Headlines News :
முகப்பு » » மலையகத்தில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையாளர்கள் - துரைசாமி நடராஜா

மலையகத்தில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையாளர்கள் - துரைசாமி நடராஜா


நாட்டில் விசேட தேவை கொண்டவர்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. எனினுமஇ் இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. மலையகத்தைப் பொறுத்தவரையில் விசேட தேவை கொண்டவர்களின் நிலைமை மேலும் மோசமடைதுள்ளது. விசேட தேவை கொண்டவர்கள் பலர் இனம் காணப்படாத நிலையில் இலைமறை காயாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில் இனம் காணப்பட்டுள்ள விசேட தேவை கொண்டவர்களின் நலனோம்பு நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகியுள்ளதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

விசேட தேவை என்பது யாருக்கும் எப்போதும் ஏற்படலாம். பிறப்பின் காரணமாக ஒருவர் விசேட தேவை கொண்டவராக உருப்பெறலாம். அல்லது நோய்இ விபத்து போன்றவற்றின் காரணமாகவும் விசேட தேவை கொண்டோராக ஒருவர் மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவ்வகையில் நிலவிய கொடிய யுத்தம் விசேட தேவை கொண்ட பலரை உருவாக்கி விட்டிருக்கின்றது. யுத்தத்தின் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாக பலர் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் தெரிந்த விடயமாகும்.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் வலது குறைந்தவர்களாக அதாவது விசேட தேவையுடையவர்களாக இருப்பதாக கடந்த வருடம் வெளியான ஒரு தகவல் வலியுறுத்துகின்றது. இவர்களில் 55 ஆயிரத்து 582 மாணவர்கள் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருந்தனர். உலக மக்களில் சுமார் இரண்டு சதவீதமானவர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கையில் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வாகன விபத்துகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்விபத்துகளின் விளைவாக வருடாந்தம் பலர் உயிரிழப்பதும் மேலும் பலர் விசேட தேவை கொண்டவர்களாவதும் யாவரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் நாளொன்றுக்கு 100 தொடக்கம் 103 வரையான விபத்துகள் இடம் பெறுவதாக 2011 ஆம் ஆண்டு செபடெம்பர் மாதம் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இவ்விபத்துகளில் 45 சதவீதமானவை பாரதூரமானவையாக இருந்தன. இவ்வாறு இடம்பெறும் விபத்துகளில் நாள்தோறும் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரையில் பலியாகின்றனர். 2007 ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி நாட்டில் ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 52 பேர் அரசாங்க வைத்தியசாலைகளின் திடீர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 1இ389 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வாகன விபத்துகளில் 595 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் அங்கவீனர்களாகியும் உள்ளனர். வாகன விபத்துகளின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 1977 இல் அமெரிக்க ஐக்கிய குடியரசில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாட்டிலே பார்வைக் குறைபாடுள்ள மக்களின் தொகை 11.4 மில்லியன்கள் என்று தெரியவந்தது. அவர்களுள் 1.4 மில்லியன் அளவினர் மூக்குக்கண்ணாடி அணிவதன் மூலம் சரியான பார்வையை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். ஐரோப்பாவில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்ற நாடுகளில் 1983 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாடுகளில் மொத்த மாணவர் தொகையில் 0.17 சதவீதமானவர்கள் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. இவர்களுள் 0.008 வீதமானோர் முழுப்பார்வையற்றோர் 0.159 சதவீதமானோர் அற்ப பார்வை உடையவர்களாவர்.

1991 இல் இலங்கை பாடசாலை ஆட்கணக்கெடுப்பு அறிக்கையின்படி இலங்கையின் மொத்த பாடசாலை மாணவர் தொகையில் 0.45 சதவீதமானோர் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாவர். இவர்களுள் 0.14 சதவீதமானோர் விசேட கல்வி வசதிகளைப் பெற்று வந்தனர். மீதி 0.31 சதவீதமான மாணவர்கள் சாதாரண பாடசாலைகளிலேயே கல்வி கற்று வந்தனர்.

மீத்திறன் உடையோர் கற்றல் இயலாமையைக் கொண்டவர்கள், பேச்சுக் குறைபாடுடையோர்இ பார்வை மற்றும் செவிப்புல குறைபாடுடையோர் மெதுவான உளவளர்ச்சி கொண்டவர்கள், உக்கிர மனவெழுச்சியுடையவர்கள், பல விதமான இயலாமை உடையவர்கள், உளக்குறைபாடுடையோர, தற்சிந்தனை  கொண்டவர்கள். நெறி பிறழ்ந்த இளம் குற்றவாளிகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினருக்கும் விசேட உதவி தேவைப்படுகின்றது.

விசேட உதவி தேவைப்படுவோரின் உரிமைகளை பல்வேறு பிரகடனங்களும் மனித உரிமைச் சாசனங்களும் வலியுறுத்துகின்றன. மனித உரிமைகள் பிரகடனம் சகலருக்கும் கல்விப் பிரகடனம் வலது குறைந்தவர்களுக்கான செயற்றிட்டம் சலமன்கள் அறிக்கை என்பன அவற்றுள் சிலவாகும்.

விசேட தேவை உடைய மாணவர்கள் கல்வி பயிலும் விசேட பாடசாலைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். விசேட பாடசாலை பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளவும் இடைவினை புரியவும் சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றனர். சாதாரண பிள்ளைகளும் விசேட பிள்ளைகளுடன் இடைவினையாற்றும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றனர். விசேட பாடசாலை கல்விக்கென்று பெரும்பாலும் பிள்ளைகள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதால் தமது சுற்றாடல் மற்றும் சம வயதுக் குழுக்கள் உடனான சமூகத் தொடர்புகளை இழக்கின்றனர். விசேட பள்ளிகளின் பருமன் அவற்றின் நிறுவனப்படுத்திய தன்மை என்பன மிகவும் குறுகியது. கலைத்திட்டம் மிகவும் வரையறைக்குட்பட்டது. இதன் காரணமாக பிள்ளைகளின் பரந்த கல்வி வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் மிகக் குறைந்ததாகும் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் விசேட பாடசாலைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

விசேட பாடசாலை பொருத்தப்பாடற்றது என்ற நிலையில் விசேட தேவை கொண்ட மாணவர்கள் சாதாரண மாணவர்களுடன் ஒரே வகுப்பறையில் இணைந்து கற்கும் உட்படுத்தல் கல்விமுறை (ஐnஉடரளiஎந நுனரஉயவழைn) தொடர்பாக கருத்துரைக்கப்பட்டது. உட்படுத்தல் கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல. பிள்ளைகளின் கற்றலுக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணல்இ அவற்றை இயன்றளவு குறைத்தல்இ பிள்ளைகளினது பங்கேற்பையும் கற்றலையும் உயர்மட்டமாக்கல்இ வளங்களை பயனுறுதிமிக்கதாக உபயோகித்தல் ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதி செய்யும் ஒரு புதிய கல்வி எண்ணக்கருவே உட்படுத்தற் கல்வியாகும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் கையேடு ஒன்று உட்படுத்தற் கல்வியை வரைவிலக்கணப் படுத்துகின்றது.

உட்படுத்தற் கல்வி பயனுறுதிமிக்க கல்வி முறையாகும். பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து இருப்பதே மிகவும் சிறந்தது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சிறந்த கல்வியைப் பெறுவதற்கு சாதாரண பாடசாலையைக் காட்டிலும் பொருத்தமான இடம் வேறில்லை. கல்வி வளங்களை உபயோகிப்பதற்கான சிறந்த முறையே உட்படுத்தற் கல்வியாகும். ஏற்றுக்கொள்ளல் சினேக மனப்பான்மைஇ கூடுதல் விளக்கம் பெறல்இ பயம் நீங்குதல் போன்ற பல திறன்கள் உட்படுத்தற் கல்வியில் மாத்திரமே காணப்படுகின்றன என்று பலவாறாக உட்படுத்தற் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்விமான்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

உட்படுத்தற் கல்வியின் அடிப்படையில் திறமையின்மைஇ பால் நிலைஇ பேசும் மொழி, இனம் மற்றும் கலாசாரம் போன்ற வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது சகலரையும் சமமாக மதிப்பதன் மூலமாக பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்தலே பாடசாலைகளின் கடமையாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விசேட தேவை கொண்டவர்கள் தொடர்பாக நாம் பார்க்கின்றபோது மலையகப் பகுதிகளில் கணிசமான விசேட தேவை கொண்டவர்கள் இருந்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. பேச்சுக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கற்றல் தொடர்பான பிரச்சினைகள் இவற்றோடு வேறு உடல் மற்றும் உளரீதியான குறைபாடுகளை கொண்டவர்கள் மலையகப் பகுதிகளில் காணப்படுகின்றார்கள். இத்தகையோரை இனம் காணும் அல்லது இனம் காணப்பட்டோரின் நலன்களைப் பேணும் நடவடிக்கைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது குறித்து ஆழ் நோக்க வேண்டியுள்ளது.

விசேட தேவை கொண்டவர்களின் நிலைமைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது தொடர்பாக ஹட்டன் கல்வி வலயத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாந்தமலர ்போசனுடன் தொடர்பு கொண்டு கருத்து வினவினேன். இதன்போது திருமதி டோசன் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையகத்தின் ஹட்டன் பகுதியில் விசேட கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆசிரியர ஆலோசகர்கள் விசேட கல்வி ஆசிரியர்கள் என்பவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக விசேட தேவை கொண்டவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள்இ அதிபர்கள் என்போர் விசேட கல்வி அபிவிருத்தி கருதி தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.

எனினும் முழு மலையகம் என்ற ரீதியில் நோக்குகின்றபோது திருப்திகொள்ள முடியவில்லை. பெரும்பாலான கல்வி வலயங்களில் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் விசேட கல்வி உதவிப் பணிப்பாளர்கள் என்போர் இல்லாதுள்ளனர். பல பாடசாலைகளில் விசேட தேவை உடைய மாணவர்கள் இருக்கின்றபோதும் விசேட கல்வி ஆசிரியர் ஒருவர் இல்லாமையானது பெரும் குறையாக உள்ளது. இன்னும் சில பாடசாலைகளில் உள்ள விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேறு பாடங்களை கற்பிப்பதற்கென்று பயன்படுத்தப்படும் மோசமான நிலைமைகளும் காணப்படுகின்றன. இது ஒரு பிழையான செயலாகும். இதனால் விசேட தேவை கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு விசேட கல்வி ஆசிரியர்கள் விசேட கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் சகலருக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்கும் முனைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எனினும, விசேட கல்வியைப் பொறுத்தவரையில் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். உட்படுத்தற் கல்வி நடவடிக்கைகள் பொறுத்தவரையில் ஹட்டன் பகுதிகளில் சிறப்பான முன்னெடுப்புகள் காணப்படுகின்றன. எனினும், மலையகத்தின் அநேகமான கல்வி வலயங்களில் உட்படுத்தற் கல்வி இன்னும் சாத்தியமாகவில்லை. பெரும்பான்மை சமூகத்தினரிடையே நகர்ப்புறங்களில் விசேட கல்வி நிலைமைகள் விருத்தி பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும், கிராமப்புறங்களில் விருத்தி ஏற்படவில்லை என்று திருமதி. டோசன் தெரிவித்தார்.

திருமதி டோசன் தேசிய கல்வி நிறுவனம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் விசேட கல்வி வளவாளராக கடமையாற்றி வருகின்றார்.
மலையக கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் பற்றாக்குறை காரணமாக விசேட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் விசேட தேவையுள்ளவர்களை இனங்கண்டு உதவுவதிலும் சிக்கல்கள் எதிர்நோக்கப் படுகின்றன. பெருந்தோட்டப் புறங்களில் விசேட தேவை கொண்டவர்கள் பாடசாலை வயதை அடைந்துள்ள போதும் பாடசாலைக்குச் செல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால், இவர்களின் கல்வி வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. பல பாடசாலை அதிபர்கள் விசேட கல்வி குறித்த எதுவித அனுபவமோ அல்லது போதிய விளக்கமோ இல்லாதுள்ளனர். இதன் காரணமாகவே திருமதி. டோசன் கூறியதைப் போன்று விசேட கல்வி ஆசிரியரை வேறு பாடங்களை கற்பிப்பதற்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. விசேட கல்வி குறித்தும் விசேட தேவை கொண்டோர் குறித்தும் மலையக அதிபர்கள்பூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

மலையகத்தின் சில கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பிரிவுடன் இணைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் பல இடங்களில் விசேட கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் சிங்கள மொழியில் இடம் பெற்று வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அரச கரும மொழி என்ற போதும் சில விஷமிகளின் இனவாத சிந்தனைப் போக்கின் காரணமாக மொழி உரிமை மழுங்கடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும்.

விசேட தேவையுடையோரின் கல்வி அபிவிருத்தியில் பெற்றோரின் வகி பங்கு அதிகமாகும். 1970 க்கு முன்னர் விசேட தேவை உடைய பிள்ளைகளின் அபிவருத்தி கருதி பெற்றோருக்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தன. இத்தகைய பிள்ளைகளை பெற்றோர் சுமையாக கருதுவதும் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும் வழக்கமாக இருந்தது என்றும் 1970 இன் இறுதிப் பகுதியில் வலது குறைந்தோரின் நலன் கருதி பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை விசேட கல்வித்துறை வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மிகவும் சிறப்பானதாகும். இதன் மூலம் வலது குறைந்தவர்களை சமூகத்துடன் இணைத்து வாழப் பழக்குதல், நேசிக்க கற்றுக் கொடுத்தல், குடும்ப உறுப்பினர்களை மதித்தல் போன்ற அடிப்படைப் பண்புகளை கட்டியெழுப்ப முடியும் என்று ஆய்வாளர் கனிஸ்கெம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

பெற்றோர் சிறந்த பங்காளர்களாக இருப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை மிட்லர் 1976 இல் முன் வைத்தார்.

இதன்படி பிள்ளைகளின் தேவைகள் சமூக இயைபாக்க மட்டம் மற்றும் கல்வித் தேவைகள் குறித்த விளக்கத்தை பெற்றோர் கொண்டிருக்க வேண்டும். பிள்ளையின் திறன்கள்இ சிந்தனை மட்டம் என்பவற்றை பெற்றோரும் ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரண மாணவர்களின் புத்தி மட்டத்தை காட்டிலும் விசேட தேவையுடையோரின் புத்தி மட்டம் மாறுபட்டது. எனவேஇ உரிய அடைவு மட்டத்தை நோக்காகக் கொண்டு பெற்றோரும் ஆசிரியரும் புரிந்துணர்வின் அடிப்படையில் கட்டியெழுப்புதல் வேண்டும் போன்ற பல விடயங்களை மிட்லர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலஇ் விசேட தேவை கொண்டோரின் மலையக பெற்றோர்கள் இது குறித்து உரிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோரை சுமையாகக் கருதும் நடவடிக்கைகளே தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறன. விசேட தேவை கொண்டோரை தனிமைப்படுத்தி வைத்தல், புறக்கணித்தல், அவர்களுக்குரிய உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தல் என்பன இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்களிடம் கூட விசேட கல்வி என்றால் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தேசிய கல்வி நிறுவகம் விசேட தேவை கொண்டவர்களின் நலன் கருதி பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக விரிவுரையாளர் திருமதி பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். இதனடிப்படையில் விசேட தேவை கொண்டோரின் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் திறமை முன்னேற்றம் கருதி விசேட கல்வி டிப்ளோமா பாட நெறி தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இது பகுதி நேர ஒரு வருட கால எல்லை கொண்ட பாடநெறியாகும். தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் இப்பாடநெறி இடம் பெறுகின்றது. விசேட தேவை கொண்டோரின் பெற்றோர்கள் சிலரும் இப்பாடநெறிக்கென சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோர் தொடர்பாக காலத்துக்கு காலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விசேட தேவை கொண்ட பிள்ளைகளை மதிப்பிடுதல் பெற்றோர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நடவடிக்கைகள் வாரம் தோறும் தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்று வருகின்றது. ஏற்கெனவே விசேட தேவை கொண்டோருக்கு வழிகாட்டும் புூரண என்ற பெயரிலான சஞ்சிகை வெளியிடப்பட்டது. எனினும், தற்போது இது இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு உட்படுத்தல் தொடர்பான சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. விசேட கல்வி வளநூல் தயாரிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. சைகை மொழி டிப்ளோமா பயிற்சிநெறியும் நடைமுறையில் உள்ளது. நாடெங்கிலும் உள்ள பல ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறியை ஆர்வத்துடன் தொடர்கின்றனர் என்று விரிவுரையாளர் பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். மலையக ஆசிரியர்களும் இப்பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் மலையகத்தில் விசேட தேவை கொண்டவர்களி்ன் நிலைமைகள் இன்னும் குழந்தை மட்டத்திலேயே காணப்படுகின்றது. விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு பல மட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனங்கள் விசேட கல்வி தொடர்பாக அதிகரிக்கப்பட வேண்டும். பல வள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு விசேட தேவை கொண்டோருக்கான சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் என்று சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates