Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும்


இலங்கையின் புராதன காலத்திலிருந்தே தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான சமூகப் புலம் பெயர்வுகள் நடந்திருக்கின்றன. இவை வழி வழியாக வந்த நிலமானிய சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டம் கொண்ட உதிரியான நிகழ்வுகளாக ஆரம்ப காலத்தில் காணப்பட்டன. நிலமானிய அரச பரம்பரையினரின் நலன்களை ஒத்த உற்பத்தி உறவு முறைகளுடன் கட்டமைந்த ஒரு நிகழ்வாய் அமைந்தன. தென்னிந்திய அடையாளங்களோ அல்லது தமக்கென ஒரு அடையாளத்தையோ பேண முடியாத ஒரு புலப்பெயர்வின் தன்மை காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்வு மிக  முக்கிய நிகழ்வாக அமைந்தது.

பிரித்தானிய ஏகாதிபத்திய தேவைகளுக்காக தமிழகத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் புதிய பொருளாதார, சமூக, அரசியல் முறைமை ஒன்றினைக் கட்டியெழுப்பினர். அதாவது தமிழகத்திலிருந்து இங்கு வந்த மக்கள் ஒரு சமூகத் தொகுதியாகவும், வர்க்கமாகவும். உற்பத்தி முறையுடன் சம்மந்தப்பட்டவர்களாகவும் வெளிப்பட்டனர். இவர்களில்  தமிழகத்தில் விவசாயிகளாகவும், கைவினைஞர்களாகவும் நிலமானிய சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்தவர்கள் இங்கு வந்தவுடன் தொழிலாளர் வர்க்கமாக அடையாளம் காணப்பட்டனர். பெரும்பகுதி மக்கள் ஏழைகளாகவும், இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களாகவும் பெருந்தோட்டப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பிரித்தானிய எஜமானர்களின் உச்ச சுரண்டலுக்கு உட்பட்ட இவர்கள் ஒரு சமூகத்தின் அடையாளமாகவே திகழ்ந்தனர்.

இவர்கள் தமிழகத்துடன் உறவுகளை தொடர்ச்சியாகப் பேணினாலும், இலங்கையின் பெருந்தோட்ட மக்கள் சமூகமாக இருந்து மலையகத் தமிழர்களாக வருவதற்கு தேவையான வேர்களைக் கொண்டே வளர்ந்து வருவதாக இனங் காணப்பட்டனர். அதாவது தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த பின்னர் இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததொன்றாக இருந்ததால், இவர்கள் இலங்கையின் விவசாய உற்பத்தி முறையில் இணைந்து தொழிலாளர் வர்க்கமாக வெளிப்பட்டனர். இதனால் இலங்கையில் அப்போது செயற்பட்ட இனவாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேட்டுக்குடி சார்ந்தவர்களின் நிலைப்பாட்டுகு;கு எதிராகவும் தென்பட்டனர். பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு துரைமார்களால் கசக்கிப் பிளியப்பட்டு கறுப்புக் கங்காணிமார்களால் ஏமாற்றப்பட்ட போதிலும் கூட இலங்கையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடனேயே இணைந்திருந்தனர்.

நடேசய்யர் தொடங்கிய இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்தது. இலங்கையில் இடதுசாரித் தொழிற்சங்கங்களுடன் இணைந்து தம் சமூக அசைவுகளை வெளிப்படுத்தினர். இந்திய ஆளும் வர்க்கத்துடனும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துடனும் செய்து கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களால் இச் சமூகம் பிரித்தாளப்பட்ட போதிலும் பெரும்பகுதிச் சமூகமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை விசேட அம்சம் என விளங்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரத்தைக் கையளிக்கும் போது, “அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் இலங்கைக்குச் சுதந்திரம் தாருங்கள்” எனக் கூறப்பட்டது. இந்தியா பார்த்துக் கொள்ளும் எனக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் ஆபிரிக்கா, பிஜி, மொறிசியஸ், மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் பல நாடுகளுக்கு இந்தியர்கள் புலம்பெயரும் போது தமது அடையாளத்தை ஒழந்து வருகின்ற அதேவேளை; இலங்கையில் மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதை அவதானிக்கலாம். 1960களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் பொருளாதாரவியலிலும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டு இலங்கையின் சமூக மாற்றங்களிலும் ஒரு அங்கமாக திகழ்வதற்கு தம்மை வளர்த்துக் கொண்டமை முக்கிய விடயமாகும்.

மலையகம் என்பது வெறும் புவியியல் பிரதேசமன்று. அது இங்கு வாழுகின்ற மக்களின் சமூக, அரசியல், பொருளாதார இருப்பாகும். அதனால் பெயர் குறிப்பிடாத பெயர்கள் தொடங்கி முல்லோயா கோவிந்தன், சிவனுலட்சுமன், பிந்துனுவாப் போராட்டம் வரை மலையக மக்களின் சமூக அசைவிற்கான அடையாளமாகக் கருதலாம். தவிரவும், தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம், வாக்குரிமைப் போராட்டம், உருளுவள்ளிப் போராட்டம், சம்பளப் போராட்டம், மேல்கொத்மலைப் போராட்டம் என்பன மலையக சமூக அசைவியக்கத்திற்கான முன்னகர்வுகள் என கட்டியம் கூறலாம்.

மலையக மக்களின் பண்பாட்டு நகர்வினை அடையாளமாக நோக்க முடியும். பண்பாடுகள் பொதுவாகச் சமூக மாற்றத்திற்கு அடி நாதமானவை, சமூக மாற்றத்திற்கு இணையானவை எனப் பார்க்க முடியும். வர்க்கம், தேசியம், சமத்துவம் என்பனவற்றுடன் துணை புரிபவை. அடி நாதமானவையாகவும், அவ்வாறான மாற்றங்களுக்குத் துணை புரிவனவாகவும் பண்பாட்டம்சங்களைக் காணமுடியும். பொதுவான பண்பாடு எனப்படுவது ஒரு மக்கட் தொகுதியின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள், கலைகள், சமூக உறவுகள் என அடையாளப்படுத்தலாம்.

இலங்கையின் மலையகத் தமிழர்களின் பண்பாட்டம்சங்கள் இறை வழிபாட்டு முறைகளுடன் தொடர்புபட்டவையாகும். அவை  முழுமையாகப் பேணப்படாவிட்டாலும் அவற்றின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டாலும் மலையக தமிழர் பண்பாட்டிற்குரிய நகர்வினைக் கொண்டிருப்பதை சமூகவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திற்கு ஒத்திசைவாகக் காணப்பட்டாலும் இங்கு விசேட சூழ்நிலைகளுக்கேற்ப புதிய பண்பாட்டம்சங்களையும் உள்வாங்கிக் கொண்ட சமூகமாக இதனைப் பார்க்கலாம். கொலனியத் தாக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள், சடலங்களைப் புதைத்தல் போன்றன புதிய நடைமுறைகளாகக் காணப்பட்டன. மேலும் இந்தியாவில் காணப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளை விட இங்கு கவ்வாத்துசாமி, கொழுந்துசாமி, ரோதை முனி, கம்பிமுனி போன்ற ஆகம நெறிகளுக்கு உட்படாத கூட்டுவழிபாட்டு முறையினை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான வழிபாடுகளுடன் அமைந்த முறைகள் இவர்களுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட பண்பாட்டு நகர்வாகும். திருமண முறைகள் யாழ்ப்பாணத் தமிழர்களின் அம்சங்களைப் பிரதிபலிப்பதையும் காணலாம். தமிழகத்துடன் ஒப்பிடுகையில் சாதிக் கட்டமைப்புகள் இங்கு மிகக் குறைவு. தமிழகத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிய தீண்டாமை அம்சங்கள் பாரிய அளவில் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக நாட்டார் பாடல் வகைகளை நோக்கும் போது நாட்டார் பாடல்களில் தொடங்கி கூத்துக்கள் வரை மலையத் தமிழருக்குரிய பண்பாட்டு நகர்வினைப் புரிந்து கொள்ள முடியும். மலையகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், ஆய்வுகள் என்பன மலையகத் தமிழர்களின் வாழ்வியல் போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டவையாகவே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இவ்வாறான பண்பாட்டுச் சமூக அசைவுகள் பண்பாட்டு நகர்வுகளில் முற்போக்கானவை என கருதி விட முடியாது. முதலாளித்துவ நிலமானிய சமூக நடைமுறைகளுடன் இன்னும் பின்தங்கிய சமூகமாக இச் சமூகம் இருந்து வருகின்றது. மத்திய வர்க்கக் குணாம்சத்தின் பாதிப்பும் இருந்து வருவதையும் அவதானிக்கவும் முடியும்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் வடிவத்தில் வர்க்க ரீதியாக கூட்டமைந்து போராடுவதில் ஒரு அம்சமாக பண்பாட்டம்சங்களையும் நகர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்” என்பது அந்தோனியே கிராம்சியின் கருத்தாக உள்ளது. அதனைக் கவனத்திற் கொண்டு மலையக, சமூக பண்பாட்டுத் தளங்களை கட்டி வளர்க்க வேண்டும். சமூக அசைவியலின் உள் பரிணாமத்தை புரிந்து கொண்டும், பிற்போக்கான அம்சங்களை களைந்தும் புதிய வார்ப்புக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சமூக மாற்றத்திற்கு அடி நாதமானவை, இணையானவை எனத் தெளிவாக இனங்கண்டு வளர்க்கவும், புதியவற்றைச் சரியான தளத்தில் இணைத்து வளர்க்க வேண்டுமானால் அது ஒரு இயக்கமாக மலையகத்தில் செயல்பட வேண்டும். புதிதாக வான்வழி உள்ளுர் தொலைக்காட்சி நிகழ்வுகள்; அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள்; பிற்போக்குத் தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மத நிறுவனங்கள்; புதிய பாதிப்புக்களை மலையகத்தில் ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு மாறான புதிய எழுச்சியான பண்பாட்டுச் சிந்தனைகளை முன்னெடுப்பது அவசிய தேவை ஆகும்.

கவிஞர் சி.வி யின் இலக்கிய நோக்கு – காலமும் கருத்தும் : லெனின் மதிவானம்


மனுகுலத்தின் வரலாறு என்பது பல்வேறுபட்ட போராட்டங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் மாற்றங்களுக்கும் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் காலகட்டத்தில் அம்முரண்பாடுகளையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளுகின்றனர். அவர்கள் அவ்வாறு எதிர்கொள்வதை மூன்று நிலைகளில் அவதானிக்கலாம்.
1. முதலாவது பிரிவினர் சூழலில் காணப்படும் பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் கண்டு, இது இவ்வாறு தான் நடக்கும் என அடங்கி போதல். இங்கு ஊழ்வினை, விதி,மரபு, தர்மம், முன்னோர் வழி என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பெரும்பாலாக பொதுமக்களை இந்நிலைப்பாட்டில் காணலாம்.

2. இரண்டாவது பிரிவினர் சூழலில் காணப்படும் பிரச்சினைகள், முரண்பாடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்டு சமூகத்தை துறந்து போகின்றவர்கள். சமூகத்தை துறந்த தவம் செய்யும் ஞானியர், யோகிகள் முதலியோரை இந்நிலைப்பாட்டில் காணலாம்.

3. மூன்றாவது பிரிவினர் சமூகத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றினை எதிர்கொள்வதுடன் அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்கின்றனர். தன்காலகட்டத்தில் காணப்படும் முற்போக்கு அல்லது பிற்போக்கு இயக்கங்களில் ஏதாவது ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்பதுடன் சமூக மாற்றத்திற்காக உழககின்றவர்களாக காணப்படுவர். இந்நிலைப்பாட்டில் அரசியல்வாதி, இலக்கியகர்த்தார்க்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் முதலியோரைக் காணலாம்.

ஒருவருடைய வாழ்க்கை அவரது குடும்ப மட்டத்துக்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்தில் நிலைக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டுவிட்டதென்றால், அம்மனிதனின் வாழ்க்கை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் சமூகப் பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும், பணியும் இன்றைய நிகழ்வாகின்றது.

கவிஞர் சி.வி வேலுப்பிள்ளை இவ்வாறு தான் இன்றைய நிகழ்வாகி விடுகிறார். இறந்த மனிதனின் வாழ்வும் நிறைகளும் இன்றைய பிரச்சினைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வடிப்படையில் கவிஞர் சி.வியைப் பொறுத்தவரையில் ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா என பல்துறை சார்ந்த ஆளுமைகளை உடையவர். இவ்வாளுமைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வுக்குடட்படுத்துவதன் மூலம் காத்திரமான சில தகவல்களை வெளிக்கொணர முடியும் என்ற போதும் இவை அனைத்தும் ஒருங்கிணைந்ததாகவே சி.வி என்ற மனிதரின் சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளது எனலாம். அந்த வகையில் சி.வியின் இலக்கிய நோக்கிலும், போக்கிலும் இவ்வாளுமைகள் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.

சமூகம் பற்றிய அவரது கணிப்பு அக்கால சூழலிலான அவர் எதிர்கொண்ட விதம், அவரது சிந்தனைகள் என்பன அவரது இலக்கிய படைப்புக்களில் எவ்வாறு வெளிப்பட்டதென்பது இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.

மலையக சமூகம்
மலையக கலை இலக்கியம் குறித்து ஆய்வினை மேற்கொள்கின்ற போது அதற்கு களமாகவும், தளமாகவும் உள்ள மலையக சமூகவுருவாக்கம் பற்றிய தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

இலங்கையில் அந்நிய முதலாளித்துவம் நிலைகொள்ளத் தொடங்கியதும் அதன் உடன் விளைவாக பெருந்தோட்ட பயிர் செய்கை அறிமுகம் செய்யப்பட்டது. இப்பெருந்தோட்ட பயிர் செய்கையை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களினதும், அவர்களுடன் இணைந்து வந்த வர்க்கமுமே மலையகத் தமிழர் என்று அழைக்கப்படுகின்றனர்.

தென்னிந்திய தமிழ் கிராம பின்னணியில் ஓர் நிலவுடமை சமூகமைப்பில் கட்டுண்டு கிடந்த இம்மக்கள் விவசாயிகளாகவும் விவசாய வர்த்தகர்ககளுக்குரிய சிந்தனைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்ட பின் ஓர் முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் (பெருந்தோட்டப் பயிர் செய்கையில்) பரந்துபட்ட தொழிலாள வர்க்கமாக மாற்றப்பட்டனர். அந்த வகையில் ஓர் கூட்டு வாழ்க்கை முறையினை கொண்டவர்களாக மாற்றப்பட்டனர். மலையகத்தில் நிலவும் இக்கூட்டு வாழ்க்கை முறையாக உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தம்மை சம்பந்தப்படுத்திக் nஅகாள்ளும் போது அதன் விளைப் பொருளால் பீறிடும் கலை இலக்கிய உணர்வுகளும் அக்கூட்டு வாழ்க்கையை பிரதிபலித்து நின்கின்றன.

இந்த அடிப்படையில் தான் மலையக இலக்கியம் இலங்கை தமிழ் இலக்கியத்தின் மிக பிரதான கூறாக் திகழ்கின்றது.

சி.வியின் காலத்தில் மலையக்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் (1934 – 1984)
சுமார் 50 ஆண்டு காலமாக (1934 – 1984) எழுத்துலகில் பணியாற்றிய சி.வியின் இலக்கிய நோக்கினை துணிபதற்கு அக்காலத்தில் இடம்பெற்ற சமூக, அரசியல், கலை, இலக்கிய நிகழ்வுகள் குறித்த தெளிவு அவசியமாகின்றது.
1939களில் மலையகத் தமிழர்களிடையே ஸ்தாபனப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றது. 1939இல் இலரங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது பெரும்பான்மை, தோட்டத் தொழிலாளர்களை கொண்டதாக இருந்தமையினால் ஓர் பலம் வாய்ந்த ஸ்தாபனாகக் காணப்பட்டது. இவ்வமைப்பு மலையக மக்களை ஸ்தாபனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதற்கு எதிரான பல போராட்டங்கள் மலையகத்தில் இடம்பெற்றன. பல தொழிலாளர்களின் உயிர் தியாகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஓர் அமைப்பாகவே இது காணப்பட்டது.

1940இல் சம்பள உயர்வுகள் கோரிய போராட்டங்கள் மலையகத்தில் வலுப்பெற்றது. இவற்றில் முல்லோயா தோட்டப் போராட்டம் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி பொலீஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இக்காலத்தில் மலையக மக்களிடையே மலையக தேசிய உணர்வும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையகத் தமிழர் வளர்ந்து வரும் ஓர் தேசிய சிறுபான்மை இனத்துக்குரிய சமூகவுருவாக்கத்தை கொண்டிருப்பதனாலும், இவர்கள் சிங்கள தொழிலாளர்களுடன் இணைந்து உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை தொடரக் கூடியவர்களாக இரத்;ததனாலும் பேரினவாதிகளை அச்சங்கொள்ளச் செய்தது. இந்த அச்சத்தின் காரணமாக பேரினவதிகள் இம்மக்களை சிங்கள தொழிலாளர்களிலிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கைகளிலும் அவர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடாகவே இம்மக்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது மலையக மக்களை பிரதி நிதித்துவப்படுத்திய அமைப்பாக இலங்கை இந்திய காங்கிரஸ் இருந்தது. குடியுரிமைப் பறிப்பு சட்டத்திற்கு எதிராக பரந்துபட்ட, போராட்டத்தை நடத்தவில்லை என்ற போதும் இதற்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டிருந்தமை அதன் முற்போக்கான அம்சமாகும். இவ்வமைப்பில் சி.வி. யும் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக காணப்பட்டார்.

அவ்வாறே, குறைந்த தொழிலாளர்களை கொண்டு கூடிய லாபத்தை பெறும் நோக்குடனும், இம்மக்களின் சமூகவுருவாக்கத்தை சிதைக்கும் நோக்குடனும் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தமாக ஸ்ரீறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1965) கொண்டு வரப்பட்டது. இந்த ஜீவ காருணியமற்ற செயலால் மலையக சமூகம் மேலும் வதைக்குள்ளாக்கப்பட்டதுடன் பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. கணவனைப் பிரிந்த மனைவி, நண்பர்களை பிரிந்து நண்பர்கள், காதலனை பிரிந்த காதலி என இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை ஏற்றிச் சென்ற புகையிரதம் ‘அழுகை கோச்சி’ என அழைக்கப்பட்டது.

இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இந்நாட்டு சூழலுக்கு ஏற்றவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மற்றமடைந்தது. இவ்வமைப்பு மலையக மக்களை அதிலும் குறிப்பாக அதிகமான தொழிலாளர்களை அங்கத்தினராக கொண்டிருந்தமை அதன் பலமாக இருந்தது. ஆரம்பக் காலங்களில் மலையக மக்கள் தொடர்பான போராட்டங்களை உழகை;கும் மக்கள் சார்பாக முன் வைத்த போதினும் காலக் கிரமத்தில் அதன் போக்கு தொழிலாள வர்க்க நலனில் இருந்து அந்நியப்படுவதாக அமைந்தது. இதன் காரணமாக தொழிலாளர் பற்றிய மனித நேய உணர்வு கொண்டிருந்த திரு. வீ.கே. வெள்ளையன் போன்றோர் இவ்வியக்கத்திலிருந்து விலகி புதிய அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அமைப்பாகும். இவ்வமைப்பு காலப்போக்கிலே சிதைந்து சின்னாப்பின்னமாகியது என்ற போதினும் மலையக மக்கள் தொடர்பில் மனிதாயம் சார்ந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததில் இவ்வமைப்பிற்க முக்கிய இடமுண்டு.

சி.வி. வேலுப்பிள்ளை இவ்வமைப்பில் முக்கிய உறுப்பினராக இரந்தார் என்பதும் கவணத்தில் கொள்ளத்தக்கது.

இக்காலப்பகுதியில் மலையகத்தில் திரு. இளஞ்செழியன் தலமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தோன்றி வளர்ந்திருந்தது. இதன் காரணமாக மலையக மக்களிடையே தி.மு.க கருத்துக்கள் பரவி ஜனரஞ்சம் அடைந்திருந்தது. இதில் அங்கம் வகித்த பலர் பின்னாட்களில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தனர். இது இதன் முற்போக்கான அம்சமாக காணப்பட்டது. மலையகத்தை அடித்தளமாக கொண்டு இவ்வியக்கம் செயற்பட்டதால் இந்திய திராவிட முன்னேற்ற கழக போக்கிலிருந்து அந்நியபட்டதாகவும் அதே சமயம் உழகை;கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. இதன் பின்னணியில் தான் இப்போக்கு சார்ந்த பண்பாட்டு இயக்கங்களும் இலக்கியங்களும் தோன்றின. இவ்வியக்கம் மலையக மக்கள் தேசிய இனம் என்ற சிந்தனைப் போக்கை அங்கிகரித்ததுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் முன்வைத்தது.

இன்னொரு புறத்தில் இதேகாலத்தில் பண்பாட்டு ரீதியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துக்குக் கூடாக மலையக இலக்கியம் வளர்க்கப்பட்டது. அவ்வமைப்பின் தலைமை, பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பதை அதன் கருத்தியலாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இலக்கிய பரப்பில் நிராகரிக்க முடியவில்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையிலான இலக்கிய நடவடிக்கைகளே இவர்களில் முதன்மை பெற்றுக் காணப்பட்டன.

இதே காலச் சூழலில் திரு.சண்முதாசன் தலைமையிலான இடது சாரி இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மலையக மக்களிடையே வேர் கொண்டு கிளை பரப்பிய போது தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்களென பல்வேறுபட்ட ஆளுமைகளை தன் நோக்கி ஆகர்ச்சித்திருந்தது. உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்ட முனைப்பை இவ்வியக்கம் உணர்த்தி இருந்தது. இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மடக்கும்பர, மேபீல்ட், பதுளை கீனாகலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை உதாரணமாகக் கூறுலாம்.

மலையக தமிழர் ஓரு சமூகமாக கூடி வாழ்வதனை சிதைக்கும் முகமாக பல குடியேற்றவாதத் திட்டங்களை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வந்தள்ளது. 1977ம் ஆண்டு நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 700 ஏக்கர் காணியை சுவீகரித்து தமது குடியேற்றவாத நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்தது.

இதற்கு எதிரான போராட்டம் கிளர்ந்ததுடன் இப்போராட்டத்தில் டெவன் தோட்டத்தைச் சேர்ந்த சிவனு லட்சுமணன் என்ற இளைஞர் பலியானார். இதனை எதிர்த்து மலையகத்தில் தொழிலாளர்கள் புத்திஜீவிகள் பாடசாலை மாணவர்கள் என பலத்தரப்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை இப்போராட்டத்திற்கான பலமான அம்சமாகும்.

தொடர்ந்து வந்ந காலப்பகுதிகளில் கேவலமானதோர் அரசியல் பின்னணியில் மோசமான இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முலையக தமிழர்கள் தங்களது உடமைகளை இழந்ததுடன் தமது கலாசார பண்பாட்டுப் பராம்பரியங்களையும் இழந்தனர். பலர் புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றனர். அந்நாட்டிலும் இன்று வரை தமது இருப்பையும் அடையாளங்களையும் இழந்து பல்வேறு விதமான அடக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் உட்பட்டு வருகின்றனர். இவ்வகையில் உடமை இழப்பு, புலம் பெயர்வு என்பன ஒரு சமூதாயத்தின் இருப்பு என்றவகையில் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

சி.வி.யின் எழுத்துக்கள்
சி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள்,; நூல்வடிவம் பெறாத கட்டுரைகள்,ஆக்கப் படைப்புக்கள், வரைந்த கேலிச் சித்திரங்கள் என்பன முறையாக கிடைத்திருப்பின் அவர் குறித்த பூரணத்துவமான ஆய்வினை வெளிக்கொணர முடியும். மேற்குறிப்பிட்ட சில விடயங்கள் அவர் பற்றிய ஆய்வுகளுக்கு தடையாக உள்ள காரணிகளாகும். எனினும் கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி அவரது சமூக நோக்கு பற்றிய ஆய்வினை மேற்கொள்வோம். அவ்வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூறவிழைகின்றேன்.
ஆய்வு வசதிக்காக அவரது எழுத்துக்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்வது சிறப்பான ஒன்றாகும்.

1. நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
2. கவிதை
3. நாவல்
4. பிற முயற்சிகள்

நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
சி.வி. பெரியாங்கங்காணியான தனது தாத்தாவின் வீட்டில் வசித்ததனால் நாட்டார் பாடல்களை ரசிக்கவும், அவற்றினை சேகரிப்பதற்குமான சூழ்நிலை கிடைத்தது. தோட்டத் தொழிலாளர்கள் விசேட தினங்களில் பெரிய கங்காணியின் வீட்டிற்கு சென்று நாட்டார் பாடல்களை பாடி பரிசு பெற்றனர். மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன ஆங்காங்கே திட்டுக்களாகவும், தீவுகளாகவும் இடம்பெற்ற போதிலும் அவை முழுமை அடையவில்லை எனலாம். சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றை சேகரித்து மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்து காணப்படுகிறது.

உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இம்மக்களின் நம்பிக்கைகள், விருப்பு-வெறுப்புக்கள், மகிழ்ச்சி, துன்பம், அவர் தம் உறுதிப்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன முக்கியத்துவமுடையவையாகின்றன. அத்துடன் இன்றைய மக்கள் இலக்கியம் யாவும் மக்களிடம் காணப்படும் நாட்டார் வழக்காறுகளும், உரையாடல்களும் வளமிக்க மொழியில் பட்டைத் தீட்டப்பட்டே உருவாக்கமடைகின்றன. இத்தகைய பின்னணியில் தான் பாரதியின் கார்க்கியின் படைப்புக்கள் உருவாக்கமடைந்தன.

சமூகவுணர்வுடனும் நாட்டார் பாடல்கள் குறித்த சரியான பார்வையுடனும் சி.வி இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இவருக்குப் பின்னர் மலையக நாட்டார் பாடல்கள் சேகரிப்பில் ஓர் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது.

இத்தொகுப்பில் அடங்கிய பாடல்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். மேடைகளில் பேசும் போதும் சாதாரண உரையாடல்களின் போதும் இந்நாட்டார் பாடல்களை மேற்கொள் காட்டியே பேசுவார். அவர் உழைக்கும் மக்களை நேசித்தவர். இதன் வெளிப்பாடாகவே இந்நாட்டார் பாடல்களையும் நேசித்தார். (தகவல் திருமதி. தவமணி ஜெயராமன்) சி.வி.யின் இம்முயற்சி மலையக இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பாக அமைந்து காணப்படுகின்றது.

மிக அண்மையில் மு.சிவலிங்கம் சி;வி;யின் தொகுப்பில் அடங்காத சில மலையக நாட்டடார் பாடல்களை தொகுத்து நுலால வெளியிட்டார். இந்நூல் மலையக நாட்டர் இலக்கியத்திற்கான புது வரவாக காணப்பட்ட போதினும் அவற்றில் சில விரசம் மிக்கப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள்யெல்லாம் சி.வி.க்கு தெரியாது என்பதல்ல. ஆனால் சி.வி. மிக நிதானத்துடனும் சமுதாயப் பார்வையுடனும் தொகுத்தமையினாலேயே அவற்றை தமது தொகுப்பில் தவித்திருக்கின்றார் என கருத இடமுண்டு.
கவிதை
கவிஞரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு அவரது கவிதைப் படைப்புக்கள் மிக முக்கியமானவையாகும். கவிதைத்துறைதான் அவரை இலக்கிய உலகில் கணிப்புக்குரியவராக்கியது. இவரது கவித்துவ ஆளுமையை பத்மினிஜிலி, விஸ்மாஜினி  வேஃவேயர்  வழிப்போக்கன் ஆகிய கவிதை நாடகங்களின் மூலமாக மதிப்பிடலாம். எனினும் அவரது கவித்துவ ஆளுமையின் உன்னத அறுவடையாக அமைந்தது ஐn ஊநலடழn வுநய புயசனநn என்ற தொகுப்பாகும். ஏனைய கவிப்படைப்புக்கள் யாவும் இத்தொகுப்பிற்கான படிக்கற்கள் எனக் கூறின் அது மிகையாகாது. இத்தொகுப்பு முதலில் ரசிய மொழியிலும், பின்னர் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. சி.வி கடைசி வரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவர் ஆங்கில கல்வியில் கொண்டிருந்த ஈடுபாடும் புலமைத்துவமும் இதற்கு காரணமமாக அமைந்திருக்கலாம்;. முதலில் இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பு பற்றி நோக்கி பின்னர் கவிதை பற்றி பற்றி நோக்குதல் பயன்மிக்க ஒன்றாகும்.

சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளில் In Ceylon Tea Garden என்ற கவிதைத் தொகுப்பும் ,Born to Labour விவரண தொகுப்பும் முக்கியமானவையாகும். சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவரது ஆங்கில கவி வரிகள் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தன.
“To the tom – toms throp
The clawn lies startled
Trembling upon the tea
The last dew bead is fresh
Before the moring treads
On this mating hour
Where suffering and pain
Decay and death are one
In the breathing of men”
சக்தி பாலையாவின் மொழிபெயரப்;பு இவ்வாறு அமைந்துக் காணப்படுகின்றது.
பேரிகை கொட்டெழு
பேரொலித் துடிப்பும்
புலர்த லுணர்த்தப்
புரளுமாம் வைகறை
பாரிலே கதிரொலி
பன்நடப் பயிலுமுன்
பசுந்தளிர் தேயிலை
பள்ளி கொள் தூய
எஞ்சிய முத்தாம்
எழில் மிளர் பனித்துளி
எழுலான் இறைக்கும்
இதலார்ப் பணமுற
பஞ்சலம் வேதனை
சாதல், அழிவு
சகலமும் ஒன்றென
சாந்தல் வேளைக்கண்
(இலங்கை தேயிலைத் தோட்டத்திலே பக்கம் 01)

இம்மொழிப்பெயர்ப்பில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசைன பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சத்தி .பாலையாவின் கவிதை தொகுப்பினை மொழிபெயரப்;பு தொகுப்பு எனக்கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும்.சி.வி அவர்கள் அரசியல் வாதியாக தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கிய தளத்தில் இயங்கிய சக்தி பாலையா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான். நந்தலாலா சஞ்சிகை குழுவினரும் சி. வியின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அம் மொழிப்பெயர்ப்பு வரிகள் பின்வருமாறு அமைந்துக் காணப்படுகின்றது.

‘பிரட்டின் அதிர்வில்
விடியலே அதிர்ந்துப்போய்
தேயிலை மீது
சரிந்து கிடந்தது
விடியல் பொழுதின்
ஆக்கிரமிப்பின் முன்னர்
இறுதியாய் சொட்டும் – இப்
பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த
பொழுதின் கணத்தில் தான்
துயரும் நோவும்
நசிவும் இழப்பும்
இம் மக்களின் மூச்சில்
இவ்வாழ்கையின் முகிழ்ப்பின்
அம்சம் ஒன்றென
ஆகிப் போயின

இம்மொழிபெயரப்;பு உள்ளடகத்திலும் உருவகத்திலும் சிதைவடையாது காணப்படுகின்றது. முல்லியப்பு சந்தி திலகர் தொகுத்து வெயிட்டுள்ள சி. வுp. யின் In Ceylon Tea Garden தொகுப்பு (ஆங்கிலத்தில் சி.வி. எழுதிய ஆங்கில கவிதைகளையும் மொழிப்பெயர்ப்பையும் சேர்த்து) இத்தகைய ஆய்வுகளுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

சி.வி.யின் படைப்புகள் மலையக மக்களின் பிரச்சினைளை உள்நின்று நோக்குவதுடன், மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலை, புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர் அவர். பெரும்பாலும் இவரது கவிதைகள் நாட்டார் இலக்கியத்தின் இன்னோரு வடிவமாக அமைந்துக் காணப்படுகின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மலையக கலாசார தளத்தையும் மக்களின் உணர்வுகளையும் ஒன்றாக இணைத்து காதலிக்கின்ற பண்பினை நாம் சி.வி.யில் காணலாம்.

நாவல்
சி.வியில் எழுதிய நாவல்களில் எல்லைப்புறம், பார்வதி, வளமற்ற வாழ்வு, காதல் சித்திரம், வீடற்றவன், இனிப்படமாட்டேன். ஆகிய நாவல்கள் நேரடியாக தமிழில் எழுதியவை ஏனையவை யாவும் பொன் கிருஷ்ணன் சுவாமியால் தமிழில் மொழி பெயரப்;பு செய்யப்பட்டவை.

இவற்றில் காதல் சித்திரம், வீடற்றவன், இனிப்படமாட்டேன், வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்கள் நூலுரு பெற்று விட்டன. ஏனையவை யாவும் நூலுருப் பெறல் இன்றியமையாத ஒன்றாகும். இவரது நாவல்களில் வீடற்றவன், இனிப்படமாட்டேன், வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்கள் எனது பார்வைக்கு கிட்டியதால் இந்நாவல்களில் அவரது உலக நோக்கு எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை ஆராய முற்படுகின்றேன்.

வீடற்றவன் இவரது மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகும். மலையக மக்களிடையே தொழிற்சங்க அமைப்பை உருவாக்குதல், அவற்றினை ஸ்தானப்படுத்துதலின் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் என்பவற்றை சித்திரிக்கும் நாவலாக அமைந்து காணப்படுகின்றது.

நாவல் தோற்றம் பெற்ற காலத்தில் (1960களில்) மலையக மக்களிடையே வீறு கொண்டெழுந்த எழுச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றை இந்நாவல் உள்வாங்க தவறி விடுகின்றது. மாறாக கோர்ட், வழக்கு முதலியவற்றின் மூலமாக இம்மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம் என்ற பார்வையை முன்வைக்கின்றது. இப்போக்கு அக்காலத்தில் மிதவாத இயக்கம் மேற்கொண்டிருந்த ஓர் நடவடிக்கையாகக் காணப்பட்டது. அந்தவகையில் ஒரு போக்கினை சுட்டிக் காட்டுகின்ற நாவலாசிரியரின் அதன் மறுபக்கத்தை சுட்டிக் காட்டத் தவறி விடுகின்றார்.

நாவலின் கதாநாயகன் இராமலிங்கம் இறுதியில் பலாங்கொடை காட்டில் கடவுளே எனக்கு போகும் வழி தெரியவில்லையே|| என புலம்புவது இந்நாவலின் சோர்வு வாதத்திற்கு தக்க எடுத்துக்காட்டாகும்.

இனிப்படமாட்டேன் இவரது இறுதி நாவலாகும். 1984இல் வெளிவந்தது. இந்நாவலையும் சி.வியின் வாழ்க்கையையும் உற்று நோக்குகின்றவர்களுக்கு இது ஓர் சுயசரிதையாக அமைந்த நாவல் என்பது புரியும். தமிழர் ஒருவர் சிங்கள பெண்ணை மணம் முடித்து வாழுகின்ற போது ஏற்படுகின்ற முரணையும் அவ்விருவருக்கும் பிறக்கும் மகனுக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற முரணையும் சித்திரிப்பதாக இந்நாவல் அமைகின்றது. குறிப்பாக 80களில் தோற்றம் பெற்ற இந்த நாவல் இக்காலகட்டத்தில் மலையகத்தில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகளை சிறப்பாக சித்தரிக்கின்றது என்ற போதினும் அதன் மறுப்பறமாக மலையக சமூக இருப்புக்கான உணர்வும் எவவாறு நிலைக்கொள்ளப்படுகின்றது என்பதை வெளிக் கொணரத்தவறிவிடுகின்றது. இதனை இக்காலக்கட்டத்தில் வெளிவந்த ஆனந்த ராகவனின் நண்பனே என்றும் உன் நினைவாக என்ற சிறுகதை மிக நேர்த்தியுடன் சித்தரிக்கின்றது எனலாம்.

சி.வியின் படைப்புக்கள் அனைத்திலும் சிலாகித்துப் பேசப்படுகின்றதொரு விடயம் மலையக மண்ணின் மனம் கமழும் பேச்சு வழக்கு முறையை தனது படைப்புக்களில் சிறப்பாக கையாண்டுள்ளமையாகும். இவர் நாவல் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் தேசிய இலக்கிய கோட்பாடு, தேசிய இயக்கம் என்பன தத்துவார்த்தப் போராட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் மொழி தூய்மை வாதத்திற்கு எதிராக பேச்சு மொழி இலக்கியத்தில் கையாளப்பட்டது.

இத்தகைய காலப் பின்புலத்தில் சி.வியின் படைப்புக்களிலும், இத்தகைய மக்கள் சார்பு பண்பினை ஆதரித்தமை அவரது எழுத்துருக்களின் தனிச் சிறப்பாகும். இத்தகைய பேச்சு மொழியினை கையாண்டமை அவரது படைப்புக்களை அழகுப்படுத்தியது எனலாம்.

சி.வி.யின் பிற முயற்சிகள்
மேற்குறிப்பிட்டவை தவிர சி.வியின் இலக்கிய நோக்கினை மதிப்பிடுவதற்கு ‘முதற்படி’ (கட்டுரை தொகுப்பு) ‘உழைக்கப் பிறந்தவர்கள’; (விவரணத்தைத் தொகுப்பு) ஆகிய நூல்களும், அவ்வப்போது பத்திரிகைகள் வரைந்து வெளியிட்ட கேலிச் சித்திரங்களும் முக்கியமானவையகளாகும்.

முதற்படி என்ற நூல் மலையகத் தமிழர் பற்றிக் கூறுகின்ற சிறிய கட்டுரைத் தொகுதியாகும். முலையகத் தமிழர்களிடையே இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகியது பற்றியும் அது இம்மக்கள் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இனக் குரோதமின்றி சிங்கள மக்களுடன் ஜக்கியப்பட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துகின்ற சி.வி காலனித்துவ எதிர்ப்பு கொண்டவராய் காணப்படுகிறார் என்பதை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஆரிய திராவிடர்களாகிய நாம் சிங்கள சகொதரர்களுட்கு ஆங்கில மோகம் தனியலாயிற்று அறிவு புலர்ந்தது||
நாமிருக்கும் நாடு நமதென்ப
தறிந்தோம் – இது
நமக்கே யுரிமையா மென்பதறிர்தோம்
என்ற நாதத்தின் எதிரொலி இங்கு பிறந்தது. என்றாலும் ஆங்கில மோகம் நம் சுய அறிவைக் கொலை செய்வது வழக்கம். இதிலிருந்து சுகமடைவது சற்று கஷ்டமாவதால் சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டத்தில் அயர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது. இது மட்டுமா? மூலதனமும் வியாபாரமும் இந்திய வர்த்தகர்களிடம் பொன் விளையும் இறப்பர் – தேயிலை தோட்டங்களின் வெள்ளையர் கையில் அந்நியர் இலங்கையில் நடத்திவரும் சுரண்டல் கைங்கரியத்திற்கு ஆயுதமாக இருப்பவர்கள் இந்திய தொழிலாளர்கள் என்பது தான் இவரின் அபிப்பிராயம். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அயர்வு தெரியாத் திறமையால் கோட்டை பிடிப்பது போல எல்லா உத்தியோகங்களையும் கவர்ந்து வந்ததிலிருந்து சிங்களவர்கள் மனம் வெதும்பி இருக்க வேண்டும். இந்நிலையில் நாமிருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்போம் என்பதற்கு சிங்களவர்கள் இந்தியராக இருந்தால் உடன் பதில் சொல்வார்கள். (முதற்படி பக். 10)

இதன்மூலம் சிங்கள மக்களுக்கு இம்மக்களின் நிலைமைகளை எடுத்துத் தெளிவுபடுத்தி ஜக்கியப்பட வேண்டியதால் ஆரியரும் காலனித்துவத்திற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் இரத்தின சுருக்கமாக எடுத்துக் காட்டப்படுகின்றது.

சி.வி வழிப்போக்கன் என்ற புனைபெயரில் எழுதிய தேயிலைத் தோட்டத்திலே என்ற தொடர் சித்திரத்தில் தான் மலைநாடு என்ற சொல் முதன் முதலாக பயன்படுத்தப்படுகின்றது என சிலர் கூறுகின்றனர். இக கூற்றில் பல வாதபிரதிவாதங்கள் காணப்பட்ட போதும் அவர் மலையகம் என்ற சொல்லை வெறும் புவியியல் அர்த்தத்தில் மாத்திரம் பயன்படத்தியவர் அல்லர். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் உணர்ந்தே பயன்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக:

கூனியடிச்ச மலை
கோப்பிக் கன்று போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி||
என்ற மலையக நாட்டார் பாடலுக்கு கவிஞர் இவ்வாறு விளக்கம் பிரதானமானது.

காடுகளை அழித்து புதிய மலைகளை உருவாக்கும் போது சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்த தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாதானிருக்கும். மலையகத்தின் மலைகள் மீது உங்களுக்கு ஏறிடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் உங்கள் காலடிகளை கவனமாக எடுத்து வையுங்கள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள் (மலைநாட்டு மக்கள் பாடல்கள் பக் – 96)

இம்மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதாரத்தை சூரையாடியவர்கள் அல்லர். மாறாக தமது உதிரத்தையும், உயிரையும் வார்த்து அந்த அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டதே மலையக பொருளாதாரமாகும்.
ஒரு புறமான சமூகவுருவாக்கமும் மறுபுறமான ஒடுக்குமுறைகளும் இம்மக்கள் வளர்ந்து வரும் ஓர் தேசிய சிறுபான்மை இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த அர்த்தத்தில் தான் மலையகம், மலைநாடு என்ற பதங்கள் பிரஞ்சை பெற்றன. இந்த அர்த்தத்தை உணர்ந்த சி.வி மலைநாடு என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

சி.வியின் முக்கியமாக பிறிதொரு நூல் டீழசn வழ டுயடிழரச என்ற விவரணத் தொகுப்பாகும். இதனை மாவெலி பத்திரிக்கையில் திரு.பி.ஏ. செபஸ்டின் தமிழில் மொழிபெயர்த்து தொடராக வெளியிட்டார். குழந்தை பிறப்பு முதல் இம்மக்களின் வாழ்க்கை, மக்களிடையே காணப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகள், அவர்களுடன் உறவு கொண்ட மனிதர்கள், உறவுத்தன்மை என்பன சிறப்பாக சித்திரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலும், மலையக மண்வாசனை மிக்க நடையை சி.வி கையாண்டுள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கினார் என்பதற்கு இவரது இந்நூல் சிறந்த சான்றாகும். இயற்கையையும், மனிதவுணர்வுகளையும் ஒன்றாக காதலிக்கின்ற போக்கினை இந்நூலில் காணலாம். அந்த வகையில் ஐn ஊநலடழளெ வுநய புயசனநn என்ற கவிதை தொகுப்பிணை போல இந்நூலும் முக்கியத்துவமும் சிறப்பும் உடையதாகும். மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றினை எடுத்துக் கூறும் இவரின் பிறிதொரு நூல் நாடற்றவர் கதை|| ஆகும்.

சி.வியின் இலக்கிய நோக்கு
அவரது இலக்கிய நோக்கு அவரது காலத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதனை நோக்குவதற்கு அவரது காலத்தில் தோற்றம் பெற்ற கவிதை சில வரிகளை இங்கொருமுறைக் கறித்துக் காட்டவேண்டியது அவசியமானதொன்றாகும். (ஜில். சுல்தான் பாடியது)
தண்டுக்கலா தோட்டத்திலே திண்டு
முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிடாங்க
யாரோ தாங்க
கண்ட துண்டமாக போச்சிங்க
கழுத்து முண்டம்
கைலாசம் சேர்ந்திருச்சிங்க||
…..
கூலிக்காரன் வாயில் மண்ணைப்
போடவுமே அஞ்சமாட்டான்
சக்சைக் கட்டி துரைமாருக்கு
அச்சமுடன் தான் நடப்பான்.

60களில் மலையகத்தில் மக்கள் இயக்கம் புதிய பரிணாமத்தை எட்டியதுடன் அது அம்மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடத் தூண்டியது. அதன் முதல் வெளிப்பாடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றும் தொழிலாள பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கணக்குப்பிள்ளைமார்கள், கங்காணிகள், கண்டக்கையாக்கள் ஆகியோரின் கொடுமைகளை எதிர்த்துப் போராடினர். தொழிலாளர்களுக்கு எதிராக நின்ற தோட்ட உத்தியோகத்தர்கள் (குறிப்பாக கணக்குபிள்ளைமார்கள்) பலரின் கைகள் வெட்டப்பட்டன. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்பையும் எழுச்சியையும் காட்டுகின்றது.

இத்தகைய போராட்டங்கள், எழுச்சிகள் என்பன சி.வ.pயின் படைப்புகளில் காணமுடியாதிருப்பது அவரது உலக நோக்கின் துரதிஷ்டவசமே ஆகும். அவரது உலக நோக்கு குறித்து மதிப்பீடு செய்வதற்கு ஹார்க்னெஸ் எனும் பெண்மணி (ஊவைல புசைட) என்ற நாவலை வாசித்து விட்டு ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பினை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

‘விமர்சனம் என்று நான் கூற வேண்டியது எதுவென்றால் கதை போதியளவிற்கு யாதார்த்த பூர்வமானதாக இல்லை என்பது தான். என்னைப் பொறுத்தவரையில் யதார்த்த வாதம் என்பது உண்மையான விபரங்களை தருவது மட்டுமல்லாது வகை மாதிரியான கதாபாத்திரங்களை மறுசிருஷ்டி செய்வதாகும். நீங்கள் படைத்துள்ள பாத்திரங்கள் போதியளவிற்கு வகைமாதிரியானவையாக உள்ளன. ஆனால், அவர்களை சூழ்ந்துள்ள, இவர்களை இயக்குகின்ற சூழல்கள் அந்தளவிற்கு வகைமாதிரியானவையாக அமையவில்லை. நகரத்து பெண்ணில் தொழிலாளர் வர்க்கமானது தனக்கு தானே உதவி செய்ய இயலாத அப்படி செய்யக்கூட முயற்சிக்காத கையறு நிலையில் உள்ள ஒரு கூட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தாங்கவொண்ணாத அத் துன்பத்திலிருந்து அவர்களை கை தூக்கிவிடும் முயற்சிகள் எல்லாம் அந்த மக்களுக்கு மேலிருந்து வருகின்றனவேயொழிய அவர்கட்கு மத்தியிலிருந்து வரவில்லை. செயின்ட் சைமனும், ரொபட் ஓவனும் வாழ்ந்த அந்த 1800 அல்லது 1810 இல் கதை நடப்பதாக இருந்தால் அது சரிதான். ஆனால் 1887ல் தீவிரமான பாட்டாளி வர்க்க போராட்டங்கள் பலவற்றையும் கடந்து 50 ஆண்டு காலமாக பங்கு கொண்ட ஒருவருக்கு இது யதார்த்தமானதாக இருக்க முடியாது.

தங்களை சூழ்ந்துள்ள ஒடுக்குமுறை யந்திரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் கண்டனம் முழங்குவதும் தாங்களும் மனிதப்பிறவிகள் தாம் எனும் நிலையினை மீட்டுக் கொள்ள கொந்தளித்து கிளம்பி அரைகுறை உணர்வு பூர்வமாகவோ அல்லது முழு உணர்வுப் பூர்வமாகவோ முயல்வதும் வரலாற்றில் யதார்த்த உலகில் (னுழஅயin ழக சுநயடளைஅ) நாங்கள் இடம்பெற வேண்டும் எனக் கேட்க அவற்றிற்கு இடமுண்டு. (அருணன்(1998) மார்க்கிசியமும் அழகியலும்இ சிட்டி பதிப்பகம்இ மதுரை .ப. 46;)

மேற்குறிப்பிட்ட ஏங்கல்சின் இரத்தின சுருக்கமான இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மலையக மக்களின் வாழ்வியலை படைப்பாக்கித் தந்த சி.வியின் எழுத்துக்கள் அன்றைய காலச்சூழலில் தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறுபட்ட எழுச்சிகளையும் இயக்கங்கஙை;களையும் பொருளாகவும், பின்னணியாகவும் கொள்ளவில்லை. 1948 ஆண்டு இடம்பெற்ற மலையக மக்களுக்கு எதிரான வாக்குரிமைப் பறிப்பும் அது தொடர்பில் ஏற்பட்ட சத்தியாகரக போராட்டமுமே அவர் ஐn ஊநலடழளெ வுநய புயசனநn என்ற கவிதை தொகுப்பினை எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது எனக் குறிப்பிடுவர். இக்கவிதை தொகுப்பில் குடியுரிமை பறிப்பு சம்பந்தமாக நேரடியான சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆதேசமயம் மலையக மக்களின் வரலாறும் அவர்களின் சமூக இருப்பும் குறித்த அக்கறை இக்கவிதைத் தொகுப்பில் அடங்கியுள்ளமை அதன் பலமான அம்சங்களில் ஒன்றாகும்.

எனவே, தான் எடுத்துக் கொண்ட காலத்தினை முழுமையாக சித்திரிக்கவும் அந்த சூழலில் இயங்கக்கூடிய உண்மையான மாந்தர்களை சித்திரித்துக் காட்டவும் அவரது எழுத்துக்கள் தவறிவிடுகின்றது.
முடிவுரை
சுமார் 50 ஆண்டு காலமாக எழுத்துலகில் திகழ்ந்த சி.வி. மலையக மக்களின் வாழ்வியலைப் படைப்பாக்கித் தந்தார் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. எனினும் அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையயும் இலக்கியமாக்க தவறிவிடுகின்றனர். இது இவரது இலக்கிய நோக்கின் பலவீனமாகும். இவ்வாறாக சி.வியின் எழுத்துக்களை நோக்குகின்ற பொது கொடுமைகளை கண்டு குமுறுகின்ற ஒரு மனிதாபிமானியின் நெஞ்சம் தெரிகின்றது. ஆனால் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் தத்தவார்த்த பார்வை இல்லை என்பதும் தெரிகின்றது. முடிவாக சி.வி பற்றிய ஆய்வுகளை சமூகவியல் பார்வைக்கு உட்படுத்துகின்ற போது அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்சனமாக அமையும்.

நன்றி - இனியொரு

மலையக தொழிலாளர்களுக்கு சொந்த காணி, வீடு மேதின அறைகூவல்


மலையக சிவில் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு லிந்துலையில் நடைபெறவுள்ளது.

மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் ஆகியவற்றோடு புதிய உதயம் இளைஞர் கழகமும் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 

மலையக தொழிலாளர்களுக்கு சொந்த வீடு சொந்த காணி என்ற தொனிப்பொருளில் 2014 சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 

லிந்துலை ஹென்போல்ட் தோட்ட மைதானத்தில் காலை 8.30 மணிக்கு தொழிலாளர் தின நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. 
தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிருத்தி தொழிலாளர் தின ஊர்வலம் இடம்பெறவுள்ளது. 

அதன் பின்னர் மலையக மக்களின் வீடு, காணிப் பிரச்சினை தொடர்பாக பிரகடனம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் பலவும் முன்வைக்கப்படவுள்ளன. 
தொழிலாளர்களின் கலை நிகழ்வும் இங்கு இடம்பெறவுள்ளது. 

இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகற்விற்கு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சத்திவேல் தலைமை தாங்கவுள்ளார். 

அடையாளம் அமைப்பின் தலைவர் லெனின் ராஜ் இணைத் தலைவர்களான யோகேஸ், மொஹமட் பவாஸ், செயலாளர் பழனி விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். 

மலையக இளைஞர், யுவதிகள் சமூக ஆர்வலர்களை ஒன்று சேர்த்து ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் தொழிற்சங்க, கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து  கொள்ள வேண்டும் என அடையாளம் அமைப்பின் செயலாளர், சமாதான நீதவான், ஊடகவியலாளர் லயன் பழனி விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். 

சக்தி. அ. பாலஐயா


இலங்கையில் மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கவிஞர், நலிவுற்ற மக்களின் ஏக்கத்துக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக வீச்சுமிக்க தமது எழுத்துக்களாலும், வீராந்த பேச்சுக்களாலும் சிறந்த பணியாற்றி வருபவர். கைதேர்ந்த ஓவியர். பல்கலைகளிலும் ஆற்றல் வாய்ந்த கலைஞராவார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்து சிற்பம், சித்திரம், வண்ண வேலைகள் தொடர்பான துறைகளில் பல கலைஞர்களை உருவாக்கியவர். மும்மொழி வல்லுனர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என பல்துறையிலும் புகழுக்குரிய சக்தி. அ. பாலஐயா மலையக மக்கள் எழுச்சிக்கு பாடுபட்டவர்களில் ஒருவர்.

இலங்கையில் மத்திய மலையகத்தில் விஸ்வநாதர், இலக்குமி அம்மை தம்பதியினரின் புதல்வராக 1925ஆம் ஆண்டு ஜுலை 26 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தபால ஐயா தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார். காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் அந்தப் பத்து வயதிலேயே இவர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

பத்து வயதிலேயே பாட்டெழுதத் தொடங்கினாலும் அதை அவர் ஏனோ தொடரவில்லை. ஓர் ஓவியராகவே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனாலும், இவருக்குள்ளே ஒரு கவிஞன் உருவாகிக் கொண்டே இருந்தான். 

படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர்  ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். ஒரு Commercial Artist  ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒரு சில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் திரு. லோகநாதனின் சிறுகதைத் தொகுதி – சீ.வி. நடத்திய ‘கதை’ என்னும் சஞ்சிகை போன்றவைகளை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 – 1944 ஆம் ஆண்டுகளில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலக்கலை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 1951வரை பணிபுரிந்துள்ளார்.

‘Ceylon Teachers College’  மற்றும் ‘Hay Wood’s College Of Fine Arts’ ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தியின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49 ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன. காலப்போக்கில் இவரது சிந்தனைகள் கவிதைக்கு வித்திட்டன. 1949க்குப் பின் வீராவேசம் கொண்ட இவருடைய கவிதைகளும், கட்டுரை இத்தியாதி எழுத்துக்களும் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.

ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகளை யும்ää ஓவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி’யின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த பத்திரிகையான “வளர்ச்சி” யில் 1956ம் ஆண்டில் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளை தமிழகத்தில் ‘திராவிட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது. 

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணை விளைவாகவே ஆரம்பகால மலையக இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்னும் உண்மை மலையக இலக்கியம் பற்றிய ஆரம்பத் தேடல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே உணர்ந்துவரும் ஒரு முக்கியமான விடயமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து, பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் இத்தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள் பட்டதுன்ப துயரங்களும் அனுபவித்த வேதனைகளும், பட்டாளத்துக் கட்டுப்பாடுகள் போன்ற வெள்ளைக்காரர்களின் இராணுவ அடக்கு முறைகளும் எழுத்திலடங்காதவைகள்.

தங்களின் சக்தி உணராமல், உழைப்பின் பயன் உணராமல் சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய்க் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், சக்தி பாலையா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. ‘நடேசய்யரின் சாதனைகள்’ என்று நிறைய விஷயங்களை தனது கட்டுரைகள் மூலம் வெளியிட்டவர் மக்கள் கவிஞர் சி.வி.

சி. வி. க்கு பரவலான அறிமுகத்தினையும் ஏகோபித்த புகழையும் கொடுத்த ‘In Ceylons Tea Gardens’  எனும் ஆங்கிலக் கவிதை நூலை ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தி .அ. பாலையா. இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. பிறகு செய்தி ரா.மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கில மூலம் 1954- மொழி பெயர்ப்பு 1969)

 ‘கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுதியைத் தமிழாக்கும்போது கவிஞரவர்களின் உள்ளத்தையும் உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையத் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் அலைத்திரல்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன....

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்வில் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளில் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப் பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளை தந்திட முயன்றிருக்கின்றேன்….|| என்று இந்த நூலுக்கான முன்னுரையில் சக்தி குறிப்பிட்டிருந்தாh.;

 1963ல் தினகரனின்  கலை மண்டலம் பகுதியில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதே காலகட்டத்தில் சுதந்திரனில்  மலை நாட்டு அறிஞர்கள்  என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 


 சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய புனைப் பெயர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். 1956ன் அரசியல் கெடுபிடிகள் பற்றி நாம் அறிந்ததே. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழுரிமை  பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் முனைப்புப் பெற்ற காலம் அது. அரசின் பேரினவாதத்திற் கெதிராகவும் அரசியல்வாதிக ளையும்ää சிங்களத் தலைவர்களையும் நேர்மையான வழியில் நடக்கும் படியும் அறிவுறுத்துவதற்காக வென்றே சக்தி பாலையா அவர்கள் இந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘வளர்ச்சி’ பத்திரிகையின் அன்றைய ஆசிரியத் தலையங்கங்கள் மிகவும் காத்திரமானதாகவும்ää காரசாரமானதாகவும் இருந்தன. அவற்றின் முக்கியம் கருதி அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” இத்தலையங்கங்களை மீள் பிரசுரம் செய்து வந்தது.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சக்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்துகொண்டார்.

1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1957ல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். ‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956ல் வெளியிட்டார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ‘இந்திய வம்சாவழிப் பேரவை’ என்னும் அமைப்பினைத் தொடங்கி மலையக மக்களின் நிலைமைகளை இந்திய இலங்கை அரசினர்களுக்கு அறிவிப் பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கான விடிவுகளைத் தேட ஒரு வழி சமைத்தார்.

1981ல் பஸ்ஸிலிருந்து விழுந்து ஒரு கோர விபத்துக்குள்ளானார் சக்தீ. அது பற்றி அவர் கூறுகையில், அவரது மன உறுதியும், வாழ்வின் மீதான அவரது திடமான நம்பிக்கையும், திண்மையும் புலனாகிறது.

    ‘நான் பஸ்ஸினடியில் கிடக்கின்றேன். நான் கிடப்பது பஸ் சாரதிக்குத் தெரியாது. இடது காலின் மேல் பஸ்ஸின் பின் சில்லு ஏறியபோது கால் எலும்புகள் கரகரவென நொறுங்கும் மெல்லிய ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. சில்லு படிப்படியாக எனது முழங்கால், தொடை என்று ஏறி கத்த முடியவில்லை. சத்தம் வர மறுக்கிறது. அப்போது தான் யேசுநாதரின் கிருபையால் அது நடந்தது. யாரோ எனது நெஞ்சுக்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறி கத்து, கத்து என சத்தமிட்டார்கள். கத்தினேன். பஸ்ஸின் சில்லு அசையாமல் நின்றுவிட்டது. என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.

    மாதக்கணக்கில் மருத்துவமனைக் கட்டில் பிறகு இரண்டு கால்களையும் முழங்காலுடன் வெட்டினால் தான் உயிர் பிழைப்பேன் என்றார்கள் டாக்டர்கள். இரண்டு கால்களையும் இழந்த பிறகு நான் எப்படி வாழ்வது. பிடிவாதமாக மறுத்து விட்டேன். மரணத்துடன் வருடக்கணக்கில் போராடி பலவிதமான சுய வைத்தியங்கள் செய்தேன்.

    பிறகு மெதுவாக ஊன்று கோல்களுடன் எழுந்து நடமாடினேன் என்று கூறும் சக்தீ இப்போது ஊன்றுகோலினையும் வீசி எறிந்துவிட்டு மிகவும் சாதாரணமாக எதுவுமே நடவாதது போல் மீண்டும் தனது வேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்று உலாவருகின்றார்.
      இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் கவிச்சுடர் பட்டமளித்துக் கௌரவித்தது (1987). தமிழ் ஒளிபட்டமும் விருதும் 1993ல் வழங்கப்பட்டது.  இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு “மூதறிஞர்”; விருதளித்தது. கலாசார அமைச்சு ~~கலாபூஷணம்|| விருதும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

      தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராக இருந்து கவிஞர் சக்தீ பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களாவன
  • மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் 1952 
  • சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல் 1956
  • தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல் 1969
  • சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு 1998
நன்றி - அவர்கள் நம்மவர்கள்

இருபத்தையாயிரம் ஆசிரியர்களின் வெள்ளிவிழா

 ஹட்டன் ஹைலன்ஸ் தொலைக்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று கடந்த 25 வருடங்களாக சேவையாற்றும் ஆசிரியர்களின் வெள்ளிவிழா நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஹைலன்ஸ் தொலைக்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களும்,பயிற்சி பெற்று ஏனைய மாவட்டத்தில் கடமையாற்றுபவர்களும். ஏனைய மாவட்டத்தில் பயிற்சி பெற்று நுவரெலியா மாவட்டத்தில் சேவையாற்றுபவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு சிறப்பு அதிதிகளாக போதனாசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 2014.05.04 ந் திகதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெறும்.

42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின் - நிகழ்ச்சி நிரல்

42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்
April 26, 2014 at 11:21am

    நிகழ்ச்சி நிரல் 
                    மே மாதம் 17 திகதி   2014  சனிக்கிழமை 
    இடம் : Werkstatt der Kulturen Wissmannstr  32 
12049   BERLIN
 

9:00 சுயஅறிமுகம்

9:30 என் கே ரகுநாதனின் “பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி“ அறிமுகமும் விமர்சனமும்.  :-ஷோபாசக்தி

10:30 தெணியானின் "இன்னும்சொல்லாதவை " வாழுவனுபவங்கள் : சந்துஸ்

11:00 சாதியமும் சுயவிசாரணையும் : -  ஜீவமுரளி

11:30 "தலித்விடுதலையில் சாதியச்சாடல்கள்"
அருந்ததியார் சமூகத்தை முன்வைத்து  :-என் சரவணன்
        நெறிப்படுத்தல் :- ராகவன்

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00 ”இடைநிலை”    :- திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை - விஜயதாசன்

15:00  பாலியல் அரசியல்  :-  லிவிங் ஸ்மைல் வித்யா
      நெறிப்படுத்தல் :- ஹரி  ராஜலட்சுமி 

16:00 மலையகம் : “இருள்வெளிப்பயணம்!  :- மு. நித்தியானந்தன்
      ;.
17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் :
ரவுஃப் முகமட் காசிம்  Rauf Mohamed Cassim
நெறிப்படுத்தல்: என் சரவணன்

18:00 சுமதியின் “இங்கிருந்து”  திரையிடலும் விமர்சனமும்

மே 18 ம் திகிதி 2014 ஞாயிறு

10:00  போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும் : நளினி ரத்னராஜா -
பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர்

நெறிப்படுத்தல்:- உமா

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00   நவதாரளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் :- நிர்மலா ராஜசிங்கம்
மகாண சபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் :-  எம் ஆர் ஸ்ராலின்
நெறிப்படுத்தல் :-தேவதாஸ்

16:00 லீனா மணிமேகலையின் ”வெள்ளைவான் கதைகள்”
திரையிடலும் விமர்சனமும்


வாசுகனின்  “அடையாளம்” ஓவியக்கண்காட்சியும் தமயந்தியின் புகைப்படக்கண்காட்சியும்இடம்பெறும்

தொடர்புகளுக்கு
42ndillakkiyasanthippu@gmail.com
தொலைபேசி

0049 15212861262
00493061617808

நூல் அறிமுகம்: ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வு! - எம்.கே.முருகானந்தன்


கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன. இதற்கு அந்தச் சமூகத்திலிருக்கும் கற்றறிந்தவர்களும், தலைவர்களும் கூட பலதருணங்களில் துணையாக நிற்பது கவலைக்குரியது. 

மலையக மக்களின் கல்வியானது இதற்கு வெளிப்படையான சான்றாகக் கொள்ளத்தக்கது. �தேசிய கல்வி முறைமையின் அமைப்புகளோடு ஒப்பிடும்போது மலையகக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.� என நூலாசிரியரும், �தொழிலாளிகளின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது. சுதந்திரத்திற்கு பின்னரான சமூக அபிவிருத்தி கொள்கைகளும் கூட அவர்களைக் கவனத்தில் கொள்ளவில்லை� என பேராசிரியர் சுவர்ண ஜயவீர கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் மலையக மக்களின் கல்வி பற்றிய ஆய்வு நூலொன்றை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரியும் திரு.தை.தனராஜ் அவர்கள் எழுதியுள்ளார். நூலின் பெயர் 'ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வ' என்பதாகும்
ஆங்கிலத்திலும் தமிழிலும் பயிற்சி பெற்ற ஆசிரியரான காரணத்தினால் அவரது ஆய்வுக்கான தேடல் விரிந்த பரப்பில் சஞ்சரிப்பதைக் காணக் கிடைக்கிறது. இது ஒரு ஆய்வு நூலான போதும், தெளிவும் செழுமையும் கூடிய அவரது நடையும், ஆழமான கருத்துக்களையும் இலகுவான வாசிப்பிற்கு உகந்ததாக்கும் ஆக்க முறைமையும் வாசகனைப் பயமுறுத்தாமல் உள் நுழையத் தூண்டுகிறது எனலாம்.

கல்வி என்றால் என்ன?, கல்வியின் சமூகவியல், தொழிற்பாடுசார் நோக்கும் முரண்பாடுசார் நோக்கும், தாராண்மைவாத நோக்கில் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி- ஒரு முன்மாதிரிகை, சகலருக்குமான கல்விக்கான முன்னெடுப்புகள், ஜொம்ரியன் மாநாடு ஆகிய தலைப்புகளில் நூலுக்கான அடித்தளம் இடப்படுகிறது. அதாவது கல்வி பற்றியும் முக்கியமாக ஒடுக்கப்பட்டோர் கல்வி பற்றியுமான அடிப்படைத் தகவல்களைத் தருவதன் மூலம் மிகவும் ஒடுக்கப்பட்டு பின்தள்ளபட்ட மலையகச் சமூகத்தின் கல்வி பற்றி ஆழமாக சிந்திக்கத் தேவையான பின்னணித் தகவல்களை தருகிறது.

நூலின் முக்கிய பகுதியானது மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி, மலையகத்தில் உரிமைப் போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் தோற்றமும், மலையக் கல்வி, மலையகக் கல்வியின் எதிர்காலம், முடிவுரை ஆகிய அத்தியாயங்கள் ஊடாக மலையகக் கல்வியின் பன்முக பார்வையை முன்வைக்கிறது. ஆரம்ப கட்டங்களில் தொழிலாளர்களே தமது தோட்ட லயன்களில் �திண்ணைப் பள்ளிக்கூட� சாயலில் பாடசாலைகளை அமைத்தனர். பின் மிஷனரிகள், இந்து சமய நிறுவனங்களும் சில பாடசாலைகளை ஆரம்பித்தன. இவை போன்ற ஆரம்பகாலத் தகவல்களும் கிடைக்கின்றன. 

ஆயினும் மலையகக் கல்வி மாற்றாந் தாய் மனப்பான்மையோடுதான் அன்று முதல் இன்றுவரை அணுகப்பட்டதை ஆசிரியர் ஆணித்தரமாகச் சுட்டிக் கட்டுகிறார். இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் கன்னங்காரா தோட்டப் பிள்ளைகளின் கல்வி இந்திய முகவர்களின் பொறுப்பு என்று தட்டிக் கழித்தார். 1960ல் தனியார் மற்றும் மிஷனரி பாடசாலைகள் யாவும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட போதும் தோட்டப் பாடசாலைகள் மட்டும் உள்வாங்கப்படவில்லை. அவற்றை அரசில் ஒன்றிணைக்க சுமார் பத்தாண்டுகள் தேவைப்பட்டதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 1962ல் ஜெயசூரிய ஆணைக் குழு மலையகக் குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமையான தாய்மொழிக் கல்வியை மறுத்து சிங்கள மொழியில் கல்வி ஊட்டப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்தது. இவ்வாறான அதிர்ச்சி தரும் தகவல்கள் மூலம் மலையக மாணவர்கள் காலங்காலமாகக் கல்வியில் புறக்கணிக்கப்பட்டதை கவலையோடு அறிய முடிகிறது.

இன்றும் கூட அங்கு ஆசிரியர், அதிபர், முதன்மை ஆசிரியர், கல்லி அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாரிய தட்டுப்பாடுகளையும், மூலவளத் தட்டுப்பாடுகளையும் இந் நூல் தரவுகளோடு முன்வைக்கிறது. போதாமைகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நின்று விடாது அம்மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட வேண்டிய அவசிய செயற்பாடுகளையும் எடுத்துக் கூறுவதே இந்நூலின் சிறப்பாகும்.

மலையகக் கல்வியின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது மலையகக் கல்விக்கான தரிசன நோக்கு, மலையகக் கல்விக்கான பெருந்திட்டம், மலையகக் கல்விச் செயலகம், மலையக்கல்வி மாநாடு ஆகிய தலைப்புகளில் பேசப்படுகிறது. இறுதியில் �குறைதீர் பாரபட்சம் (Positive Discrimination) என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அது என்ன குறைதீர் பாரபட்சம்?. பாரபட்சம் என்றால் என்ன என்பதை தமிழ் பேசும் மக்கள் தமது நாளாந்த வாழ்வின் ஒவ்வாரு நிகழ்விலும் உணரக் கூடியதாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியதில்லை. 

ஆனால் குறைதீர் என்பது முன்பு அரசியல் சமூக காரணங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை நிவரத்தி செய்வதற்கான விஷேட ஏற்பாடு எனக் கொள்ளலாம். ஒரு சமூகம் நீண்ட காலங்களாக பிற்பட்டிருந்தால், அதனை ஏனைய சமூகங்களின் நிலைக்கு உயர்த்த வேண்டுமெனில் அதற்கென விசேட ஏற்பாடுகள் தேவை. நாட்டிற்கான பொதுவான சட்டதிட்டங்களும் போதாது. அதற்கு மேலாக அவர்களுக்குச் சார்பான, அவர்களை முன்நிலைப்படுத்தும் செயற்பாடுகள் தேவை என்பதேயாகும். 

இத்தகைய ஆலோசனைகள் அரச நிர்வாகத்தின் கவனத்தில் விழுமா அல்லது வழமைபோல செவிடன் காதில் ஊதிய சங்குதானா?

106 பக்கங்களைக் கொண்டது இந்த ஆய்வு நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடு. �மூன்று வருட காலத்தில் பன்னிரண்டு காத்திரமான நூல்களை வெளியிட்டதில் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை பெருமை கொள்கிறது� என தனது காத்திரமான பதிப்புரையில் நீர்வை பொன்னையன் கூறுகிறார். 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் எனப் போராடிய தோழர் கார்த்திகேசனின் 30தாவது நினைவுப் பேருரையாக நிகழ்த்தப்பட்டதின் விரிவாக்கமே இந் நூல். இத்தகைய ஆய்வு நூல்களின் வெளியீடு வரவேற்கத்தக்கது. படைப்பிலக்கியம் விமர்சனம் ஆகியவற்றுடன் திருப்திப்பட்டு நின்றுவிடாது இத்தகைய கனதியான நூல்களின் வெளியீட்டில் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும், கல்வித் துறையிலும் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் சொந்தமாக வைத்திருக்க வேண்டிய முக்கிய நூல் இதுவெனலாம்.

நூல் :- ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வு
நூலாசிரியர்:- தை.தனராஜ்
வெளியீடு :- இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
11, இராஜசிங்க வீதி
கொழும்பு 06.
விலை :- ரூபா 200.00

எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com

மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம்: சகலதுறை மேம்பாட்டிற்கும் அடித்தளமாக அமையும்


இரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்று பின்னணியைக்கொண்ட மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் அதாவது தேசிய அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்துகின்றனர். தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்களுக்கிடையில் தனது வாழ்வை தொலைத்து வாழும் இம் மக்களின் வாழ்வாதார மற்றும் ஏனைய துறை ரீதியான அபிவிருத்தியானது இந்நாட்டின் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கிய நிலையிலையே உள்ளது. நம் மக்கள் நாளாந்தம் எத்தனையோ சவால்களை எதிர்கொள்கின்றனர் அவற்றுள் நிரந்தரக் குடியிருப்பு, காணி, ஊழிய சேமலாப நிதியை உரிய நேரத்தில் பெற முடியாமை, சுகாதாரம், (எத்தனைத் தோட்டங்களில் அம்பியுலன்ஸ் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

போக்குவரத்து, வீதிகள் புனரமைக்கப்படாமை, நிர்வாக அலுவலகங்களில் மொழிப் பிரச்சினைகள், மலையகத்திற்கென நீண்ட காலத் திட்டங்கள் வகுக்காமை. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், மலையக பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினைகள், தொழில் பயிற்சி நிலையங்களின் பற்றாக்குறைகள், தொழில்நுட்ப கல்வி சார் நடவடிக்கைகள் இன்மை.

போதியளவான ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் காணப்படாமை, தோட்டப்புறங்கள் பிரதேச அலகிற்குள் உள்ளடக்கப்படாமை, குறைந்தளவிலான எழுத்தறிவு வீதம், போதியளவான அரச தொழில் வாய்ப்புகள் இன்மை, அடிப்படை ஆவணங்களைப்பெறுவதில் பிரச்சினைகள், அதிகரித்து வரும் போதைப் பொருள் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் பூரணத்துவமின்மை, தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் இணைக்கப்படாமை இவ்வாறு பல பட்டியல்களையே இடமுடியும். எனினும் இன்று மலையகத்தில் கல்வியின் பயன்பாடு பற்றிய கருத்து தெளிவு முன்பிருந்த நிலையை விட சற்று அதிகமாகவே உணர்ந்துள்ளமை சற்று ஆறுதலான விடயம். கல்வியைத் தேடும் மாணவர்களின் தொகை அதிகரித்திருக்கின்றது.

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகையும் அதி கரித்திருக்கின்றது. இதனால் என்னவோ திறந்த பல்கலைக்கழகம், தனியார் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மலையகம் நோக்கி சேவையாற்ற முன்வந்துள்ளது. மலையகம் என்ற சொல்லினால் அடையாளப்படும் இவர்கள் இன்று ஒரு தேசியமாக எழுச்சி கண்டுள்ளனர். பிரதேச ரீதியாகவும் (மாகாண எல்லைகள்), இன ரீதியாகவும் (இந்திய வம்சாவளியினர்), தனக்கென அடையாளப் பதித்த கலாசாரங்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் அம் மக்களை மையமாகக் கொண்டு மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுகின்ற போதே அம் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, ரீதியான முன்னேற்றகரமான மாற்றத்திற்கு, வித்திடும் என மலையக புத்திஜீவிகளால் கோரிக்கைகள் விடப்படுகின்றன. அண்மையில் ‘மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம் மாயை இல்லை. காலத்தின் அவசியம், மலையக மக்களின் 21ம் நூற்றாண்டின் எழுச்சி திட்டமாகும். சில அரசியல் வாதிகளே தடை” என பேராசிரியர் சந்திரசேகரன் கருத்து தெரிவித்திருக்கின்றார் எல்லா மட்டங்களிலும் இது போன்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயங்கள்

* மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுகின்ற போதே அம் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் கல்வி, ரீதியான முன்னேற்றகரமான மாற்றத்திற்கு வித்திடும். தற்போதைய நிலையில் மாற்றம் காணும்.

* ஏனைய சமூகத்தின் கல்வி நிலையுடன் நிகர் தன்மையினை வளர்த்துக் கொள்ள இத்தகைய உயர் கல்வி நிலையங்கள் மலையகத்திற்கு என அவசியம்.

* இலங்கையில் பிரதேச ரீதியான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (கிழக்கு, தென் கிழக்கு, றுகுணு, சப்ரகமுவ, வயம்ப, ரஜரட்ட ஆயின் ஏன் மலையகத்தில் சாத்தியப்படாது.

* மலையக மக்கள் தமது இன ரீதியான அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைவதுடன் அவற்றை வரலாற்று சான்றாகவும் பதியப்பட வாய்ப்பாகும்.

* மலையகத்தை மையப்படுத்திய பல்கலைக்கழகம் அமைவதனால் ஆய்வுகளுக்கான களம் மலையகமாகும். மலையகம் தொடர்பான பல்வேறு தொனிப் பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பளிக்கும்.

* இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளி வாரியாக தனது உயர் கல்வியினைத் தொடர்வதில் மாணவர்களே அதிகமாயிருக்கின்றனர். பரீட்சை நேரங்களில் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகமானது என்பது உண்மையே. சிக்கல்கள் இல்லாது ஒழிக்கப்படும்.

* இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒரு சிலவற்றைத் தவிர பல பல்கலைக்கழகங்களுக்கு தூரம், பயம் காரணமாக பல்கலைக்கழக தகுதிபெற்ற மாணவர்களைக் கூட அனுப்புவதில்லை. (இதிலும் பெண் பிள்ளைகளின் நிலை மிக கவலைக்குரியது.

* மலையக மக்களின் பொருளாதாரம் அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக அமையவில்லை. இந் நிலையில் பிள்ளைகள் தூர இடங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்க போதிய வசதியில்லை என்ற சிந்தனை மலையக பல்கலைக்கழகம் அமையப்பெறுவதன் ஊடாக மாற்றியமைக்கப்படும்.

* வெறுமனே உழைப்பில் மட்டுமின்றி அம் மக்களின் அறிவாற்றல் நிலை, கல்வி நிலை, ஆய்வு நிலை, பிரயோக நிலை என்பனவற்றை அதிகளவில் மேம்படடுத்திக் கொள்ள முடியும்.

* பல்கலைக்கழகம் அமைவதனால் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் வந்தடையும் தற்போதைய மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்பட வாய்ப்பிருக்கின்றது.

* தற்போதைய நிலையினில் 300 மலையக மாணவர்களே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க தெரிவாகின்றார்கள். இன ரீதியில் 3500க்கு மேற்பட்ட மாணவர்களே தெரியப்பட்டால் வேண்டும். இத்தொகை மலையகத்தினை மையப்படுத்திய பல்கலைக்கழகம் அமைவதனால் அதிரிக்கப்பட வாய்ப்புள்ளது.

* தற்போது மலையகத்தில் கலைத்துறையினை விட தொழில் முறை சார் கல்வியினை உருவாக்க முடியும்.

* மலையக மக்கள் மனதில் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு சென்று ஆசிரியராக வந்தால் போதும் என்ற சிந்தனை ஊடுருவி இருக்கின்றதோ அதனைப் போல பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டால் பல்கலைக்கழகம் கல்வி பற்றிய உள்ளுணர்வினை ஏற்படுத்த முடியும். ஆனால் மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்று வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அல்லது இன்னும் தெளிவுறுத்தப்படாத பல்வேறு சிக்கல்கள் மறைந்திருக்கின்றது.

மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படுமானால் மலையக மாணவர்களை மட்டுமா உள்வாங்குவது, எத்தகைய புள்ளி அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள். உள்வாங்கக் கூடிய போதுமான அளவு மாணவர்கள் எம் மத்தியில் உள்ளார்களா? எதிர் காலத்தில் அத்தகைய மாணவர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் என்ன? இத்தகைய வேலைத்திட்டங்கள் இன்றைய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப் படுகின்றதா? பல்கலைக்கழகம் அவசியம் என கோரிக்கை விடுப்பவர்கள் தேவையானதிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முன் வருவார்களா? நடைமுறைப்படுத்தப்படினும் அதன் தொடர் தேர்ச்சி கவனத்தில் கொள்ளப்படுமா? இது போன்ற பல்வேறு வினாக்கள் எழுந்த வண்ணமே உள்ளது.

வெறுமனே பேராசிரியர்களாலும், சிரேஷ்ட விரிவுரையாளர்களினாலும் ஏன் கல்வியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மட்டும் ஒன்று சேரும் பட்சத்தில் இவ்வேலைத்திட்டம் சாத்தியமானதா? அல்லது இவ்வேலைத்திட்ட பின்னணி பலமான அரசியல் தலைமைகளை நாட வேண்டுமா? அவ்வாறாயின் மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒருமித்து செயற்படுமா? அனால் ஒருமித்த செயற்பாட்டினாலேயே அத்திட்டம் சாத்தியம் என்பது மட்டும் உண்மையே.

மலையகத்தில் உயர்தரம் என்றதுமே கலைத்துறையினையே அதிகளவு தெரிவு செய்கின்றனர். ஒரு சில இடங்களிலேயே விஞ்ஞான, கணித வர்த்தக துறைகளைத் தெரிவு செய்கின்றனர். (இதற்கு வள, முயற்சி ரீதியான கேள்வியே காரணமாயிருக்கலாம்) இதை மலையத்திற்கென தனி பல்கலைக்கழகம் நோக்கியதாக கற்கை துறையினைத் தெரிவதில் மாற்றுவதை ஏற்படுத்தல், உயர் தர பெறுபேறுகளை உயர்வடையச் செய்தல் அத்தியாவசியமாகின்றது.

அண்மையில் “2011 மலையக பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல்” என்ற ரீதியில் இ.தொ.கா. வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி யிருக்கின்றது. அதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த திங்களன்று கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சில் கெளரவ அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றிருந்தது. இந்நேர்முகப் பரீட்சையில் சுமார் 245க்கு மேற்பட்ட மலையகப் பட்டதாரிகள் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்கள். கடந்த 10 வருட காலமாக மலையகத்தில் பட்டதாரிகளுக்கான எத்தகையதோர் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்காத நிலையினில் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கதும் கட்டாயம் பாராட்டக்கூடியதாகும்.

பெரும்பாலான மலையகப் பெற்றோர்களின் ஒரே கனவு ‘மகன் படித்து முடித்தும் அரசாங்க தொழில் கிடைக்கும்’ என்பதே கல்வி கற்று 2003, 2008, 2004- 2009, 2005-2010 ஆண்டுகளில் பட்டம் பெற்ற மலையக மாணவர்களுக்கு தகுதியான தொழில் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு எதேச்சையாக ஒரு சிலருக்குக் கிடைக்கும் தொழில் கூட தகைமைக்கேற்ப இருப்பதில்லை. அது மட்டுமன்றி சிறந்த, கற்றல் செயற்பாடுடைய மாணவர்கள் பட்டப்படிப்பு என்பதற்குள் உள்வாங்கப்பட்டு தொழில் வாய்ப்பின்றி முடக்கப்படுகின்றார்கள். தனது அடுத்த உயர் கல்வியைத் தொடர தொழிலின்றி முடக்கப்படுகின்றனர். இதனடிப்படையில் மலையகத்தின் சேவையிலிருந்து மூளைசாலிகள் வெளியேற்றப்படுகின்றனர். பட்டம் பெற்ற பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றி வெளி மாகாணங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வெளியேற்றப்படுகின்றனர். இது சமுதாயத்தின் மேம்பாட்டினை பாதிப்படையச் செய்யுமா? என்பதனை சிந்திக்க வேண்டும் என்பதுடன் “தம் சமூகத்திற்கு வேலை செய்வார்கள் என கல்விக்கு தோள் கொடுத்தவர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைவது” மட்டும் தான் உண்மை.

பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டால் பல்கலைக்கழகம் கல்வி பற்றிய உள்ளுணர்வினை மக்கள் மனதில் ஏற்படுத்த முடியும். மிக முக்கிய கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல்கலைக்கழகக் கல்வி கற்று தன்னுடைய 5வருட வாழ்வினை பூர்த்தியானது என்பதுடன் “இவ்வளவு படித்தும் வேலையில்லை அதிகமாய் படிக்காதே வேலையில்லை” என்ற வார்த்தைகள் மட்டுமே மிச்சம் என்ற நிலை உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து பல்கலைக்கழகம் அவசியம் என குரல் கொடுப்பவர்கள் இது வரையில் வேலையில்லா பட்டதாரிகளின் தொழில் அவசியம் தொடர்பாக குரல் எழுப்பாதது கவலைக்குரியதே.

முதல் பட்டம் ஏதேனும் வகையில் தனது பட்டப்பின் படிப்பிற்கு பதிவு செய்துக்கொண்ட மாணவர்கள் வறுமையின் காரணமாக தனது கல்வியிலிருந்து இடைவிலகுகின்றார்கள். இதுவே தொழில் இன்றி இருக்கும் பட்டதாரி மாணவர்களின் நிலை தனது கல்விக்காக அடுத்த கட்ட நகர்வினை எவ்வாறு முன்னெடுப்பார்கள் என்ற சிந்தனை எழுகின்றது. தற்போது வருடத்திற்கு வெளிவருகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மலையக பட்டதாரிகள் இந் நிலையில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்படின் மலையகப் பட்டதாரிகளின் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளியேற்றமும் அதிகரிக்கும். ஆனால் வேலைவாய்ப்பு பூர்த்தி செய்யப்படுமா? என்ற ஐயம் தொடர்கின்றது.

ஆனால் மலையகத்திற்கு என தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என கருத்துக்களை வெளியிடும் கல்வியாளர்கள் தமக்கு சார்பு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்பது ஏற்க முடியாததாகும். அதனை விட இச் சமூதாயத்தின் சகல துறை மேம்பாட்டிற்கும் ஒரு தனிப் பல்கலைக்கழகம் அடித்தளமாய் அமையும் என்பதில் ஐயமில்லை.ஆனால் அத் திட்ட வெற்றி மலையக தரப்பினர் அனைவரின் முயற்சிகளில் தங்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.

கணபதி ஹெலன்குமார்,
தலவாக்கலை.

நன்றி - தினகரன்

இலங்கை பொருளாதார வளரச்சியின் முதுகெலும்பு மலையக மக்களுக்கு தனி வீடு கட்டிக் கொடுக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையாம் - வெட்கம் கேவலம் - பழனி விஜயகுமார்

இரத்தம், வியர்வை சிந்தி பிறரின் உதடுகளுக்கு சுவையான தேயிலை வழங்கும் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை பட்டியலிடப் போனால் அதற்கு ஒரு கட்டுரை எழுதி போதாது. அந்த பிரச்சினை மூடைகளில் முக்கியமானதுதான் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினை. இலங்கை திருநாட்டில் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து வரும் மலையக மக்களுக்கு சொந்த வீடு, காணி இல்லை என்பது மிகப்பெரிய அவலம்.

உழைத்து உழைத்து ஓடாய் தேயும் மலையக தோட்டத் தொழிலாளர் மக்களுக்கு லயன் குடியிருப்பு ஒன்றே சொந்தமாகவும் சொர்க்கமாகவும் விளங்குகிறது. சில தோட்டங்களில் வேலை இல்லை என்றால் அதற்கும் ஆப்பு. 

மலையகத் தோட்டத் தொழிலாளர் மக்களது காணி வீட்டுப் பிரச்சினை எப்போது தீர்;க்கப்படும். 10 பேஜ் காணியில் தனி வீடு, 7 பேஜ் காணியில் தனி வீடு என்ற கோரிக்கை தற்போது ஆகக்குறைந்தது 5 பேஜ் காணியில் தனி வீடு என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிவிட்டது. 

மலையக மக்களுக்கு மாடி வீடு என்ற திட்டத்தை கொண்டுவந்து ஒரு லயத்தின் மேல் இன்னொரு லயத்தை ஏற்றி வைத்தார்கள். அத்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. காணிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் மலையக மக்களுக்கு எதற்கு மாடி வீடு என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தது. 

பாராளுமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் வாசிக்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது மாடி வீடா தனி வீடா என்பதில் குழப்பம் நிலவியது. காரணம் ஜனாதிபதி உரையின் சிங்களத்தில் மாடி வீட்டுத் திட்டம் என்னும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீட்டுத் திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் குறித்த 50,000 வீட்டுத் திட்டத்திற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது அல்லது எங்கிருந்து பெறப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்படவில்லை. 

எனினும் மலையக மக்களுக்கு மாடி வீடு கட்டிக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அரசாங்கத்துடன் கூட்டுசேர்;ந்துள்ள மலையக கட்சிகள் தொழிற்சங்கங்களும் எதிர்கட்சியில் உள்ள மலையக பிரதிநிதிகளும் சிவில் அமைப்புக்கள் பலவும் எதிர்;ப்பு தெரிவித்திருந்தன. 

இந்நிலையில் மாடி வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தனி வீட்டுத் திட்டம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தி மலையக சிவில் அமைப்புக்களான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் அரசியல் கட்சியான மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. 

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கடந்த 2013 டிசம்பர் 13ம் திகதி பதில் கடிதம் கிடைக்கப்பெற்றது. மேலதிக நடவடிக்கைகளுக்காக கடிதம் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. (கடிதம் 01)


அதன்படி, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு குறித்த நிறுவனத்தால் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் பிரதி ஒன்று மலையக சிவில் அமைப்புக்களுக்கும் ஜனாதிபதியின் சிரேஸ்ட உதவி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (கடிதம் 02)

அதில் இரண்டு முக்கிய கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

01. 'புது வீட்டுத் திட்டம் ஆரம்பித்து தோட்ட மக்களுக்கு தேவையான வீடுகளைக் கட்டிக் கொடுக்க போதுமான நிதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கால்நடை வள அபிவிருத்தி அமைச்சால் 2011ம் ஆண்டுக்குப் பின் அனுப்பி வைக்கப்படவில்லை. மலையக தோட்ட சேவையாளர்களுக்கு வீட்டுத் திட்டம் ஆரம்பிக்க தேவையான நிதி திரைசேரியாலும் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி சபையாலும் ஒதுக்கப்படவில்லை.”

02. 'அதனால் வீடமைப்பு திட்டத்திற்குத் தேவையான நிதியை உங்கள் அமைச்சின் இருந்து வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்வதோடு, அவ்வாறு நிதி வழங்கினால் அந்தந்த தோட்டங்களுக்குத் தேவையான வீடுகளை அந்த தோட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள காணியை கவனத்தில் கொண்டு பொருத்தமான தனி வீட்டுத் திட்டத்தை தயாரித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க முடியும் என்பதை விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கியமான விடயம் அவலம் என்னவென்றால் இலங்கை திருநாட்;டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திரைசேரியில் பணம் ஒதுக்கப்படவில்லை என்பதுதான். மலையக மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

உண்மையில் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட 50,000 வீட்டுத் திட்டம் ஒரு வெற்றுத் திட்டம் என்பதோடு ஏமாற்று நாடகமாகும். காரணம் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையக வீட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த மஹிந்த அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது என்பதும் அதற்கு அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கங்கள் துணை போகின்றன என்பதுவும் தெளிவாகிறது.

வீடமைப்புத் திட்டம் அறிவித்து அதற்கு நிதி ஒதுக்காமல் போனது ஏன் என மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வுசுருளுவு (பெருந்தோட்ட மனித வள அபவிருத்தி நிதியம்) 2011ம் ஆண்டுக்கு பிறகு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதி வழங்காதது ஏன் என அமைச்சர் அறுமுகன் தொண்டமானும் வுசுருளுவு மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இதுவரை வழங்கப்பட்ட நிதியில் எத்தனை தனி வீடுகள் மலையகத்திற்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் விமல் வீரவன்சவும் மலையக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தோட்டத்து இடதுசாரிகள் 1 – ப.விஜயகாந்தன்

ரஷ்ய புரட்சியின் பின் கமியூனிச சித்தாந்தத்தை நோக்கி உலக நாடுகள் ஈர்க்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. அந்த வரிசையில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையின் மலையக பெருந்தோட்டத்தில் வாழ்ந்த சாதாரண தொழிலாளர்கள் எவ்வாறு அல்லது யார்யார் அதன்பால் ஈர்க்கப்பட்டனர் என்பது பற்றிய தேடலே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். தோட்டப்பகுதி இடதுசாரிகளை இனங்கண்டு அவர்களை நேரில் கண்டு அநுபவங்களை பகிர்ந்துக்கொள்ள நாம் முயற்சிப்போம்.
1.ராமன் லெட்சுமன்

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய பள்ளித்தோழர் ஒருவரின் வீட்டுக்கு தற்செயலாக சென்றிருந்தேன். என்னை அமரச்செய்து விட்டு நண்பர் வெளியில் சென்று விட்டார். எளிமையான உபசாரம் கிடைத்தது. “தேத்தண்ணி ஆறிரும் குடிங்க தம்பி” என்று சொல்லிக்கொண்டே ஒரு முதிர்ந்த குரல் எனக்கு எதிரே இருந்த நாட்காலியில் அமர்ந்தது. தொலைகாட்சியில் ரஜினிகாந்தின் ஒரு இடைக்கால படம். கண் இமைக்காமல் நான் பார்த்த விதத்தை அவதானித்த அந்த நபர் அதாவது என் நண்பனின் தந்தையார் “ரஜினி படத்தில் ரொம்ப விருப்பம் போல” என்ற கேள்வியோடு சம்பாசனையை தொடங்கினார். அன்று இவரை பற்றி எங்காவது பதிவு செய்வேண்டும் என நினைத்தேன். மனம் வலிமை தந்தது நமது மலையகம் வாய்ப்பை தந்தது இப்போது எழுதுகின்றேன்.

இலங்கை செஙகொடி சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராமன் லெட்சுமன் கடந்த 14.04.2014 அன்று தனது 76ஆம் பிறந்த தினத்தில் வைத்தியசாலையில் இருந்து மீண்டு பாதி சிந்தை இழந்த நிலையில் தனது வழமையான படுக்கையில் இருந்தார். தனது நினைவுகளை மீட்டு தறபோது உங்களோடு பேசுகின்றார்.

வணக்கம் ஐயா உங்கள் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்
நான் 1938.04.14 அன்று பொகவந்தலவை சமுத்திரவள்ளி (தற்போது சென்.விஜயன்ஸ் என்ற ஆங்கில பெயரால் மட்டுமே அழைக்கப்படுகின்றது. மலையக தோட்டங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பெயர்கள் பற்றி மற்றொரு தனியான கட்டரையில் அவதானிப்போம்) தோட்டத்தில் பிறந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையானது. இருந்தப்போதிலும் எனது பெற்றோர் என்னை படிக்க வைத்தனர். சமுத்திரவள்ளி தோட்ட பாடசாலையிலும் நாவலபிட்டி கதிரேசன் பாடசாலையிலும் பலாங்கொடை ஸ்ரீ புத்த ஜெயந்தி பாடசாலையிலும் கல்வி கற்றேன். பெரிய படிப்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிவை பெற்றுக்கொண்டேன். 1962ஆம் ஆண்டு சமுத்திரவள்ளி தோட்டத்தில் தொழிலாளியாக இணைந்தேன். நாங்கள் வசித்த சமுத்திரவள்ளி தோட்டம் என்ற ஒரு இடம் இருப்பது கூட வெளியில் தெரியாது அவ்வளவு பின்தங்கிய பிரதேசம். திருமணத்தின் பின் தற்போது வசிக்கும் தெரேசியா தோட்டத்திற்கு 1984ஆம் ஆண்டு என் பிள்ளைகளின் படிப்பு கருதி குடும்பத்தோடு வந்து குடியேறினேன்.

நீங்கள் செங்கொடி சங்கத்தில் இணைந்தது பற்றி கூறுங்கள்.
அந்தகாலத்தில் தோட்டங்களில் நிர்வாக கெடுபிடிகள் அதிகம். ரொம்ப கஷ்டமான காலம். என்னிடம் ஒரு 'பீத்தகால்சட்டை' (கிழிந்த காற்சட்டை) தான் இருக்கும் அதை போட்டுக்கொண்டுதான் திரிவேன். நானும் என்னைப்போன்ற ஓரளவு படித்த இளைஞர்களும் வேறு வழியின்றி தோட்டத்தில் தொழிலாளர்களாக இணைய வாய்ப்பு கேட்டோம். நிர்வாகம் படித்தவர்களுக்கு வேலை வழங்க மறுத்தது. அப்போதிருந்த மலையகத்தின் பழம்பெரும் தொழிற்சங்கமும் எங்களுக்கு உதவ மறுத்தது. மாறாக தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து நிர்வாகத்திற்கு ஒத்தாசை வழங்கிக்கொண்டிருந்தனர். இதற்கு மாற்று வழி தேடினோம். ஒரு நாள் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து நான் உட்பட பன்னிரெண்டு இளைஞர்கள் அட்டனில் குணவர்த்தன கட்டிடத்தில் இயங்கிய செங்கொடிச்சங்க காரியாலயத்திற்கு சென்றோம். தோழர்களான சோமு, அமிர்தம் ஆகியோரை சந்தித்தோம். எங்கள் நிலையை கூறினோம். வரவேற்பும் கட்சியில் அங்கத்துவமும் கிடைத்தது. அதற்கு பின்பு தான் தோட்டத்தில் வேலைவாய்ப்பும் மரியாதையும் தலைமைத்துவமும் கிடைத்தது. நான் தோட்டத்தில் தொழிற்சங்க தலைவரானேன். அன்று முதல் இன்று வரை என்னை அறிந்தவர்கள் 'தலைவர்' என்று தான் அழைக்கின்றார்கள். வேலை வழங்க முடியாது என மறுத்த டியுட்டர் ஜயவர்த்தனா என்ற மேலதிகாரி பின்நாளில் என்னிடம் பிடி விட நேர்ந்தது.

1965 என நினைக்கின்றேன் தோட்ட தொழிலார்களுக்கான பதனேழு ஐம்பது (ரூ17.50) போராட்டம் அட்டன் செங்கொடி சங்க காரியாலயத்திற்கு முன் அமைந்திருந்த கொங்ரீட் மேடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தலைவர் அசீஸ் அவர்களின் வருகைக்காக (இணைந்த போராட்டம் என்றபடியால்) எல்லோரும் காத்திருந்தோம். அநேகர் குழுமியிருந்த இடத்திற்கு அசீஸ் இன்னும் வரவில்லை. நாங்கள் போராட்டத்திற்கு வந்தவர்களை அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை. உடனே நான் மேடைக்கு ஏறி பேசினேன். எங்கள் தலைவர் சண்முகதாசனின் 'ஒருநாளுக்கு ஒரு ரூபாய்' என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். அநேக வரவேற்பு கிடைத்தது. அது தான் நான் மேடை ஏறி பேசிய முதல் அநுபவம். அந்த போராட்டம் பத்து சதத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதை நான் இன்றும் கண்டிக்கின்றேன். இந்த முதல் சந்தர்ப்பம் எனக்கு பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது. சண்முகதாசன், சரத்முத்தெட்டிகம, அமரசிறிதொடங்கொட, கஜதீர, ஓ.ஏ.ராமையா, டி.யூ.குணசேகர, ஜெயராம் (தற்போது இஸ்லாத்தை தழுவி ஜமால்டீன் என பெயர் மாற்றிக்கொண்டார்), என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பலரோடு தொடர்பு ஏற்பட்டது. நாட்டின் பல பாகங்களுக்கும் செல்வோம். எனக்கு சிங்களம் பேச தெரியாது கட்சி சார்பாக பல மேடைகளில் தழிழில் உரையாற்றினேன். கட்சி தோழர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை கற்பதற்கான நூல்களை வழங்கினார்கள். வாசிப்போம். பல கலந்துரையாடல்களை நடத்துவோம். அந்நாளில் பிரபல்யமாயிருந்த 'தீப்பொறி' பத்திரிகையை விரும்பி படிப்பேன். தோட்டப்பகுதிகளில் நடக்கும் முக்கிய விடயங்கள் பற்றி பத்திரிக்கைக்கு எழுதுவேன்.

நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட தொழிலாளர் போரட்டங்கள் பற்றி?
சமுத்திரவள்ளி தோட்டத்தில் தொழில்வாய்ப்பை பெறுவதற்காக மேற்கொண்டது தான் என் முதல் போராட்ட அநுபவம். பதினேழு ஐம்பது போராட்டம் எனக்கு புதிய உத்வேகத்தை தந்தது. மாத்தளையில் நடந்த பிரஜாவுரிமை போராட்டம் நினைவிருக்கிறது. சண்முகதாசன் தலைமையில் கட்சி தோழர்கள் பலரும் கலந்து கொண்டோம். பல்கலைக்கழக மாணவர்கள் பெரியளவில் ஒத்துழைத்தனர். அந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டோம். போராட்டம் செய்தல், போராட்டத்தின் இறுதியில் எங்கள் கட்சியின் பெரிய கொடி ஒன்றினை நிலை நாட்டுதல் இதுதான் எங்கள் வழமை. என்னுடன் தொழிலாள தோழர்கள் பலர் ஒத்துழைத்து செயற்பட்டனர். வானக்காடு - கலியப்பெருமாள், சமுத்திரவள்ளி - மூக்கன், நடேசன், ஆறுமுகம், சீனாக்கொலை - தங்கராஜ், பொகவானை - பெருமாள், லொக்கில் - லாசர். மற்றவர்களை மறந்து விட்டேன். பாதிபேர் இறந்துவிட்டார்கள். செல்லையாவும் ஆரோக்கியசாமியும் டன்பாரை தோட்டத்தில் இருந்தார்கள். அங்கே மதுரைவீரன் என்ற மேலதிகாரி மிகவும் கடுமையானவன். மதுரைவீரன் பற்றி ஒருநாள் அட்டன் கட்சி காரியாலயத்தில் பேசிக்கொண்டிருந்தோம். யதார்த்தமாக ஒரு தோழர் 'நீ போய் அவன் மார்கை, மார்க்கால வாங்கு. மிச்சத்த பாத்துக்குவோம்' என சொல்ல, செல்லையாவும் ஆரோக்கியமும் மதுரைவீரனின் ஒரு கையையும் காலையும் வெட்டி அவனின் கொடுமைக்கு முடிவு கண்டார்கள். இன்னமும் டன்பாரை தோட்டத்தில் 'மதுரைவீரன் மொடக்கு' எனும் நினைவிடம் அமைந்துள்ளது. என்னதான் இருந்தாலும் கீனாக்கொலை போராட்டத்தில் எனக்கு பங்குபற்ற முடியாமல் போனமைக்காக மனம் வருந்துகின்றேன்.

1983இல் நடந்த கலவரத்தின் போது தோட்டப்பகுதிகளில் வறுமை பெருகியது. ஒரு கொத்து அரிசியை கூட எடுத்து போக முடியாத நிலை காணப்பட்டது. எங்களது தோட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்து அவர்களின் பசியை போக்க வேண்டும் என்று நினைத்தேன். பொகவந்தலாவை நகரத்தில் P.Tலொறியை வாடகைக்கு அமர்த்தி கோதுமை மாவை சேகரித்துக்கொண்டு பொலிசாரினதும் தோட்ட நிர்வாகத்தினதும் எதிர்ப்பையும் மீறி மக்களின் துயர் துடைக்க முயற்சி செய்து அவர்களின் ஒரு வேளை உணவுக்கு உதவிசெய்தேன்.

உங்களது சீன பயணம் பற்றி?
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல தேவைகளுக்காக பல சந்தர்ப்பங்களில் தோழர்கள் கம்யூனிட் கொள்கைகளுக்கு ஆதரவான நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நதுங்கே, தர்மதாச போன்றவர்களுடன் இணைந்து நானும் சீன நாட்டிற்கு சென்றேன். கமியூனிச கொள்கைகளை கற்றல், பிரமுகர்களை சந்தித்தல், கட்சி கூட்டங்களில் கலந்துக்கொள்ளுதல், அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் என்பனவே எங்கள் பயணத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. இரண்டு மாதம் அங்கே தங்கினோம். எங்களுக்கு லீச்சன் குவா என்ற சீனப் பெண் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்தார். சூட்டே, லின்பியோ, சுவேன்லாய உட்பட பலரை சந்தித்தோம். சீன நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயமும் சீனப்பெருஞ்சுவரும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.





இன்றைய சந்ததியினருக்கு சொல்ல விரும்புவது?
பயமாக இருக்கின்றது. காட்டிக்கொடுப்புக்கள் அதிகரித்து விட்டன. பந்தம் பிடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள். நான் அண்மைய காலத்தில் உறவினர்களை தவிர யாருடனும் தொடர்பு கொள்வது கூட இல்லை. காரணம் நம்பிக்கையானவர்களை சந்திப்பது அரிதாகிவிட்டது. இன்று எமது சமூகம் நிறைய மாறிவிட்டது. இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதும் சிந்திப்பதும் மிகவும் குறைவாக உள்ளது. நான் என் பிள்ளைகளை கூட என்வழியில் பழக்கப்படுத்த தவறிவிட்டேன். அவர்களுக்கு கல்வியறிவினை ஊட்டவதற்கு மட்டுமே முயற்சித்தேன். இப்பொழுது என் தவறை உணர்கின்றேன்.


என்னைப் போல பலர் இருக்கிறார்கள். (ஒரு சிலரின் விபரங்களை தந்தார்) உயிருடன் உள்ளவர்களை தேடுங்கள் கதைக்கலாம். என் உடல் நலம் சரியாகிவிட்டால் ஏதாவது பண்ணுவேன். சாதிக்கலாம். காலம் இன்னும் இருக்கின்றது.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates