Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் 'விஷ்ணுபுரம்' விருது பெறுகிறார் - சி.சிவகருணாகரன்

தெளிவத்தை  ஜோசப்
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை  ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார்.  

இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும்  விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. 

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய  நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்  கலந்துகொள்ளுவார்.

இலங்கையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப், கொடகே பதிப்பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் யாழ். இலக்கிய வட்டத்தின்  சம்பந்தன் விருது ஆகியனவற்றையும் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் விழா மெல்பனில்  நடைபெற்றபொழுது அவர் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது பவளவிழாவை முன்னிட்டு  குறிப்பிட்ட எழுத்தாளர் விழாவில் கலை, இலக்கிய சங்கத்தின் சிறப்புவிருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன், தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில்  அன்றையதினம் விருது வழங்கினார் என்பது  குறிப்பிடத்தகுந்தது.

தெளிவத்தை ஜோசப், தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த தமிழ் இனி மாநாட்டிலும்   கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர். தெளிவத்தை ஜோசப் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனத்துறையில் நூல்களை  எழுதியிருப்பதுடன் இலங்கை, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பையும் வழங்கிய  முன்னோடி படைப்பாளியாவார்.

தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்
1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)

பரிசளிப்பு விழா வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.

இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் ஒரு லட்சமும் நினைவுச் சிற்பமும் வழங்கப்படும்.

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்


"எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை" - இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல்.

ஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் 'கேச­ரி'க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர்.

ஆம்! புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு.ஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன.

அடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள்.

இந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர்.வள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள்.

அரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.

"யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்" என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர்.

பி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார்.நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது.

2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது.

தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.

நாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள்.

நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது" என்றார்.

எஸ்.சரோ­ஜினி(66) என்பவர் கூறு­கையில்,"நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள்.

வேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்" என்றார்.

அரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது.

அதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும்.

அவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர்.

தோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும் மக்கள் கூறு­கின்­றனர்.

தோட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு யாரா­வது கடிதம் அனுப்­பினால் கூட அது உரி­ய­வர்­களை சென்­ற­டை­வ­தில்லை. தபால்­கா­ரரே இல்­லாத தோட்­டத்தில் எப்­படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்கள்.

அரம்­ப­ஹேன தோட்டம் மூடப்­ப­டு­வ­தற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. எனினும் தோட்ட மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கே வழங்­கப்­பட்­ட­தாக மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

தோட்டக் குடி­யி­ருப்­பி­லி­ருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேக­ரிக்கும் நிலையம் இருக்­கி­றது. உள்ளே போக­மு­டி­யாத அள­வுக்கு காடுகள் வளர்ந்துள்ளதுடன் உடைந்தும் சேத­ம­டைந்தும் பாழ­டைந்­தி­ருக்­கி­ருக்­கி­றது அந்த நிலையம்.அரம்­ப­ஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்­கொண்­டுள்ள அபாயம் மற்றும் சிர­மங்கள் குறித்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பல­ரி­டமும் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். இது­வரை விமோ­சனம் கிடைக்­க­வில்லை.

அர­சி­யல்­வா­திகள் பலர் தேர்தல் காலங்­களில் மாத்­திரம் வந்து போயி­ருக்­கி­றார்கள். இந்த மக்­களின் குறை­களை தீர்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்கள். ஆனாலும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியு லகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளி க்காட்டப்படாமை கவலையளிக்கிறது.

பெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.

தாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

தோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஆக,தோட்டம் முழு­வதும் காடாக மாறி­ய­மைக்கு யார் பொறுப்பு? ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்­துடன் கழித்­துக்­கொண்­டி­ருக்கும் மக்­களை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்கள் யார்? பெரும்­பான்மை இனத்தோர் வாழ்­கின்ற தோட்­டங்கள் சரி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்ற போது, இந்தத் தோட்டம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கப்­பட்­டது ஏன்? போன்ற கேள்­விகள் இயல்பாய் எழுகின்றன.உண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.

ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பெருந்தோட்டத்துறை


இலங்கையின் பொருளாதாரத்தில் காலாகாலமாக முக்கிய பங்காற்றி வரும் பெருந்தோட்டத்துறையின் தொடர்ச்சியான நிலையான செயற்பாட்டுக்கு அவசியமான பங்களிப்பை இந்த துறையுடன் சார்ந்த அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டியது அவசியமான தேவையாக அமைந்துள்ளது.

பெருந்தோட்ட ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமுலுக்கு வரும் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கொழும்பில் ஒன்று, ஹட்டனில் ஒன்றென இரண்டு ஊடகவியலாளர் செயலமர்வுகளை நடத்தி, இவற்றில் சம்பள அதிகரிப்பை தொடர்ந்து ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பு தொடர்பாகவும், இதனை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி பேண தாம் அனைத்து தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன போன்ற விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தது.

இதற்கமைவாக சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் விலை குறைவடைந்து செல்வதை அண்மையில் அவதானிக்க முடிந்தது. இலங்கைக்கு போட்டிகரமாக திகழும் நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கான உற்பத்தி இலங்கையின் தேயிலை உற்பத்தி செலவை விட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த சம்பள அதிகரிப்பின் காரணமாக, ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவு 40 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பள அதிகரிப்புக்கு முன்னர் ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி செலவு 390 – 400 ரூபாவாக அமைந்திருந்தது. ஆயினும் தற்போது இது 430 – 440 ரூபா வரை அதிகரித்துள்ளது. இது பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மிகவும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்துறையை தொடர்ந்தும் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் கொண்டு நடத்துவதற்கு, தொழிற்சங்கங்களிடமிருந்தும், தொழிலாளர்களிடமிருந்தும் தாம் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு தொழிலாளி ஒருவர் பறிக்கும் கொழுந்தின் அளவை சுமார் 2 முதல் 3 கிலோவினால் அதிகரிப்பாராயின், அதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக உற்பத்தி செலவு ஓரளவு குறைவடையும் எனவும், தாம் இதை தான் தொழிலாளர்களிடமிருந்து பெருமளவில் எதிர்பார்ப்பதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

தேயிலை ஏல விற்பனையை பொறுத்தமட்டில் தற்போது ஒரு கிலோ உயர்நில தேயிலையின் விலை 400 ரூபாவாக அமைந்துள்ளது. எனவே பெருமளவு பெருந்தோட்ட கம்பனிகள் மாற்று பயிர்ச்செய்கைகளின் மூலமே தேயிலைத்துறையையும் பராமரித்து வருகின்றன. தேயிலை உற்பத்திக்கு மேலதிகமாக பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களின் குடும்பத்துக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கம்பனிகள் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த துறையின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு ஒவ்வொரு தொழிலாளியும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்க்கின்றன.



பெருந்தோட்டங்களில் கம்பனிகள் வணிக நோக்கத்திற்காக பயிரிடும் மரங்களை தறிப்பதற்கு தற்போது சட்ட விதிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கம்பனிகள் எரிபொருள் தேவைக்காக செலவிடும் தொகை அதிகரித்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, குறித்த மரங்களை தறிப்பதற்கான விதிமுறைகளை இலகுவாக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை சந்தைப்படுத்த முறையான நடவடிக்கையை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். மரபு ரீதியான நாடுகளை தேயிலை ஏற்றுமதிக்காக தங்கியிராமல், புதிய நாடுகளை அணுகி, அவற்றில் காணப்படும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் தேயிலை உற்பத்தி துறையில் காணப்படும் பெருமளவு சுமையை குறைக்க முடியும். பெருந்தோட்டங்களில் தற்போது காணப்படும் பெருமளவான தேயிலைச்செடிகள் சுமார் 60 ஆண்டுகள் பழமையானவை. கம்பனிகள் 1992ஆம் ஆண்டு தேயிலைப் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதல் இதுவரையில் சுமார் 1/3 தேயிலைச்செடிகளை மாற்றீடு செய்துள்ளன. ஆயினும் இந்த துறையில் தேயிலைமரங்கள் மீள்செய்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பதை கம்பனிகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனினும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பெருமளவு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். அத்துடன், பெருமளவு நிதித் தொகையும் தேவைப்படுகின்றது. இது ஒரு சவால் நிறைந்த சூழ்நிலையாகும். அரசின் மூலம் சகாய அடிப்படையில் கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுமாயின் தேயிலை மரங்களின் மீள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள இலகுவாக அமையும் என்பது பெருந்தோட்டக் கம்பனிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தங்களின் காரணமாக தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தேயிலை மரங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளன. மேலும், தொழிலாளர்களும் தேயிலை கொழுந்து பறிப்பதில் பெருமளவு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை அவதானிக்க முடிந்தது. 

கொழுந்து இல்லாத காலப்பகுதியில் தேயிலை கொழுந்து மேலதிகமாக பறிக்கச் சொல்வது என்பது முறையற்ற விடயமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று கிலோ தேயிலை கொழுந்தை நாளொன்றுக்கு அதிகமாக பறிக்கச் சொல்வது தேயிலை கொழுந்து பரந்தளவில் காணப்படும் நாட்களிலாகும். இவ்வாறு அதிகளவு கொழுந்து அதிகளவு காணப்படும் நாட்களில் தொழிலாளர்களுக்கும் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்தி செலவு அதிகளவில் காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவும் பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்திக்காக செலவிடப்படும் தொழிலாளர் சம்பளம் 1.76 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. இது இலங்கையில் 4.90 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. இது சுமார் 3 மடங்கு அதிகரிப்பாகும். கென்யா மற்றும் தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரிப்பாக அமைந்துள்ளது. 

பாரம்பரிய முறைக்கமைய தொழிலாளர்களுக்கான சம்பள கொடுப்பனவு தொடர்பாக கூட்டுபேரம் பேசல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் இது போன்றதொரு திட்டம் எவ்வளவு பொருத்தமானதாக அமைந்துள்ளது என்பது கேள்விக்குறிய விடயமாக அமைந்துள்ளது. ஏனெனில் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையை எடுத்துக் கொண்டாலும், ஊழியர் ஒருவர் தாம் செய்யும் வேலையின் அளவு, விடுமுறை மேலதிக கொடுப்பனவு போன்ற சகல விடயங்களையும் உள்ளடங்கிய உடன்படிக்கையில் தாமே குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திட்டு, பெரும்பாலும் அதற்கேற்ற வகையில் பணியாற்றுவதுடன், சில சந்தர்ப்பங்களில் குறித்து உடன்படிக்கையை மீறும் வகையில் வேலைகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் வேறு வழியின்றி அவற்றை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும், சந்தர்ப்பம் உள்ளவர்கள் வேறு வேலையை தேடி மாறிச் செல்வார்கள்.ஆயினும் இந்த பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் தமது வேலை குறித்த உடன்படிக்கைகளை தொழிற்சங்கங்களின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலை அனைத்து பெருந்தோட்ட ஊழியர்களுக்கும் பெருமளவில் பொதுவானதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக கைச்சாத்திடப்படும் கூட்டுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து எத்தனை தொழிலாளர்கள் முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியே. 

எனவே இந்த பாரம்பரிய முறைக்கு மாறாக புதிய சம்பள கொடுப்பனவு, தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊழியர்கள் சேமலாப விடயங்கள் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய பாரம்பரிய கூட்டுடன்படிக்கை முறையில் நவீன காலத்துக்கேற்ப மாற்றம் கொண்டு வரப்படவேண்டியதன் அவசியம் நிலவுகிறது.

நன்றி - டெய்லிமிரர்

மலையக கட்டாய கருத்தடைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு


மலையகத்தில் இடம்பெற்று வரும் கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். 

மலையகப் பகுதிகளில் பல வருட காலங்களாக தமிழின அழிப்பை திட்டமிட்டு செயல்படுத்திவரும் அமைப்புக்களுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார். 

கடந்த முதலாம் திகதி கந்தப்பளை - கோட்லோட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்தில் நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரி, தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த நலன்புரி உத்தியோகத்தர், குடும்பநல மருத்துவ மாது ஆகியோர் நேரடியாக சென்று டெங்கு பரிசோதனைக்கு சிகிச்சையளிப்பதாக கூறி கோட்லோட்ஜ் தோட்ட 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கருத்தடை செய்துள்ளதாக முரளி ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த கட்டாய கருத்தடையின் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் தட்டிக்கப்பட வேண்டும் என புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.




நன்றி - ekuruvi

திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்


மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சொந்த காணியும் 5000 புதிய வீட்டுத்திட்டமும் - இரா.ரஞ்சித்


கொத்தடிமைகளாக குடியேற்றப்பட்ட காலம் முதல் இன்றைய 2013ஆம் ஆண்டு காலம் வரையிலும் இரண்டு கோடிகளுக்குச் சொந்தமான லயத்து வீடுகளிலே காலத்தை கடத்தி விட்டோம். காலை எழுந்த உடனே பிரட்டுக்களம் ஆண்களுக்கும் பொதுபைப்பு பெண்களுக்கும் உரித்தாக்கபட்டிருக்கிறது. தினமும் தண்ணீர் சண்டையும், கால்வாய் (காண்) சண்டையும் இன்றுவரை ஓயாத போர்களமாகவே இருந்து வருகின்றது. இந்நிலை இலங்கை அரசுக்கும் அந்நிய நாடுகளுக்கும் இதுவரையிலுமே தெரியாமல் இருப்பாதாகவே காட்டிக்கொள்கின்றனர். என்று ஓயும் இந்த லயத்து போர் என்று எண்ணிக்கொண்டிருந்த எமக்கு ஒரு அதிஷ்ட சீட்டிழுப்பு விழுந்துள்ளது. அதுதான் இந்திய அரசின் நிதியுதவியில் நாடளாவிய ரீதியில் 49,000 வீட்டுத்திட்டம். இதில் 5,000 மலையகத்தெக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பது எம்மவர்களின் நீண்ட கால ஒன்று பட்ட குரலினாலே என்றால் அது மிகையல்ல. இவ்வீட்டுத்திட்டங்கள் தொடர்பான ஓர் சிறிய ஆய்வினை இனி காணலாம்.

கடந்த காலங்களில் குறிப்பிடபட்ட விடயங்களின் அடிப்படையில் ஒரு நபருக்கு 20 பேர்ச் காணி ஒதுக்கி தரப்படும் என்ற ஒருவகை பேச்சி மலையக அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒலிக்கபட்டு வருகிறது. இது உண்மையிலேயே வரவேற்க்கத்தக்க விடயம்.1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் சிறு தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்கள் 250,000 பேருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கபட்டது. இதில் 99 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்திருந்த வரலாறு யாரும் மறுக்கமுடியாது. இந்நிலை எதிர்காலத்தில் வழங்கப்படும் காணி பகிர்வில் இல்லாமல் இருக்க வேண்டுமாயின் அரசியல் பிளவுகளில் உள்ள மலையக மக்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்பது அவசியமானது.

இது இப்படி இருக்க, 1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோட்ட கம்பனிகள் 10 பேர்ச் காணிகள் ஒதுக்கியது. எனினும் டிரஸ்ட் நிறுவனத்தினால் 7 பேர்ச் காணி அளவே வழங்கப்பட்டது. இக்காணிகள் வழங்கப்பட்ட போது 15 வருட குத்தகை முறையில் 45,500 ரூபா செலுத்திய பின் காணி உறுதிபத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட போதிலும் இதுவரையிலும் காணிக்கான உறுதிபத்திரம் வழங்கப்படவில்லை. இது எப்போது உறுதியாக்கப்படும் என்பது எழுத்துவடிவில் இன்னும் வரையப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மேல்மாடி லயன் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1.26 பேர்ச் காணி அளத்திட்டத்தில் தொடர்குடியிறுப்பாகவே அமைக்கப்பட்டது. இவ்வளவு திட்டத்தில் வீடு கட்டக்காரணம் இடப்பற்றாகுறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மலையக காணிகளில் 9 இலட்சம் காணிகள் பாரிய அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இத்திட்டதில் எத்தனை மலையக சிறும்பான்மையினர் பயன் பெறுகின்றனர் என்பது வினாவாகவே உள்ளது. அத்தோடு, மேல்மாடி லயன் குடியிருப்புகள் எந்த மலையக அரச தொழில் இருப்பவர்களுக்கும், தனியார், கொழும்பு பிரதேசங்களில் தொழில் புரிபவர்களுக்கும் வழங்கப்படவில்லை. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டது. எனினும் இது சரியாக பகிர்ந்தளிக்கபடவில்லை.

இத்திட்டத்தில் 60 ஆண்டு கால குத்தகை அடிப்படையிலேயே வீடுகள் வழங்கப்பட்டது. முழு கடன் தொகையையும் செலுத்திய பின்பே வீடு உறித்தாகும். அப்படி என்றால் அடுத்து பிறக்கும் குழந்தையும் கடன் சுமையுடனே பிறக்க நேரிடுகின்றது. இப்படி மலையகம் கால காலமாக வீடு, காணிக்காக போராடி கொண்டு வந்திருக்கிறோம்.

தற்போது 5000 வீட்டுத்திட்டம் நானோயா பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது சரியான முறையில் அரசியல் பிளவுகள் இன்றி செயல்படுத்தப்படல் வேண்டும். மலையகத்திற்கு அண்ணளவாக 206,000 வீடுகளுக்கான தேவைப்பாடு உள்ளது. இவ்வாறு வருடத்திற்கு வருடம் ஒவ்வரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் மலையகத்தில் வீட்டு பிரச்சனைகள் முற்றாக நீங்கும். அதேவேளை வெளிநாடுகளில் இருந்த இயங்கும் சமூக சேவை மன்றகளினதும் உதவிகளை கல்விக்கு மாத்திரம் செயற்படுத்தாமல் இவ்வாறான வீட்டுத்திடங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டால் துரித காலத்தில் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படும். புதிய எழுச்சியை நோக்கிய மலையகத்தின் பயணத்தில் இவ் 5000 வீட்டுத்திட்டம் ஒரு மைல்கல்.

நன்றி - http://upcountryresearch.com

நீதி மன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்


பிரச்சினைகள் ஏற்படும் போது பேச்சு வார்த்தை மூலம் அவற்றிற்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழில் ரீதியாக தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனியுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. தோட்ட நிர்வாகங்கள் தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வராத பட்சத்தில் பிரச்சினைகள் மேலிடத்துக்கு கொண்டு செல்லும் நிலையேற்படுகின்றது. குறிப்பாக தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் நியதிச்சபையை நாடவேண்டிய நிலை ஏற்படலாம்.

இங்கு பிரச்சினைகள் விசாரிக்கப்பட்டு வழங்கப்படும் தீர்ப்பைக் கூட சில தோட்ட நிர்வாகங்கள் ஏற்று மதிப்பளிக்க முன்வராமல் இழுத்தடிப்புச் செய்வதால் தொழிலாளரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கின்றன. பிரச்சினைகளால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி, நியாயத்தை வழங்காமல் கெடுபிடிகள் காட்டி வருகின்றன.

தொழில் ஆணையாளர் ஏற்றுக் கொண்டு பின்னர் அதனை நடைமுறைப்படுத்த முன்வராது பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நிர்வாகங்களே பிரச்சினைகள் நீடித்துச் செல்ல வழிவகுத்து விடுகின்றன.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, றைகம் தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான ரீ. சந்திரன் (35) என்ற தொழிலாளியை தோட்ட நிர்வாகம் வேலையிலிருந்து இடை நிறுத்தி இதுவரைகாலமும் வாழ்ந்து வந்த குடியிருப்பி லிருந்து உடைமைகளை பலவந்தமாக வெளியில் வீசி வெளியேற்றப்பட்டார்.

இந்த மனிதாபிமானமற்ற செயல்குறித்து இ.தே.தோ. தொ. சங்கம் தோட்ட நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து களுத்துறை தொழில் நியதிச் சபையில் வழக்கொன்றை தாக்கல் செய்தது. சுமார் ஒருவருடகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் பின்னர் பாதிப்புக்குள்ளான தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்கவும், அவர் வசித்து வந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிப்பதற்கு இடமளிப்பதாக தோட்ட நிர்வாகம் இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன்படி கடந்தாண்டு அக்டோபரில் குறித்த தொழிலாளி மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதிலும் ஒரு வருடத்தை அண்மித்துள்ள நிலையில் அவருக்குரிய குடியிருப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக குறித்த தொழிலாளி தமது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த ஒருவருடகாலமாக தமது உறவினர் ஒருவனின் வீட்டில் தஞ்சம் புகுந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே வசித்து வருகின்றார்.

தொழில் நியதிச்சபை முன் இணக்கப்பட்டிற்கு வந்தும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது கெடுபிடிகாட்டி பிரச்சினையை தொடரும் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரப் போக்கு, பழிவாங்கல் குறித்து பாதிப்புக்குள்ளான தொழிலாளியிடமிருந்து அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளதுடன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப் பட்டுள்ளதாக தொழில் நியதிச் சபையினால் கடிதமூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதி லும் குடியிருப்பு தொடர்பாக குறிப்பிடப்பட் டுள்ள இலக்கம் தவறானதாகும்.

குறித்த குடியிருப்பல்ல என தோட்ட நிர்வாகம் சுட்டிக் காட்டி மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்து சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து தொழிலாளருக்கு தோட்ட நிர்வாகத்துக்கு மிடையே நல்லுறவைக்கட்டியெழுப்ப வேண்டியதை விடுத்து நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்து நடந்து கொள்ளும் இது போன்ற நிர்வாகங்களினால் தோட்டங்களில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும் ஒரு நிலையே ஏற்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.
நன்றி - தினகரன்

மலையக தமிழர்கள் மீதும் திணிக்கப்படும் கட்டாய கருக்கலைப்பு


இலங்கையின் வட கிழக்கு பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள்இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் , மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் மலையகப் பகுதிகளிலும் தமிழ் இன அழிப்புக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன .

ஆனால் இவை மறைமுகமாக இடம்பெற்று வருகின்றன . மத்திய அரசாங்கத்தின் உதவி ஒத்துழைப்புடன் இந்த இன அழிப்பு இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சிக்குரியதாகும் .

மலையகத்தில் கட்டாய கருத்தடை மூலம் இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது . இந்தக் கட்டாய கருக்கலைப்பு குறித்து மலைய சிவில் அமைப்புக்கள் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்ற போதும் அதனை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்வதாக இல்லை .

குறிப்பாக கல்வி அறிவு அற்ற தோட்டப் புறங்களில் இந்த கட்டாய கருத்தடை அதி வேகமாக இடம்பெற்று வருகிறது . இரண்டு பிள்ளைகள் பெற்ற பெண் ஏதோ ஒரு காரணத்தை காட்டி கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் .

இந்த கட்டாய கருக்கலைப்பை உறுதி செய்யும் வகையிலான சம்பவமொன்று அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை - கோட்லொட்ஜ் தோட்டத்தில் பதிவாகியுள்ளது .

கந்தப்பளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது .

அதாவது ஒக்டோபர் 1 ம் திகதி நுவரெலியாவில் இருந்து டெங்கு பரிசோதனைக்கு உடல் நல வைத்திய அதிகாரி வருகிறார் . அதனால் அனைவரும் தவறாது சமுகமளிக்க வேண்டும் . குறிப்பாக 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும் .

அதன்படி . ஒக்டோபர் முதலாம் திகதி கோட்லொட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்திற்கு நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரி , தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் , குடும்ப நல மருத்துவ மாது ஆகியோர் சென்றுள்ளனர் .

காலையில் இருந்து நடைபெற்ற இந்த மருத்துவ சிகிச்சையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புஸ்பராணி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயும் சிகிச்சைக்கு சென்றிருந்தார் .

அங்கு குறித்த பெண்ணுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது . குறித்த பெண் மாதவிடாய் காலத்தில் இருந்துள்ள போதும் அதனையும் கருத்திற் கொள்ளாது கருத்தடை செய்யப்பட்டுள்ளது .

மாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதன் பின் வீடு திரும்பிய புஸ்பராணிக்கு விடாது இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது . வந்த அனைவருக்கும் சிறுநீர் பரிசோதனையின் பின் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . ஆனால் புஸ்பராணிக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படவில்லை .

அதிக இரத்த ஓட்டம் காரணமாக புஸ்பராணி தனது கணவர் மற்றும் உறவினர்களால் அன்றைய தினம் மாலை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் நினைவிழந்து மயக்கமடைந்துள்ளார் .

நுவரெலியா வைத்தியசாலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இரவே அவர் கண் விழித்துள்ளார் . கடந்த 5 ம் திகதியே குறித்த பெண் வீடு திரும்பியுள்ளார் .

இந்த சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த குறித்த பெண்ணின் கணவர் முதலில் அஞ்சிய போதும் பின்னர் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் . அந்த முறைப்பாட்டின் பொலிஸ் பிரதி இணைக்கப்பட்டுள்ளது .

தனது மனைவிக்கு நேர்ந்த அசாதாரண நிலைக்கு நியாயம் வேண்டி கணவர் நீதிமன்றம் செல்ல முயற்சித்தார் .

எனினும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் புஸ்பராணி மற்றும் அவரது கணவரை அழைத்து பலவாறு மிரட்டல் விடுத்து நீதிமன்றம் செல்லாது சமரசமாக செல்லுமாறு கோரியுள்ளனர் . மேலும் தோட்டத் தலைவர்கள் மூலமும் இவ்விருவரும் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர் .

எனவே இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை முன்வரவில்லை . இது குறித்து பல அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் , பாராளுமன்ற உறுப்பினருமான வி இராதாகிருஸ்ணனின் பிறந்த ஊர் கந்தப்பளை - . கோட்லோட்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறு மலையகத்தில் வெளிச்சத்திற்கு வராமல் பல கருத்தடைச் சம்பவவங்கள் இடம்பெற்று வருகின்றன . கடந்த முறை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் மலையக மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த கட்டாயத் கருத் தடையும் ஒரு மறைமுக காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்த வண்ணமுள்ளது . இது தொடர்ந்தால் வட கிழக்கிற்கு ஏற்பட்ட நிலை மலையகத்திலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்ற அபாய செய்தி காத்திருக்கிறது .

நன்றி - ttnnews

நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்



கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புத் தமிழ் சங்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த  இலக்கிய களம் நிகழ்வில் நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில்   திருமதி வசந்தி தயாபரன் தலைமையுரையாற்றுவதையும், திரு லெனின் மதிவானம் கட்டுரை வாசிப்பதையும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.

சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன்


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்ணாக சென்றிருக்கிறார். இது வரை எந்த சம்பளமும் அவருக்கு வழங்கப்படாத நிலையில் அது குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கொதிக்க வைத்த எண்ணையை உடலில் ஊற்றியிருக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் ஆணிகளை அடித்து இரத்தத்தை சிந்தைவைத்து அதனை போத்தலில் சேகரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் போத்தலை திணித்து காயப்படுத்தியும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். காலையில் எடுக்கப்படும் இந்த இரத்தத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தனக்கு தெரியாதென்றும் கூறி கதறுகிறார் பாப்பாத்தி. பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டிருக்கிறார். 

உடலில் பல தீக்காயங்களும், ஆணியேற்றப்பட்ட காய அடையாளங்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இடது கையின் தோல்பட்டையும் உடைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்று பல சிங்கள நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு தமிழ் ஊடகமும் இது குறித்து எதுவும் வெளியிடவில்லை. மலையக தோட்டப் பெண்ணாக இருந்தது தான் ஒரே காரணமோ தெரியவில்லை.

இதனை வெளிக்கொணர்ந்த லக்பிம சிங்கள பெண் பத்திரகையாளரான லாலனி ரத்நாயக பலங்கொட சமூக அபிவிருத்தி மன்ற தலைவரான விகாராதிபதி இம்புல்பே விஜிதவன்ச எனும் பிக்குவின் துணையுடன் ஆஸ்பத்திரி சென்று தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார்.

தூதுவராலயத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் தான் வெள்ளியன்று நாடு திரும்பினேன், விமானத்தில் வைத்து மயக்கமடைந்துவிட்டேன். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அதிகாரிகள் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இன்னுமொரு இலங்கை பணிப்பெண் ஒருவரை புதிதாக எடுத்திருக்கிறார்கள். ஏழ்மையை போக்க என நம்பிப் போகும் எங்களுக்கு இறுதியில் இவ்வளவு தான் மிச்சம்.

உடலில் ஆணிகள் எற்றப்பட்டும், கொல்லப்பட்டும், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், வருடக்கணக்கில் எந்த சம்பளமுமின்றி கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கை பணிப்பெண்களில் கதைகள் தொடர்கதையாக நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. வெட்கங்கெட்ட இந்த இலங்கை அரசோ தொடர்ந்தும் சொந்த நாட்டுப் பெண்களை அந்நிய வருமானத்துக்காக அனுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த பெண்களுக்கு நேரும் கதி பற்றி போதிய நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படுவதில்லை. சவூதி அரசுக்கு நோகும் எதையும் இலங்கை அரசு செய்வதில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் இந்த கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி மாதக்கணக்கில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் மோசமான பராமரிப்புடன் இப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டாருடன் தொடர்புகொள்ளகூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலுறவை லஞ்சமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள குடும்பத்தினர் தொடர்புகொண்டு அவர்களை மீள பெற முயற்சி எடுக்கின்றபோதும், தூதரகமோ, சவூதி எஜமானர்களின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் விடுதலை பத்திரம் எடுக்கமுடியாதிருப்பதாக தெரிவித்துகொண்டிருக்கிறது. இரக்கமற்ற அந்த சவூதி எஜமானர்களிடமிருந்து என்று இவர்களுக்கு சொந்த நாடு திரும்பும் உரிமை கிடைக்கும்.

பாப்பாத்தியின் கதை முடிவல்ல தொடர்கதைகளில் ஒன்றே ஒன்று.

அவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு


அவிஸாவளை பென்ரித் தோட்ட நீர் குழாயில் குளோரின் கொண்ட நீர் குழாய் வெடித்ததன் காரணமாக 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. 68 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டர் ஒன்றில் இவ்வாறு வாயு கசிந்துள்ளது. சுமார் 300 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில், 66 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இருவரின் நிலமை கவலைக்குரிய நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நீர் விநியோக சபையின் உறுப்பினர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.'

நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்: சிறுகதைகளை முன்னிறுத்தி…..!


அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு


நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்
சிறுகதைகளை முன்னிறுத்தி…..!



இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம்
காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)

தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)
உரை : திரு. லெனின் மதிவானம் (புதிய பண்பாட்டுத் தளம்)

ஏற்பாடு:
கொழும்புத் தமிழ்ச் சங்கம்

ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே - ச. ஜேசுநேசன்


இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேசங்களில் அண்மையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தன. ஒன்று வட மாகாணம், இதில் ஐந்து மாவட்டங்கள். ஐந்திலும் தமிழரே பெரும்பான்மையினர். மற்றையது மத்திய மாகாணம். இதில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியா மாவட்டம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் நுவரெலியாதான்.

வடக்கு மாகாணத்தில் தமிழரே 95% வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அது இயல்பு. நுவரெலியா மாவட்டத்திலும் மொத்த மாவட்ட உறுப்பினர் 16 பேரில் 11 தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்., அதாவது 69% தமிழ் உறுப்பினர்கள். ( 2010 பொதுத் தேர்தலின் போது மாவட்டத்தின் மொத்த பா.ம. உறுப்பினர்கள் 7 பேரில் 5 பேர் தமிழர். அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்தும் ஒரு தமிழர். அவரும் நுவரெலியா காரர்தான் ). மேலே குறிப்பிட்ட 11 புதிய மா.ச. உறுப்பினர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆதாவது ஆளுங்கட்சியினர். ஒருவர் ஐ.தே.க. காரர்.

சுருக்கமாகச் சொல்வதாயின், வட மாகாணத்தில் எதிர்க் கட்சி (த.தே.கூ) தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலோ வெற்றி பெற்ற 11 தமிழர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூ-வினர். என்னே நேரெதிர் மாற்றம் !.

இத்தனைக்கும் வட பகுதித் தமிழருக்குத்தான் பிரச்சினை. மலையகத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதல்ல. அவர்களின் அரசியல், மொழி, கல்வி, பண்பாட்டு, அசையாச் சொத்து, நிர்வாக, பொருளாதார உரிமைகளும் நிலைமைகளும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உரிமைகளோடும் நிலைமைகளோடும் ஒப்பிடும் போது படுபாதாளத்தில் இருக்கின்றது. அவை பற்றி அந்த மக்களுக்கு கவலையில்லை, அவர்களின் தலைமைகளுக்கும் அக்கறை இல்லை. சுதந்திர இலங்கையில், இலங்கை வம்சாவளித் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட மக்களாவர். இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களோ உரிமை பறிக்கப்பட்ட மக்களாவர்.

வடபுலத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் அரசுடன் போராடி, பேரம் பேசி தமிழுருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால், அரசுடன் சேர்ந்து ஆட்டமாடி, காட்டிக் கொடுத்து, கொள்ளையடித்து அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த ட்ரக்லெஸ் (trackless) குழுவுக்கு நடந்த கதிதான் அவர்களுக்கும் நடக்கும்.

ஆனால், நுவரெலியா மாவட்டத்திலோ அப்படியல்ல. வெற்றி பெற்றிருப்பது ஐ.ம.சு.கூ. என்ற ஆளுங்கட்சியே. எனவே, வெற்றி பெற்ற அத்தனை தமிழ் உறுப்பினர்களும் சிந்தனைக்காரர் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய மட்டுமே முடியும். எதிர்த்துப் பேச முடியாது. கௌரவ பா.ம. உறுப்பினர்களான தொண்டமான், சிவலிங்கம், திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், ஶ்ரீரங்கா ஆகியோர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 10 ஆளுங்கட்சிசார் நுவரெலியா மாவட்ட எம்பிசி மார்களும் (மாகாணசபை உறுப்பினர்கள்) இதையே செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் தன்மானம், தன்னம்பிக்கை, தனித்துவம், தமிழ்மொழி, தமிழினம் அத்தனையும் விற்றுவிட்டு அந்தப் பணத்துக்கு வெற்றிலை வாங்கி சப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சப்பல்களைத்தான் அவர்களால் செய்ய முடியும்.

அவர்களின் மத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக வருபவர் யாரென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தொண்டமான், திகாம்பரம், ரங்கா ஆகியோருக்கப் போன்று மலையக அரசியல் இவர்களுக்குப் புதிது. புதிதாக முதலமைச்சராக வருபவர், அவர்தான் 1977 ல் புசலாவை பகுதி டெல்டா, சோகமை, சங்குவாரி தோட்ட லயங்களை எரித்து தோட்ட மக்களை நடுத்தெருவுக்கு விரட்டிய தலைவனின் புத்திரன். எனவே, இனி இந்த 10 பேரினதும் மற்றும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தெரிவான இரண்டு அரசாங்க கட்சி தமிழ் உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன்,

1. தோட்டங்கள் துண்டாடப்படும்,
2. சிங்களவருக்கு அந்த தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும்,
3. இந்த புதிய மாகாணசபைத் தமிழ் உறுப்பினர்கள் போட்டி போட்டிக்கொண்டு தோட்டங்கள் தோறும் சந்திக்கு சந்தி, மூலைக்கு மூலை மதுக்கடைகளை ஆரம்பிப்பார்கள்,
4. போதைப் பொருள் வியாபாரத்தில் அனுபவமிக்க மலையக அரசியல் தலைவர்மார், ஏற்கனவே பெருங்’குடி’ மக்களாக இருக்கும் மலையக மக்களை, போதைப்பொருள் பாவித்தலிலும் சம்பியன்களாக ஆக்குவார்கள்.
5. டெம்பரரி செட்டுக்கு (தற்காலிக கொட்டகை) கொஞ்சம் தகரம் கொடுப்பார்கள், கோயிலுக்கு மணி கொடுப்பார்கள், களிப்புடன் ஆடிப்பாடி மகிழ வாத்தியக் கருவிகள் வாங்கிக் கொடுப்பார்கள், கொஞ்சம் கிறிக்கட் மட்டைகளும் பந்துகளும் வழங்குவார்கள்.
6. இடைக்கிடையே தமிழ் நாட்டுக்குப் பறந்து தமது சின்ன வீடுகளையும் கவனித்து வருவார்கள்.

அப்பாடா, இத்துடன் மலையக மக்களின் பிர்ச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டோமென்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இப்படியானவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இனி அடுத்த தேர்தலில் நிற்பார்கள். ‘பார்’கள் கைகொடுக்கும். வெல்வார்கள். 
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே உங்களுக்கு எப்போது அறிவு (உணர்ச்சி) வரும் !!.

 ச. ஜேசுநேசன் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates