Headlines News :
முகப்பு » , , » மலையகத்தின் மூத்த கவிஞர், மூதறிஞர் சக்தீ பால ஐயா காலமானார்

மலையகத்தின் மூத்த கவிஞர், மூதறிஞர் சக்தீ பால ஐயா காலமானார்

சக்தீ பால ஐயா
தலவாக்கலை - லிந்துலை தோட்டத்தை பிறப்பிடமாகவும், வத்தளை மாபொலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர், மூதறிஞர், தனிவழிகவிராயர், கலாபூஷணம் சக்தீ பால ஐயா தனது என்பத்தோன்பதாவது வயதில் 02.08.2013 வெள்ளிக்கிழமை றாகமை வைத்தியசாலையில் காலமானர். 

இவரது இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

சக்தீ பால ஐயா 26.07.1925 ஆம் ஆண்டு பிறந்தார். 

கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் ஆய்வாளர் என பல பரிணாமங்களை பெற்ற இவர், புகழ்பெற்ற கவிஞரான ஸி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon’s Tea Garden என்ற கவிதை நூலினை தமிழாக்கம் செய்து ஸி.வியின் உணர்வுகளை தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது ஆரம்ப கல்வியினை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலை கல்வியினை தலவாக்கலை சென் பெற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியினை இலங்கை தொழிநுட்ப கல்லூரியிலும் பயின்றவர். தனது பெயரில் பாலை (நிலம்) என்ற சொல் இருப்பதை விரும்பாத இவர் தனது பெயரை சக்தீ பால ஐயா என மாற்றிகொண்டவர். 

இவர் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் ஆய்வாளர் என பல் பரிணாமங்களில் பிரகாசித்தவர். கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிட்நுட்ப கல்லூரியிலும் Heywood Collage of Fine Arts கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் தொழில்புரிந்தார். 

நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே மாணவர் மலர் என்ற இதழினையும், அதற்கு பின்னரான காலத்தில் யுத்த முனை என்ற அந்நியராட்சிக்கு எதிராக பத்திரிகையினையும் 1956 இல் வளர்ச்சி என்ற கலை இலக்கிய சமூக இதழினையும், 1960 ஆம் ஆண்டு தமிழ் ஒளி என்ற இதழினையும் வெளியிட்டவர். 

1956 களில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் 1970 களில் தொழிற்சங்க துறவி வி.கே.வெள்ளையன் ஸ்தாபித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் இதழான மாவலி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். 

1952 ஆம் ஆண்டு மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் என்ற நூலையும், சொந்த நாட்டிலே எனும் பாடல் நூலையும், 1997 ஆம் ஆண்டு சக்தீ பால ஐயா கவிதைகள் என்ற கவிதை தொகுப்பினையும், 2011 ஆம் ஆண்டு Analysis of Ages of Lives on Earth and Dravidian culture என்கின்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். 

இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக பிரஜாவுரிமை அந்தஸ்த்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டு இலங்கை இந்திய வம்சாவளி பேரவை எனும் அமைப்பினை உருவாக்கி அதனை வழிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - அத தெரன
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates