Headlines News :
முகப்பு » » இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்- நூல் விமர்சன நிகழ்வு சில குறிப்புகள் லெனின் மதிவானம்

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்- நூல் விமர்சன நிகழ்வு சில குறிப்புகள் லெனின் மதிவானம்


கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் கலாநிதி ந. இரவீந்திரன் எழுதி இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் என்ற நூல் விமர்சனம் நடைபெற்றது. இதனை புதிய பண்பாட்டுத் தளம் அமைப்பினர் ஒழுங்கமைத்திருந்தனர். மறைந்த தோழர் றோசாரியோ பெர்ணாண்டோ அவர்களுக்கான புரட்சிகர அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட  இந்நிகழ்விற்கு மலையகத்தின் மூத்த இடதுசாரி இயக்கத் தோழர், கல்வியலாளர் திரு. பி. மரியதாஸ் தலைமைத் தாங்கினார். அவர் தமது உரையில் ~~தேசியம் என்பது சுமார் பதினைந்தாம் நூற்றாண்டிலே தோற்றம் கொண்டு வௌ;வேறு காலப் பின்னணியில் வௌ;வேறு வர்க்க நலன்களை பிரதிபலித்து வந்திருக்கின்றது.

தேசியம் தோற்றம் கொண்ட காலம் முதலாக ஒடுக்கும் தேசியமாகவும், ஒடுக்கப்புடும் தேசியமாகவும் தன்னை கட்டமைத்துக் கொண்டு வளர்ந்து வந்திருக்கின்றது. இது இவ்வாவறிருக்க, ஐரோப்பியாவிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோற்றம் பெற்ற மார்க்சிய தத்துவமானது உலக அடிமைத் தனத்தை தகர்ப்பதற்கான மார்க்கத்தைக் காட்டி நின்றது. சமூகத்தில் காணப்பட்ட சுரண்டலையும் அடக்குமுறையையும் எதிர்த்து அதற்கு எதிரான ஸ்தாபன வடிவம் கொடுப்பதிலும் அத்தத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. இருப்பினும் இடதுசாரி இயக்கமானது இன்று உலக அளவில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளன. காலப்Nபுhக்கில் இடதுசாரிகளிடையே காணப்பட்ட குழு இழுபறிநிலை எதிரிகளை விட நண்பர்களைத் தாக்குவதில் அதிக கவனம் எடுத்திருப்பதாக தெரிகின்றது. இந்த போக்கு ஆரோக்கியமானதல்ல.

இடதுசாரிகள் பலர் விரக்தியில் மூழ்கி சமூகச் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது. இந்த பின்னணியில் ஒரு இடதுசாரி இயக்க புனரமைப்பு குறித்து சிந்திக்கின்றபோது நாம் நம்மை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியுள்ளது|| எனக் குறிப்பிட்டார். இந்நூல் குறித்த விமர்சனத்தை செய்ய வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வகையில் நூல் பற்றிய எனது விமர்சனம் பின்வருமாறு அமைந்திருந்தது.~~இதுவரைக்கால மார்க்சிய வரலாறுக் குறித்து நோக்குகின்ற போது அத்தத்துவமானது மாறி வருகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப புனரமைக்கப்பட்டே வந்துள்ளது. மார்க்சியத்தை வரலாற்று அடிப்படையிலும் இயக்கவியல் அடிப்டையிலும் புரிந்து கொள்ள முனைந்ததின்  விளைவே லெனினிஸம் மாஓலிஸமாகும். இது இவ்வாறிருக்க நமது பண்பாட்டுச் சூழலில் மார்க்சிய பிரயோகம் குறித்து நோக்குகின்றபோது ஐரோப்பிய மார்க்சியத்தை அப்படியே பிரயோகிக்க முற்பட்ட நிலையே காணப்படுகின்றது. நமது பிரயோக சூழலுக்கு ஏற்ற வகையில் மார்க்சிய பிரயோகம் குறித்த பரிசோதனைகள் நடைபெற்றுள்ளபோதும் முன்னோர் வசனங்களுக்குள் முடங்கி விடுகின்ற நிலையே பெரிதும் காணப்படுகின்றது. நமது பண்பாட்டு சூழலின் 'அக அமைப்பு தனித்துவங்கள"; பற்றி பேசாது பொதுமைப்பாட்டை பற்றியே பேசிக் கொண்டிருந்ததன் விளைவு எம்மை தவறுகளுக்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஒரு முரண்பாட்டை பிரதானப்படுத்தி ஏனைய முரண்பாடுகளை கைநழுவவிட்டமை இத்தவறுகளுக்கு பிரதான காரணமாக அமைந்தது. இவ்வாறானதோர் சூழலில் மார்க்சிய நடைமுறை சார்ந்த தேடுதலினூடாக தோழர் ந. இரவீந்திரன் வந்தடைந்த கோட்பாடே 'இரட்டைத் தேசியம்" ஆகும். இவ்விடயம் இன்று அரசியல், பண்பாட்டுத் தளத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தருணத்தில் வெளிவந்துள்ள ~இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும்| என்ற இந்நூல் முக்கிய கவனிப்புக் குறிய ஒன்றாகும்".

கருத்துரை வழங்கிய ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லுரியின் துணைப்பீடாதிபதி  திரு. வ. செல்வராஜா தமது உரையில் ~~தேசியம் என்ற சிந்தனைப் போக்கானது ஏறத்தாள பதினைந்தாம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டது. அதற்கு முந்திய காலங்களில் நாடு என்ற பெயரே பாவிக்கப்பட்டது. ஆனால் தேசியம் என்ற சிந்தனை உருவானபோது தேசம் என்ற சொல்  அழைக்கப்பட்டது. தேசியம் என்பது ஒரு நாடு குறித்த உணர்வாக இருக்கலாம், பிரதேசம் குறித்த உணர்வாக இருக்கலாம், ஒரு மக்கள் குறித்த உணர்வாக கூட இருக்கலாம். குறித்த மக்களிடையே இவ்வுணர்வுகளை; பிரதிபலிக்கும்போது அது உணர்ச்சித் தன்மை மிக்கதாக காணப்படுகின்றது. ஒரு அடக்குமுறையிலிருந்து நாடு, பிரதேசம், மக்கள் விடுதலைப் பெறத்துடிக்கின்றபோது தேசியம் தோற்றம் பெறுகின்றது. அந்த அளவில் அது முற்போக்கானதாக இருக்கின்ற அதே சமயம் அது குறுகிய வாதமாக வெளிப்படுகின்றபோது, எடுத்துக்காட்டாக இனம், சாதி, மதம் போன்ற அம்சங்களில் வெளிப்படுகின்றபோது அது குறுந்தேசியமாக்கப்படுகிறது. ஒரு வகையில் அவை சமூகப் போராட்டங்களையும் -வர்க்கப் போராட்டங்களையும் சிதைப்பதாக உள்ளது. தேசிய வாதத்தின் தர்க்க ரீதியான விளைவை நாம் ஜெர்மனியில் தோன்றிய நாசிசத்திலும் இத்தாலியில் தோன்றிய பாசிசத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தேசியம் என்பது ஏதாவது ஒன்றில் தன்னை பிணைத்துக்கொண்டு வெளிப்படுவதாகவே இருக்கின்றது. இதுவரைகால வரலாற்றை எடுத்து நோக்குகின்றபோது தேசியம் மனித குலத்திற்கு விரோதமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து முடிந்த தமிழ்த்தேசிய போராட்டம் என்பது இந்திய, அமெரிக்க நலன்களின் பின்னணியிலே முன்னெடுக்கப்பட்டு தோல்வி கண்டது|| எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் ஏற்புரை வழங்கிய கலாநிதி திரு. ந. இரவீந்திரன்: 'இன்று இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் மூத்த இடதுசாரியான மரியதாஸ் அவர்கள் வெளிநாடு செல்ல இருப்பதால் அவசரமாக அவர் தலைமையில் இந்த வெளியீட்டை செய்ய நேர்ந்தது; அவரும் கருத்துரை வழங்கிய நண்பர் செல்வராஜும் புத்தகத்தைப் பார்க்காமலே வந்து பங்கேற்க நேர்ந்தமைக்கு மன்னிப்புக் கோருகிறேன். ஒடுக்கும் - ஒடுக்கப்படும் தேசங்கள் என்ற வடிவில் பிறந்ததுமுதல் இரட்டைத் தேசியமாக உள்ளதும்இ இந்தியாவில் தேசியம் தோற்றம் பெற்றபோதே இரண்டாயிரம் வருடங்களாக இருந்துவரும் சமூக சக்திகளான பிராமணர் - ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பன ஆதிக்க சாதித் தேசியம் ஒடுக்கப்பட்ட மற்றும் இடைச் சாதித் தேசியங்களை வெளிப்படுத்தியமையைக் கொண்டுதான் இரட்டைத் தேசியம் என்பதைக் கண்டறிந்தேன் என்பதற்கில்ல; முதன்முதலில் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் இதற்கான அருட்டுணர்வு ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் நான் பேசிக்கொண்டிருந்த கூட்டமொன்றில் சபையிலிருந்து ஒருகுரல் 'இடதுசாரிகள் தமிழ்த் தேசியத்திற்குத் துரோகம் செய்தவர்கள் தானே' என்று எழுந்தது. அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஐம்பதுகளின் பிற்கூறில் தமிழ்த்தேசியம் முளைவிடத்தொடங்கியபோது அதைவிடவும் சாதிமுறைக்கு எதிரான போராட்டம் முனைப்புடையதாக இருந்தது.

முற்போக்கான யாழ்பாண இளைஞ்ஞர்களால் 1925 இல் சுவாமி விபுலானந்தர் தலைமையில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருந்தே சாதிமுறைக்கு எதிரான போர்க்குரல் வலுவடைந்து வந்தது. ஆதிக்க சாதியினரது ஆதரவும் இருந்த நிலையில் சதிசெய்து பிளவுபடுத்த இடமில்லாவகையில் நாற்பதுகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றிணைந்த சிறுபான்மைத் தமிழர் மகா சபை தோன்றியது. அறுபதுகளில் அனைத்து சாதியினரும் தலைமையில் பங்கேற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உருவாகி தீர்க்கமான போராட்டங்கள் சாதியத்துக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டன. அவற்றுக்கு கொம்யூனிஸ்ட்டுகள் வழிகாட்டியதோடு தலைமையேற்று பங்காளிகளாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். இதுவே பிரதான வரலாற்றுச் செல்நெறியாக இருந்தபோது அதைனை ஆதரித்திருக்க வேண்டிய தமிழ்த்தேசியர்கள் ஆதரிக்காதது மட்டுமன்றி அதற்கு எதிராகவும் இயங்கினார்கள் என்பதாகப் பேசினேன். இந்த சிந்தனையின் வளர்ச்சியாகவே இரட்டைத் தேசியக்கோட்பாடு தோற்றம் பெற முடிந்தது." எனக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய சமூகத்தில் வர்க்க பிளவு காணப்பட்டது போன்று இனக்குழு சமூகத்தில் இல்லை. அங்கே ஒடுக்குமுறைக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவர் மத்திய தர வர்க்கமாகவோ அல்லது முதலாளியாகவோ மாறிவிட்டால் அவர் புதிய வர்க்கத்திற்கான அடையாள மாற்றத்தை பெற்றுவிட முடியும். ஆனால் சாதி சமூகத்தில் அத்தகைய வர்க்க மாற்றத்தை பெற்றால் கூட அவரது சாதி ஒடுக்குமுறை கலைவதில்லை. எனவே சாதிய கட்டமைப்பு என்பது மேல் சாதி, கீழ் சாதியினரை ஒடுக்குவதற்காகவும் சுரண்டுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகவே இருந்து வந்து இன்று வரை தொடர்வதாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஏகாதிபமத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் சாதியத்திற்கு எதிராக போராட்டத்தையும் சரியான திசையில் அடையாளம் கண்டு ஒரு வெகுஜன போராட்டமாக முன்னெடுப்பதற்கு பதிலாக அவை குறுங்குழு வாதமாக முடக்கப்பட்டமை துரதிஸடவசமான ஒன்றாகும். இன்று   தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரைத் தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற தன்மையிலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றது. இங்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் இதன் முக்கிய அங்கமாக திகழக்கூடிய சாதி எதிர்ப்பு போராட்டமும் பிளவுபட்ட தேசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்பு போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமும் முனைப்பு பெற்றுக் காணப்பட்டது. இடதுசாரிகள் அதன் அடுத்த கட்டமான தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்திருப்பார்களாயின்  - ஜனநாயக சக்திகளை வென்றெடுத்திருக்க முடியும்.

சிங்கள மக்களுடன்  ஐக்கியப்படுத்தல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும். அதே சமயம் இலங்கை தமிழர் சமூகவமைப்பில் புரையோடிப்போயிருந்த சாதியத்திற்கு எதிரான போராட்;டத்தை தமது வெள்ளாளர் சாதியவர்க்க நலனின் அடிப்படையில் நிராகரித்த தமிழரசுக் கட்சி சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான பார்வை கொண்டிருந்தது. 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தது இவ்வணியினரின் முற்போக்கான அம்சம் என்பதையும் இன்று நாம் கவனத்தில் எடுத்தல் வேண்டும். இதன் பின்னணியில் தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராக அந்த அணியினை நாட வேண்டியவர்களாக இருந்தனர். தமிழரசுக் கட்சியினர் அப்போராட்டத்தை இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர் என்பது இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்வகையில் நோக்குகின்ற போது இந்தியாவில் ஏகாதிபத்தியத்தி;ற்கு எதிரான போராட்டமும்  சாதியத்திற்கு எதிரான போராட்டமும்  பேரினவாதத்திற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டமும் பிளவுப்பட்டிருந்தது என்பதை ஆய்வு அடிப்படையில் வெளிப்படுத்துகின்றது இந்நூல்.

நன்றி - தினக்குரல் 11.04.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates