Headlines News :
முகப்பு » , » மலையக மக்களிடையே தொழிற் சங்க இயக்கம்

மலையக மக்களிடையே தொழிற் சங்க இயக்கம்


மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க அமைப்பை முதலில் தோற்றுவித்தவர் கே. நடேசுஐயர் ஆவார். அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை முதலில் தோற்றுவித்தனர். அது போலவே இலங்கை சமசமாசக்கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தது.

இவர்களோடு நடேசனும் இணைந்து போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் என தொழிற்சங்க நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டனர். முதன் முறையாக 1940ம் ஆண்டு பதுளையில் மேதினத்தைக் கொண்டாடினர்.

இக் காலகட்டத்திலே கேவா கெட்டப்பகுதி, முல்லோயாத் தோட்டத்தில் வேலை நிறுத்தத்தின் பொழுது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு கோவிந்தன் என்ற தொழிலாளி மரணமானார். என்றாலும் இடது சாரிகளின் தொழிற்சங்கம் 1942ம் ஆண்டு ஆங்கிலேயரால் தடை செய்யப்படடது.

இந்திய எதிர்ப்பு உணர்வு இங்கு வளர்ந்த போது அதுபற்றிப் பேசுவதற்காக இலங்கை வந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒத்துழைப்பால் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது தேசிய இயக்கமாக 39ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்கின்ற அமைப்பை உருவாக்கினர்.

இவர்கள் திரு பெரியசுந்தரம் தலைமையில் தொழிற்சங்க அமைப்பையும் தொடங்கினர். இவர்களது செல்வாக்கிற்கு முன்னாள் நடேசஜயர் தோல்வியைத் தழுவினார். இத்தொழிற் சங்கமே 1950களில் தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் (D,W,C) என்று பெயர் மாற்றம் பெற்றது.

தொண்டமான் ஏனைய எல்லா அமைப்புகளையும் விட மலையக மக்களுடைய தேசீய உணர்வை திறமையாகப் பயன்படுத்தினார். அத்தோடு தனது தொழிற்சங்க அமைப்பைப் பெரிதாகக் கட்டியமைத்து பணபலம் நிரம்பிய ஒரு தொழிற் சங்க சாம்ராஜ்யமாக்கினார்.

இவரது போக்குப் பிடிக்காமல் இ. தொ. கா. வின் செயலாளராக இருந்த ஜெனாப் ஏ. அசீஸ் 1956ஆம் ஆண்டளவில் பிரிந்து ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற் சங்கத்தை உருவாக்கினார்.

இவரோடு ஊ.ஏ. வேலுப்பிள்ளை, நடேசன் போன்றோரும் பிரிந்து சென்றனர். அசீஸின் பின்னர் இ. தோ. கா. வின் செயலாளராக இருந்த வெள்ளையன் என்பவர் அதிலிருந்து வெளியேறி தேசிய தொழிலாளர் சங்கம் என்கின்ற புது அமைப்பைத் தோற்றுவித்தார்.

இதில் ஊ.ஏ. வேலுப்பிள்ளையும் சேர்ந்து கொண்டார். தமிழரசுக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற தொழிற்சங்க அமைப்பை 62ஆம் ஆண்டளவில் உருவாக்கியது. எனினும் மலையக மக்களுக்கு இக்கழகம் அந்நியப்பட்டே இருந்தது. தொண்டமான் தமிழரசுக் கட்சித் தலைவர்களோடு தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொண்டதோடு இக் கழகத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்தது.

இன்று மலையகத்தில் தொண்டமானுடைய தொழிற் சங்கமும் ஐ. தே. .கவின் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர்; சங்கமுமே பெரியவை. 20ற்கு மேற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் அங்கு உள்ளன. இவை தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. என்றாலும் மலையக மக்களுடைய போராட்டங்களை ஐ. தே. க. அரசைப் பாதிக்காத வண்ணம் இன்றளவும் தொண்டமான் நடந்து வருகின்றார்.

மூலம்: pathivu.com
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates