகுப்பாசிரியர்களும் அதிபர்களும் தமது அசிரத்தையான போக்கினால் மாணவர்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்கத் தவறுகின்றார்கள் என்று தெரிய வருகின்றது. இது தமது சமூகத்திற்குத் தாமிழைக்கும் துரோகம் என்பதை உணர்ந்து அவர்கள் தம்மைத் திருத்தி செயற்பட முன்வர வேண்டும்.

பதினாறு வயதிற்கு முன்பதாகவே மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகலும் இதற்கு ஒரு காரணமாகும். ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக உணர்வுடன் செயற்பட்டு இத்தகைய இடைவிலகல்களைத் தடுக்க முன்வரவேண் டும்.

பெருந்தோட்டத்துறை மாணவர்கள் தமது பாடசாலைக் காலத்திலேயே அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதிலே ஒரு நன்மை இருக்கிறது. அதிலே தொழில் என்ற இடத்திலே மாணவர்கள் என்று குறிக்கப்படுவார்கள். ஆனால் தோட்டங்களிலேயோ அல்லது கிராம சேவகர்களிடமோ பெற்றுக்கொள்ளும்போது பெரும்பாலும் தொழிலாளி என்றே குறிப்பிடப்படும். அதனால் பாடசாலைகளிலேயே அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது இன்றைய சமூக அமைப்பில் நடைமுறை வாழ்வில் அவர்களுக்கு ஒரு சிறிய அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கும்.

ஒப்பீட்டளவில் நுவரெலியா மாவட்டம் கற்றோர்களும் சமூக சிந்தனைமிக்கோரும் நிறைந்த பிரதேசம். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் கோலோச்சும் இராஜதானி. மலையகம் சார் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சுக்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என்று அரசியல் அதிகாரம்கொண்டோர் நிறைந்து வாழும் மாவட்டம். அங்கேயே இந்த நிலைமையானால் ஏனைய மாவட்டங்கள் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

தேர்தல் காலங்களில் நடமாடும் சேவைகள் நடத்தி இம்மக்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை மாற்றி ஏனைய சமூகப் பகுதியினருக்குப் போல வழமையான வழிமுறைகள் மூலம் கிரமமாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை மைத்திரி ஆட்சிக்காலப் பகுதியில் மலரும் என்று எதிர்பார்ப்போமாக.
நன்றி - வீரகேசரி

மூன்று அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் மலையகத்தின் மாற்றம் ஆரம்பம் - அமைச்சர் மு. வேலாயுதம்



பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற காணியுரிமை, வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளபடவிருக்கின்ற 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் முன்வந்துள்ளமை பாராட்டப்படதக்க மகிழ்ச்சிகரமான செயலாகுமென பெருந்தோட்டதுறை இராஜங்க அமைச்சர் க. வேலாயுதம் தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பெருந்தோட்டதுறை கம்பனி நிறைவேற்ற அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சின் செயலாளர் திருமதி சு. விஜயலெட்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் 21 பெருந்தோட்டத்துறை கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளும் அவர்களின் உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில்; தொடர்ந்தும் உரையாற்றுகையில் கே. வேலாயுதம் கூறிப்பிட்டதாவது, 1977ம் ஆண்டின் பின்னர் மறைந்த முன்னாள் ஐனாதிபதி J.R.ஐயவர்தன அவர்களின் ஆட்சிகாலத்தில் தோட்ட பாடசாலைகள் அரச உடமையாக்கப்பட்டு பெருந்தோட்ட சமூகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் 2003ம் ஆண்டு இன்றைய பிரதம் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இந்திய வம்சாவளி மக்கள் எதிர் நோக்கிய நாளாந்த பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைத்து அனைவருக்கும் நாட்டுரிமை வழங்கினார்.

இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பெருந்தோட்டதுறை மக்களினது காணியுரிமையற்ற சொந்த வீடற்ற அனைவருக்கும் முற்றுப்புள்;ளி வைத்து அவர்களையும் இந்நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு சமமானவர்களாக உருவாக்கி அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கை தரத்தை வழங்க திடசங்கட்பம் பூண்டுள்ளது.

எனவே அரசின் எண்ணக்கருவை செயற்படுத்த கம்பனி நிறுவாகங்கள் தங்களுக்கிடையில் இப்பிரச்சினை தீர்வில் தங்களினது முழுமையான பங்களிபை வரவேற்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகுமென குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் பெருந்தோட்டதுறை அபிவிருத்திக்கும் இந்த அமைச்சின் உரிய பங்களிப்பினை வழங்கும் என்பதோடு பெருந்தோட்ட தேயிலை இறப்பர் கைத்தொழில் எதிர்நோக்குகின்ற பாரிய விலை சரிவிலிருந்து மீள்வதற்கும் சிறு தேயிலை; இறப்பர் தோட்டங்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற உத்தரவாத விலையை போன்று பெருந்தோட்டதுறை பிரச்சனைகளையும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அத்தொழில்த்துறையின் அபிவிருத்தியை விரிவுப்படுத்த தடையாகவுள்ள காரணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பொருந்தோட்டத்துறை அமைச்சினூடாக உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கம் சிறு தோட்ட அபிவிருத்திக்கு வழங்குகின்ற சலுகைகள் பெருந்தோட்டத்துறைக்கு வழங்கப்படுவதில்லை. தேயிலை ஏற்றமதி மூலம் கிடைக்கின்ற வசெஸ் பெருந்தோட்டத்துறை கைத்தொழில் துறையும் பெருந்தோட்டத்துறை சமூகத்தினதும் முழுமையான அபிவிருத்திக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சும் அதே போன்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் இராஐங்க கல்வி அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உறுதியும் திடசங்கட்ப்;பமும் புண்டு நடல்லமுறையில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இதைவிரும்பாத விசமிகள் ஒவ்வோருவருக்கிடையிலும் வேறுபாட்டினை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற போதும் அவற்றை செவிமடுக்காது நாங்கள் இணைந்து செயற்படுவோம் என குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத்துறை காணி மற்றம்; வீடமைப்பு கொள்கை ஒன்றை உருவாக்க பெருந்தோட்ட கம்பனிகள் ஆதரித்துடன் எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறை மக்களின் நிவாரண நலன்புரி செயற்திட்டங்கள் விருத்தி செய்வதற்கும் கிராம நகர மக்களுக்கு போன்று நிதியுதவிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தோட்ட தொழில் வருமானத்ததை அதிகரிப்பதற்கு அம்மக்கள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி செய்ய அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வருமானம் தரகூடிய தேயிலை தொழில் வீழ்ச்சி ஏற்ப்பட்டடுள்ள பகுதியில் தற்போது தொழிற்படை பாதிக்காதவகையில் மாற்று செயல்கள் மேற்கொள்வதும் நில சீர்த்திருத்த ஆணைக்குழுவின் அனாவசியமான தலையீடுகளின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான சூழலை உருவாக்குவதும்.

பெருந்தோட்டத்துறைகளில் மீள் பயிர்செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டத்துறை குத்தகையை நீண்டகாலத்திற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் சார்பாக முன்வைக்கப்பட்டதுடன் பெருந்தோட்ட வீடமைப்புகளை துரிதப்படுத்த அதற்கு தேவையான காரணிகள் பெற்றுக்கொடுக்க தாங்கள் எந்த விதத்தில் தடையாக இருக்க போவதில்லை எனவும் தோட்ட மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தோட்ட அதிகாரிகள் கடமை... 

அமைச்சின் ஏற்பாடுகள் முழுமையான ஆதரவை தருவதாகவும் குறிப்பிட்டதுடன். பெருந்தோட்டத்துறை சார்ந்த 3 அமைச்சர்களும் இணைந்து ஒன்றாக ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட தாங்கள் மகிழ்ச்சியுறுவதாகவும் அச்செயல் முறை பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் சமமான அபிவிருத்தி செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட ஏதுவாக உள்ளது எனவும் கூறினார் .

மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகக் கோரிக்கை


மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் தேவைப்படுவதுடன் மலையக மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள் அவசியம். உயர் கல்வி அமைச்சரிம் கோரிக்கை.

பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவானது 22.01.2015 அன்று உயர் கல்வி இராஜங்க அமைச்சரான  ரஜீவ விஜேசிங்க அவர்களுக்கு மலையக மாணவர்கள் உயர்ஃ பல்கலைக்கழக கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்தது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தை பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவின் சார்பாக அதன் இணை இணைப்பாளரான சட்டத்தரணி இ. தம்பையா அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்த ஆவணத்தை பரிசீலித்த கௌரவ உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மலையக மக்களின் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் பொருத்தமான நடவடிக்கைளை எடுக்கவும் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக திறந்த பல்கலைக்கழக கற்கைகள் மற்றும் தொழில்நுட்ப கல்வியை மலையக மக்கள் முழுமையாக அணுகுவற்கு உயர் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை உடனடியாக வழங்குமாறும் அத்தோடு மலையக மக்களிடத்தில் அவர்களின் உயர் கல்வி எதிர்பார்ப்புகள் தொடர்பாக கலந்துரையாட மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யும்படியும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவிடம் கோரியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நடவடிக்கைக் குழுவின் இணை இணைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா மலையகத்தின் புத்திஜீவிகள் மற்றும் மக்களுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட நடவடிக்கைக் குழு உயர் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்த ஆவணம் பின்வருமாறு அமைந்திருந்தது.

பின்னணி

இந்திய வம்சாவளி தமிழர்கள் பெருமளவில் பெருந்தோட்டங்களில் வாழ்வதுடன் அவர்களில் அதிகளவானவர்கள் தொழிலாளர்களர்களாவர்; மலையக மக்கள் என அடையாளப்படுத்தப்படுகின்ற இம்மக்கள் உயர் அல்லது பல்கலைக்கழக கல்வியை ‘தாமதித்து ஆரம்பித்தவர்கள்’ (‘டயவந ளவயசவநசள’) ஆவர். 1970கள் வரை மலையக பாடசாலைகளுக்கு உயர் கல்வி (யுஃடு) வகுப்புகள் அல்லது முன் பல்கலைக்கழக வகுப்புகள் இருக்கவில்லை. சில மலையக மாணவர்களுக்கு யுஃடு கல்வியை பெற யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. ஏறத்தள 800 பெருந்தோட்டப் பாடசாலைகள் ஆரம்பக் கல்வி வரை மட்டும் கல்வி வழங்குகின்றன. 1960களில் சில நலன்விரும்பிகளின் முயற்சிகள் காரணமாக பெருந்தோட்ட நகரங்களான பதுளை, நாவலப்பிட்டிய மற்றும் கம்பளை போன்றவற்றில் சில உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970களின் கடைசியிலும் 1980களின் ஆரம்பத்திலும் பெருந்தோட்ட பாடசாலைகள் கையேற்கப்பட்டப் பின்னர் மற்றும் மலையக பிரதேச அரச பாடசாலைகளுக்கு வந்த வெளிநாட்டு உதவிகள் (ளுஐனுயுஇ புவுணு) காரணமாக குறிப்பாக உட்கட்டுமான வசதிகள் வளர்ச்சி கண்டன.

இந்த பின்னணியில் க.பொ.த உயர்தரக் கல்வி 1980களின் பிற்பகுதிகளிலும் அதன் பின்னரும் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது 20 1யுடீ பாடசாலைகளும் 109 1ஊ பாடசாலைகளும் க.பொ.த. உயர் தரக் கல்வியை மலையக மாணவர்களுக்கு வழங்குகின்றன.

முன்னர் குறிப்பிட்டது போல் மலையக தமிழ் மாணவர்கள் ‘தாமதித்து ஆரம்பித்தவர்கள்’ என்ற அடிப்படையில், பல தசாப்பதங்களாக பாடசாலை உயர் கல்வியை (யுஃடு) வழங்கும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டிப்போட முடியாதவர்களாக இருக்கின்றனர். இக்காரணிகளினாலும் பல்கலைக்கழகத்துக்கான திறமை அடிப்படை (அநசவை டியளந), தரப்படுத்தல் போன்ற அனுமதி முறைகள் மற்றும் தற்போதைய மாவட்ட அடிப்படையிலான பங்கீட்டு கொள்கைகள் காரணமாகவும் மலையக மக்கள் நியாயமான வீதத்தில் அதாவது 7 வீதம் என்று உரித்துடைய தமது இன வீதாசாரத்திற்கும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியை பெற முடியாதுள்ளனர்.

அரசாங்கம் இந்திய தமிழர்களை ஒரு தனி இனமாக வகைப்படுத்தியுள்ள போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபர புத்தகத்தில் அவர்கள் தனியாக அங்கீகரிக்கப்படாத அதேவேளை அவர்கள் வட கிழக்கு தமிழர்களுடன் சேர்த்து புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து பொருத்தமான, பயனுள்ள புள்ளிவிபரங்களையும் தரவுகளை பெற எந்த வாய்ப்புகளும் இல்லை. 14 பல்கலைக்கழகத்துக்கு வருடத்துக்கு 28900 வரை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போதும் அவர்களில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை 120- 150 மட்டுமே. இந்த எண்ணிக்கையானது மொத்த இன வீதத்திற்கு மிகவும் குறைவாகும். தெரிவாகும் 120-150 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கலை மற்றும் வர்த்தக பிரிவை சார்ந்தவர்கள். இவர்களில் 25-30 வரையானவர்களே விஞ்ஞான கற்கைகள் சார் பீடங்களுக்கு தெரிவாகின்றனர்.

அத்தோடு மலையகத்தில் இருந்து தெரிவாகும் மாணவர்களில் மிகவும் குறைவானவர்களே 65 வீதமாக உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்கின்றனர் என்பது அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் மூன்று பல்கலைக்கழகங்களும் உயர் தேசிய டிப்ளோமா, மருந்தக கற்ககைகள், உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்து கற்கை வழங்கும் அரசு சார் நிறுவனங்களில் காணப்படும் அனுமதி அடிப்படைகள்ஃ கொள்கைகள் அவர்களின் அபிலாசைகளுக்கு அமைவாக இன்மையினால் மலையக மாணவர்கள் இவற்றை அணுக முடியாதுள்ளனர்.
தற்போது தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அரசு சாரா துறை நிறுவனங்கள் உயர் கல்வியை வழங்குகின்றனர். எனினும் இவைகள் அனைத்தும் கட்டணங்களை அறவிடும் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிலையில் மலையக மாணவர்கள் அந்த செலவை தாங்கும் வல்லமை அற்று இருக்கின்றனர்.
உயர் கல்வி தொடர்பில் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

1970களில் இருந்து இலங்கையில் திறமை அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு முறை மாற்றப்பட்டு ஏனைய வகை நுழைவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய நுழைவு முறையானது நாட்டின் பின்தங்கிய நிலையில் உள்ள (னளையனஎயவெயபநன) பிரிவினரை கவனிப்பதாக அமையும் என கூறப்பட்டது. எனினும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மலையக தமிழ் மக்கள் தொடர்பில் இந்த புதிய நுழைவு கொள்கை நன்மையளிக்கவில்லை.

க.பொ.த. உஃத விஞ்ஞானக் கல்வியை வழங்கும் 15 1யுடீ பாடசாலைகளில் பல பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. மலையகத்தில் உள்ள ஒரு சில பாடசாலைகள் விஞ்ஞான மைய பீடங்களுக்கு அனுப்புவதற்கு சிறப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் ஏனைய பாடசாலைகள் பல பிச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. அவையாவன்

• தரமான விஞ்ஞானத் துறை ஆசிரியர்கள் பற்றாக்குறை.
• விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற உட்கட்டுமான வசதிகள் இன்மை.
• 20 1யுடீ பாடசாலைகள் இருக்கின்ற போதும் முக்கிய மூன்று மாவட்டங்களில் வாழும் மலையக மாணவர்கள் அனைவருக்கும் இதனை அணுக முடியாத நிலை காணப்படுகிறது.

சாரம்சமாக கீழ் வரும் பிரச்சினைகள் மலையக தமிழர்களின் உயர் கல்வியில் உள்ள பிரச்சினைகளாக அடையாளப்படுத்தலாம்.

• க.பொ.த. உஃத வகுப்புகளின் பலவீனங்கள்.
• க.பொ.த. உஃத வகுப்புகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளமை.
• போதுமான பொருளாதார வசதியின்மை காரணமாக மலையக தமிழ் தொழிலாளர்களின் பிள்ளைகள் க.பொ.த. உஃத கல்வியை குறைவான அணுகுதலே காணப்படுகிறது.
• குறைவான மாணவர்ளே பல்கலைக்கழகத்துக்கு நுழைகின்றனர்.

உயர் கல்விக்கு அல்லது உயர் கல்வியை பெறுவதற்கான பல்கலைக்கழகத்துக்கு முன்னைய கல்விஃ க.பொ.த. உயர் தரக் கல்வி மிகவும் முக்கிய விடயமாக இருக்கின்றமையினால் மேற்குறித்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும். எனவே, குறித்த அமைச்சுகள் மலையக மக்களின் உயர் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மலையக தமிழர்களின் உயர் கல்வியை உயர்த்துவதற்கான முன்மொழிவுகள்.
1. இம் மாணவர்களை பல்கலைக்கழக கல்வியில் உள்வாங்குவதற்கு சாத்தியமாக்கல் நடவடிக்கைகளை (யககசைஅயவiஎந யஉவழைn) அல்லது நேர்கணிய பாகுபாட்டு கொள்கையை அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டும்.

2. மலையக மக்களுக்கு ஒரு தனியான பல்கலைக்கழகம் தேவை – இக் கோரிக்கையானது பல ஆண்டுகளுக்கு முன்னர் மலையக புத்திஜீவிகளினால் முன்வைக்கப்பட்டதுடன் முன்னால் மலையக தலைவர்கள் அதனை கவனத்திற் எடுத்துக் கொண்டிருந்ததுடன் இந்த முன்மொழிவானது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஏனைய தமிழ் பேசும் சமூகங்களான வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் அவை அப்பிரதேசத்தின் வரலாறு, கலாசார, மொழியியல், விவசாய, கைத்தொழில் மற்றும் கல்வி அபிலாசைகளை உறுதி செய்படுகின்ற வகையில் இருந்த போதும் மலையக மக்களுக்கு மட்டும் ஒரு பல்கலைக்கழகமோ அல்லது ஒரு பல்கலைக்கழக கல்லூரியோ இல்லை. அரச பல்கலைக்கழக முறைமை ஒரு இடத்தில் நிற்க போவதில்லை என்பதனால் இந்த எதிர்பார்ப்பு குழு மனப்பான்மையின் அடிப்படையிலானது அல்ல. இது மலையக மக்களின் உயர் கல்வி மட்டத்தை நிச்சயம் உயர்த்தக்கூடியதாகும். அவ்வாறான பல்கலைக்கழகமானது அனைத்து இன குழுக்களையும் உள்ளடக்கிய தேசிய நிறுவனமாக அமைதல் வேண்டும் என்பதோடு மலையக அடையாளத்தை வழியுறுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டப் போது பல்கலைக்கழக இயக்கத்தின் முன்னோடிகள் தேசிய கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு அது உதவும் என்பதை வழியுறுத்தினர். குறித்த தனிப் பல்கiலைக்கழகம் தாபிக்கப்படும் போது மலையகத்திலும் அதேமாதிரியான அபிவிருத்தி இடம்பெறுகின்ற வாய்ப்புண்டு.

3. தேசிய பல்கலைக்கழகங்களுக்கு மேலதிமாக ருNஐஏழுஊ, கடல் பல்கலைக்கழகம் மற்றும் ளுடுஐஐவு மற்றும் உயர் தேசிய டிப்ளோமா, மருந்தக, உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ கற்கைளுக்கான ஏனைய அரச கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
4. போதுமான மனித மற்றும் பௌதீக வளங்களுடன் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் தாபிக்கப்பட வேண்டும்.

இன்று இலங்கை பல்வேறு உயர் கல்வி வாய்ப்புகள் மூலம் அறிவுமைய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மலையக மக்கள் தாங்கள் அதில் பின்தள்ளப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

உயர் கல்வி தொடர்பிலான மலையக மக்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை உயர் கல்வியில் பாரபட்சங்கள் (னiளியசவைநைள) மற்றும் அசமத்துவத்திற்கு இட்டுச்செல்லும். அறிவுமைய பொருளாதாரத்தின் வினைத்திறனான உறுப்பினர்களாவதற்கு தேவையான தகைமை மற்றும் திறனை அவர்கள் இழந்து வருகின்றனர். எனவே இது அவர்களை கணினி மற்றும் விஞ்ஞான அறிவு இன்றி வாழும் சமூகத்தின் ஒரு பிரிவினரை உருவாக்கி எண்மிய பாகுபாட்டிற்கு (னபைவையட னiஎனைந) தள்ளப்படும் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

நன்றி - http://inioru.com

விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கு வெளிமாவட்ட விஞ்ஞான பட்டதாரிகள் - வே.இராதாகிருஷ்ணன்


இதன் மூலமே மலையக பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த முடியும் 
என்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்


மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிக்க போதிய பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே வெளி மாவட்டங்களிலிருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு அதனூடாக விஞ்ஞானப் பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: "மைத்திரியின் 100 நாள்" வேலைத்திட்டத்தின் கீழ் மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றீர்கள்?

பதில்: மலையகப் பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக மத்திய மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் 1–A,B பாடசாலைகள் தற்போது 15 மட்டுமே உள்ளன. இந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 20 ஆக, உயர்த்துவதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை உயர்வடையும். ஏற்கனவே மத்திய மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தான் இல்லை. எனவே, அந்தப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய பாடசாலைகளுக்கு இந்தப் பாட ஆசிரியர் மிகவும் அவசியமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி, சப்ரகமுவ, ஊவா மாகாண பாடசாலைகள், களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கும் விஞ்ஞான ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகள் பல பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அந்தப் பாடசாலைகளில் அவை கற்பிக்கப்பட முடியாமல் போனமையும் இடம்பெற்றுள்ளது.

கேள்வி: விஞ்ஞானம், கணித பாடங்களை கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர்கள் போதியளவு இல்லை. இதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்?
பதில்: இது தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். நாட்டில் எங்கெங்கு விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய பட்டதாரிகள் ஆசிரியர்கள் இருக்கின்றனரோ அவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருமாறு கூறினேன். அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்கள் மலையக பாடசாலைகளில் கற்பிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் குறிப்பிடும் பாடசாலைகளுக்குச் சென்று அவர்கள் கற்பிக்க வேண்டும். அவ்வாறான விஞ்ஞான, கணித பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம் கற்பிப்பதற்கான வசதியுள்ள பாடசாலைகளில் மீண்டும் அந்தப் பாடங்களை மாணவர்கள் கற்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: ஏற்கனவே 3,100 ஆசிரியர்களை மலையகப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களுக்கான நியமனம் எப்போது வழங்கப்படவுள்ளது?
பதில்: இவர்கள் எழுதிய தேர்வின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதியளவில் வெளியாகவிருக்கின்றன. அந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதியளவில் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கு 6,000 ரூபா சம்பளமாக வழங்கப்படுவதென முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தத் தொகை 9,000 ரூபாவாக உயர்த்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த ஆசிரியர்களுக்கான நியமனங்களும் கூட மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

கேள்வி: மலையகத்துக்கென்று பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது?

பதில்: மலையகத்தில் மலையகம் சார்ந்த கற்கைகளை கற்பிக்கக்கூடிய ஒரு வளாகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்துள்ளோம். எனவே இது தொடர்பில் ஆலோசனைச் சபை ஒன்றை ஏற்படுத்தி அந்தச் சபையின் மூலம் வளாகத்தை நிறுவுவதற்கான ஆலோசனைகள் முதலில் பெற்றுக்கொள்ளப்படும். மலையக சமூக, பொருளாதார பயிர்செய்கை, சுற்றாடல், கலை, கலாசார, பண்பாட்டு பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பக் கற்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும். அமைவிடம், மாணவர்கள் உள்வாங்கல், அதற்கான வளங்ளைப் பெற்றுக்கொள்ளல் என்பன பற்றியும் இந்த ஆலோசனைச் சபை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கும்.

இந்த அறிக்கை கிடைத்ததும் அதனடிப்படையில் மேற்படி வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வளாகத்தை நுவரெலியா மாவட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆலோ சனைச் சபை வழங்கும் முழுமையான அறிக்கையின் அடிப்படையிலேயே வளாகம் அமையும். இது மலையகத்தில் உயர்கல்வியை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எனவே இது தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்வதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கேள்வி: 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படவிருக்கின்றது?
பதில்: இந்த வேலைத்திட்டத்துக்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன. வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரைவில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே தோட்ட வீடமைப்புக்கென காணிகளை வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால், கால்நடை அபிவிருத்தி அமைச்சு அதனைக் கொடுக்க விடாமல் தடைசெய்து விட்டது. இது போன்ற பல்வேறு தடைகள் காரணமாக தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. எனவே இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு என்னவிதமான தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு புதிதாக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். இதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு, வீடமைப்பு அமைச்சு போன்றவை இணைந்து நடவடிக்கை எடுக்கும். எனவே இந்த வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இந்தத் திட்டம் முழுமையடைவதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

கேள்வி: மலையக மக்கள் முன்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? கட்சியின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?

பதில்: மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு வுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. மத்திய குழு எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவாகும். நாம் மத்திய குழுவின் முடிவுக்கமையவே செயற்படுகின் றோம். இதேவேளை கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு எதிராக செயற்பட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதங்களை அனுப்பியுள்ளோம். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதிலை ஆராய்ந்த பின்னர்தான் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுபற்றி கட்சி தீர்மா னிக்கும்.

மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவையும்


இன்று மலையகத்தில் புதிய மாற்றங்களை உள்வாங்கவும், உருவாக்கவும் மலையக சமூகம் தயாராகியுள்ளது. மக்களின் வாழ்வியல் புத்தெழுச்சி பெறவேண்டும் என்றும், புதிய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் அதிகளவு இனங்காணப்பட்டு வருகின்றன
அந்த வகையில் காணி மற்றும் வீட்டு உரிமை பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்றும் 200 வருட லயன் வாழ்கைக்கான முடிவை பெற வேண்டும் என மலையக சமூகம் புரண்டெழுந்துள்ளது.

இவை மட்டும் மலைய மக்களின் பிரச்சினை அல்ல. முதலில் அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமையை வென்றெடுத்தல், மற்றும் கல்வி, சுகாதாரம், தொழில் ரீதியான உரிமை, கலை கலாசார, பண்பாட்டு உரிமை, பொருளாதார வருவாய்களை அதிகரித்து கொள்வதற்கான உரிமைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.

இத்தகைதொரு சூழலில் கல்விரீதியான உரிமைகளை வென்றெடுப்பது ஒரு சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு ஏதுவானதும், நிகழ்கால வாழ்வியலை மேம்படுத்தி, அறிவு சார் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதான பாத்திரமாகின்றது.

அந்த வகையில் தற்போதைய இலங்கையின் ஆட்சி மாற்றம் மலையக கல்வி வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள சாதகமான சூழ்நிiலை தோற்றுவித்துள்ளது. காரணம் மாற்றத்தை நோக்கி புதிய சிந்தனையுடன் பயணிக்கும் அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தம் ஒருவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்துள்ளமை ஆகும்.

இச்சூழ்நிலையில் குறிப்பாக 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இலவசகல்வி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மலையக மக்களை பொறுத்த வரை வரலாற்று காலம் தொடக்கம் முதல் வஞ்சிக்கப்பட்ட வரலாறாகவும், அவை அரசியல், பொருளாதார, சமூக பண்பாடு என்ற சகல விடயங்களிலும் அவர்களின் கனவுகள் எடடாக்கனியாகவே உள்ளது.

இங்கு மலையகத்தவர்கள் கல்வி ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை, குறிப்பாக இலங்கையில் தோட்டப்புற பாடசாலைகள் எந்தவகையான அபிவிருத்திகளையும், வளர்ச்சியினையும் கல்வியில் உயர் மட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளனர்.

பின்னர் அந்நிலையில் ஓரளவு தளர்வு ஏற்பட்ட இத்தோட்டப்புற பாடசாலைகள் அரசாங்கத்தின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

இம்மாற்றத்தினைத் தவிர அவை கல்வி ரீதியான முழுமையான அடைவு மட்டத்தை இதுவரையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

பாடசாலை கல்வி நிலை இவ்வாறானதொரு நிலையிலிருக்க மலையக மாணவர்களின் உயர்கல்வி என்றதொரு அம்சம் இன்று ஒரு பிரச்சினையாக தலைத்தூக்கியுள்ளது.

உயர்தரத்தின் பின்பு இன்று அதிகளவான மலையக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்று வருவதும், இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்;களிலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.

உயர்தரத்தில் பல்கலைக்கழகத்திற்கான அனுமதித்தகைமையைப் பெற்றிருக்கின்ற போதிலும் ஒரு குறிப்பிட்டத்தொகையான மலையக மாணவர்கள் மாத்திரமே இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்கு இலங்கையின் பல்கலைக்கழக தர நிர்ணயங்களும் காரணமாகின்றன.

அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்கு உள்வாங்கப்படாத ஏனைய மாணவர்களின் நிலை வெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இச்சூழ்நிலையகளில் மலையகத்திற்குகென ஒரு தனியான பல்கலைக்கழகத்திற்கான அவசியம் மலையக புத்திஜீவிகள் உட்பட அனைவர் மத்தியிலும் எழுந்துனள்ளது.

அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை இதுவரைக்கும் வெற்றியளிக்கவில்லை. இலங்கையின் 15 தேசிய பல்கலைக்கழகத்துக்குள் மலையகத்துக்கான பல்கலைக்கழகமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆயினும் இத் தேசிய பல்கலைக்கழகங்களுக்குள் அதிகளவான மாணவர்களும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.

 என்றாலும் மலையக தமிழர்களின் சதவீதத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே உள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடாக “மலையக மாணவர்கள் அனைவருக்கம் உயர்கல்வி” என்ற கோட்பாட்டுக்க ஒரு தனியான மலையக பல்கலைக்கழகம் என்ற அம்சமே பொருத்தப்பாடுடையதாகும்.

குறிப்பாக வட மாகாணத்தை பொறுத்தவரையில் அவர்களின் பல்கலைக்கழக அனுமதி வீதத்தை யாழ்ப்பல்கலைக்கழகமும், கிழக்கு மாகணத்தைப் பொருத்தவரையில் கிழக்கு பல்கலைக்கழகமும், கிழக்கு முஸ்லிம்களை பொருத்தவரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் உள்வாங்கிக்கொள்கின்றது.

ஆனால் மலையக மாணவர்களை பொருத்தவரையில் வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை தனியான மலையக தேசிய பல்கலைக்கழகம் இவ்வாறான காரணத்தினால் அதிகளவான மாணவர்களை உள்வாங்க முடியாதுள்ளது. இந்நிலை மலையக மாணவர்களை பொறுத்தவரை ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த கனவினை நினைவாக்க வேண்டுமென்றால் மலையகத்துக்கான பல்கலைக்கழகமொன்றினை உருவாக்குவது அவசியமாகும். தென்கிழக்கை பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பேரம்பேசும் சக்தியாக இருந்து அவ்வினத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆனால் நம் மலையக தலைமைகள் இதுவரைக்காலமும் பேரம்பேசும் சக்தியாக இருந்து ஒரு தேசிய பாடசாலையைக்கூட பெற்றுத்தரமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அவலம்.

ஆனால் அதற்கான சந்தர்ப்பவாத சூழ்நிலையும், தகுந்த அரசியல் களமும் கைகூடியுள்ள நிலையில் மலையக தலைமைகள் மலையக தேசிய பல்கலைக்கழகமொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான சட்டமூலமொன்றை தகுந்த முறையில் உருவாக்கி சமர்ப்பிப்பதன் ஊடாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

அவ்வாறான பல்கலைக்கழகம் உடனடியாக எவ்வாறு உருவாக்கலாம் என்றால் இன்று மலையகத்தில் மூடப்பட்டுள்ள சகல தொழிற்சாலைகளையும் மாணவர்கள் தங்கும் விடுதிகளாகவும், பசறையில் கலாசார பீடத்தினையும், காவத்தையில் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுக்கான கற்கை நிலையத்தையும், உடபுஸல்லாவையில் சமூக உளவியல், மானுடவியல் தொழிற்சார் நோயியல் ஆய்வு பீடத்தை உருவாக்குதல் வேண்டும்.

அத்தோடு மாத்தளை, கேகாலை, பதுளை ஆகிய இடங்களில் கல்வியல் பீடம், மானுடவியல் பீட வளாகங்களையும் அமைத்தல் வேண்டும். அத்தோடு 10 மலையக மாவட்டங்களிலும் காலி மற்றும் மாத்தறையில் விஞ்ஞான கணித சிறப்பு பாடசாலைகளை அமைக்கப்பட வேண்டும்.

மேலும் மாத்தளையில் அனைத்து மொழியியற் பீடம் அமைத்தலும் குறிப்பாக சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சீனம், ருஸ்யன், பிரேஞ் மொழிகளை பாடமாக்குதல் வேண்டும்.

இக்கல்வி பீடங்களின் நிர்வாக தொகுதி பத்தனை கல்வியற் கல்லூரியிலும், கால்நடை விவசாய பீடம் கேம்பிறீட்ச் கல்லுரியிலும், கொட்டக்கலை பண்ணைத்தொகுதி வணிக பீடத்துக்காகவும், காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் கல்வியல் நிறுவனங்களாகவும், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் தகவல் தொழிநுட்ப பீடமாகவும், பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி, மற்றும் பசறை கலைப்பீடத்தையும், நுவரெலியாவில் தொழிநுட்ப கல்லூரியில் விஞ்ஞான பீடத்தையும், இரம்பொட தொண்டமான் கலாசார நிலையத்தை நுண்கலைத்துறை மற்றும் அழகியல் கற்கைப்பீடத்தையும், பலாங்கொடையில் பட்டப்பின் படிப்பு கற்கை நிலையத்தையும் உருவாக்க முடியும்.

இவ்வாறு மலைகயத்தின் பல பாகங்களில் தேசிய பல்கலைக்கலகத்திற்கான பீடங்களை உருவாக்கப்படும் போது அவை ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் பீடங்களுக்கான பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மற்றும் ஏனைய விரிவுரையாளர்களை இலங்கை அரசாங்கம் 10 ஆண்டுகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து கொண்டுவர வேண்டும். அதேவேளை மலையக பேராசிரியர்களையும் இதில் உள்வாங்குவது சாலச்சிறந்ததாகும்.

இப்பல்கலைக்கழகத்திற்கான நிதித் தேவைகளை உயர்கல்வியமைச்சின் நேரடி ஒதுக்கீடு செய்ய விதந்துரைக்க வேண்டும் இவ்வாறானதொரு ஆரம்ப அடித்தளத்தை மலையக பல்கலைக்கழகத்திற்கு இடுவோமானால் எதிர்காலத்தில் அவைகளின் வளர்ச்சியில் மிக பெரிய தேசிய பல்கலைக்கழகத்தை நாம் பெற்றுக்கொள்வோம் என்பது திண்ணம்.

மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல்துரைசார் அறிவு சமூகத்தை இவ்வாறானதொரு மலையக பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் நாம் பெறலாம்.

இத்திட்டங்களை இவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்வைத்து அவற்றைப்பெற்றுக்கொள்ள மலையக தலைமைகள் முன்வர வேண்டும். “மலையக மாணவர்கள் அனைருக்கும் உயர்கல்வி” என்ற இலட்சிய நோக்கை அடைந்து கொள்ள சமூக மட்டத்தில் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்
மலையகம்

தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புதிய அமைச்சர்களின் கவனத்துக்கு... - சிவா ஸ்ரீதரராவ்


தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் மலையகத்திலும் பல காலமாக தொடர்ந்து நிலவி வரும் பிரச்சினைகள், குறைபாடுகள் என்பவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாக கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் மற்
றும் பிரதி அமைச்சராக மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய புதிய அமைச்சுக்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயற்பட்டு வந்தபோது அந்த அமைச்சின் மூலம் மலையக பகுதிகளில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தோட்டப்பகுதி வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்படாமல் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் அதிகளவிலான சேவைகள் செய்யக்கூடியதாக இருந்த போதிலும் அதுபற்றி அப்போது அக்கறை காட்டப்படவில்லையென்றே கூறப்படுகின்றது.

தற்போது புதிய அரசாங்கத்தின் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மலையக மக்களுக்கு அதிக சேவையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மலையக வீடமைப்பு திட்டம் தோட்ட வீதிகள் மூடப்பட்டுள்ள தோட்ட தபால்நிலையங்கள் மற்றும் கலாசார மண்டபங்கள் என்பவை திறக்கப்படுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு பொது வசதிகள் உட்பட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தினால் இந்து கலாசார அமைச்சு ஓரங்கட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த அமைச்சுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் இந்து சமய விவகார அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் இந்து கலாசார அமைச்சு இல்லாத நிலையில் இந்து கலாசாரம் தொடர்பான செயற்பாடுகள் இந்து கலாசார திணைக்களத்திடம் வழங்கப்பட்டிருந்தன. இந்து கலாசார திணைக்களத்தினூடாக மலையக பகுதிகளுக்கு போதிய சேவைகள் கிடைக்கவில்லையென்றே கூறப்படுகின்றது. குறிப்பாக தோட்ட பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டு பாதியில் இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அறநெறி பாடசாலைகள் சரியாக இயங்குவதில்லை. கடந்த சில காலமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மாற்று மதத்தை தழுவி வருகின்றமையை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்தோடு தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்து சமய வளர்ச்சி மற்றும் கலாசாரங்கள் என்பன நத்தை வேகத்திலேயே சென்று கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க கல்வி அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்களையும் கொண்ட தமிழ் தேசிய பாடசாலை இல்லாதது இம்மாவட்டத்தில் பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. இதற்கு எந்தவொரு அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்கள் கொண்ட தேசிய பாடசாலை ஒன்றை அமைத்து தருவதாக மலையகத் தலைவர்கள் தமிழ் மக்களிடம் உறுதியளித்திருந்தனர். அதன் காரணத்திலேயே இரத்தினபுரி மாவட்ட மக்கள் தமிழர் ஒருவரை வெற்றி பெறச் செய்தார்கள்.

சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் முடிவடைந்து தற்போது இரண்டு வருடத்திற்கும் மேல் கடந்த நிலையில் இன்னும் இரத்தினபுரியில் தேசிய பாடசாலை அமைப்பதற்கு காணியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் அதை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும். இவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியபடியால் மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எனவே புதிய கல்வி அமைச்சர் இரத்தினபுரி மாவட்டத்திற்கு தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவது உட்பட கல்வி வளர்ச்சி சிறந்த பங்காற்றுவார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

பெருந்தோட்டத்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த ஒருவரான வேலாயுதத்துக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை பொருத்தமானதாகும். மலையக மக்கள் ஆண்டாண்டு காலமாக தேயிலை மற்றும் இறப்பர் போன்ற துறைகளிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். தோட்ட தொழிலாளர்களுடைய தொழில் பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்பு சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவரது கடமையாகும்.

நாட்டில் வாழும் சகல பெண்களுக்காகவும் குரல் கொடுக்க பாராளுமன்றத்தில் பெண் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தி பெண்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மகளிர் விவகார அமைச்சின் மூலம் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழும் பெண்களுக்கான உரிமைகள் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் தொழில்வாய்ப்பு உட்பட உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்கள் மீதான அடக்கு முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

13 திருத்த சட்டம்: இந்தியாவின் மீள்வருகை? - என்.சரவணன்


புதிய ஆட்சிமாற்றம் தமிழர்களின் எதிர்கால அரசியலில் செலுத்தப் போகும் பாத்திரம் குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசியல் களத்தில் 13வது திருத்தச்சட்டம் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தலைதூக்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டதிற்கூடாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்தை உறுதிசெய்வது இந்தியாவின் தலையீட்டுக்கான நோக்கங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் நிலைமைகள் இந்தியாவின் இறைமைக்கும் வல்லாதிக்கத்துக்கும் அவமானமாகவே இருந்தன. குறிப்பாக எதிர்பார்த்தபடி சகல இயக்கங்களையும் சரிகட்ட முடியாமல் போனமை, விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் கண்ட இழப்புகள், இந்திய அமைதி காக்கும் படை நற்பெயரை இழந்தமை, அன்றைய ஜனாதிபதி பிரேமதாச இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தமை போன்றவற்றை முக்கியமாக குறிப்பிடலாம். அது போலவே வரும்போது கொண்டுவந்த மாகாணசபையை 1990இல் போகும்போது இரண்டே வருடங்களில்  அந்த மாகாணசபை  கலைத்துவிட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தனைக்கும் மேல் அடுத்த வருடமே தமது பிரதமர் ராஜீவ் காந்தியை இழக்கவும் நேரிட்டது.

இத்தனை நிகழ்வுகளும் இந்தியாவுக்கு அரசியல் பிரச்சினையாகவும், ராஜதந்திர பிரச்சினையாகவும் மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு மானப் பிரச்சினையாகவும் தொடர்ந்து இருந்துகொண்டே வந்தது. இதற்காக எந்த விலையை கொடுத்தும் சரிசெய்வதற்கு எத்தனையோ முயற்சிகளையும் மேற்கொண்டது. விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் அழிப்பதும், தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வை அமுல்படுத்தி காட்டுவதும் இந்தியாவின் முன் இருந்த பணிகளாக இருந்தன.

ஆனால் தாம் அறிமுகப்படுத்திய மாகாணசபையை அமுல்படுத்துவது என்பதை விட புலிகளை இல்லாமல் செய்வது நிகழ்ச்சிநிரலின் முதன்மை இடத்திலேயே இருந்தது. ராஜீவ் காந்தியை இராணுவ அணிவகுப்பின் போது தாக்கியும், தமது படையை விரட்டிய செயலாலும் தென்னிலங்கை அரசாங்கத்தின் மீது இருந்த வெறுப்பு கூட இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு; புலிகளை அழிக்கும் விடயத்தில் இலங்கை அரசுடன் கைகோர்த்தது இந்தியா. புலிகளை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான முதல் அடியை புலிகளை தடை செய்ததன் மூலம் எடுத்து வைத்தது. பின்னர் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு உலக அளவில் 30 நாடுகள் புலிகளை தடை செய்தன. ஆக அதன் மூலம் புலிகளின் அழிவுக்கான அத்திவாரத்தை இட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வின் பேரில் தென்னாசிய பிராந்தியத்துக்குள் அந்நிய நாடுகளின் ஊடுருவலை சகிக்கமுடியாத நிலையில் காலப்போக்கில் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், தீர்வு யோசனைகளிலும் தமது பாத்திரத்தையும் வகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா. பேட்டையின் தலைவனாக தமது அனுசரணையின்றி இனப்பிரச்சினைக்கு விமோசனமில்லை என்கிற நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது. காலப்போக்கில் அரசு-புலிகள் பேச்சுவார்த்தையும் முறிந்தது. சமாதானத்தில் தமது பாத்திரம் எப்படியோ அதைப் போலவே போரிலும் தமது முழு ஆதரவையும், அனுசரணையையும் வழங்கி ஈற்றில் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது இந்தியா. விடுதலைப்புலிகளும் தோற்கடிக்கப்பட்டனர், பிரபாகரனும் கொல்லப்பட்டார்.

சரி, இனி அதன் அடுத்த இலக்கான தமது மாகாண சபை முறையை நிர்ப்பந்திப்பது என்கிற இடத்தை வந்தடைந்தது இந்தியா. அந்த இலக்கில் தொடர்ச்சியான நிர்ப்பந்தத்தை சகல வழிகளும் செய்துகொண்டிருந்ததை அனைவரும் அறிவோம். தற்போது இந்திய ஆட்சி மாற்றமும் இலங்கையின் ஆட்சிமாற்றமும் அதற்கான சாதகமான சூழலை திறந்துவிட்டிருக்கிறது.

இரு நாட்டு சமிக்ஞை
தற்போதைய பிரதமர் ரணிலும், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் மாகாண சபை அமுல்படுத்துவதில் தமிழர்களுக்கு சாதகமான நிலையில் இருப்பவர்கள். அதன் எல்லை எது என்பது தனியாக ஆராயப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் கடந்த மகிந்த ஆட்சியை விட சாதகமானவர்கள் என்று கொள்ளலாம். அதை விட தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மங்கள சமரவீரவுடன் நீண்டகாலமாக தனிப்பட்ட நட்பை கொண்டிருப்பவர். மங்கள சமரவீர பதவியேற்ற அன்றே சுஷ்மா மங்களவுக்கு தனது டுவீட் மூலம் “வாழ்த்துக்கள் என் நண்பனே!” என வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மங்கள சமரவீர 18 ஆம் திகதி தனது முதல் விஜயமாக இந்தியாவுக்கு விஜயம் செய்வதை அறிவித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் செயித் அக்பருதீன்  அன்றே டுவீட் மூலம் அறிவித்திருந்தார்.

அதன்படி தனது முதல் விஜயமாக இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட மங்கள இந்தியப் பிரதமர் மோடியுடனும், வெளிவிகார அமைச்சர் சுஷ்மாவுடனும் நீண்டநேர பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் 13வது திருத்தச்சட்டம், மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குறைப்பது, தமிழ் நாட்டிலுள்ள அகதிமுகாம்களின் வாழ்பவர்களை மீள இலங்கையில் குடியேற்றுவது உள்ளிட்ட விடயங்கள் உரையாடப்பட்டுள்ளன. இந்த சுமுகமான உரையாடலின் பின்னர் இலங்கைக்கு வரும்படி பிதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இலங்கை விஜயம் செய்யவிருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அந்த விஜயத்தின் போது 13வது திருத்த சட்டம் குறித்து அழுத்தம் தெரிவிக்கவிருக்கிறார் என்று இப்போதே திவிய்ன பத்திரிகை உள்ளிட்ட பல சிங்கள ஊடகங்ககள் சிங்கள மக்களுக்கு பீதியை கிளப்பத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் 23 அன்று டில்லியில் பிரதமர் மோடியை இரா.சம்பந்தன் சந்தித்து உரையாடிவிட்டு வந்ததன் பின்னர் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று அறிவித்தார் பிதமர் மோடி. அந்த அறிவித்தலை ஜேவிபி உள்ளிட்ட ஏனைய இனவாத சக்திகள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதோடு மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய NDTV தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஒற்றையாட்சிக்கு குந்தகமில்லாமல் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். பொலிஸ் அதிகாரம் குறித்து உள்ள அச்சத்தை நீக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா தமிழர்களுக்கு ஒரு பலம். அதேவேளை மீண்டும் உள்நாட்டில் எதிர்நோக்கப் போகும் சவால்கள் ஏராளம்.

புதிய நெருக்கடிகள்
மகிந்த அணி கூட; நடந்துமுடிந்த தேர்தலில் மைத்ரிபால அணிக்கு எதிராக பயன்படுத்திய முக்கிய ஆயுதமே  தமிழர்களுக்கு நாட்டை தாரை வார்க்கப் போகிறார்கள் என்பதே. இராணுவத்தை வெளியேற்றப்போகிறார்கள், புலிகள் பலமடையப்போகிறார்கள், தமிழீழம் அமைக்கப்போகிறார்கள் போன்ற பீதிகளை அவர்கள் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

இப்போதும் கூட புதிய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை அப்படித்தான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறது மகிந்த அணி. இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள வாக்கு வங்கியை இலக்காக வைத்து அவர்கள் இந்த பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

மகிந்த தரப்பில் இருக்கும் விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில போன்றோர் இப்படியான இனவாத பிரசாரத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கிறார்கள். கூடவே பொதுபல சேனா, ராவணா பலய போன்ற இனவாத அமைப்புகளும், நளின் டி சில்வா, தயான் ஜயதிலக்க போன்ற “சிங்கள புத்திஜீவிகளும்” களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.

மங்கள சமவீரவின் இந்திய விஜயம் குறித்து ஜனவரி 22ஆம் திகதி தயான் ஜயதிலக்க எழுதியிருந்த கட்டுரையொன்றில் “மாகாணசபையை கொடுக்கப்போகிறார்கள், இராணுவத்தை வெளியேற்றப் போகிறார்கள், திம்பு யோசனையை அடிபடையாக வைத்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை கொண்டுவரப் போகிறார்கள். இதற்காகவா இத்தனை வருட கால போரை நடத்தி முடித்தோம், இதற்காகவா இத்தனை இராணுவத்தை பலிகொடுத்தோம்?” என்று இனவாதிகளின் வழமையான பிரச்சார மொழியை பயன்படுத்தியிருந்தார்.

மகிந்தவின் அரசாங்கத்தில் தான் 13வது திருத்தச்சட்ட யோசனை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை கவத்தில் கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு பிரிப்பு, கண்துடைப்புக்காக மாகாணசபைத் தேர்தலை வடக்கு கிழக்கில் நடத்தியது, இராணுவ அதிகாரிகளை ஆளுநராக நியமித்தது, மாகாண சபை இயங்க முடியாதபடி ஆளுனருக்கூடாக முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டேயிருந்தது போன்றவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாண சபை தேர்தலோ, ஆட்சியோ நடக்கக்கூடாது என்பது குறித்து மகிந்தவின் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து வந்த அழுத்தங்களை விட அரசாங்கத்துக்குள்ளேயே இருந்த நிர்பந்தங்கள் தான் அதிகம். ஆனாலும் சர்வதேசத்துக்கு பதில் சொல்வதற்காக மகிந்தவுக்கு கிடைத்த கண்துடைப்பு உத்தி இதுவொன்றாகத் தான் இருந்தது. எனவே தான் ஆட்சியை கொடுத்து விட்டு அதிகாரத்தை பறித்து பாக்கெட்டில் வைத்துகொள்ளும் உத்தியைக் கையாண்டு வந்தது.

நல்லாட்சி அலை
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால தரப்பு விஞ்ஞாபனத்திலேயோ, 100 நாள் வேலைத்திட்டதிலேயோ 13வது திருத்தச் சட்டம் குறித்தோ அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ ஒன்றும் கூறவில்லை. ஆனால் மாறாக ஒற்றையாட்சிக்கு உத்தரவாதம் என்று அறிவித்தது. அது சிங்கள வாக்குகளின் மீதிருந்த அச்சத்தினாலேயே அப்படி கூறியது. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழர் வாக்கு வங்கியின் பலத்தை மீண்டும் நிரூபித்தது.

இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமை என்னவென்றால் “நல்லாட்சி அலை”  நாளுக்கு நாள் வாக்கு வங்கியை பல கோணங்களிலும் பலப்படுத்திக்கொண்டே போகிறது. இந்த போக்கு சிங்கள வாக்கு வங்கியை இலக்காக வைத்து இனப்பிரச்சினை தீர்வை இனவாத தரப்புக்கு விட்டுகொடுக்கும் நிலை உருவாகுமா என்கிற அச்சம் தவிர்க்க முடியாதது. “நல்லாட்சி” அணியிலுள்ள சிங்கள பேரினவாத அணிகளின் அமைதி மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தற்போதைய இலங்கையின் அரசியல் நிகழ்ச்சிநிரலானது இலங்கைக்கு வெளியில் உள்ள சக்திகளாலேயே நகர்த்தப்படுகிறது என்கிற புரிதலின் படி, தற்போதைக்கு அது 13வது திருத்த சட்டத்துக்கு சாதகமானது என்று எடுத்துக்கொள்ளலாம்.

தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை கோரிக்கைகளை சிறிதாக்கி வெறும் சலுகை கோரிக்கைகளாகவும், அன்றாட அத்தியாவசிய தேவைகளோடு குறுக்கி விட்டுள்ளது கடந்தகால போக்கு. பிரதான நிகழ்ச்சிநிரலை பின்தள்ளிவிட்டு, “லிகிதரை நியமிக்க கவர்னர் கடிதம் கொடுக்கிறார் இல்லை” என்பது போன்ற பிரச்சினைகளுக்குள் கவனக்குவிப்பை செலுத்த தள்ளப்பட்டிருக்கிறது மாகாணசபை அரசியல்.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் கடந்த கால தமிழீழ கோரிக்கை, தாயக கோட்பாடு, சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற பதங்கள் சமகால தமிழர் அரசியல் களத்தில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாக மாறியிருப்பது தான். அவை ஆபத்து மிக்க பதங்களாகவும், இனவாதிகளை சீண்டி விடுமென்றும், இணக்க அரசியலுக்கு இடைஞ்சலாகிவிடும் என்றும் ஒரு சுயதணிக்கை நிலை வளர்ந்துவிட்டிருக்கிறது. இது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் கைதேர்ந்த வெற்றி என்றே கூற வேண்டும். இறுதியில் எப்போதோ நிராகரித்த 13வது திருத்த சட்டத்தை இப்போது தாருங்கள் என்று பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழர் அரசியல்.

சிங்கள பௌத்தர்களின் பொதுப்புத்தி தமிழர்களுக்கு எதிரான உளவியலாக கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறுவனமயப்பட்டுள்ளது. அரச அனுசரணையுடன் அது நடந்தேறியுள்ளது. இன்று அது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இன்று அரசே அதனை அனுசரித்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட இந்த அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதென்பது சடுதியாக மாற்றக்கூடியதல்ல. நீண்ட கால வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அது சாத்தியமாகும். எந்த “நல்லாட்சியாலும்” இந்த நாட்டை இனவாதத்திலிருந்து குறுகிய காலத்தில் மீட்க முடியாது. இந்த புதிய “தேசிய அரசாங்கம்” அதற்கான ஒரு முன்னுதாரணமாக இருக்குமா அல்லது மைத்திரிபால அரசாங்கம் “மகிந்தபால” அரசாங்கமாக ஆகிவிடுமா என்பதே அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மலையக சிறார்களின் கல்வி நிலை வீழ்ச்சிக்கு, முழு மலையக சமூகமே பொறுப்பு.....!


இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துவருகின்ற மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் சமூகத்தின் பல தளங்களிலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளமைக்கு கல்வி ரீதியான பின்னடைவும் ஒரு காரணம் என்பது பலரதும் கருத்து.

1940களில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையான இலவசக் கல்வித் திட்டத்துக்குள் மலையக தோட்டப்புறப் பாடசாலைகள் 30 ஆண்டுகள் கடந்து 1970களின் இறுதியில் தான் முழுமையாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.

தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் ஏற்பட்ட இந்த தாமதமே, கல்வித் துறையில் மலையக தமிழ் சமூகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்துவரக் காரணமாகியுள்ளது.

மலையகத்தின் தோட்டப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புறங்களின் உள்ள பெரும் வளங்கள் மிக்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுடன் போட்டியிட்டுதான் ஐந்தாம் தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தேற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் மலையக தமிழ் மாணவர்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளனர். கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. கல்வியும் அபிவிருத்தியும் ஒரு தராசைப் போல சமஅளவில் இருக்கும் போதுதான் அச்சமூகம் முழுமையான அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிக்கும். ஆனால் மலையகத்தைப் பொறுத்த வரையில் இவை எதுவும் முழுமையடையாத நிலையில்தான் காணப்படுகிறது. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் எதுவுமற்ற ஒரு சமூகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டச் சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பட வேண்டுமானால் எதிர்கால சமுதாயம் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு பெற்றோர் தம்மை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை அவர்களின் இருப்பு குறித்த கேள்விக்கு மலையக அரசியல் தலைமைகளும் புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவை ஒரு குறித்த வட்டத்திற்குள்ளேயே முடங்கியிருக்கிறது. படித்து பட்டம் பெற்றவர்கள் சமூகத்தில் பெரியவர்களாகி வசதி வாய்ப்புக்கள் வந்ததும் கடந்த காலங்களை மட்டுமல்ல தமது பெற்றோரைக் கூட மறந்து விடுகின்றனர். தமது கல்விக்காக பெற்றோர் பட்ட துயரங்களை மறந்தவர்களாக அற்பசொற்ப சுகபோகங்களுக்காக விலை போனவர்களும் கூட எமது சமூகத்தில்தான் இருக்கிறார்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்வியைத் தொடர்வதென்பது இயலாத விடயமாகவே இருக்கிறது. பெற்றோர் மத்தியில் போதிய அறிவின்மை, குடும்ப வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, மது பாவனை ஆகிய விடயங்கள் பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பாடடைய விடாமல் தடுப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளன.

ஆரம்பக் கல்விக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் க. பொ. த. சாதாரண தரத்துடன் அந்த எண்ணிக்கை குறைந்து விடுகிறது. அவ்வாறே சுய முயற்சியில் படிக்க முயலும் மாணவர்களுக்கு அந்தச் சூழல் இடங்கொடுப்பதில்லை. சிறு வயதிலேயே காதல் வயப்படுதல் தோட்டப் பகுதிகளில் சாதாரண விடயமாகும். சிறுவயது திருமணம், பால் நிலை மற்றும், பாலியல் தொடர்பான போதிய விழிப்புணர்வின்மையும் கல்வியைத் தொடர முடியாமைக்கு இன்னொரு காரணமாகும்.

குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைக்காக அனுப்பியதால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் அண்மையில் பதிவாகியுள்ளது. பெற்றோர் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால் தம் பிள்ளைகளுக்கு சிறந்த வழியை காட்டி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு சிலர் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையையே சீரழித்து விட்டயுவதிகள் பலர்.

கல்வியை பாதியில் இடைநிறுத்தி விட்டு தலைநகர்ப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த யுவதிகள், ஹோட்டல்களில் எடுபிடிகளாக, நடைபாதை வியாபாரங்களில், கட்டட நிர்மாணப் பணிகளுக்கான உதவியாளர்களாக, சுத்திகரிப்பு தொழிலாளர்களாக, கூலிகளாக நாட்டாமைகளாக, காவல்காரர்களாக பலவித தொழில்களிலும் மலையகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள். க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த பலரும் கூட இதில் அடங்குவதுதான் மிகவும் வேதனை தரும் விடயமாகும். நகர்ப்புறத்தில் தமது பிள்ளைகள் வேலை செய்வதையே பெரிய விடயமாக நினைக்கிறார்கள்.

தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு வரும் பிள்ளை தலை மயிருக்கு வர்ணம் பூசிக் கொண்டும், காதில் அணிகலன்களை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு கையடக்க தொலைபேசியுடன் திரிவதைப் பார்த்து தோட்டத்தில் வேலையில்லாமல் திரியும் ஏனைய இளைஞர்களுக்கும் அந்த ஆசைகள் வந்து விடுகின்றன. பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களும் நகர்ப்புறங்களை நாடிச் செல்கின்றனர்.

சில பெற்றோர் தம் பிள்ளை பத்தாவது வரை படித்தால் போதும், அதுதான் உயர்கல்வி என பெருமையடைவதுடன் நின்று விடுகின்றனர். பத்தாவது வகுப்பு வரை படித்த தனது மகனை உச்சத்தில் வைத்து போற்றுவதும் அவன் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என நம்புவதும், பெற்றோரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் பல இளைஞர்கள் சமூகத்தில் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பிற்காலத்தில் ஒரு குடிகாரனாக குடும்பத்திற்கு உதவாதவனாக மாறிவிடுகிறான்.

பெண் பிள்ளைகளின் கல்வியில் தாக்கம் ஏற்படுவதற்கு சுற்றுச் சூழல்களும் காரணமாகும். இன்றைய நவீன உலகில் ஆணும் பெண்ணும் பழகுவதை எவரும் காதல் என கூறிவிட முடியாது. தோட்டப் பகுதிகளில் ஆண் - பெண்ணுடன் கதைத்து விட்டாலோ சேர்ந்து வந்து விட்டாலோ அவர்களைப் பற்றி அவதூறாக பேசப்படுகின்றது. நன்கு படிக்கும் அந்த மாணவியின் கல்விற்கு, அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சில காலம் வீட்டில் மடங்கியிருக்கும் அவள் நகர்ப்புறத்திற்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அவளின் எதிர்காலமே வீணாகிவிடுகிறது.

மலையக சமூகத்திலிருந்து பிரிக்க முடியாததொரு அம்சம்தான் மதுபானம். மதுபானத்திற்கு அடிமையான பெற்றோரால் தம் பிள்ளைகளை படிக்க வைப்பது சிரமமான காரியமாகி விடுகிறது. 

மலையக சமுதாயத்தில் கல்வி வீழ்ச்சிக்கு காதல் மட்டுமல்ல காரணம். இளவயது திருமணமும் பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு வீட்டில் நான்கைந்து பிள்ளைகள் என்றால் குடும்ப பொருளாதார சூழ்நிலையில் அனைவரையும் படிக்க வைக்க முடியாமல் போய்விடுகிறது. பாடசாலைக்குச் செல்லும் காலப் பகுதியில் அவர்களுக்கு அறிவூட்டல்கள், வழிகாட்டல்கள் இல்லாமல் தொடர்ந்து அவர்கள் கற்பதற்கான வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் படித்தவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கல்வியறிவற்ற பெற்றோர் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

மலையக எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை இப்போதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதற்கு மலையக பெற்றோரும் பாடசாலைக் கல்வியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கல்வி என்றும் அழியாச் செல்வமாகும். எதிர்காலம் என்றால் என்னவென்று தெரியாத பெற்றோர் தம் பிள்ளைகளை தேயிலைத் தோட்டமே தமது வாழ்க்கைக்கு இறைவன் கொடுத்த கொடையாகக் கருதும் நிலை மாற வேண்டும். அன்றாடம் தம் வயிறு நிரம்பினால் போதும் என நினைக்கும் பெற்றோர் தனக்கு அடுத்து தனது பிள்ளை அதே தோட்டத்தில் தொழிலாளியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதை பெரிய சுமையாக நினைப்பதும் குடும்ப பொருளாதாரம் ஈடுகொடுக்காது என நினைப்பதும் இன்றும் அவர்களிடம் இருக்கும் மூடத்தனத்தையே காட்டுகிறது.

இவ்வாறான நிலைமைகள் மாற மலையக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதனை மலையக புத்திஜீவிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள் மலையக சமூகம் கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றியமைக்க உறுதிபூண வேண்டும். படித்த சமூகம் எதிர்கால மலையக சமுதாயத்தை ஒரு விழிப்புணர்வுள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீரைக் கண்ட இடத்தில் கழுவி விடுபவர்களாகவே இருப்பவர்கள் என்ற நிலை மாற்றி ஆண் - பெண் சமநிலை தொடர்பான பாலியல் கல்வியையும் இரு பாலாருக்கும் வழங்க வேண்டும்.

மலையக மக்களின் கல்வி நிலை வீழ்ச்சியடையாது இருப்பதற்கு பெற்றோர், மாணவர், ஆசிரியர் மட்டுமன்றி முழு மலையக சமுதாயமுமே விழிப்புணர்வு பெற வேண்டும். இதனூடாகவே எதிர்காலத்தில் கல்விகற்ற ஒரு சமுதாயத்தினை உருவாக்க முடியும்.

நன்றி - paarvai

மலையகத்தவரின் தேர்தல் பங்களிப்பை வெளிப்படுத்த முன்வராத ஊடகங்கள் - சிலாபம் திண்ணனூரான்


ஜனாதிபதித்தேர்தலில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு இன்று மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. மலையக தொழிலாளர் வர்க்கத்தினர் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக அணி திரண்டனர். நுவரெலியா மாவட்டத்தில் 81 வீதமான பெருந்தோட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்களிப்பின் மூலம் தெரிவித்த செய்தியை இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பெரும்பான்மை கட்சிகளும் உறுதியாக நம்புகின்றன. இந்த நம்பிக்கை நியாயமானதே. சில மலையகக் கட்சிகள் அளவுக்கதிகமான அடக்கு முறைகளை இம்மக்கள் மீது மேற்கொள்வதும் மேற்படி கட்சிகள் மீதான அதிருப்திக்குக் காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் பணிப்பாளர்களாகவும் இணைப்புச் செயலாளர்களாகவும் பலர் இருந்தனர். அத்துடன் அமைச்சர் பிரதி அமைச்சர்களாக பதவி வகித்த மலையக பிரதிநிதிகள் தங்களது கடமையை முழு அளவில் சமூகப் பற்றோடு மேற்கொள்ளவில்லை என்று பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மலையகத்தில் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறி விட்டனர். கூரைத்தகடுகளும் மண் வீட்டுக்கான கூடாரங்களும் கோவில்களுக்கு மின்மேள இயந்திரங்களும் பஞ்சாராத்தி தட்டுக்களும் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்குவதுமே அபிவிருத்திகளாக மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தேர்தல் காலத்தில் இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொண்ட மலையக மக்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டவில்லை. கடந்த அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் இம்மக்கள் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் காட்டிய அக்கறை பொறுப்பு வாய்ந்த அரசொன்றாக நின்று அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை. லயன்குடியிருப்பு கட்டடத்தை உடைத்தெறிந்து தனி வீடு நிர்மாணித்து தருவதாக நீண்ட காலமாக ஏமாற்றி வந்ததை இந்நாடே அறியும்.

மலையக தலைவர்கள் பலவீனமடைந்த நிலையில் மக்களின் சிந்தனை திசை மாறியது. இவர்களின் திசை மாற்றத்தால் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். இந்நாட்டின் நல்லாட்சிக்காக முழுமையான ஆதரவை வழங்கிய மலையக பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளத் தவறி விட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தொலைக்காட்சிகளில் சிங்கள ஆங்கில மொழிகளில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியல் விவாதத்தில் ஏனைய மாகாண சிறுபான்மை மக்களின் தேர்தல் பங்களிப்பு அப்பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி தொடர்ச்சியாக பேசப்படுகிறது. ஆனால் பெருந்தோட்ட மக்களின் தேர்தல் பங்களிப்பு பெருந்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி இவ்விவாதங்களில் விவாதிக்கப்படுவதில்லை.

அரச, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல உள்ளன. 13.6 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர். சிறுபான்மை மக்களுக்குள் சிறுபான்மை இனமாக வாழும் மலையக மக்களின் தேவைகளை ஏனைய மக்களும் உணரச் செய்ய வேண்டும். அரசியல் விவாதங்களில் இந்த மக்களின் தேர்தல் பங்களிப்புப் பற்றி எடுத்துக்கூறப்படுவதில்லை. அல்லது திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

இந்நாட்டிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புள்ளி விபரத் திணைக்களத்தின் சனத்தொகை தகவல் நூலின் இனத்தொகுதி புள்ளி விபரத்தில் முதலாவதாக சிங்களவர்களும் இரண்டாவதாக இலங்கைத் தமிழரும் மூன்றாவதாக இந்தியத்தமிழரும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்து கொள்ளல் அவசியமாகும். சிங்கள, ஆங்கில மொழி மூலமான அரசியல் விவாதங்களில் மலையக சமூகத்தின் தேவைகள் பற்றி விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும். வெகுஜன ஊடக நெரிசலுக்குள் மலையக சமூகம் ஆழமாய் ஊடுருவிச் செல்ல வேண்டியுள்ளது.

மலையக சமூகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவே புரட்சிகரமான வகையில் வாக்களித்தனர். இதை சகோதர பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் உணர வேண்டும். சமத்துவ உரிமைக்காக போராடும் இச் சமூகம் ஜனநாயகத்திற்கு எதிரான சமூகமல்ல. இச்சமூகம் ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள் இந்தச் சமூகத்தை கௌரவப்படுத்துதல் அனைவரினதும் கடமையாகும். பல்லினச் சமூகங்களில் ஒரு சமூகம் ஏனைய சமூகம் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாற வேண்டும். இத்தேர்தல் மூலமாக மலையக சமூகம் மலையக அரசியல் பாரம்பரியத்தையே உடைத்தெறிந்து விட்டது. மலையக சமூகத்தின் உரிமைகளுக்காக அவர்களின் தியாகத்திற்காக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.

நன்றி - வீரகேசரி

மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார்


மைத்திரி அலையில் எழுச்சியுடன் இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தை வெளிகாட்டும் வகையில் 24ம் திகதி சனியன்று கொழும்பு 10 பூக்கர் விடுதியில் மலையகத் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வொன்று இடம்பெற்றது. புதிய மாற்றம் புதிய ஆண்டு புதிய இலக்கு எனும் தொனிப்பொருளில் மேடை அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குருசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். 

மலையகத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் ஆயிரம்பேர்வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 

இங்கு உரையாற்றிய தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பழைய பேதங்களை மறந்து மலையக மக்கள் காணி வீட்டு உரிமையை வென்றெடுக்கவென மலையக தலைவர்களாகிய நாங்கள் இன்று ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களுடைய இந்த கூட்டணி உடையாமல் பாதுகாப்பது மக்களுடைய பொறுப்பு என்றார். மேலும் மலையக மக்களின் லயன் வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து அவர்ளுக்கு சொந்தமாக காணி மற்றும் வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். 

இது சம்பந்தமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தேர்தல் ரீதியில் தன்னை தோற்கடிக்க முடியாதவர்கள் தான் அநாவசிய வியாபாரத்தில் ஈடுபடுவதாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரங்களை செய்ததாகவும் ஆனால் தான் கொழும்பிற்கு வந்து செய்த வியாபாரம் என்ன என்பதையும் படிப்படியாக முன்னேறியது எப்படி என்பதையும் இங்கு அமர்ந்திருக்கும் வர்த்தகர்கள் நன்கு அறிவர் என்றும் அமைச்சர் திகாம்பரம் கூறினார். மேலும் இந்த புதிய அரசியல் கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்வர் என்றும் ஞாயிறு மாலை மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மின்னல்’ அதில் முன்னிலை பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

அடுத்ததாக உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால அணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தபோது வெல்வோமா தோற்றுவிடுவோமா என்ற அச்சம் இருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஸ எப்படியாவது ஏதாவது செய்து வெற்றிபெறுவார் என்று பலர் கூறியதால் அச்சம் ஏற்பட்டதாகவும் ஆனால் நாட்டிலும் மலையகத்திலும் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை கொண்டதாகவும் அதன்படியே பாரிய மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இன்று மலையகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் கூட்டணி மிக முக்கியமானதெனவும் அதனை பிரிப்பதற்கு யாரும் முயற்சிகள் செய்யக்கூடாதெனவும் இராதாகிருஸ்ணன் கேட்டுக் கொண்டார். 

மேலும் மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கல்வி அபிவிருத்தி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக மலையகத்தில் விஞ்ஞான தொழிநுட்பம் கூடிய வசதியுடன் 10 பாடசாலைகள் தரமுயர்த்தப்படும் என்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆரம்ப கட்ட முயற்சியாக முதலில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 

தான் மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் விஞ்ஞான ஆசிரியர்களை இந்தியாவிற்கு அனுப்பி 3 வருட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதுபோன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்து விஞ்ஞான ஆசிரியர்களாக வெளியேறுவோரை மீண்டும் விஞ்ஞான தொழிநுட்ப கல்லூரிக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு விசேட பயிற்சியுடன் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். 

இறுதியில் ஊசி-நூல் மற்றும் கத்தரிக்கோள் கதை கூறிய அவர், இந்த புதிய கூட்டணி ஊசி-நூல் போன்று இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர கத்தரிகோள் போன்று வெட்டுவதாக இருக்கக்கூடாதென கூறினார். 

இக்கூட்டத்தில் உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைக்காக மலையக தலைவர்கள் பழைய பகைகளை மறந்து ஒன்று சேர்ந்திருப்பதாகவும் இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் வாக்குபடி ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர்கிறேன்’ என்ற அடிப்படையில் மலையக மக்கள் ‘அதோ என் தலைவர் போகிறார் பின் செல்வோம்’ என்ற காலம் முடிவுக்கு வந்து ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர வேண்டும்’ என்ற செய்தியை மலையகத் தலைவர்களுக்கு தேர்தல் மூலம் மக்கள் அறிவித்திருப்பதாகக் கூறினார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் கடமை தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தோட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அதன் பின்னர் அமைச்சர் திகாம்பரம் அதில் வீடு கட்டுவார் என்றும் இந்த நடவடிக்கையில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவற்றை எல்லாம் முறியடித்து மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 

இக்கூட்டத்தில் இறுதியா உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் உரை சுவாரஸ்யமாவும் உணர்வுபூரவமாகவும் அமைந்தது. அவர் தனது உரையில் மலையக மக்களின் மூன்று முக்கிய உரிமைகள் பற்றி பேசினார். ஓன்று காணி உரிமை இரண்டு கல்வி உரிமை மூன்று ஆட்சி உரிமை. இலங்கையில் வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கென சொல்லிக் கொள்ள சொந்தக் காணி வைத்துள்ளனர். முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்த காணி வைத்துள்ளனர். சிங்கள மக்கள் சொந்த காணி வைத்துள்ளனர். ஆனால் இந்த நாட்டில் வாழும் மலையக தமிழர்களுக்கு சொந்த காணி இல்லை. மலையகத்தில் இந்து கொழும்பு வந்த சில வசதி வாய்ப்பு ஏற்பட்ட பின் சொந்த காணி வாங்கியுள்ளார்களே தவிர மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் வாழ்க்கை வாழ்கின்றனர். 

வடக்கு கிழக்கில் சிங்கள பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கென பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால் மலையகத்திற்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லை. இலங்கை நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு இரண்டு பிரதேச சபைகள் மாத்திரமே உள்ளன. ஆசியாவிலே இவைகள்தான் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய பிரதேச சபைகள். இதனை மாற்றி அமைக்க வேண்டும் நுவரெலியா பிரதேச சபையை ஆறாகவும் அம்பேகமுவ பிரதேச சபையை ஆறாகவும் பிரிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கை இணைத்து கேட்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் பிரதேசங்களை சேர்த்து கரையோர மாவட்டம் கேட்கிறது. ஆனால் நாங்கள் மலையகத்தில் சேர்த்து கேட்கவில்லை. பிரித்து கேட்கிறோம். சேர்த்தும் தர முடியாது பிரித்தும் தர முடியாது என்று கூறினால் அது இனவாதம் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம்.

சிங்கள மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். வடகிழக்கு மக்கள் அவ்வாறே கிராமங்களில் வாழ்கின்றனர். அங்கு மலையகத் தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்கள் சொந்த காணியுடன் கமத்தொழில் செய்து வாழ்கின்றனர். ஆக மலையகத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ‘தோட்டம்’ என்ற பதம் அகற்றப்பட்டு அங்கும் கிராமம் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும். நாட்டில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில் பிழை உள்ளது. இலங்கையில் உள்ள மொத்த தமிழர் சனத்தொகை 32 லட்சம். அதில் இலங்கை தமிழர் 16 லட்சம் இந்திய தமிழர் 16 லட்சம் என்பதே உண்மை. ஆனால் பல குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய தமிழர் சனத்தொகை குறைத்து கூறப்பட்டுள்ளது. இதனை நான் சம்பந்தனிடம் ‘நீங்கள் எங்கள் கணக்கில் ஓடிக் கெண்டிருக்கிறீர்கள்’ என்று நேரடியாகக் கூறியிருக்கிறேன். 

தேர்தல் காலங்களில் நான் வடக்கு கிழக்கு சென்று பிரச்சாரம் செய்வதால் எமது மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பர். ஆனால் கொழும்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும் வடகிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் மலையக மக்களுக்கு பரந்த மனம் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில் வவுனியாவில் இருந்து வந்தவருக்கு வாக்களித்தனர். இங்கு ஊசி-நூல், கத்தரிக்கோள் கதை சொல்லப்பட்டது. அந்த கத்திரிகோள் வேறு யாருமல்ல. ‘மின்னல்’ நடத்தும் வேலையில்லாத நபர்தான். அந்த நிகழ்ச்சிக்கு ‘மின்னல்’ என்று அல்ல ‘கத்தரி’ என்று பெயர் வைக்கலாம் பொறுத்தமாக இருக்கும். அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை உடைக்க வேண்டும். ஜனநாயக மக்கள் முன்னணியை உடைக்க வேண்டும். தொழிலாளர் தேசிய சங்கத்தை உடைக்க வேண்டும். வேறு வேலை கிடையாது. 

மற்றுமொரு விடயம்தான் மலையகத்தில் இரவு ஒரு மணிக்கு படுத்து பகல் ஒரு மணிக்கு எழும்பும் தலைவர் காணாமல் போய்விட்டார். இவருக்கு சூரியன் உதிப்பது தெரியாது. நாட்டில், உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. கொட்டக்கலையில் பகல் நேரத்தில் வாகனத்தில் விளக்கு ஒளிரவிட்டு செல்கின்றனர். ஏன் என்று தெரியாது. இவர்கள் சென்ற வாகன தொடரணியில் அப்பாவி மலையக மக்கள் மோதி பலியாகியும் உள்ளனர். 

புலிகள் அமைப்பு இந்தியாவின் முக்கிய புள்ளி மீது கை வைத்து இந்தியாவின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் இப்படி அழிவை எதிர்கொண்டதோ அதுபோல மஹிந்த ராஜபக்ஸ தூரத்தில் உள்ள சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதால் இந்தியா கடும் சினம்கொண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியது. அடுத்து இலங்கைக்கு மோடி வருகிறார் ஓடி வருகிறார். அவரிடம் மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற நாம் தயங்க மாட்டோம். அண்மைய காலத்தில் இந்திய தூதரகத்துடன் பேசினால் நாங்கள் மலையக மக்களுக்கு உதவத் தயார் ஆனால் தலைமை எங்கே. தலைமைக்கு தூர நோக்கம் இல்லை என்று கூறுகின்றனர். ஆக அந்த தலைவர் இன்று காணாமல் போய்விட்டார். எனவே மலையக மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க இந்திய அரசுக்கு-பாரத அசுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. எனவே மோடி வரும்போது நாம் நிச்சயம் எமது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக் கூறுவோம்’ என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

சாராம்சம் 

மலையகத் தலைவர்கள் இவ்வாறு கூட்டணி சேர்வது இதுவொன்று புதுமையும் அல்ல முதல் தடவையும் அல்ல. வலராற்றில் பல கூட்டணிகள் உருவாகி இருக்கின்றன. மலையகத்தில் அல்லது மலையகத்திற்கு வெளியில் மலையகத்தையும் இணைத்துக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட முதல் கூட்டணி தமிழர் விடுதலை முன்னணி ஆகும். இதில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு தலைவராக இருந்தார். ஆனால் வட்டுக்கோட்டை பேச்சுவார்தையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தொண்டமான் கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

மலையகத்திற்கு உள்ளே பார்த்தால் 1998ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடி சங்கம், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து இந்திய வம்சாவளி பேரணி என்று ஒன்றை ஏற்படுத்தினர். அது பிற்காலத்தில் அகால மரணமடைந்தது. 

பின்னர் சதாசிவம், புத்திரசிகாமணி, சந்திரதேசகரன் ஆகியோர் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தக்கூட்டணி காணாமல் போய்விட்டது. மனோ கணேசன், திகாம்பரம், அருள்சாமி கூட்டணி வந்தது. சப்ரகமுவ தேர்தலில் இதொக-ஜமமு-மமமு கூட்டணி ஏற்பட்டது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையகத் தமிழ் கூட்டணி பின்னர் மலையக தேசிய கூட்டணி போன்றவை தோன்றி மறைந்த வரலாற்றை நாம் நன்கு அவதானித்து இருக்கிறோம்.  

இவ்வாறான கசப்பான வரலாற்று அனுபவங்கள் நிறைந்த மலையக சமூகம் இன்று மற்றுமொரு கூட்டணியை சந்தித்திருக்கிறது. திகாம்பரம்-மனோ கணேசன்-ராதாகிருஸ்ணன்-வேலாயுதம் கூட்டணி புதிதாக வந்திருக்கிறது. நுல்ல தருணத்தில் மலையக மக்களின் தேவைக்கு மிக அவசியமாக இக்கூட்டணி உருவெடுத்திருப்பதை அவதானிக்கலாம். எனவே வரலாற்று கூட்டணி போன்று இதுவும் வெறுமனே தேர்தல் கூட்டணியாக மாத்திரம் இருக்கக் கூடாதென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். அததையும் மீறி இக்கூட்டணி மக்கள் கண்ணில் மண்தூவும் பாவகாரியத்தை செய்யுமானால் கண்ணில் பட்ட தூசி அகன்று தெளிவான பார்வை வரும்போது மக்கள் ஏமாற்றுத் தலைவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவர் என்பது மாத்திரம் அடித்துச் சொல்லக்கூடிய கடந்தகால வரலாற்று படிப்பினையுடன் கூடிய உண்மையாகும்.  




 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates