Headlines News :
முகப்பு » » தோட்ட மக்களுக்கு முகவரி மலையக மக்களுக்கு சொந்த காணி வழங்கும்“பசுமை பூமி” திட்டம்

தோட்ட மக்களுக்கு முகவரி மலையக மக்களுக்கு சொந்த காணி வழங்கும்“பசுமை பூமி” திட்டம்


நல்லாட்சியில் 1815 – 2015 200 வருட மலைய மக்களுக்களின் இலங்கை வருகை முடிவில் “தோட்ட மக்களுக்கு முகவரி மலையக மக்களுக்கு சொந்த காணி வழங்கும்“பசுமை பூமி” திட்டம் ஆரம்பம் 25.04.2015 சனிக்கிழமை. பண்டாரவலையில் மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உரையுள் என்பவற்றில் ஒரு தனி மனிதனின் இருப்பிடம் அவனது  வாழும் உரிமையினை கட்டாயப்படுத்தி நிற்கின்றது. ஒரு  அரசின் எல்லைக்குள் தான் நினைக்கும் எந்த ஒரு இடத்திலும் அவன் வாழ்வதற்கான உரிமை உண்டு.

ஆனால் இவ் உரிமை தோட்ட மக்களின் வாழ்கையில்; முழுமையாக கிடைக்கின்றதா? என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே தற்போதும் இருந்து வருகின்றது. தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பாதை மலர்கள் தூவிய பாதையல்ல. கரடு முரடான கற்கள் முட்கள் காணப்ட்ட பாதை. 1815 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள் தேயிலை, தென்னை, இறப்பர் செய்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அக்காலப்பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் இலயக் காம்பிராக்களே காணப்பட்டன இது 10ஓ12 காம்பிராவும் ஒரு குசினியும் ஒரு வராந்தாவும் கொண்டது. இதுவே இவர்களின் காணியாகவும், வீடாகவும் இருந்து வந்தது. இவ்வாறான நிலையிலேயே மலையக மக்கள் தற்போதும் 460 தோட்டங்களில் காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் முகவரி அற்றவர்காக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த 200 ஆண்டு காலப்பகுதியில் தோட்ட மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இடைபட்ட காலப்பகுதியில் பல அரசியல் மாற்றங்களினால் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்ட்டு இந்தியா சென்றவர்களும் அயிரக்கணக்கானோர் உள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தினால் முற்றிலும் அடிமைகளாக அழைத்து வரப்பட்ட தோட்ட மக்கள் இன்னமும் அதே நிலையில் வாழ்ந்து 1985 ஆம் ஆண்டு ஆடசியில் இருந்த அரசாங்கம் நாடற்ற மலையக மக்களுக்கு ஒரு சத்திய கடதாசியை வழங்துவதன் மூலம் இலங்கையர் என்ற பிரஜா உரிமையை வழங்கியதன் ஊடாகவே தற்போது தோட்ட மக்கள் இலங்கையர் என்ற அந்தஸ்ததை பெருகின்னர்.

அன்றிலிருந்தே தோட்ட மக்களின் காணி, வீட்டு உரிமை பேசபப்ட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் பெருந்தோட்ட காணிகள் அனைத்தும் அரசின் பொருப்பிலேயே காணப்பட்டது. இக்காணிகளில் விவசாயத்திற்கு உதவாத ஒதுக்கபட்ட இடங்களிலேயே தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடியிருப்புகள் மிக நீண்ட தூரத்தில் தொழிலாளிகள் வேலைக்கு தேயிலை மலைகளுக்கு செல்லக்கூடிய வசதிக்கு ஏற்ப்ப அமைக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டின் பின்னர் இக்காணிகள் சுமார் 23 கம்பனிகளுக்கும்  அரசு பெருந் தோட்டம் மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்தி சபை (துநுனுடீ) போன்றவற்றின்  கீPழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  இலங்கையில் காணப்படும்  பெரும்பாலானக் காணிகள்  தனியார் வசமே கூடுதலாக காணப்படுகின்றன.  ஆனால்  பெருந் தோட்டத்தை பொருத்தவரையில் 80ம காணிகள்; அரசாங்கத்திற்கு சொந்தமானது.

இன் நிலையில்  தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கங்கள் காணி உரிமையை முறையாக பெற்றுக் கொடுக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தற்போதும் தோட்ட தொழிலாளர்களின்  அடிமை சின்னமாக லயம் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் இன் நிலையில் சுமார் 200 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட இவர்;கள் இப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வரும் வேலையில் அவர்களுக்கு என காணி உரிமை வழங்கப்படவில்லை மலையகத் தோட்டப் புரங்களில் 1.5 மில்லியன் தோட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இன் நிலையில் ஒரு வீட்டில் 05 பேர் கொண்ட குடும்பம் என்று எடுத்தால் சுமார் 300.000 வீடுகளுடன் காணி தேவை.

தற்போது இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் விடு உள்ளவர்களை கழித்து தற்போதைக்கு 185.000 வீடுகள் தேவை. அன்மைக்காலமாக மலையகத்தில் பல வீடமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 07 பேர்ச் காணி, மாடி வீடுத் திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தபடும் கிராம வீடமைப்பு திட்டம், தோட்ட வீடமைப்பு திட்டம் போன்றவை நடைமுறையில் காணப்பட்டாலும் கடந்த அரசாங்களினால் ஆரபிக்கப்ட்ட 7 பேர்ச் வீட்டுத்திட்டம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மக்களின் ஏனைய தேவைகளுக்கு போதிய இடமில்லை, ஒரு வீட்டின் கழிவுகள் இன்னொரு வீட்டுக்குச் செல்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு மண்சரிவு அபாயங்களில் ஒரு வீடு இன்னொரு வீட்டில் விழுகின்றமை, இவ்வாரான சம்பவங்கள் அன்மைக்கால மண் சரிவுகளின் போது அதிகமாகவே இடம் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. கட்டப்பட்ட வீடுகள் மக்களே சுயமாக கட்டியுள்ளனர் அதனால் சரியான தரத்தில் வீடுகள் இல்லை. வீடுகள் கட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒரு தொகை பணத்தையும். தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை அடமானமாக வைத்து ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கபட்டு வருகின்றன.

இந்த பணம் முறையாக மக்களிடம் போய் சேராததினால் கட்டப்பட்ட வீடுகள் பூர்த்தியாகாமல் ஆயிரகணக்கான வீடுகள் காணப்படுகின்றன. இந்த மக்கள் தங்கள் சொந்த பணத்தில் இன்னொருவரின் காணியில் வீடுகளை அமைக்கின்றார்கள். வீட்டு உரிமை இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்குமா? ஏன்பது தான் கேள்வி குறியாக இருந்தது.

தற்போது நடைமுறையில் காணப்படும் வீடமைப்பு திட்டங்கள் சுய உதவி வீடமைப்பு  திட்டத்தின் ஊடாக சேமலாப நிதியை பினையாக கொண்ட கடன் ஊடாக அமைக்கப்படுகிடுன்றன. சில வங்கி உதவிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே வேலை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி, மத்திய வங்கி, அரச முதலிட்டு வங்கி கடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச சார்பாற்ற நிருவனங்கள் மூலமாகவும்  வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும் டெம்பரி செட்களில் 25.000 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இன் நிலைமை நாளாந்தம்  அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந் நிலையில் தோட்ட தொழிலளார்களுக்கு இக்காணி உரிமை கிடைக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தோட்டங்களினாலும் அரசாங்கத்தினாலும் உரித்துடன் காணிகள் வழங்கி  இலவசமாக வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டிய நிலையில்  இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

கம்பனித்தோட்டங்களில் ஓரளவு இவ்வாரான வீடமைப்பு திட்டங்களில் அறிமுகப்படுத்தபட்டாலும்  அவை முறையாக இடம்பெறவி;ல்லை. கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சில தோட்டங்களில் இவர்களுக்கான காணித்துண்டுகள் ஒதுக்கபட்ட போதும் வேலைத்திட்ங்கள் ஆரம்பிக்கபடவில்லை. சில இடங்களில் காணித்துண்டுகள் ஒதுக்கபடவும் இல்லை. அவ்வாறு வழங்கினாலும் போதிய வசதி உள்ள இடமாக இல்லை கட்டபட்ட வீட்டை சுற்றி போதிய வசதி இல்லாமையால் இவற்றின் ஏனைய தேவைகளை செய்துக் கொள்ள முடியாத நிலையில் தோன்றியுள்ளது.

அத்துடன் மின்சாரம் நீர் போன்றவை கிடைக்கபெறவும் இல்லை. ஸ்ரீ லங்கா பெருந்தோட்ட யாக்கம் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை போன்றவற்றில் இச்செயற்பாட்டு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இலய குடியிறுப்புகளுக்கு கூட 100 வருடங்களாக தகரங்கள் மாற்றபடாத நிலையில் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர். தற்போதும் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இலயங்களிலேயே மக்கள் வாழ்ந்தும் வருகின்றனர்.

தனியார் தோட்டம் அல்லது தனியுடமை தோட்டங்களில் இப்பிரச்சினைக்கு  குறையவே இல்லை இதற்கு தோட்ட மக்கள் இலய குடியிறுப்புகளை தவிர வேறு எந்த செயற்த்திட்டமும்  காணப்பட வில்லை காணி, தனிவீடு என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது இவர்களுக்கான வீடமைப்பு திட்டமும் இதுவரைக்கும் யாராலும் முன்வைக்கபடவில்லை.

இங்கு வாழும் மக்கள் ஒதுக்கபட்டவர்களாக காணப்படுகின்றனர். அங்கு காணப்படும் காணிகளில் மலசலகூடம் கூட அமைக்க தொழிலாளிகளுக்கு உரிமை இல்லை. தோட்ட மக்களை பொருத்த வரையில் முறையாக தனிவீடுகளை கட்டி நிம்மதியாக வாழ எத்தனிக்கின்றார்கள் இச்சந்தர்ப்பம்  சிலருக்கு மாத்திரம் கிடைகின்றது. சிலருக்கு கிடைப்பதில்லை இதனால் சிலர் இவர்களுக்கும் முறையாக காணி உரித்துடன் காணிகள் வழங்கவும் கிராம  திட்டத்தின் கிழ் தனித்தனி வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் தேவை.

தற்போது தோட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் முறையாக அமைக்கப்படுகின்றதா என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்யபததினால் வீடமைப்பு திட்டங்கள் பின்னடைவை நோக்கிச் செல்கின்றது. தோட்டங்களில் வேலை செய்து ஒய்வு பெற்றோருக்கு. படித்து விட்டு உயர் தொழிலுக்காக எதிர் பார்த்து இருப்போருக்கும், நோயாளர்கலுக்கும், வலது குறைந்தோருக்கும், தோட்டத்தில் இருந்துக் கொண்டு வெளியில் வேலை செய்பவர்களுக்கும் வீடுகளோ காணிகளோ கிடைப்பதில்லை கேட்டால் தோட்டத்தில் வேலை இல்லை என்கின்றார்கள் அவ்வாறாயின் இவர்களின் வீட்டு உரிமை, காணி உரிமை சம்மந்தமான பிரச்சினை எப்போது தீரும் அதே போல் தோட்ட சேவையாளர்களுக்கும்  இன் நிலைமையே அவர்களின் தோட்ட சேவை காலம் முடிந்ததும் தோட்டத்தை விட்டு  சென்று விட வேண்டும்.

இவ்வாறு மலையகம் சார்ந்த மக்கள் தங்களது காணி உரிமையும் வீட்டு உரிமையும் பெற்றுக்கொள்ள பல இன்னல்களையும் பிரச்சினைகளையும் எதிர் நோக்கி வருகின்றனர். தற்போது மலையக தோட்ட புறங்களில் காணப்படும் இலயக்குடியிருப்பக்கள் சுமார் 150 வருடங்களுக்க முன்னர் கட்டப்பட்டவை.

அக்காலத்தில் காணிகள் நில ஆய்வாரள்களின் அறிக்கையின் பின்னர் கட்டப்பட்டவை அல்ல. அதனால் தான் தற்போதும் மலையகத்தில் மண்சரிவுகளும் இயற்கை அனர்த்தங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் அகதிகளாக காணப்டுகின்றனர். பலர் இறந்தும் உள்ளனர். இந் நிலையில் பெருந்தோட்ட மக்களின் காணி மற்றம் விட்டு பிரச்சனைக்கு புதிய அரசாங்கம் முன் வைத்துள்ள நடவடிக்கை தான் என்ன? தோட்ட மக்களுக்கு ஏனய மக்களுக்கு போல் தங்களது முகவரியை தடம்பதித்துக் கொள்ள எடுத்த முயற்சித்தான் என்ன? இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டுமானால் விலாசமும் வீட்டு இலக்கமும் இருக்கின்றது.

ஆனால் தோட்ட மக்களுக்க இல்லை இந் நிலையில் தோட்ட மக்களின் முகவரி தொடர்பாக மலையக மக்களின் காணி உரிமையையும் தனி வீட்டு உரிமையையும் மையப்படுத்தி அவ்வவ்ச்சந்தர்ப்பங்களில் பலர் பல வேலைத்திட்டங்களை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் இலங்கையின் முதலாவது நிரைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்,ஜெயவர்தன அவர்கள் 1977 ஆண்டு தோட்ட மக்களின் 7 பேர்ச் காணி தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்தார் அதனை தொடர்ந்து காமினி திசாநாயக அவர்களும் 2வது நிரைவேற்று ஜனாதிபதியான ரனசிங்க பிரேமதாச அவர்களும் காணி உரிமையுடன் மலையக மக்களின் வீட்டு உரிமை தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு நுவரெலியாவில் அதற்கான உரித்து வழங்கும் நிகழ்வினையும் நடாத்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அமைச்சராக காணப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் இனைந்து கொண்டமை குறிப்பிடதக்கது. இருந்தும் காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் மலையக வரலாற்றில் அமரர் சௌமியமூர்த்தி தொண்மான் அவர்களின் காலத்தில் மலையகத்தின் தோட்ட மக்களுக்கு தனி வீடும், காணியும் என்ற செயற்பாட்டிற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தற்போது மலையகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருந்தும் இந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் உரித்துகளை வழங்குவதில் பல சிக்கள்களை எதிர்நோக்க இருந்துள்ளது.இருந்தும் தற்போதும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் தனி வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தோடர்ந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 2வது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 3வது ஜனாதிபதி டீ.பி விஜயதுங்க, 4வது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோருடன் இனைந்து மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை, தொடர்பில் குரல் கொடுத்தமை குறிப்பிடதக்கது.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது 4வது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு எத்தனித்த போது குறைவாக இருந்த ஆசனத்தை பெரும் நோக்கில் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் ஸ்தாபகருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நாடிய போது அவரின் கணவாக இருந்த மலையக மக்களின் கிராம செயற்திட்டத்திற்கு அங்கிகாரம் கிடைத்ததிற்கு இனங்க அரசாங்கத்துடன் இனைந்து மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும், காணிப்பிரச்சினைக்கும் முடிவு கட்டுமுகமாக 7 பேர்ச் காணியுடன் கிராம வீடமைப்பு திட்டங்களை அமுல் படுத்தினார்.

தொடர்ந்து வந்த 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் இத்திட்டத்திற்கு ஆதரவழித்த அதே நேரம் மலையக மக்கள் அனைவருக்கும் காணியுடன் கூடிய வீடு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அவர் தனி வீடு இல்லை மாடி வீடுதான் தீர்வு என்று கூறினார். ஏற்கனவே மாடி வீடுகள் மலையகத்தில் அமைக்கப்பட்ட போதும் அவை வெற்றி அளித்ததாக இல்லை.

இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் இச்சந்தர்ப்பத்தில் பூனாகல மீரிபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு 77 குடும்பங்கள் பாதிக்ப்பட்டு சுமார் 37 பேர் மண்ணுடன் புதைந்து மாய்ந்தனர். இதன் பின்னர் உலகலாவிய ரீதியில் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை பேசப்பட்டது.

ஆரசியல் வாதிகளின் பேச்சுகளுக்கு அப்பால் மக்கள் அனைவரும் ஒன்று திரன்டு காணியுடன் தனி வீடு தேவை என்பதை ஞாபகபடுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் மஹிந்த அரசோ அதன்பால் செவிமடுக்கவி;ல்லை. இந்நிலையில் 6வது ஜனாதிபதிக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மலையக கட்சிகளில் ஒரு சிலர் மஹிந்த அரசுடன் இனைந்து மஹிந்தவின் செயற்திட்டத்திற்கும் பலர் மஹிந்தவிடம் இருந்து விழகி மைத்திரியுடன் இனைந்து காணி உரித்துடன் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை நாடினர். ஆதன்படி மைத்திரி அரசு வெற்றிப்பெற்றதினால் இன்று மலையகத்தில் காணி உரித்துடன் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வரும் அதே வேலை பூனாகலை மீரிபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் இலவசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது மலையகத்தில் பல்வேறுப்பட்ட இடங்களில் காணியுடன் தனிவீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முகவரியற்றவர்களாக 200 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஏழு பேர்ச் காணியை வழங்கி உறுதியை ஒப்படைப்பதன் மூலம் அந்த மக்களை முகவரியுடையவர்கள் என நிரூபிக்கப்டவுள்ளது.

இதன்படி பெருந்தொட்ட அமைச்சினதும் ஜக்கி தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் பேரின் முதற்கட்டமாக பசரைத் தேர்தல் தொகுதியை மையப்படுத்தி 1000 பேருக்கு காணி உரிமை பெருந்தோட்ட கைத்தொழில் இராஜங்க அமைச்சர் கே.வேலாயுதம் தலைமையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு இந்நகழ்வு தேசிய நிகழ்வாக பண்டாரவலையில் இடம் பெறவுள்ளது.

இச்செயற்ப்பாட்டை நிர்ணயிக்கும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதானிகள், புத்திஜீவிகள், அமைச்சின் அதிகாரிகள் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களுகு நிரந்தர முகவரி ஒன்னை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்திலேயே அத்திவாரம் இடப்பட்ட போதிலும் அது இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஈடேறவுள்ளது.

இச் செயற்த்திட்டத்திற்கு ஜனாதிபதியின் மைத்திரிபால சிரிசேன அவர்களின் பூரண ஒத்துழைப்பும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்ய அவர்களின் பூரண ஆதரவும், பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் ஓத்துழைப்பும் காணப்படுவதோடு இராஜாங்க கல்வி அமைச்சர்; வி.இராதாகிருஸ்னன், தோட்ட உட்கட்டமைப்பு பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னனி தலைவர் – மனோ கணேசன் இதேவேலை தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தோட்ட தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை சொந்தக்காணியில் குடியேற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் பண்டாரவலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஊவா மாகாண்ம இன்றைய நிலைமைகளுக்கு மீரயபெத்த திருப்பு முனை என்பதால் முதற் கட்டமாக பதுளை மாவட்டத்தை மையப்படுத்தி பண்டாரவலையில் இத்திட்டத்தை ஆரம்பிக்கின்றனர். பண்டாரவலையில் ஏப்ரல் மாதம் 25ஆம் இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கும் நிகழ்வானது தேசிய நிகழ்வாகவே இடம் பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இக்காணி உறுதிகள் தோட்டத் தொழிலாளர் மட்டுமன்றி தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழில் செய்யாதவர்களும் உள்வாங்கப்படும் வகையில் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். அது மாத்திரமன்றி தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்படுகின்ற காணி உறுதிகள் கைமாறும் பட்சத்தில் அல்லது பிறிதொருவருக்கு விற்கப்படும் பட்சத்தில் காணி உரிமைச்சட்டத்தின் பிரகாரம் அதனை அரசாங்கம் மீளப்பெறுவதற்கும் தயங்காது.

காணி உரிமை என்பது தோட்டத் தொழிலாளரின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் ஒரு விசேட செயற்றிட்டமாகும். இதனை எவருக்கும் விற்பதற்கு பயனாளிகள் ஒருபோதும் கனவிலும் நினைத்துவிட இந்த காணிகள் வழங்பப்படுவதன் ஊடாக மலையக மக்களுக்கு காணி உரிமையுடன் வீடுகள் அமைக்கபட்டு அவர்களும் கிராம எழுச்சி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்கள் வாழும் வீட்டு பாதைகளுக்கு பெயர், வீட்டுக்கு இலக்கம் இடப்பட்டு கடிதங்கள் அனுப்பினால் குறித்த நபருக்கே கடிதம் கிடைக்கும் முகவரி உருவாகும். இது நல்லாட்சியில் மலையக மக்களுக்கு கிடைத்த முகவரியுமாகும்.
நன்றி - Tamilfastnews
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates