Headlines News :
முகப்பு » » 19 ஆவது திருத்தச்சட்டமும் மலையக பிரதிநிதித்துவமும் - சிவலிங்கம் சிவகுமார்

19 ஆவது திருத்தச்சட்டமும் மலையக பிரதிநிதித்துவமும் - சிவலிங்கம் சிவகுமார்


19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாதபிர திவாதங்கள் தற்போதைய அரசியல் நகர்வில் முக் கியமானதொரு கட்டத்தை பிடித்திருக்கும் நிலையில் மலையக பிரதிநிதித்துவம் தொடர்பான காத்திரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் உள் ளிட்ட சரத்துக்கள் அடங்கியுள்ள 19ஆவது திருத் தச்சட்டமும் புதிய தேர்தல் முறைகளை உள்ளடக் கிய 20 ஆவது திருத்தச்சட்டமும் ஒரே தடைவையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப் படுகிறது. இந்நிலையில் மலையக பிரதிநிதித்துவம் தொடர்பில் ஒரு நிகழ்வு கடந்த வாரம் அட்டனில் இடம்பெற்ற போது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் 16 ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கு நூற்றுக்கணக்கான தேர்தல் தொகுதிகளும் ,மாகா ணசபைகளும்,உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கும் போது சுமார் 15 இலட்சம் சனத்தொகை கொண்ட மலையக மக்களுக்கு அவ் வாறானதோர் நிலைமை இல்லை என இங்கு புள்ளி விபரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்து உரையாற் றிய மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ் தெரிவித்திருந்தார்.

மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித் துவத்தைப்பொறுத்தவரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்களார்களைக்கொண்டுள்ள நுவ ரெலியாமஸ்கெலியா தேர்தல் தொகுதி ஒன்றா கவே காணப்படுகின்றது. ஆனால் வடக்கு,கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அவர்களின் சன த்தொகை செறிவுக்கேற்ப புவியியல் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத் தப்பட்டுள் ளன. விகிதாசார மற்றும் தொகுதிவாரி கொண்ட கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அது மிக பிரதானமாக மலையக மக்களின் பிரதிநி தித்துவத்திற்கே ஆபத்தாக அமையும் என்ற விடயம் தெரிந்திருந்தும் அதற்குரிய தீர்வுகளை அரசாங் கத்திடம் முன்வைக்க போதுமான கால அவகாசம் இப்போது இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே, மட்டுமல்லாது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமைகளில் சிறுபான்மை மக்களின் ,பிரதிநிதிகளின் குரல் எடுபடுமா? என்பதும் முக் கியவிடயம்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகை யிலான நடவடிக்கைக்கும் இச்சமூகத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் பிரதான கட்சிகள் ஒரே மேசையில் ஒன்று கூடி ஒருதீர்மானத்திற்கு வர வேண்டும் என தமிழ் ஊடகங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கின்றன, எனினும் மக்களுக்காகவேனும் ஒன்றி ணைந்து ஒருமித்த கருத்தை முன்மொழிய எவரும் தயாராக இல்லை. இந்த மக்களின் எதிர்கால அரசியல் இருப்பு என்பது பிரதிநிதித்துவங்களின் மூலமே தீர்மானிக்கப்படப்போகின்றது என்ற உண் மையையும் இங்கு மறுக்க முடியாதுள்ளது. ஆகவே இவ்வாறான கலந்துரையாடல்கள் காலத்தின் தேவையாக உள்ளது. அதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் இறுதி வடிவம் ஒரு சேர அரசாங் கத்தை சென்றடைய வேண்டும். தற்போதைய அர சாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் இதை சற்று உரத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது எமது அபிப்பிராயமாகும். அது அவர்களின் கடமையும் கூட. சனத்தொகை பரம்பல் மற்றும் புவியியல் அடிப்படையில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவ தெரிவும் இருக்க வே ண்டும் என்பது எவரும் மறுக்க முடியாத இந்த சமூ கத்திற்கான ஒரு உரிமை கோரிக்கையாகும்.


நன்றி - சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates