Headlines News :
முகப்பு » » இரா. சடகோபனின் கண்டிச் சீமையிலே நூல் வெளியீடு

இரா. சடகோபனின் கண்டிச் சீமையிலே நூல் வெளியீடு




சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா. சடகோபன் எழுதி வீரகேசரி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டிச் சீமையிலே என்ற இலங்கையின் கோப்பிக்கால வலாற்று ஆவண நூலின் வெளியீட்டு விழா மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் சாஹித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் செப்டெம்பர் 14 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெறும்.

பேராசிரியர் சோ. சந்திர சேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வீரகேசரி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குமார் நடேசன், முன்னணி தொழிலதிபர் தெ. ஈஸ்வரன், ஹில் நீட்ஸ் நிறுவன அதிபர் டி. கிருஷ்ண மூர்த்தி பா.உ. திரு. ஆர். யோகராஜன், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் டாக்டர். எஸ். மோகன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் திரு. மனோகணேசன், முன்னாள் பிரதி அமைச்சர் திரு. பி. இராதா கிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் திரு. வேலுகுமார், சமூக நிலைமாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் திரு.பி.பி. தேவராஜ், மட்டக்குளிய அறிவொளி மன்ற அமைப்பாளர் திரு. கே. டி. குருசாமி, மலையக தேயிலை அருங்காட்சியக ஸ்தாபகர் திரு. பி. முத்துலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

நூலின் முதல் பிரதியை வெள்ளவத்தை லிட்டில் ஏசியா எம்போரியும் நிறுவனத்ததததின் அதிபர் திரு. ஆர்.பி.எஸ். ராமசாமி ராஜரட்ணம் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பெற்றுக் கொள்வார்.

நூலாய்வினை விமர்சகரும் சமூக ஆய்வாளருமான திரு.எம். வாமதேவன், கருத்துரை மூத்த எழுத்தாளர் திரு.மு. சிவலிங்கம், நூல் அறிமுகவுரை கல்வியமைச்சின் பணிப்பாளர் கவிஞர் திரு. சு. முரளிதரன், வெளியீட்டுரை வீரகேசரி ஐ.சி.டி. முகாமையாளர் திரு.எஸ். ரி. தயாளன், வரவேற்புரை செல்வி எஸ். ஷாமினி, தமிழ் வாழ்த்து சக்தி சுப்பர் ஸ்டார் செல்வி வைசாலி யோகநாதன், ஏற்புரை நூலாசிரியர் இரா. சடகோபன், நன்றியுரை கல்வியமைச்சின் தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி. சடகோபன், நிகழ்ச்சித் தொகுப்பு மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

மலையக தமிழ் மக்கள் இலங்கையின் கோப்பித்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக 1820களில் முதன் முறையாக அழைத்து வரப்பட்டதையும் அதன் பின் வந்த 7 தசாப்த காலங்களில் அவர்கள் எவ்வாறு இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வியர்வையையும் இரத்தத்தையும் இறுதியில் உயிரையும் அர்ப்பணித்தார்கள் என்பதை பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணம் தான் இந்நூல். அதன் பின் 1977 வரை தேயிலை ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை உழைத்து தம்மை கட்டெறும்பாக்கி குறுகிப் போனவர்கள். மேற்படி கோப்பி கால வரலாற்றை படிக்கும் எவரது உள்ளமும் உருகும் என்பதில் சந்தேகமில்லை. எனது எழுத்துக்கு மேலாக 192 படங்களும் மேற்படி வரலாற்றை வர்ணிக்கின்றன. எனது இந்தப் பாரிய பணியை ஊக்குவித்து இந்நூலின் விலையான ரூபா 1800 என்பதை மனங்கொள்ளாது நூலொன்றினை விலை கொடுத்து வாங்கி தனது எழுத்துப் பணியை மேலும் ஊக்குவிக்குமாறு அனைவரையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates