Headlines News :
முகப்பு » » ஊவாவில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வியூகம் வகுக்கப்படுமா - எம்.செல்வராஜா

ஊவாவில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வியூகம் வகுக்கப்படுமா - எம்.செல்வராஜா


ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளதால் அது விரைவில் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் அண்மித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங் கள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசி யமாகும். ஊவா மாகாண சபையின் ஆரம்ப காலங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் ஆறாக அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் அடுத்து வந்த மாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து தற்போது மூன்று பிரதிநிதித்துவங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஊவா தமிழ் வேட்பாளர்களிடையே நிலவும் முரண்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதால் இருக்கும் மூன்று பிரதிநிதித்துவங்களையா வது தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகங்களும் ஏற்படவே செய்கின்றன. தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்து செல்லுமானால் மாகாணத்தின் தமிழ் மக்கள் பாதிப்படைவார்கள்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் புரிந்துணர்வுடனும் சமூக நோக்குடனும் செயற்பட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். இந்த வேட்பாளர்கள் அனைவரும் மலையக தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தல் களத்தில் இறங்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமேயானால் அது சமூக மேம்பாட்டை முன்னிலைப்படுத்தியதாக அமையும்.

தனித்துவம் என்ற பெயரில் பெரும்பான்மையின அரசியல் முக்கியஸ்தர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவும் தனித்தனியாகவும் தேர்தலில் களம் இறங்குவார்களேயானால் சமூகத்தின் சாபத்திற்கும் இவர்கள் இலக்காக வேண்டிவரும்.

களம் இறங்கும் தமிழ் வேட்பாளர்களின் எண்ணி க்கை கனிசமானளவு குறையவே செய்யும். வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருப்பவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி அவர்களின் வெற்றிக்காக செயற்படல் வேண்டும். களம் இறங்கும் வேட்பாளர்களின் பின்னணி குறித்தும் அத்தகையவர்களின் சமூக மேம்பாட்டு செயற்பாடுகள் பற்றியும் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்கமைய அத்தகைய வேட்பாளர்களை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்ற முடிவினை எடுக்க வாக்காளர்கள் முன் வரவேண்டும்.

நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக ஆகக்கூடுதலான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாக பதுளையே உள்ளது. இம்மாவட்டத் தில் ஒரு இலட்சத்து நாற்பத்திரெண்டாயிரத்து பதின்மூன்று தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகமாகும். ஆனாலும் இவ் வாக்காளர்களின் அரைவாசிப்பேர் வாக்களிக்கவே செய்வர்.

அண்மையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலின் நுவரெலியா மாவட்ட தமிழ் மக் கள் சமூக ரீதியில் ஒன்றுபட்டு ஆளும் கட்சிசார்பாக போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒரு தமிழரையும் வெற்றியடைய வைத்து மத்திய மாகாண சபைக்கு பதினான்கு தமிழரை மொத்தமாக தெரிவு செய்திருக்கின்றனர். இச்செய ற்பாடானது தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய நடவடிக்கையாகும்.

இதேபோன்று ஊவா மாகாண சபைக்கு போட்டி யிடும் ஆளும் கட்சி தமிழர்கள் அறுவரையும் பதுளை மாவட்ட தமிழ் வாக்காளர்கள் தெரிவு செய்வார்களேயானால் அது ஒரு சாதனை வெற்றி யாக அமையும். அவ்வகையில் எதிர்க்கட்சி சார்பாக ஒரு தமிழர் வெற்றி பெற்றால் ஊவா மாகாண சபையின் ஆரம்ப காலம் போன்று ஏழு தமிழர்கள் அங்கம் வகிக்கக்கூடிய சபையாக ஊவா மாகாணசபை விளங்கும்.

ஊவா மாகாண தமிழ் மக்களின் மேம்பாடுகளு க்கு ஆளும் கட்சி சார்பாக தமிழ் பிரதிநிதித்துவங் கள் கூடினால் மட்டுமே சாத்தியமாகும். இதனை மக்கள் புரிந்துகொள்ளல் வேண்டும்.

ஊவா மாகாண சபையின் பதுளை மாவட்ட தலைமை வேட்பாளர் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பாரேயா னால் அதன் விகிதாசாரத்திற்கமைய கடைசி வேட்பாளர் பதினையாயிரம் வாக்குகளை பெற்றிருந்த போதிலும் சபைக்கு தெரிவாவார். ஆனால், பதுளை மாவட்ட தலைமை வேட்பாளர் நாற்பதுக்கும் நாற்பத்தைந்துக்குமிடைப்பட்ட விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அவ்வாறான விகிதாசாரத்திற்கமைய கடைசியாக தெரிவு செய்யப்படும் வேட்பாளர் இருபத்தையாயி ரம் விருப்பு வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதனை தமிழ் வாக்காளர்கள் புரிந்து செயற்பட்டு தமிழ் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

மலையக தமிழ் கூட்டமைப்பு அமைப்பில் அனைத்து தமிழ் வேட்பாளர்களும் ஒன்றிணையாத வகையில் தமிழ் மக்களின் தமிழர் பிரதிநிதித்துவ அதிகரிப்பென்பது சாத்தியமாகாது. காலம் கடந்தாயினும் அவ்வகையான கூட்டமைப்பு அமைந்தேயாக வேண்டும். அதன் மூலமே பேரம் பேசக்கூடிய நிலையும் உருவாகும். ஊவா மாகாண சபைத் தேர் தலில் பெரும்பான்மை அரசியல் முக்கியஸ்தர்க ளின் பட்டியலில் களமிறங்கும் தமிழர்கள் பெரும் சிரமப்பட்டே வெற்றி பெறல் வேண்டும். அதன் வெற்றிக்கு இம்முறை சரத் பொன்சேகா தலைமையிலான ஜனாநாயகக் கட்சியும் அநுரகுமார திஸா நாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் பெரும் தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் கட்சி பட்டியலில் களமிறங்கி தோல்வி கண்டாலும் அவர் சபைக்கு தெரிவாகாவிட்டா லும் இணைப்பாளர் பதவியொன்றுடன் அவரது நடவடிக்கையை மேற்கொள்வார் அத்தகைய நிலைமை ஆளும் கட்சியில் மட்டுமே இருந்து வருகின்றது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி மற்றும் பண்டாரவளை ஸ்ரீபத்திர காளி யம்மன் ஆலய பிரதம குருவான சுதாகர சர்மா தலை மையிலான இலங்கை தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட மூன்று சுயேச்சைக் குழுக்களும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தமிழர் அமைப்புகளைவிட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஆறு தமிழ் வேட் பாளர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு தமிழ் வேட்பாளர்களும் மக்கள் விடுதலை முன்னணி யில் இரு தமிழ் வேட்பாளர்களும் உள்ளடக்கப் படவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலி ருந்து தெரியவந்துள்ளது.

நன்றி - வீரகேசரி 18.05.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates